Thursday, December 13, 2007

கல்யாணம்தான் கட்டிகிட்டு!!(நச்சுக்கு ஆரம்பிச்சு ப்ச்சுன்னு முடிஞ்ச கதை!!)

சந்திரனுக்கு ஒரே படபடப்பாக இருந்தது. என்னதான் தொலைபேசியில் பேசி, புகைபடம் பரிமாறி, இ மெயிலில் விஷயங்கள் அலசியிருந்தாலும். நேரில் பார்ப்பது என்பது வேறு. என்ன உடை உடுத்துவது என்று வெகு நேரம் சிந்தித்து வெளீர் நீல நிற கோடுகள் போட்ட சட்டையும் கறு நீல நிற பாண்ட்டும் அணிந்து தன் அறையை விட்டு வெளியில் வந்தான். மறுபடியும் நியாபகம் வந்தவனாக உள்ளே சென்று கொலோனை கொஞ்சம் தாராளமாக போட்டுக்கொண்டான். கடிகாரத்தை பார்த்துவிட்டு திடுகிட்டு


'அப்பா..... கிளம்பியாச்சா??" உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்.


உள்ளிருந்து ஒரு பதிலும் இல்லை. இந்த அப்பாக்கு கிளம்புவதற்க்கு எத்தன நேரம் வேணுமோ...... நானே கிளம்பியாச்சு......மனதில் சலித்துக்கொண்டே அப்பா என்று கூப்பிட போக சட்டென்று வாயைமூடிக்கொண்டான். ச..ச..... நான் படற அவசரத்த பார்த்து என்னதோணூமோ அவருக்கு. இழுத்து ஒரு மூச்சை விட்டு விட்டு ஹாலில் சோபாவில் போய் உட்கார்ந்தான். தனிச்சையாக கை டிவி ரிமோட் எடுத்துக்கொண்டது. டிவியை ஆன் செய்து சானல் தாவலானான். கண் தானாக கடிகாரத்தை பார்த்தது. 6.30 மணி சுமாருக்கு வரோம்னு சொல்லியிருக்கோம் இந்தப்பாவிற்க்கு ஒரு சுறுசுறுப்பே இல்லையே என்று நினைத்கொண்டு "அப்....என்று ஆரம்பிப்பதற்க்குள் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை நெற்றியில் திருநீறு கீற்று சகிதமாக வந்து நிற்கும் அப்பாவை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை சந்திரனுக்கு. காது மடல் சிவக்க நிற்கும் மகனை பார்த்து "என்னப்பா?" என்று கேட்க" "அப்பா நம்ம என்ன கோவிலுக்கா போரோம்? எந்த எந்த நேரத்துக்கு எந்த மாதிரி உடை உடுத்தணும்னு உங்களுக்கு பாடம்தான் எடுக்கணும், ஒரு பாண்ட் ஷர்ட் போடகூடாது"?? சரி சரி வாங்க நேரம் ஆகுது என்ன பண்ணிட்டு இருந்தீங்க இத்தன நேரம் ஹ்ம்?" நடந்துகொண்டே பேசிய சந்திரனை பார்த்து, "இல்லப்பா சந்திரா இன்னிக்கு ஞாயித்து கிழமை 4.30 லேந்து 6.00 ராகுகாலம் ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பலாம்.....நல்ல விஷயமா போரோம் எதுக்கு வீணா ...உனக்கு இதுலலாம் நம்பிக்கை இல்லன்னு தெரியும் இருந்தாலும்...."என்று நீட்டி முழக்கிய அப்பாவை பார்க்கவே என்னவோ போல் இருந்தது சந்திரனுக்கு. "சரி சரி நான் அவங்களுக்கு போன் பண்ணி எப்படியும் ஏழு மணிக்குள்ள வந்திருவோம்னு சொல்லிடரேன்".....எனக்கு இதெல்லாம் சுத்தமா புடிக்கல....ஒரு டைம் சொன்னோம்ன கரெக்டா அந்த டைமுக்கு போனாதான் நம்மளுக்கும் மரியாதை அவங்களூக்கும் நம்மள பத்தி ஒரு நல்ல எண்ணம் வரும்.....ஏம்பா நீங்க'?ப்ச்....." என்று சொல்லிகொண்டே செல் போனில் விஷயத்தை அவர்களுக்கு தெரிவித்தான்.


மணி 6.00 அடித்தவுடன் அப்பாவுடன் காரில் ஏறி உட்கார்ந்து இந்திரா நகரை நோக்கி விரட்ட ஆரம்பித்தான்." சந்திரா மொதல் மொதலா அவங்க வீட்டுக்கு போரோம் ஏதாவது பூ பழம் வாங்க வேண்டாமா?" அப்பா தயக்கமா ஆரம்பிக்கவும்.....ஏம்பா இத கொஞ்சம் முன்னாடியே ஞாபகப் படுத்தக் கூடாதா? நான் போயி வாங்கிட்டு வந்திருப்பேன் இல்ல....?"


இப்ப எங்க போயி தேடுவேன்? சரி இருங்க வழில ஏதாவது இருக்கா பாக்கரேன்."கொஞ்சம் தூரம் போய் வழியில் இருந்த ஒரு கடையில் நிறுத்தி ஒரு பூங்கொத்தும் ஒரு பழ கூடையும் வாங்கிகொண்டான். அப்பாவிடம் கொடுத்துவிட்டு காரை ஓட்டிக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தான் சந்திரன். தான் செய்வது சரிதானா இல்லலயா ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. இதெல்லாம் சாத்யமா? பார்த்து, பேசி, ஒருத்தருக்கு ஒருத்தர் பிடித்து....வாழ்க்கை துணைய தேர்ந்து எடுப்பது என்பது சாதாரண விஷயமா என்ன?இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் பொழுது இப்படி ஜீவன் ஸாத்தி யில் விளம்பரம் கொடுத்து அதன் மூலம் இப்பொ இது வறை வந்திருப்பது நினைத்தால் அவனுக்கே திகைப்பாக இருந்தது. அப்பா பழங்காலத்து மனிதர் வேற......
சந்திரனுக்கு ஒரு நல்ல ரெஸ்டாரண்ட்டுக்கு போய் கொஞ்சம் இன்பார்மலா பேசலாம்னுதான் ஆசை. அப்பாவை நினைத்து பேசாமல் இருந்துவிட்டான்.

யோசித்துக்கொண்டே ஓட்டியதில் இந்திரா நகர் அருகில் வந்துவிட்டதை உணர்ந்து சரியான திருப்பமா என்று பார்த்து அந்த அபார்ட்மெண்ட் காம்ப்லெக்ஸ் முன்னாடி காரை நிறுத்தினான் சந்திரன். எந்த தளம் என்று சரி பார்த்து எலிவேட்டரில் பட்டனை அழுத்தி 12 ஆம் வீட்டுக் கதவின் முன்னால் வந்து நின்றான். அப்பாவின் கையிலிருந்த பூங்கொத்தை வாங்கிகொண்டு காலிங்பெல்லை அழுத்தினான். சிரித்த முகத்துடன் கதவை திறந்த பெண் சந்திரனை பார்த்து,

" வணக்கம் நான் நந்தினி, உள்ள வாங்க......"

"வணக்கம் நான் சந்திரன் இவர்தான் என் அப்பா கிருஷ்ணன்'
" அம்மா உள்ள இருக்காங்க....கூபட்ரேன் நீங்க உக்காருங்க....ஒஹ் அம்மா... அம்மா பேரு மீனாக்ஷி அம்மா இவர் சந்திரன் அவரோட அப்பா கிருஷ்ணன். கிருஷ்ணன் சார் ...நானும் உங்க பைய்யனும் நைறைய இதப் பத்தி பேசிட்டோம்.....நீங்களும் அம்மாவும் நேர்ல பார்த்து பேசிக்கனும்னு எங்களுக்கு தோணூச்சு அதான் இந்த ஏற்பாடு. Take your time.அவசரபட வேண்டாம். எனக்கும் சந்திரனுக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒருதருக்கு ஒருத்தர் நல்ல துணையா இருக்கணும்னு ஆசை.அவ்ளொதான். அம்மா நீயும் கிருஷ்ணன் சாரும் பேசிகிட்டு இருங்க.....நானும் சந்திரனும் போய் காபியும் கொஞ்சம் ஸ்னாக்ஸும் எடுதிட்டு வரோம்.

Wednesday, October 24, 2007

The Prince of Rajpipla!!

இன்றைக்குக்கு ஓப்ரா வின்ப்ரியின் (Oprah Winfrey) சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் இந்த ராஜ்பிப்லா (Princely State)என்கிற ராஜ்யத்தின் அரசகுமாரன். பெயர் மன்வேந்த்ர சிங். இவர் அப்பாதான் இப்பொது இருக்கும் அரசர் ரகுபீர் சிங். ரகுபீர் சிங்கிற்க்கு பிறகு ரரஜய்த்தை (!!)ஆளவேண்டியது இந்த மன்வேந்த்ர சிங். ஆனால் மன்வேந்த்ர சிங்கை அவர் அம்மா நிராகரித்து விட்டார், அப்பாவும் ஒத்துகொள்ளவில்லை..... இதனால் வருத்தம் அடைந்த மன்வேந்தர் தன் ராஜ்யத்தை துறந்துவிட்டார். அதற்கான காரணம் இந்த மன்வேந்தர் சிங் தான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்பதை தெரிவித்ததனால்.இவரை பற்றியும் இவர் ராஜய்த்தை பற்றிய விவரங்கள் கீழேhttp://www.uq.net.au/~zzhsoszy/ips/r/rajpipla.html

http://en.wikipedia.org/wiki/Rajpiplaஓப்ராவின் கேள்விகளுக்கு தெளிவான ஆங்கிலத்தில் அழகாக பதில் சொன்னார். தான் எப்படி குழம்பி தவித்ததையும்......சரியான வழிகாட்டுதல் இல்லாமல் எப்படி திருமணம் செய்துகொண்ட தவறையும் கூறினார். இவரது திருமணம் ஒரு வருடத்தில் விவாகரத்தில் முடிந்திருக்கிறது.


மன்வேந்தர் சிங் பேட்டியில் கூறும் பொழுது ராஜய்த்தை விட்டுகொடுத்ததினால் தனக்கு ஒரு ப்ரச்சனயும் இல்லை என்றும் தன்னுடைய sexual preference பற்றி கூறியதால் ஒரு பெரிய மன பாரம் குறைந்தது என்று சொன்னார். ஓரினசேர்ககயாளருக்கான சேவையில் தான் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதாகவும் அவருடைய மக்கள் அவரை எப்போதும் போல் மிகுந்த மரியாதையுடன் நடத்துவதாக சொன்னார்.

எனக்கு என்ன புரியவில்லை என்றால் ஓபெரா ஓரின சேர்க்கை என்பது இன்னும் ஒத்துகொள்ள படாத தண்டிக்கபட கூடிய ஒரு விஷயமாகவே இந்தியாவில் இருப்பதாக கூறியபோது மன்வேந்தர்......"Homosexuality is not punishable in India but the act of homosexuality is" என்று கூறினார்....... என்ன அர்த்தம்?


மத்தபடி ராஜகுமாரன் மாதிரியே எதற்காக உடட உடுத்தி வந்திருந்தார் என்று தெரியவில்லை.....:):)(தலையில் டர்பன், நெற்றியில் பொட்டு!) பேட்டி, ஐஸ்வர்யா ராயொடு இருந்த'தை விட நன்றாகவே இருந்தது.....

Saturday, October 13, 2007

ஒரு மனித வாழ்க்கையில் எத்தனை கட்டங்கள் !)

நேற்று செய்திதாளில் வந்திருந்த ஒரு கட்டுரை ரொம்ப interesting. என்னனா ஒரு மனித வாழ்கைய சாதரணமா எப்படி பிரிக்கிரோம்?? குழந்தை பருவம் (childhood), பதின்ம வயது(teenage), இளமை (வாலிபம்?)பருவம்(Adult) அப்பரம் முதுமை (Old age.) அப்படித்தானே இல்லையா? ஆனா இப்பொ புதுசா ஒரு கட்டம் அதாவது phase கண்டுபிடிசிருக்காங்களாம். அந்த புது கட்டத்துக்கு பேரு ஆடிசி (Odyssey). இந்த ஆடிசி வயது பதின்ம வயது முடிந்ததும் வருவது. அதாவது சுமார் 20 வயதிலிருந்து ஆரம்பம். 20 somethings........!!!

இந்த வயது குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு இது ஒரு பெரிய தலைவலியா இருக்காம். ஏன்னா பசங்க குறிகோள் இல்லாம, எதிலும் ஒரு தீவிர ஈடுபாடு இல்லாம சுத்தராங்களாம். இந்த நிலமை ஒரு 5 வருஷமா இருந்த பரவாயில்லா ஆனா அதுமாட்டுக்கு 5 லேந்து இப்பொ 7 வருஷமா ஆயிடுச்சாம்.ஆசிரியர் சொல்ரார்
" During this decade,20 somethings go to school and take breaks from school. They live with friends and they live at home. They fall in and out of love. They try one career and they try another"


இந்த குறிப்பிட்ட வயது மக்கள் கல்யாணம் மற்றும் குழந்தை பெற்றுகொள்வதை தள்ளி போடுவதிலிருந்து ஆரம்பிச்சு ஒரு நிலையான வேலைய தேடிக்கரதும் இல்ல.
1960 களில் பிறந்தவர்கள் பல பேரு இந்த வயதில் இதையிதை செய்து முடிக்க வேண்டும் என்ற மனதோடு தெளிவாக செயல் பட்டாங்களாம்.அதாவது, 20 வயதிலிருந்து 35 வயதிலிருக்கும் ஒருவருக்கு சில பொறுப்புகள் இருந்ததாகவும் அதை கடைபிடித்தாகவும் சொல்கிரார் ஆசிரியர்.
"People tend to define adulthood by certain accomplishments- becoming financially independent, getting married and starting a family"
இது போக போக இன்னும் கவலைகிடமான ஒரு கட்டமாக போக நிறைய வாய்ப்பிருக்குன்னு எழுதியிருக்கார். இந்த கட்டத்தைதான் ,"Friends" ரொம்ப நல்லா படம் பிடித்து காட்டியதாகவும் எழுதியிருக்கார்.
P.S இப்பொ adulthoodக்கும் old ageக்கும் நடுவுல இன்னொரு கட்டம் இருக்கு அதுதான் active retirement!!!

Thursday, June 28, 2007

super 8!!

சும்மா தலைப்புதான் அப்படி... சர்வேசன் "அளவுக்கு" எதிபார்த்தீங்கன்னா ரொம்ம்ம்ம்ப ஏமாந்துதான் போவீங்க. அவரோட எட்ட படிச்சிட்டு அப்படியே சிலையா நின்னுட்டதனால் கொஞ்சம் தாமதம். அதுக்குள்ள வல்லியும் அழைச்சிட்டு போயிட்டாங்க. பெரியவங்க அழைச்சு இல்லன்னு சொல்ல மனசில்ல.அடாடா இன்னும் தாமதிக்க கூடாதுன்னு நினைச்சிட்டு......யோசிக்க ஆரம்பிச்ச வேளையிலே.......கொஞ்சம் கூட எதிர்பாரத அழைப்பு அல்வாசிடி விஜய் கிட்ட இருந்து. ரொம்ப சுவாரஸ்யமான எழுத்து இவரோடது.கொஞ்ச நாள் காணாம போயிட்டு இப்பொ திரும்பியும் வந்திருக்கார். என்னை அழைத்த உங்க மூணு பேருக்கும் நன்றி........


சரி இப்பொ எட்டு......random facts.....1) மஹா சாது. இப்படி அப்படியில்ல......உங்களால கற்பனை பண்ணகூட முடியாது. சின்ன வயசில ஸ்ட்ரா டம்ப்லெர்ல பால் குடிச்சிட்டிருந்த எங்கிட்ட வந்து எங்கண்ணன் "பால் குடிக்கிறியா" ன்னு கேக்க ஆமான்னு தலையாட்டினேன், நல்லாருக்கான்னு கேட்டான்.......அதுக்கும் ஆமான்னு தலையாட்ட...... அப்ப மூக்கில வச்சு குடிச்சு பாருன்னு இன்னும் நல்லாருக்கும்னு சொல்ல நான் சரிதான்னு மூக்குல வச்சு உறிய மூச்சு குழாயில பால் போயி நான் திண்டாடினத நினைச்சா......இது சாதுதனம் இல்ல மக்குத்தனம்ன்னு நீங்க நினைச்சீங்கன்ன....நான் என்ன சொல்ல.....:)2) Bedwetting was my nemesis!! கிட்டதட்ட ஒரு பதினோரு வயசு வரைக்கும் இரவில் படுக்கையய நினைச்சிருக்கேன். இத பத்தின புரிதல் அப்பல்லாம் யாருக்கும் அவ்ளோ கிடையாது......அதனால பல முறை அவமான பட்டிருக்கேன். இதுல என்ன வேடிக்கைனா எப்படியும் ராத்திரி இந்த அசம்பாவிதம் நடக்கும்கரதுனால ஒரு செட் ட்ரெஸ் எடுத்து என் தலகாணி பக்கத்துல வச்சுகிட்ட்டு படுத்துகுவேன். காரியம் ஆனவுடனே எப்படிதான் முழிப்பு வருமோ சட்டுன்னு முழிப்பு வந்து அப்பரம் போய் எல்லலத்தையும் மாத்திட்டு வந்து படுத்து அடுத்த நிமிஷம் தூக்கம்தான்.3) படிப்புல பெரிய சாதனைல்லாம் பண்ணினதில்ல. ஆனா பள்ளிலயும் (உயர் நிலை வந்தப்ரம்தான் இதுதான் உலகம்ன்னு புரிய ஆரம்பிச்சுது.......அதுவரைக்கும் ஒரு மண்ணும் தெரியாது...)சரி காலெஜ்லயும் சரி நல்ல பாபுலர். ஏன்னா எல்லாவிதமான போட்டிகள்லேயும் கலந்துப்பேன். இருக்கர எல்லா க்ளப்லயும் மெம்பெர். எனக்கு பள்ளில விசிரிலாம் இருந்திருக்காங்கன்னா பாத்துக்கங்க்ளேன். ஆனா அது ஒரு வேண்டாத ஈகோ பூஸ்ட்டா போனது வேர கதை.4) விளையாட்டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஓரளவு எல்லா விளையாட்டையுமே ஃபாலோ பண்ணுவேன். பள்ளில படிக்கர காலத்துல ஒரு நல்ல அத்லீட்டா இருந்தேன். காலெஜ்ல ஃபீல்ட் ஹாக்கி கொஞ்ச நாள் விளையாடி இருக்கேன். ஒரு சமயம் ஸ்டிக்கால செமையா அடி வாங்கினதால் அம்மா தடை போட்டுடாங்க. சரி இருக்கவே இருக்கு Interact club, NCC.....ன்னு விட்டுடேன்.....5) அப்பா......மந்திர சொல் இல்லையா?? அப்பா வாயில் கான்செர் வந்து இறந்து போனார்.ரேடியேஷன்போது அவர் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. டாடா மெமோரியல் ஹாஸ்பிடல், மும்பைலதான் அவரோட சிகிச்சை நடைபெற்றது. சாப்பாட்டு ப்ரியர்.....கடைசியில் சாபிட முடியாமலே இறந்து போனார். அவர் படும் கஷ்டம் பார்த்து நாங்களெல்லாம் அவரை சீக்கிரம் அழைத்துகொள்ள கடவுளை ப்ரார்த்தனை செய்த்தது மறக்க முடியாது. He used to be such a fun loving person. The disease changed his whole personality.6) பெங்களூர்ல இருந்தப்ப டாக்டர் சந்த்ரசேக்கர் இன்ஸ்டிட்யுட் ஆஃப் ஸ்பீச் அண்ட் ஹியரிங் ல சைன் லாங்குவேஜ் படிச்சது ரொம்ப சுவாரஸ்யமான ஒண்ணு. அப்ப அங்க வர குழந்தைங்களோட சைன் லான்குவேஜ்ல பேச முயற்சி பண்ணுவேன்......நான் யோசிச்சு யோசிச்சு பண்ரத பாத்து அவங்களுக்கு ஒரே சிரிப்புதான்.....


7) Driving test....இத பத்தி சொல்லலனா சரி இல்ல. ஏன்னா என் வாழ்கையில failures are stepping stones for success ன்க்ர பழமொழிய நல்லா உபயோகிச்சது அப்பதான். எல்லருக்கும் தெரிஞ்ச மாதிரி அமெரிக்கால ட்ரைவிங் தெரியலனா ஒண்ணும் செய்ய முடியாது......so DMV க்கு போயி written test கொடுத்துட்டு அதுல 100% வாங்கிட்டோம்னு ஒரே பெருமை. அப்பரம் தான் ஆரம்பிச்சுது என் கிரகம்......ஒரு தடைவ written test க்கு மூணுதடவை behind the wheel test கொடுக்கலாம். நான் மூணு தடவையும் பெயில். அப்ப திரும்பியும் written test கொடுக்கணும். எனக்கு ட்ரைவிங் சொல்லி கொடுத்தவர் ரொம்ப பாவம் நான் டெஸ்ட் கொடுக்க போரச்சேல்லாம் என் கைய்ய புடிச்சிகிட்டு நல்லா ப்ரரர்த்தனை பண்ணி அனுப்புவார். மறுபடியும் டெஸ்ட் எழுதி மூணாவது தடவைததன் பாஸ் பண்ணினேன். நான் பாஸ் பண்ணினதுக்கு என்னவிட எங்க வீட்லயும் என்னோட instructer ம் தான் ரொம்ப சந்தோஷ பட்டாங்க.


8) வேர ஒண்ணும் இல்லையே எழுத......so one of the random fact அ இத வச்சுகோங்க.....நான் 5 foot 6 inches உயரம் 134 lb எடை.....


நான் அழைப்பது.....


ஸ்ருசல்

ஸ்ரிஷிவ்

முத்துலக்ஷ்மி

அருணா ஸ்ரினிவாசன்


வெங்கட்

ப்ரசன்னா

Bad News India

வினையூக்கி

எட்டின் விதிகள் இப்ப ஓரளவு எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிரேன்......இங்க நான் கூப்பிட்டு இருக்கரவங்க ஏற்கனவே எழுதிட்டாங்களா தெரியல......சரி எழுதாதவங்க எழுதுங்க......

Saturday, May 26, 2007

மனதை அறுத்து போட்ட புத்தகம்!!

மெல்லிய இதயம் கொண்டவர்கள் இந்த புத்தகத்தை தவிர்கவும்!


நான் இங்கு அறிமுகம் செய்ய போகிற புத்தகத்தின் பெயர்,

"We need to talk about Kevin" by Lionel Shriver.

இது ஒரு உளவியல் சார்ந்து எழுதப்பட்ட புத்தகம். இப்பொழுதுதான் படித்து முடித்தேன். அது ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தும் ப்ரமிப்பிலிருந்தும் மீள முடியாமல் இந்த அறிமுகத்தை எழுதுகிரேன். சில புத்தகங்கள் நம்மை சிரிக்க வைக்கும்,சில அழ, சில சிந்திக்க வைக்கும் இதை போல பல விதமான மன உணர்வுகளை தூண்டும்.....இந்த புத்தகத்தை விவரிக்க, இது என்ன மாதிரி உணர்வுகளை ஒரு வாசகரிடம் எழுப்பும் என்று சொல்வது மிக கடினம். இதயத்தை ரணகளமாக்கி விடுகிறது.


ஒரு மனைவி, தன் கணவனுக்கு எழுதும் கடிதங்களாக தொகுக்க பட்டுள்ளது இந்த நாவல். கணவனுக்கு தன் இதயத்தில் இருக்கும் எண்ணற்ற எண்ணங்களையும் உணர்வுகளையும எழுத்துக்களால் வடிக்கிறாள்.

தாய்மை என்றாலே அன்பு, புனிதம்,தியாகம் என்கிற கோட்பாடிலிருந்து சிறிது மாறுபட்டு எழுதபட்டிருக்கும் நாவல். ஈவா கட்சோடூரியன், என்கிற தாய்க்கும் அவள் மகன் கெவினுக்கும் நடக்கும் மன போராட்டங்கள். தன் மகனின் மன்னிக்கமுடியாத செயலுக்கு தன்னுடைய பாசமற்றதன்மையும் ஒரு காரணமோ என்று குற்ற உணர்வில் தவிக்கும் ஒரு தாயின் துன்பம் மிக மிக துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது. எப்படி சில மனிதர்களால் மற்ற உயிர்களிடத்தில் அன்பு செலுத்தவோ அல்லது மற்றவர்கள் அவர்கள் மேல் அன்பு செலுத்த தகுதியானவர்களாகவோ இருக்க முடிவதில்லை என்பதை மிக நேர்த்தியாக எழுதியிருக்கிரார் ஆசிரியர்.

ஈவா, a successful career woman,உலகத்தையே சுற்றி வரும் அவளுடைய வேலையில் மிகுந்த திருப்தியும் பெருமையும் அவளுக்கு. அன்பான கணவன் அவனுடைய ஆசைக்காக தாயாக சம்மதிக்கிறாள். விருப்பமில்லாத தாயாகாவே முதலில் இருக்கிறாள். இங்கு ஒரு சின்ன பத்தி.....

" My approach to parenthood was conditional, and the conditions were strict. I did not want to mother an imbecile or a paraplegic; whenever i saw a fatigued women wheeling their......Indeed, an honest list of all that i did not want to nurture, from the garden - variety moron to the grotequely overweight, might run damningly to a second page. In retrospect, however,...... Dr. Rhinestein did not test for malice, for spiteful indifference or for congenital meanness."


ஈவா அழகான ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிறாள். பொதுவான எண்ணபடி, குழந்தை பெற்ற தாய் அப்படியே பூரித்து போய் பாசம் பொங்கவேண்டும் என்ற நியதிபடி, ஈவா தனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷத்தை இந்த நிகழ்ச்சி தர வேண்டும் என்று எதிர்பார்கிறாள். இங்கு ஒரு பத்தி.....

"BEsides, you would cajole, parenthood isnt something that happens in an instant. The fact of a baby- when so recently there was none- is so disconcerting that i probably just had'nt made the whole thing real to my self yet. I was dazed. That's it, i was dazed. I wasn't heartless or defective.Besides, sometimes when you're watching yourself too hard, scrutinizing your own feelings, they flee, they elude capture........And for God's sake get some rest. I know you'd say all these things, because i said them to myself. And they didnt make a dent- in my sense that the whole thing was going wrong from the start, that i was not following the program, that i had dismally failed us and our newborn baby. That i was, frankly, a freak."

குரூரமும், த்வேஷமும் , நீசத்தனமும் நிறைந்த ஒரு குழந்தையின் தாயாக ஈவா படும் உடல் நல போராட்டமும் அவள் கணவரின் அறியாமையும், கெவின் தன் அப்பாவின் முன் ஆடும் நாடகமும் அப்படியே கண் முன் கொண்டு நிறுத்துகிறார் ஆசிரியர்.
இது எல்லாமே, "அந்த வியாழகிழமை"க்கு முன்பு இல்லை அதை தொடர்ந்து என்கிற ரீதியிலேயே எழுதப்பட்டிருப்பதால்....," வியாழகிழமை" யில் என்ன நடந்திருக்கும் என்பதை முதல் அத்தியாயத்திலேயே குறிப்பிட்டு விடுகிறார். அந்த விஷயத்தை கோடிட்டு காட்டுகிறாரே ஒழிய முழு விவரமும் தருவதில்லை.

இந்த புத்தகத்தை பற்றி வேறு என்ன எழுதுவது என்று யோசிக்கின்ற வேளையில்.....இந்த அறிமுகத்தை சீக்கிரம் பதிப்பித்து ஒரு மிக நல்ல புத்தகத்தை படித்த அனுபவத்தை உங்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலே மேலோங்குகிறது.

It is a very deep and an intense novel. This is not for light readers. Hard reading. Beautifully written with chosen words.

இந்த நாவலை படிக்கும் போது கண்டிப்பாக aestheitic distance ஐ கடைபிடியுங்கள். It tends to get under your skin. Keep reminding yourself that what you are reading is fiction.

என்னை மிகவும் பாதித்தது இந்த நாவல். அபாரமான எழுத்து நடை (மொழி விரும்பிகளுக்கு!) இரண்டு நாள் தூங்க விடாது செய்யும் கதை கரு.

'Good Son ' என்கிற படத்தை பார்த்து இருந்தீர்களென்றால், இந்த நாவலுக்கு அது ஒரு நல்ல அறிமுகமாக சொல்லலாம். Macaulay culkin நடித்தது. (இந்த நாவலுக்கும் படத்துக்கும் சம்பந்தம் கிடையாது!)

Saturday, April 28, 2007

அழகு - கூனி சுந்தரி- Beauty Tips

சத்யப்ரியன் அழகு பதிவு போட சொல்லி கூப்பிட்டு கொஞ்ச காலம் ஆச்சு. என்னன்னா நான் அழகுன்னு நினைச்சத எல்லாருமே எழுதி முடிச்சதனால எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவையா இருந்தது. என்னோட அழகுகள பட்டியல் இட்டு எழுத முடியுமா தெரியல. இங்க சில அழகான தருணங்கள உங்களோட பகிர்ந்துக்கரேன்.போனஸ்சா ஒரு கதை!!

1) நாங்க கொஞ்ச நாள் முன்னாடி whale watching போயிருந்தோம். ரொம்ப நேரம் நின்னு திமிங்கிலம் வருதா வருதா பாத்து பாத்து கண்ணே பூத்து போயிருந்த நிலைல சரி கொஞ்ச நேரம் உக்காரலாம்ன்னு அங்க இருந்த பென்ச்ல போயி உக்கார போனேன். அப்ப அங்க உக்கார்ந்திருந்த ஒரு பெண் கொஞ்சம் கோவத்தோட," இந்த இடத்துல நாங்க எல்லாரும் சேர்ந்து உக்கார போரோம்ன்னு," சொல்லி அவங்களோட கூட வந்தவங்கள காமிச்சிட்டு ஒரு பார்வை பாத்தாங்க. நம்ம யாராவது கொஞ்சம் சத்தமா பேசினாலெ பயந்து போர டைப். சரி எதுக்கு வம்புன்னு மறுபடியும் போய் நின்னுகிட்டேன். அப்படியே கொஞ்ச நேரம் போச்சு. படகு செம ஆட்டம். மெதுவா மறுபடியும் திரும்பி பாத்தேன். அந்த பெண்ண தவிர வேற யாரும் அங்க உக்காந்திருக்கல. சரி கொஞ்சம் ஓரமா பாத்து உக்காந்துக்கலாம்ன்னு போனேன் பாருங்க, அந்த பெண்னுக்கு என்ன தோணுச்சோ தெரியல என்கிட்ட வந்து, " என்ன மன்னிச்சிருங்க நான் ஒங்க கிட்ட அப்படி நடந்திருக்க கூடாதுன்னு", (sorry i was rude to you!)அப்படின்னு சொல்லிட்டா. எனக்கு ரொம்ப ஆச்சர்யம். அறிமுகமில்லாத ஒரு அன்னியரிடம் மன்னிப்பு கேட்ட அந்த பெண்ணோட குணம் எனக்கு ரொம்ப அழகா தெரிஞ்சது. She made my day really beautiful.
2) இதுவும் மிக சமீபத்துல நடந்தது. வர்ஜினியா டெக் கொலை சம்பவம் நடந்து முடிஞ்சு, எல்லா தொலைகாட்சியிலயும் அத பத்தியே பேசிகிட்டு இருந்த நேரம். இரண்டு இந்தியர்களும் அதில் அடக்கம்ன்னு தெரிஞ்சது. அதிலும் ஆசிரியர் லோகனாதன் தமிழ்நாட்டை சேந்தவர்ன்னு கொஞ்சம் கூடுதல் அனுதாபத்தை நான் காட்டிட்டு உக்காந்து செய்திய பாத்துகிட்டு இருந்த நேரம். அப்போ பைய்யன் அங்க வரவும் அவன்கிட்ட, "ச்ச பாத்தியா தமிழ்நாட்டை சேந்த ஒருத்தரும் இறந்து போயிட்டாராம் அப்படின்னு சொன்னேன்", அப்ப அவன் என்ன விசித்ரமா பாத்துட்டு, ' Should i be more enraged because an Indian has been killed ?" அப்ப்டின்னு கேட்டுட்டு போயிட்டான். அப்படியே கொஞ்ச நேரம் உக்காந்துட்டேன். எல்லா உயிர்களையும் சமமா பாவிக்க தெரிஞ்ச அவனுடைய மன முதிர்ச்சி எனக்கு ரொம்ப அழகா தெரிஞ்சது.


இப்ப கதை!நான் பள்ளியில் படிக்கும் போது தூர்தர்ஷனில் ஒரு நாடகத்தை ஒளிபரப்பினாங்க. அது ராஜாஜியோட ஒரு சிறுகதைன்னு நியாபகம். அந்த நாடகத்தின் பேரு "கூனி சுந்தரி". என்ன மிகவும் பாதிச்ச கதை அது. ரொம்ப நல்லாவும் எடுத்திருந்தாங்க. ஷரத்பாபு நடிச்சிருந்தார்ன்னு நினைக்கரேன். சரி கதைக்கு வருவோம்!!

ஒரு மெத்த படித்த வாத்யார் இருப்பார். வேதங்களில் எல்லாம் தேர்ச்சி பெற்றவர் அவருக்கு எட்டு வயதில் ஒரு பெண் இருப்பாள். முதல் மனைவி அகாலமாக மரணம் அடைந்ததனால் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வார். அந்த பெண்ணிற்கு கூன் முதுகு. கூன் முதுகினாலோ என்னவோ அந்த வாத்யார் தன் இரண்டாவது மனைவியின் மேல் எந்த வகை ஈடுபாடும் இல்லாமல் இருப்பார். அவளோ அவருக்கு வேண்டிய எல்லாவற்றையும் மிகுந்த சிரத்தையோடு செய்துகொண்டு அவரிடம் வேறு எந்த வித எதிர்பார்பு இல்லாமல் இருப்பாள். அவளோட உலகமே அந்த எட்டு வயது சிறுமியை சுற்றியே போய்கொண்டிருக்கும். அந்த சிறுமியை மிகுந்த பாசத்தோடு பார்த்துகொள்வாள். ஒரு சமயம் சுந்தரி வீட்டிற்கு வெளியே இருக்கும் கிணற்றில் நீர் இறைக்க செல்வாள். சிறுமியும் கூடவே செல்வாள். அப்போது அங்கு இருக்கும் மற்ற பெண்கள், " கூனி சுந்தரி" என்று கூப்பிட்டு கேலி செய்வார்கள். சுந்தரி ஒன்றும் சொல்லாமல் சிறுமியை அழைத்துகொண்டு வந்துவிடுவாள். அனால் அந்த சிறுமியை அந்த கிண்டல் ரொம்பவே பாதித்திதுவிடும். பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு அப்பாவுடன் உட்கார்ந்து கொண்டு பேசும் பொழுது அவள் கேப்பாள்," அப்பா ஏன் எல்லாரும் அம்மாவ கூனி சுந்தரின்னு சொல்லி கூப்பிட்டு கிண்டல் பண்ணராங்க? நம்ம அம்மா ரொம்ப அழகா இருக்காங்களே?" அந்த நிமிஷம் அந்த வாத்யாருக்கு கன்னத்தில் யாரோ பொளேர் என்று அறைந்தது போல் இருக்கும். பின்னர் சிறுமி, சுந்தரியுடனும் அப்பாவுடனும் உட்கார்ந்து சந்தோஷமாக ஊஞசல் ஆடுவது போல் முடித்திருப்பார்கள்."Beauty is in the heart of the beholder"

H.G. Wells(இது நினைவுலேந்து எழுதினது, அதனால ஏதாவது முக்க்யமான குறிப்பு விட்டு போயிருக்காலாம், மொத்த கருத்து இதுதான்னு நினைக்கரேன்!)

Beauty Tips From a beautiful woman !!


The following was written by Audrey Hepburn who was asked to share "beauty tips."
For attractive lips, speak words of kindness.
For lovely eyes, seek out the good in people.
For a slim figure, share your food with the hungry.
For beautiful hair, let a child run his or her fingers through it once a day.
For poise, walk with the knowledge that you never walk alone.
People, even more than things, have to be restored, renewed, revived, reclaimed and redeemed; never throw out anyone.
Remember, if you ever need a helping hand, you'll find one at the end of each of your arms. As you grow older, you will discover that you have two hands, one for helping yourself, the other for helping others.
The beauty of a woman is not in the clothes she wears, the figure that she carries, or the way she combs her hair. The beauty of a woman must be seen from in her eyes, because that is the doorway to her heart, the place where love resides.
The beauty of a woman is not in a facial mode, but the true beauty in a woman is reflected in her soul.
It is the caring that she lovingly gives the passion that she shows.
The beauty of a woman grows with the passing years.
If you share this with another woman, something good will happen -- you will boost another woman's self esteem, and she will know that you care about her.இதோட என் அழகு பதிவ முடிச்சுக்கரேன்
சர்வேசன் சர்வே போட்டு களைச்சு போயிருப்பீங்க ஒரு மாறுதலுக்கு அழகு பதிவு போடுங்களேன் !!!!நெல்லை சிவா க்ரிகெட்ல்லாம் ஒரு வழியா முடிஞ்சிருச்சே.......relaxed அ அழகு பதிவு போட வாங்க.

Thursday, April 19, 2007

புதிய நட்பு ! (சிறுகதை)

காலையில் அலாரம் அடிக்கும் முன்பே விழிப்பு வந்தது யசோதாவிற்கு. கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருக்கலாம் என்று தோன்றியது. இரண்டு வாரமாக உடம்பில் ஏதோ அசதி. அதும் காலையில் எழுந்திருப்பது ப்ரம்ம ப்ரயத்தனமாக தோன்றியது அவளுக்கு. மறுத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். மெதுவாக எழுந்து நின்றவளுக்கு தலை சுத்துவது போல் இருந்தது. சமாளித்துக்கொண்டு பாத்ரூம் சென்றபோதுதான் நியாபகம் வந்தது இன்று மாயாவிற்கு சீக்கரம் பள்ளி செல்லவேண்டும் என்று. தன்னைதானே கோபித்துக்கொண்டு அவசரமாக வெளியில் வந்து மாயாவிற்கு ஒரு குரல் கொடுத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்று காபி மேக்கரில் பொடியை போட்டு விட்டு அவளுக்கான காலை உணவை எடுத்து வைத்தாள்.

மாயாவிற்கு பதினைந்து வயது. உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு. நல்ல சுறுசுறுப்பான பெண். முரளியும் யசோதாவும் அமெரிக்கா வந்து இரண்டு வருடம் கழித்து பிறந்தாள் மாயா. முரளிதான் தன் பெண்ணிற்க்கு தன்னுடைய பெயரின் முதல் எழுத்தையும்
யசோதாவின் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து மாயா என்று பெயர் வைத்தது.

" Rise and Shine, mom! குரல் கேட்டு திடுகிட்டு விழித்த போதுதான் தெரிந்தது யசோதவிற்கு தான் அப்படியே டைனிங் டேப்லில் தலையை சாய்த்து தூங்கியிருப்பது.
என்ன தூக்கமோ? என்று நினைத்துக்கொண்டு, ஆரஞ்சு ஜூசை எடுத்து கிலாசில்விட்டு பெண்ணிடம் நீட்டவும், அதை வாங்கி குடித்துகொண்டே, "Mom are you ok??" என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்காமல் mp3 player ஐ எடுத்து காதில் மாட்டிகொண்டாள் மாயா. பின்னர் எதையோ நினைத்துகொண்டவளா, ' Mom Michelle is going to give me a ride back home, so you dont bother, now hurry up mommy dearest!" என்று சொல்லிவிட்டு காரில் போய் உட்கார்ந்தாள். அவசரமாக காபியை ஒரே மடக்காக குடித்துவிட்டு, மாயாவை பள்ளியில் கொண்டுவிட்டு திரும்பும் போது வயிற்றில் ஏதோ பிசைவது போல் உணர்வு யசோதாவிற்கு. இன்று கண்டிப்பாக அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிடவேண்டும் என்று பள்ளியில் இருந்து திரும்பியபின் முதல் வேலையாக மருத்துவரை கூப்பிட்டாள் யசோதா.
இரண்டு வாரம் கழித்து ஒரு தேதி கொடுக்கவும் யசோதாவிற்கு ஆயாசமாக இருந்தது.
அவளுடைய நிலைமையை எடுத்து சொல்லி,' can you sqeeze me in somewhere today?" என்று கேட்டுவிட்டு, அவள் கான்செலேஷன் இருந்தால் கூப்பிடுவதாக சொன்னபின் போனை கீழே வைத்துவிட்டு முரளியை கூப்பிட்டு விவரம் சொன்னாள்.

முரளிக்கு வெளியூரில் வேலை. நான்கு நாட்கள் வெளியிலும், வெள்ளி வீட்டிலிருந்தும் வேலை. சனி ஞாயிறு எப்படியும் விடுமுறை. புதிய பிராஜெக்ட் ஆறு மாதம் இப்படிதான் வேலை என்று சொல்லியிருந்தான். "திருப்பியும் டாக்டர் ஆபிச கூப்பிட்டு bug them ", one a day women" சாப்பிடர்யா தினமும்?? நான் கார் ஓட்டிட்டு இருக்கேன் இப்ப, கூபட்ரேன் ok? take care' என்று சொல்லி போனை வைப்பதற்கும் டாக்டர் ஆபிசிலிருந்து மதியம் 1.30 க்கு அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதாக போன் வருவதற்கும் சரியாக இருந்தது.

யசோதா பிரிட்ஜ் திறந்து பாத்தாள் வகை வகையாக மிச்சம் மீதி இருப்பதை பார்த்துவிட்டு மதியத்துக்கு வெறும் தயிர் சாதம் போதும் என்று நினைத்துக்கொண்டாள்.
தான் வாலண்டியர் செய்யும் கம்யுனிடி செண்டெர்கு போன் செய்து இன்று வர முடியாது என்று சொன்னாள். மனது எந்த வேலையிலும் ஈடுபட மறுத்தது அவளுக்கு. ஏன் இப்படி மந்தமாக இருக்கிரது என்று நினைத்துகொண்டிருக்கும் போதே திடீரென்று இது ஒரு வேளை மெனோபாசாக இருக்குமோ என்று தோன்றியது அவளுக்கு. hot flush ஒண்ணும் வந்த மாதிரி தெரியலயே என்று தோன்றியது. நாப்பது வயதில் மெனோபாஸ் வந்துவிடுமா தெரியலயே. மனதுபாட்டு கட்டுபாடில்லாமல் சுற்றி சுற்றி வந்தது. தான் எப்போதும் ரெகுலர் என்று தன்னைதானே சமாதானம் செய்துகொண்டாள்.ஏதோ நினைவு வந்து அவளை பயமுறுத்தியது. உடனே டாக்டரிடம் சென்று எல்லவற்றையும் கிளியர் செய்ய வேண்டும் என்று மனது பரபரக்கவும், மட மட என்று குளித்து ரெடியாகி ஏனோதானோ என்று சாப்பிட்டு விட்டு, தன்னுடைய அப்பாயிண்ட்மெண்ட்க்கு அரை மணி நேரம் முன்னாடி போய் உட்கார்ந்தாள்.

அங்கிருந்த எல்லா பத்ரிகைகளையும் புரட்டினாளே ஒழிய மனது இனம் புறியாத பயத்தில் நிலை கொள்ளாமல் தவித்தது. அவள் பேரை நர்ஸ் கூப்பிடவும் மட மட என்று எழுந்து போனாள். வழக்கம் போல் ரெகுலர் கேள்விகள் பதில்கள், டாக்டரிடம் சிம்டம்களளை சொல்லி முடித்தவுடன் எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் டாக்டர் சில டெஸ்டுகளை எழுதி குடுத்துவிட்டு, Mrs. Murali did you have your cycle yet?? அவள் திடுக்கிட்டு no என்றவுடன்...." I think, you should better take a pregnancy test,can you wait for half an hour?" வாயிலிருந்து வார்த்தை வரவில்லை யெஸ் என்பது போல் மண்டையை ஆட்டினாள். அடுத்த அரை மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை அவளூக்கு. எல்லாம் டெஸ்ட்டும் முடிந்து, Congrats Mrs Murali you are 4 weeks pregnant"என்று சொல்லவும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள். டாக்ட்டரிடம் என்ன சொன்னாள் எப்படி வெளியில் வந்தாள் ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.

இது எப்படி?? முருகா, முருகா.என்று வாய் முணு முணுத்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. எது என்ன அசிங்கம்? அய்யோ இந்த அவமானத்தை எப்படி தாங்குவேன். பதினைந்து வயது மகள் இருக்கையில்!! எப்படி, இதை பற்றி யோசிக்காமல் இருந்தேன்??
முருகா இது தப்பா இருக்கணுமே....மனது புலம்பியது. கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் கண்ணீர் அப்படியே வழிய வழிய காரை ஓட்டிகொண்டு வீடு வந்து சேர்ந்தாள். முரளியிடம் சொல்லவேண்டும். என்ன சொல்லுவான்? அவன் என்ன சொல்ல? அவனும் சேர்ந்து அவமான படட்டும், மனது குரூரமாக எண்ணி தப்பிக்க பார்த்தது. மாயவிடம் என்ன சொல்லுவது?? நினைக்கும் போதே கூசியது அவளுக்கு. சீ சீ என்ன நினைப்பாள் அவள்? are these guys still doing this?? என்று நினைப்பாளோ? அவளுக்கு தெரியாமல் டெர்மினேட் பண்ணிவிடலாமா? முரளியிடம் பேசவேண்டும். எல்லாம் அவனால்தான்.

மாயா, thanks guys! என்று சொல்வது கேக்கவும் பாத்ரூம் சென்று முகம் கழுவினாள். பள்ளீயிலுருந்து வந்துவிட்ட மகளுக்கு எதாவது குடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு மாடியிலுருந்து கீழே இரங்கும் போது, mom you look terrible, what happened? என்று கேட்டவுடன்.....அப்படியே உடைந்து போய் மாடி படியில் உட்கார்ந்து விசும்ப ஆரம்பித்தாள் யசோதா. அம்மா....did you get any phone call from India?? are thatha and patti ok?? அவள் கேள்வி செல்லும் திசை புரிந்து அதெல்லாம் ஓண்ணும் இல்லை என்று சொல்ல, யசோதவை எழுப்பி மெதுவாக கூட்டி சென்றாள் மாயா. Would you like to talk to me about what is bothering you?? டைனிங் டேப்பில் லில் உட்கார்ந்து கொண்டு நிஜமான கரிசனத்தோடு கேக்கும் தன் பெண்ணை கூர்ந்து நோக்கிவிட்டு கண்கள் மீண்டும் குளமாக தலையை குனிந்து கொண்டாள் யசோதா."Mom, trust me i can handle stuff talk to me" என்று கூறிய மகளை வியப்புடன் பாத்தாள். தனக்கும் இவளுக்கும்தான் எவ்வளவு வித்யாசம். எத்தனை தன்னபிக்கையோடு பெரிய பெண் போல் பேசுகிறாள். இவளிடம் சொல்வதா? எப்படி?? முரளியிடம் முதலில் சொல்ல வேண்டாமா? இந்தியாவிற்கு அம்மாவிடம் கூப்பிட்டு பேசலாமா?

Mom come lets go for a drive.....மாயா. சரி அவளோடு கொஞ்சம் வெளியில் போனாலாவது மனது தெளிவாக சிந்திக்கும் என்று தோன்றியது யசோதவிற்கு. யசோதவின் மனதை மாற்றுவதற்காக மாயா வழியில் எதேதோ பள்ளி விஷயமாக பேசிகொண்டே வந்தாள். சிலை போல் உட்கார்ந்து காரை ஓட்டும் அம்மாவை பார்க்கையில் கொஞ்சம் கவலையாக இருந்தது அவளுக்கு. காரை பார்க் செய்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள் இரண்டு பேரும். வள வள என்று பேசிகொண்டு வந்த மகள் மௌனமாக நடக்கவும் பாவமாக இருந்தது யசோதவிற்கு. தன்னுடைய கவலையில் அவளையும் சேர்த்துவிட்டோமே என்று. பார்க் பென்ச்ல் போய் உட்கார்ந்தார்கள். அம்மா, என்று சொல்லி கையை பிடித்து அழுத்தி,' என்னிடம் சொல், என்பது போல் பார்த்த மகளை அணைத்துகொண்டாள் யசோதா.

Maya i have something important to tell you", என்று சொல்லிவிட்டு தான் மறுபடியும் அம்மா ஆகப்போவதை எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சொல்லி முடித்தாள். சொல்லி முடித்த மறு கணம் சொல்லி இருக்க வேண்டாமோ என்று தோன்றியது யசோதவிற்கு. மாயா இதை எப்படி எடுத்துகொள்வாளோ என்ற கவலையோடு பார்த்தாள்.
முதலில் குழப்பமான முகபாவம் காட்டி, பின்னர் யே என்று கத்திகொண்டு ஓடி வந்து இருக்க கட்டி அழுத்தமாக முத்தம் கொடுத்த மகளை,தானும் அணைத்துக்கொண்டாள். இவளுக்கு தான் சொன்ன செய்தியின் முழு அர்த்தம் விளங்கியதா என்று ஆச்சர்யமாக இருந்தது யசோதவிற்கு. அவளை தள்ளி நிறுத்தி, ' did you get what i said ?" என்று கேட்டாள் யசோதா. " of course, mom !" என்று கூறி விட்டு, 'Iam so happy for you guys, when did you find out? " இன்று தான் என்று கூறி தான் இன்னும் முரளியிடமே சொல்லவில்லை என்றாள் யசோதா. Crazy'! என்று யசோதாவை பார்த்து கூறி விட்டு.....யசோதாவிடம், எப்படி முரளியிடம் இந்த மகிழ்சியான விஷயத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று பெரிய ப்ளான் போட்டு விலாவாரியாக சொல்ல ஆரம்பித்தாள் மாயா. தான் அன்று தன் தோழி வீட்டிற்கு சென்று விடுவதாகவும், யசோதா எப்படி தன்னை தயார் செய்துகொண்டு அப்பாவை எப்படி ஆச்சரியபடுத்த வேண்டும் என்று பேசிகொண்டே போகும் மகளை, அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் பார்த்துகொண்டு இருந்தாள் யசோதா. பின்னர் என்ன தோன்றியதோ, மாயா அம்மா பக்கம் திரும்பி,"Were you upset because of this?" என்று கேட்டாள். ஆமாம் என்பது போல் யசோதா தலையசைக்கவும், ஏன் என்பது போல் பார்த்து,உடல் ரீதியாக டாக்டர் ஏதாவது சொன்னாரா என்று கேட்டாள் மாயா. இல்லை என்று சொல்லிவிட்டு தான் எப்படியெல்லாம் குழம்பி தவித்தோம் இந்த பெண் என்னடாவென்றால் ரொம்ப சாதரணமாக எடுத்துகொண்டுவிட்டாளே என்று தோன்றியது யசோதவிற்கு.

மாயா, "How do you really feel about this?" யசோதா கேட்கவும், Why mom? i feel really happy about it.....தன்னால் எந்த விதமான சங்கடத்துக்கும் தன் மகள் உள்ளாககூடாது என்று தீர்மானமாக எண்ணியவாறு,"Are you embarased about the whole situation?",மறுபடியும் மறுபடியும் கேள்விகள் கேட்ட யசோதாவை, சிறிய அதிர்ச்சியுடன் பார்த்தாள் மாயா. பின்னர் யசோதாவின் கேள்விகளுக்கு பின்னால் இருந்த அர்த்ததை ஊகித்தவாறு சிறிது உணர்ச்சி வசபட்டவளாக, "அம்மா, நீ கேட்கும் கேள்விகள் எனக்கு கோபத்தை உண்டு பண்னுகிறது, இது நீயும் அப்பாவும் சேர்ந்து தீர்மானம் செய்ய வேண்டியது, உன் படுக்கை அறையை எட்டி பார்ப்பது என் வேலையில்லை, என்று சொல்லிவிட்டு அம்மாவிடம் தேவைக்கு அதிகமாக பேசிவிட்டோமொ என்று தோன்ற, "mom forgive my language" என்று கூறிவிட்டு அம்மாவின் அருகில் உட்கார்ந்துகொண்டாள்.

அம்மாவின் கைககளை மெதுவாக பிடித்து," உனக்கு இது எதிர்பாராமல் வந்த செய்தி என்று புரிகிறது, அனால் ஏதோ உலகமகா தப்பு செய்துவிட்டது போல் நீ புலம்புவது எனக்கு கொஞசம் கூட புரியவில்லை. உனக்கு இன்னும் வயது இருக்கிரது....இந்த குழந்தயை பெற்று வளர்க்க முடியுமா என்று தீர்மானம் செய்வது நீயும் அப்பாவும் மட்டுமே. நான் என்ன சொல்வேன் மற்ற உன் தோழிகள்,உறவினர் என்ன சொல்வார்கள் என்று குழம்புவது வேண்டாத வேலை. இதில் அவமான படவோ குற்ற உணர்வில் தவிப்பதோ அவசியமே இல்லை," பேசிகொண்டே போன மகளின் தோளில் தலையை சாய்த்து ஒரு புதிய நட்பு கிடைத்த மகிழ்ச்சியில் கண்களை இருக்க மூடி தன் தாய்மையை அனுபவிக்க தயாரானாள்.


P.S இதில் கொஞ்சம் உண்மை கலந்து இருக்கிரேன். முதல் கதை முயற்சி. நடை, உடை பாவனை எதுவும் இல்லாததற்கு மன்னிக்கவும்.!!! சர்வேசன் கதை போட்டிக்கு எழுத ஆரம்பிச்சு இப்பதான் முடிச்சேன்....:):)Saturday, April 07, 2007

இந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்!

ஏப்ரல் மாத டைம் பத்ரிகையில் க்லோபல் வார்மிங்கை(Global Warming) கட்டுபடுத்த நாம் ஒவ்வொருவரும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி ஒரு ஐம்பத்தி ஒரு விஷயங்கள் எழுதியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் நம்மால் கடைபிடிக்க முடியாவிட்டாலும் சிலதை நம்மால் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. நடைமுறை வாழ்கையில் கடைபிடிக்க முடியும் என்று எனக்கு தோன்றியவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.

1) லைட் பல்ப்ஸ்.

நாம் சாதரணமாக உபயோகிக்கும் பல்ப்பை (conventional incandescent bulbs) விடுத்து குழல் விளக்கை சுற்றி வைத்த மாறி இருக்கும் பல்பை உபயோகிப்பது -{compact fluorescent light bulb(CFL)} நல்லது. CFL சாதரண பல்பைவிட இரண்டிலிருந்து ஐந்து மடங்கு விலை அதிகமாக இருந்தாலும் இதன் நீடித்த உழைப்பு அதை சரிகட்டி விடுகிறது. ஒரு 7 வாட் CFL பல்ப் ஒரு 40 வாட் ரெகுலர் பல்புக்கு சமம். இது ஒரு சிறந்த
எனர்ஜி சேவராக செயல் படுகிரது. ஆனால் இந்த வகை பல்பில் 5 mg மெர்குரி இருப்பதால் இதை மற்ற எல்லாவகை கழிவு பொறுள்களுடன் எறிய முடியாது.

2) துணி துவைத்தல்:மிகவும் இன்றியமையாத ஒரு தினப்படி செயல். அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை!! ஆனால் அதைதான் இங்கு ஒரு சிறந்த எனர்ஜி சேவராக குறிபிடுகிரது Time Magazine. கொஞ்சம் கொஞ்சமாக (வாஷிங் மஷின் உபயோகிப்பவர்களுக்கு!) துணிகளை போட்டு தோய்ப்பதைவிட, துணிகளை சேர்த்து வைத்து ஒரு பெரிய கும்பலாக தோயித்து எடுப்பது ஒரு சிறந்த ஷக்தி சேமிப்பு. அதிலும் கொதிக்கும் சுடு தண்ணியை உபயோக படுத்தாமல், மிதமான சூடுள்ள தண்ணியை உபயோக படுத்துதல் நல்லது. ரொம்ப முக்யமான இன்னொரு விஷயம், ட்ரைய்யெரை(dryer) உபயோக படுத்தாமல் கொடி கட்டி துணியை உலர்த்துவதால் நம் வாஷிங் மெஷினால் உற்பத்தியாகும் 90% co2 வை குறைக்கலாம்.

3) முடிந்த வரை பேருந்தை உபயோகியுங்கள்!:இது எவ்வளவு தூரம் சாத்யம் என்று தெரியவில்லை. நாம் எல்லோருமே நம் சவுகரியத்துக்கு தகுந்தாற்போல் போக வர பழகி விட்டோம். பஸ்ஸுக்காக காத்திருந்து போவது எல்லாம் மலையேறி போய்விட்டது. இருந்தாலும் போக்குவரத்து மட்டுமே அமெரிக்காவில் 30% கார்பண்டை ஆக்சைட் உமிழ்தலுக்கு காரணமாக உள்ளது நிறைய கவலையை அளிக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை பொதுதுறை போக்குவரத்து, சில பெரிய நகரங்களை தவிர வேறு எங்குமே சரியாக இருப்பதாக தெரியவில்லை. பொதுதுறை போக்குவரத்தை(பேருந்து மற்றும் புகைவண்டி) உபயோகிப்பதால் ஒரு வருடத்துக்கு 1.4 மில்லியன் பெட்ரோலை சேமிக்கலாம். அவ்வாறு சேமிப்பதால் 1.5 மில்லியன் அளவு co2 உமிழ்தலை தவிற்கலாம். நம்மால் நிச்சயம் செய்யகூடிய ஒன்று என்றால் car pooling!

4) கணிணி மூலம் பணம் செலுத்தலாம்!

உங்கள் கணிணி மூலம் நீங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் மாதிரி பல வகையான கட்டணங்களை செலுத்தினீர்களானால், மரங்களை மட்டும் காக்கவில்லை, காகித காசோலைகளை எடுத்து செல்லும் விமானம் மற்றும் லாரிகளின் பெட்ரோல் செலவையும் கட்டுபடுத்துகிரீர்கள். அது உமிழும் co2 வை மட்டுபடுத்துகிரீர்கள்.

5) ஜன்னலை திறந்து வையுங்கள் !

குளிரூடுபெட்டியை மிதமாக உபயோகியுங்கள்.

6) ப்லாஸ்டிக் பைகளூக்கு ஒரு பெரிய தடா போடுங்கள்!

இந்த பைகள் அழிய தோராயமாக 1000 ஆண்டுகள் ஆகின்றன. துணி பையை உபயோகிப்பது சிறந்தது.

7) மூங்கில் வேலி !

உங்கள் வீடுகள் மற்றும் தோட்டத்ற்க்கு மூங்கில் வேலி அமையுங்கள். மூங்கில் ஒரு நாளைக்கு 1 அடி வளரகூடியது. ஒரு ரோஜா செடியை விட பல மடங்கு co2 வை தன்னுள் ஈர்த்துக்கொள்ளகூடிய ஷக்தி உடையது.

8) உள்ளூர் விவசாயியை ஆதரியுங்கள்!

பெரிய பெரிய கடைகளில் போய் காய் கனிகள் வாங்குவதை தவிறுங்கள். உள்ளூர் சந்தையில் வாங்குவதால், பல மயில் தூரத்திலிருந்து பெரிய பெரிய வாகனங்களில் சாமான்கள் கொண்டு வரபடுவதை தவிற்கிரீர்கள். இதன் மூலம் பெட்ரோலும் அதனால் உமிழபடும் co2 வும் குறைகிறது.

9)உபயோகிக்காதபோது கணிணியை அணைத்து வையுங்கள்!

ஸ்க்ரீன் சேவெரை உபயோகிப்பதால் எந்தவித சேமிப்பும் நமக்கு கிடைப்பதில்லை. உபயோகிகாத போது அணைத்து வைப்பது நல்லது.

10) விளக்கை அணையுங்கள்!

வேலை பார்க்கும் இடத்தில் மற்றும் வீட்டிலும் தேவையில்லாத விளக்குகளை கண்டிப்பாக அணைத்து வையுங்கள். பிள்ளைகளையும் அதற்கு பழக்குங்கள் :):)

இதில் குறைந்தது ஒன்றை மட்டுமாவது நாம் கடைபிடிக்க முடிந்தால், இந்த பூமிக்கு பெரிய சேவை செய்ததாக நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளலாம். சிறு துளி பெறு வெள்ளம்!!

கீழே கொடுத்திருக்கும் லின்கையும் போய் பார்க்கவும்!

http://www.earthday.org/

P.S மொழிபெயர்ப்பு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்.......பொறுத்துகொள்ளவும்!! நன்றி :):)

Monday, March 26, 2007

விக்கி பசங்க மாதிரி !!

ஆரஞ்சு கவுண்டி ரெஜிஸ்டரில்(orange county register) சுமார் இரண்டு மாதம் முன்பு இந்த தளத்தை கொடுத்திருந்தார்கள். இந்த தளத்திற்க்கு நீங்கள் உங்களுக்கு பதில் தெரிந்து கொள்ளவேண்டிய கேள்விகளை வீடியோவாகவோ, இ மெயிலிலோ அனுப்பலாம். இங்கு என்ன விசேஷம் என்றால் அந்தந்த கேள்விகளுக்கான பதிலை அந்த துரையை சார்ந்தவர்களிடம் நேரில் சென்று வீடியோவாக எடுத்து போடுகிரார்கள். எல்லா கேள்விகளூக்கும் பதில் வரும் என்று சொல்ல முடியாது......கேள்விகளை அவர்கள் தேர்ந்தெடுத்து பதில் போடுவார்கள் என்று நினைக்கரேன். பல சுவாரசியாமான கேள்வி பதில்கள் இந்த தளத்தில் உள்ளன.

மிக சுவாரஸ்யமான ஒரு கேள்வி,

லாஸ் வேகாஸ் நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு ஹோட்டெல் அரையிலும் ஒரு இரவு கழிக்க விரும்பினால் எவ்வளவு காலம் நான் அந்த நகரத்தில் தங்க வேண்டி இருக்கும்??

பதில் : உலகத்திலேயே பெரிய ஹோட்டெல்களில் பதினேழு ஹோடெல்கள் லாச் வேகாஸ் நகரத்தில் உள்ளன. இந்த ஹோடெல்களில் மொத்தம் 135,503 அரைகள் உள்ளன. ஒவ்வொரு அரையிலும் ஒரு இரவு கழிக்க விரும்பினால், 371 வருடங்களில் முடித்து விடலாம். ஒரு அரையின் வாடகை ஒரு இரவுக்கு சுமார் $85 என்றாலும் $11.5 மில்லியன் செலவாகும்.

http://www.ansathat.com/


இந்த கேள்வியும் பதிலும் எப்படி நமக்கு useful அ இருக்கும் அப்படின்னு கேடிங்கன்னா.......எனக்கு சுத்தமா தெரியாது ! நம்ம வாழ்னாள்ல எவ்வளவோ junkஅ மண்டைகுள்ளா சேகரிக்கரோம் இதையும் வச்சுக்கோங்க அவ்வளவுதான் சொல்லுவேன்!!!

ஆனா நிஜத்துல பல நல்ல கேள்வி பதிலும் இருக்குங்க !!! chek it out !!

Thursday, March 22, 2007

என்னுடைய விசித்ர குணாதிசயங்கள் - weirdo??

நம்ம "ஏதோ சொல்கிறேன்" சிவா என்ன வருந்தி கூப்பிட்டு கொஞ்சம் உங்களுக்குளே இருக்கற விசித்ர வியாதி பத்தி சொல்லுங்க அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு. விசித்ரம்கறது என்ன? மத்த எல்லாரும் செய்யரத நாம வேர விதமா செய்யரதுதானே? இல்லனா அத செய்யாம இருக்கரது, அதுக்கும் மேல "இப்படி எப்படி"ன்னு மத்தவங்கள ஆச்சர்யப்படர மாதிரி,அருவருக்கர மாதிரி செய்யரது. அப்ப உட்கார்ந்து யோசிச்சு பார்தேன். ஒண்ணுமே தோணலை. இருக்கணுமே, ஏதாவது வித்யாசமா நம்ம கிட்ட இருக்கணுமே அப்படின்னு ரொம்பவே தீவிரமா யோசிச்சா, ஒரு பெரிய லிஸ்டே வந்திருச்சு.

பொதுவா பொண்ணுன்னா சமையல்ல ஒரளவாவது ஆர்வம் இருக்கும் இல்லையா. இங்கதாங்க நான் weird. எனக்கு அப்படில்லாம் சொல்லிக்கர மாதிரி ஆர்வம் கிடையாது.
கல்யாணம் ஆன புதுசுல வீட்ல ரொம்பவே கஷ்டப்படுதியிருக்கேன். மீனாக்ஷி அம்மாள் சமைத்து பார் புஸ்தகத்த வச்சுகிட்டு நான் பண்ணின அட்டகாசம் கொஞ்ச நஞ்சம் இல்ல. அதுக்காக சமைக்கவே மாட்டேன்லாம் இல்ல ஒரு பெரிய ஆர்வம் வரல. இப்பவும் simple and healthy சமையல்லதான் விருப்பம் எனக்கு. இப்பல்லாம் எல்லாருமே வீட்டிலேயே வித விதமான cuisine ல்லாம் ட்ரை செய்யரத பாக்கும் போது என்னுடைய poor culinary skills என் முன்னாடி வந்து பயமுருத்தும்.

அப்பரம் முகங்கள், மறக்கவே மறக்காது. ஏதாவது கோவில்லையோ,கல்யாணதிலயோ இல்ல பார்டிலயோ யாரவது எனக்கு ஒருத்தர அறிமுக படுத்திட்டாங்கன்னா அப்படியே அவங்க முகம் imprint ஆகிவிடும். எங்க போனாலும் மறக்க மாட்டேன். அவங்கள மறுபடியும் எங்கயாவது பாத்தேன்னா வெக்கபடாம போயி பேசுவேன். பல பேர தர்மசங்கடத்துலயும் ஆழ்த்தியிருக்கேன். அவங்களுக்கு நம்மள நியாபகம் இருக்குமான்லாம் யோசிக்கரதுக்கு முன்னாடி, நல்லா இருக்கீங்களா அங்க பாத்தோமே அப்படின்னு சொல்லி பேச ஆரம்பிச்சிடுவேன். I have never been able to stop myself !


இது ரொம்பவே weirdங்க !! செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்!!! அய்யயோ சிரிக்காதீங்க ப்லீஸ். செடிலேந்து பூ பறிக்கும் போது ஒரு thanks சொல்லுவேன். தண்ணிவிட மறந்திருந்தேன்னா sorry சொல்லுவேன். இது எப்ப ஆரம்பிச்சுதுன்னு தெரியல ஆனா தொடர்ந்துகிட்டு இருக்கு.


இன்னொரு விசித்ரம் என்னன்னா replay button. யாரோடையாவது பேசி முடிச்சிட்டு வந்தேன்னு வச்சுக்கோங்க. இல்ல தொலை பேசில பேசி இருக்கேன்னு வச்சுக்கோங்க. வீட்டுக்கு வந்தொடனே replay தான். நாம என்ன சொன்னோம் அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க? சரியா பேசினோமா? நம்ம இப்படி சொல்லிட்டோமே.....அவங்கள hurt பண்ணிட்டோமோ?? ரொம்ப aloofஅ இருந்துட்டோமோ? இன்னும் கொஞ்சம் கனிவா பேசியிருக்கலாம்.....இப்படி நான் பேசின எல்லாத்தயும் யோஒசிச்சிட்டு...நான் அப்படி உங்ககிட்ட சொல்லி இருக்க கூடாது sorry இல்லாட்டி நீங்க ஒண்ணும் தப்ப நினைக்கலயே? அப்ப்டீன்னு ஒரு phone பண்ணி சொல்லிடுவேன். பாதி நேரம் அவங்க சுத்தமா அத பத்தி மறந்திருப்பாங்க. But still i have to get it out of my system.....இல்லாட்டி மண்டை பிச்சுக்கும்.


இன்னும் கொசுரு கொசுரா நிரைய இருக்குங்க. தினம் பால் பொங்க விடுவேன்,அப்படியே வெட்ட வெளியா முரைச்சு பாகரது(staring into open space!), ரொம்ப fantastic dreams வரும் (நடராஜர் வந்து நடனமாடரது மாதிரி!!), திரைபடங்கள் பாக்கும் போது ரொம்ப ஒன்றி போயி அழுவது, கணவரோடு வாக்குவாதம் செய்யும் போது மட்டும் தங்கு தடயின்றி ஆங்கிலத்தில் பேசுவது, எது சாப்பிட்டாலும் கடைசியில் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிடுவது, வெளிநாட்டில் இருந்தாலும் எப்போதும் தென் நாட்டு சாப்பாட்டையே விரும்பி சாப்பிடுவது.....இந்த மாதிரி நிரைய்ய இப்போதைக்கு இது போதும்.


தங்களுடைய weirdness அ பத்தி சொல்ல நான் அழைக்கும் நண்பர்கள்

அல்வா சிடி விஜய் http://halwacity.blogspot.com/

மழை ஷ்ரேயா http://mazhai.blogspot.com/

சின்னகுட்டி http://sinnakuddy1.blogspot.com/

கால்காரி சிவா http://sivacalgary.blogspot.com/

வெளிகண்டநாதர் http://www.ukumar.blogspot.com/

அவந்திகா http://crickchat.blogspot.com/

ரவிஷங்கர் http://thamizhthendral.blogspot.com/

Friday, March 16, 2007

ஆறு வித்யாசங்கள் கண்டுபிடிக்கவும்!!

1) முதல் படம்


2) இரண்டாவது படம்இவங்க முக ஒத்துமைய பாத்து நான் அசந்துட்டேன் அதான் இந்த அவசர பதிவு !!!

ஏதாவது காமெடியா எழுதி கலாய்கலாம்னு தோணுது......மேல் மாடி காலி!! நம்ம பெனாதலார்ட்ட விட்டிருந்தா சூப்பரா ஏதாவது செஞ்ச்சிருப்பார்!!


scroll down to find out who is in the second picture!!
Montoya

Wednesday, March 07, 2007

Kite Runner - புத்தக சிபாரிசு

பல நாள் கழிச்சு மூச்சு விடாம படிச்சு முடிச்ச புத்தகம் " Kite Runner "- ஆங்கில நாவல். என்னோட தோழியின் சிபாரிசில் லைப்ரரி போயி எடுத்துட்டு வந்து படிச்சேன். கொஞ்சம் யோசனையோடதான் படிக்க ஆரம்பிச்சேன். ஏன்னா இதுக்கு முன்னாடி அவ எனக்கு சிபாரிசு செஞ்சது ஜும்பா லாஹிரி யோட "namesake". அவ அஹா ஒஹோன்னு புகழ்ந்து தள்ளிட்டு namesake படிக்காதவங்க எல்லாம் மனுஷங்களே இல்லங்கர மாதிரி ரொம்ப என்ன இழிவா பேசிட்டா. ரொம்ப மனசு நொந்து போயி நானும் நூலகதுக்கு போயி அத ஹோல்ட்ல போட்டு வாங்கி படிச்சா. அத படிக்காமையே நொந்திருக்கலாம் போல படிச்சு இன்னும் நொந்து நூலா போனேன். அப்படி ஒரு சாதாரணமான கதை களம். எனக்கு என்னமோ ரசிக்கவே இல்ல. சரி அத வுடுங்க.

"Kite Runner" ன்கர இந்த புத்தகத்த ஒரு ஆFகான் அமெரிக்கனான காலெத் ஹொசேனி(Khaledh Hosseini) எழுதியிருக்கிறார். தெளிந்த நீரோடையான எழுத்து. பாசாங்கு இல்லாமல் கோர்வையாக இருக்கிறது இவருடைய எழுத்து நடை. இது இவருடைய முதல் புத்தகமும் கூட. 2003 ல் வெளிவந்திருக்கிரது. திரைபடமாகவும் எடுத்துட்டு இருக்காங்க. 2007 நவெம்பரில் ரிலீஸ்.


அமீர்- கதாநாயகன். அமெரிக்காவில் கலிFஒர்னியாவில் வாழும் பிரபல எழுத்தாளன். இவன் தன்னுடைய கடந்த காலத்தை நினைச்சு பாக்கரது போல் ஆரம்பம். கதை அFகானிசஸ்தான்(ரஷ்ய ஆக்ரமிப்புக்கு முன்)காபுல் -பாகிஸ்த்தான், அமெரிக்கா, அfகானிச்த்தான் (டாலிபன் ஆட்சிக்கு கீழ் )என்று போகிறது..............

இதுக்கு மேல எழுதி எழுதி அழிச்சுட்டேங்க.....எனக்கே புடிக்கல.(spoilers and i thought i wasn't doing justice to the book!!) மன்னிச்சுக்கோங்க.....

இது ஒரு நல்ல நாவல் கண்டிப்பா படிங்க. வேற என்ன சொல்ல ??

Sunday, March 04, 2007

வார்த்தைகள் அர்த்தமற்றவை !!

http://www.fireball20xl.com/slapdash/bb.swf

இப்பதான் சிரிலோட மொழி திரைபட விமர்சனத்த படிச்சிட்டு வந்தேன். ரொம்ப நல்லா இருக்கரதா எழுதி இருக்கார். விமர்சனமும் நல்லா வந்திருக்கு. " வார்த்தையில்லாம பாஷை உண்டாகலாம்னு" எழுதி இருக்கார். நான் இங்க குடுத்து இருக்கர லின்க்க போயி பாருங்க, வார்தைகள் எவ்வளவு அர்த்தமற்றவையா இருக்குன்னு புரியும்.


http://http://www.ebenezerreformed.com/xstream/bulbousBouffant.php

இங்க அதோட முழு லிரிக்ஸ்ம் இருக்கு. ட்ரை பண்ணி பாருங்களேன். பாத்துட்டு கண்டிப்பா பின்னூடுங்க.

முதல் தடவையா லின்க் போட்டிடுக்கேன். வேலை செய்யுமா தெரியல.....!!!!

Friday, March 02, 2007

Fascination for names!!!

நான் , ' அம்மா ஏம்மா எனக்கு ராதா ன்னு பேர் வச்சீங்க?'

அம்மா, " நம்ம தாத்தாக்கு பஜனைன்னா ரொம்ப பிடிக்கும், எப்போதும் ராதே ராதே ன்னு பாடுவாங்க அவர் நியாபகார்த்தமா வச்சதும்மா..."

இதே கேள்விய பல முரை எங்கம்மாவ கேட்டு போர் அடிச்சுருவேன். அம்மாவும் பொறுமையா பதில் சொல்லுவாங்க.

இங்க இத எதுக்கு சொல்லரேன்னா, என் பேரு எனக்கு சுத்தம்ம புடிக்காது. ராதா இரண்டே எழுத்து. ச.... செல்லமா யாராவது கூப்படணும்னா கூட ராது ன்னு கூப்படலாம். அதுவும் ரெண்டு எழுத்துதானே? என் கணக்கு இங்க சரியா வரல. வேர எப்படிதான் ஷார்ட்டா பண்ணமுடியும். எங்கம்மா மேல கோவமா வரும். அக்காக்கு மட்டும் பத்மாவதி ன்னு நீளமா பேர் வச்சீங்களே அப்படின்னு கேட்டா. எதுக்குதான் போட்டி போடர்துன்னு ஒரு விவஸ்தையே இல்லையா ன்னு அம்மா கோவத்தோட சொல்லிட்டாங்க. அம்மா அவள "பத்து பத்து" ன்னு கூப்புடும் போது எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வரும்.

so ஒரு நாள் யோசிச்சேன் எப்படியாவது என் பேர மாதிடணும்னு. என் வகுப்புல இருக்கர எல்லாரோட பேர்லயும் தனி கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். Enid Blyton படிச்சு படிச்சு Norah, Betsy, Peggy இந்த மாறி பேரு ஒகே வா தோணுச்சு. ஆனாலும் என்னொட டேஸ்டுக்கு கொஞ்சம் கம்மியா இருந்துச்சு ஏன்னா எல்லாமே ரொம்ப சின்னது.ஷாந்தி, லதா ன்ங்கர பெயர்ல எல்லாம் என்னொட கவனம் போல.எங்க வகுப்புல விதவிதமான ஷாந்தி,அதாவது a to z intital இருந்தாங்க.அதே லதா வும் வித விதமா இருந்துச்சு.(ப்ரேம லதா, மீன லதா,ஷாந்த லதா). அத தவிர "ஷாந்தி" ரொம்ப சின்னதா இருந்ததுனாலயும் "லதா" with suffix and prefix ரொம்ப காமனா இருந்ததுனாலயும் அந்த பேரு மேலலாம் கொஞ்சம் கூட ஈடுபாடு வரல.

என்னோட பெயர் hunting was getting serious. ஒரு பெயரும் சரியா மாட்டல. அப்பதான் ஒண்ணு நடந்தது. எங்க வகுப்புல புது வரவு. பெயர் என்ன தெரியுமா?? எலிஸபெத் மார்கரெட் அலெக்ஸிஸ். இவ்வளோ நீள பெயர இப்பொதான் முதல்முதலா கேக்கரேன். என் மனசுகுள்ள சித்தார் வாத்தியம். ஒரே பெண்ணுக்கு மூணு பெயர். உடனே யோசிக்காம முடிவு செஞ்சேன் எனக்கும் அதே பெயர்தான் வேணும்னு. அந்த பொண்ணு வந்து ஒரு வாரம் ஆன பிறகு நை ஸா அவ பக்கத்துல போயி உக்காந்து அவ பெயரோட ஸ்பெல்லிங் என்னன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அன்னிக்கு பூரா ரொம்ப சந்தோஷமா இருந்தேன் ஏன்னா இத்தன நாளா நான் பட்ட அவஸ்த்தைக்கு ஒரு முடிவு வந்திருச்சே!!


அடுத்த நாள் அம்மாகிட்ட போயி புத்தகம், நோட்டு புத்தகத்துல ஒட்ட வேர லேபில் வேணும்னு கேட்டேன். அம்மா கைவேலையா இருந்த்துனால போயி டெஸ்க்லேந்து எடுத்துக்கோன்னாங்க. சரின்னு நானும் எடுத்து எல்லா நோட்டு புஸ்தகத்துலயும் பொறுமையா லேபில் ஒட்டிடேன். அதுல என் புது பேரையும், அதாவது "எலிஸபெத் மார்கரெட் அலெக்ஸிஸ்" எழுதிட்டேன். அம்மாகிட்ட போயி ரொம்ப சாவதானமா " அம்மா என் பேரு இனிமே " எலிஸபெத் மார்கரெட் அலெக்ஸிஸ்", நீங்க என்ன "லீஸா" ன்னு கூப்படலாம். என் புக்லலாம் கூட பேரு மாத்தி எழுதிட்டேன்,நாளைக்கி டீச்சர்கிட்ட அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது சொல்லிடுவேன்" , அப்படின்னேன் பாருங்க.....என்கம்மாக்கு எவ்வளோ கோவம் வரும்னு அன்னிக்குதான் தெரிஞ்சது. முதுகுல வச்ச அடி ஜன்மத்த்லயும் மறக்காது.


என்னவோ ஆனா பாருங்க இன்னைக்கும் எனக்கு பெயர்கள் மேல ஒரு தனி அட்ராக்ஷன் உண்டு. என்ன வித விதமா பேரு வைக்கராங்க இப்பல்லாம்?? Baby names க்கு தனி சைடே இருக்கு.

ஹ்ம்ம் இப்ப இங்க என் பேர எப்படில்லாம் கொல்ல முடியுமோ கொன்னுகிட்டு இருக்காங்க. (ex) ரடா, ரேடா, ராடஹா இப்படி பல வேர்ஷன்........

Tuesday, February 27, 2007

ஆங்கிலமும் அறியாமையும்

எங்க வீட்டுல முதல்முதலா முதல் வகுப்புலேந்து அங்கில வழி பாடதுல படிச்சது நாந்தான். என்னதான் ஆங்கில மீடியம்னாலும் பேசரதுலேந்து சிந்திக்கற வரைக்கும் தமிழ்லதான். பள்ளிகூடத்துல மட்டும் அப்ப அப்ப "yes child, no child" என்கிற ரீதியா அங்கிலம் பேசுவேன். தமிழ அப்படியயே அங்கிலத்துல மொழி பெயர்து பேசுவோம்." நீ வருகிறாயா??" என்பதை அப்படியே literal அ மொழி பெயர்த்து " You are coming?" என்று பின்னாடி ஒரு கேள்வி குறியோடு நிறுத்துவேன். "Are you coming??" என்று கேட்கணும்னு தெரியாது.

என்னோட ஆங்கில அறிவு வளரனும்னு என்னோட அப்பாக்கு ரொம்ப ஆசை. அதனால தினம் செய்திதாள்(ஆங்கிலம்) படிச்சேதீரணும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. பிடிச்சது எனக்கு சனி தசை. இதை கண்கானிக்க என் அண்ணன் வேர. கேக்கணுமா அவன் கொண்டாடத்த. பள்ளிகூடம் விட்டு வந்த உடனே சாப்பாடு, விளையாட்டு. சாயங்காலம் ஆறு மணிக்கு வீட்டுல இருக்கணூம். வீட்டுபாடம் முடிச்ச பிறகு செய்திதாளும் கையுமா வந்திருவான் எங்க அண்ணன். அப்புரம் ஒரே டார்ச்சர்தான். முதல்ல ஹெட்லைன்ஸ் சத்தமா வாய்விட்டு படிக்கணும். அப்புரம் ஸ்போர்ட்ஸ் என்று ஒரு கால் மணி நேரம் உயிர வாங்கிடுவான். கொஞ்ச நாள்ல அவனுக்கு போர் அடிச்சு போச்சு. இதுக்கு நடுவுல புரியுதோ இல்லையோ நான் பாட்டுக்கு சத்தம் போட்டு தப்பு தப்பா படிச்சுட்டு பொயிட்டே இருப்பேன். நடுவுல சிலது மட்டும் புரியும். அப்பொ ஒரு நாள் அப்பாவ இம்பெரெஸ் பண்ணனும்னு தோணி போச்சு. நம்மளோட அங்கில அறிவ எப்படியாவது அப்பாகிட்ட காமிச்சு நல்ல பேர் எடுதிடணும்னு ஒரு துடிப்போட இருந்தேன்.


அந்த நாளும் வந்தது. அன்னிக்கு செய்திதாள்ல ' Boat capsized thirty feared dead " ன்னு
ஹெட்லைன்ஸ். பூரா செண்டென்ஸ் புரிந்துவிட்டது. capsize புதிய வார்த்தை. டிக்ஷனரி பாத்தாச்சு. அண்ணன் கிட்டயும் கேட்டாச்சு. அப்பாவ அசத்த நான் ரெடி. அப்பாவும் வந்தாங்க. அப்பா துணியெல்லாம் மாத்தி ஈசி சேர்ல சாஞ்சாங்க. நான் அப்போதான் ஏதோ செய்திதாள புரட்டர மாதிரி பாவனை பண்ணிகிட்டு வந்துகிட்டே,..." அப்பா இன்னிக்கு ஹெட்லைன்ஸ் என்ன தெரியுமான்னு கேட்டேன்? அப்பாவும் சும்மா என்ன குஷி படுத்த, " என்ன நியூஸ் நீயே சொல்லேன்' அப்படீன்னாங்க. "Boat capsized thirty feared dead" அப்படீன்னு சத்தாமா படிச்சு காட்டினேன். அப்பாக்கு ஒரு நிமிஷம் ஆச்சர்யம். capsize ன்னா என்ன அர்த்தம்னு கேட்டாங்க. உடனே சடார்ன்னு "overturn"ன்னு சொன்னேன். அப்பாக்கு சந்தோஷம் தாங்கல. அத பாத்த எனக்கு தலயும் புரியல காலும் புரியல.....மெதுவா அப்பாகிட்ட போயி உக்காந்து ஒரு கூக்ளி போட்டேன் பாருங்க இப்பகூட மேல் லோகத்துல இருக்கர எங்க அப்பா விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அது என்னன்னா "thirty feared dead"ங்கரத அப்படியே literal அ டிரான்ஸ்லேட் பண்ணி " பாவம் இல்லப்பா அந்த முப்பது பேரும் பயத்துலயே செத்து போயி இருக்காங்க" அப்படீன்னு கேட்டேன் பாருங்க!!!!!!! கேக்கணுமா வீட்ல சிரிப்ப....இப்பகூட காதுல ஒலிக்குது.


இப்ப இத நினைச்சு பாக்கும்போது நம்ம அமிதாப் எதோ ஒரு படத்துல சொல்லுவாரே "English is a funny language" ன்னு அதுதான் நியாபகம் வருது.

Friday, February 23, 2007

Pretend Play

சின்ன வயசுல பொதுவா பெண் குழந்தைங்க ரொம்ப விளயாடரது இந்த Pretend Play தான். அதாவது ஒரு பத்து வயசுகுள்ள அம்மா அப்பா விளையாட்டும் டீச்சர் விளயாட்டும் விளயாடாத பெண் குழந்தைங்க கொஞ்சம் அதிசயம்தான். நான் கொஞ்சம் sporty type. ஆனாலும் இந்த விளையாட்டு ரசிச்சு விளயாடி இருக்கேன்.

இதுல என்ன விசேஷம்னா, நானும் என் இரண்டு தோழிங்களும் எப்போதுமே விளையாட்டிலும் தொழிங்களாதான் இருப்போம். ஆனா மூன்று மாதிரி வாழ்க்கை முறை விளையாட்டு விளையாடுவோம். மூன்று தொழிங்க கிராமத்துல இருக்கர மாதிரி, டவுன்ல இருக்கர மாதிரி அப்புரம் நகரத்துல இருக்கர மாதிரி. அதுனால அதுக்கு தகுந்த மாதிரி எங்களோட பேர், சாப்பாடு போட்டுக்கர துணி ஏன் பேச்சு மொழி எல்லாம் மாறிடும். இந்த விளையாட்டை மணி கணக்குல சுற்று சூழ்னிலை மறந்து விளயாடி இருக்கேன். இதுல வேடிக்கை என்னன்னா,
யாரு என்ன பேரு வச்சுக்கரது அப்படின்னு யோசிச்சே பாதி நேரம் போயிடும். கிராம விளையாட்டுனா எப்பொதுமே என் பேரு வள்ளி!! டவுன்னா காயத்ரி, சிட்டின்னா பாபி இல்லாட்டி பிங்கி!!! ஏன் இந்த மாறி பேரு வச்சுக்கணும்ன்னு யோசிச்சேன்னு சுத்தமா புரியல. பேரு வச்சப்புரம்.....எங்க இருக்கர மாறி விளையாட்டுன்னு ஒரு பெரிய discussion நடக்கும். ஒரு வழியா எல்லாம் முடிவு பண்ணின பிறகு ட்ரெஸ் பண்ண ஆரம்பிப்போம் அது போகும் ஒரு அரை மணி நேரம். அக்காவோட தாவணி, அம்மாவோட குங்கும பொட்டு(அப்பல்லாம் அஷான்னு ஒண்ணு கிடைக்கும் அத முதல்ல னெத்தில வச்சுட்டு அப்பரம் அதுக்கு மேல குங்குமம் வைப்பாங்க அம்மா, குங்குமம் கலையாம இருக்கரதுக்கு!!) so அந்த ஆஷாதான் எங்களோட rouge or blush. அப்பல்லாம் eyeliner வந்திருந்த புதுசு காஸ்மெட்டிக்ஸ்ல்லாம் உபயோகபடித்தினா தப்புன்னு நினைக்கர சூழ்நிலை. அதனால eyetex அ ஒரு விளக்குமாத்து குச்சியால இமைக்குமேல ஒருத்தர்க்கு ஒருத்தர் போட்டுப்போம்.கண்ண தொரந்தோம்னா மேல ஒட்டிக்கும் அதனால சின்ன குழந்தைங்களுக்கு திருஷ்டி பொட்டு வச்சுட்டு பவ்டர் வைப்போமெ அதுமாத்ரிபவுடர ஒத்துவோம். கண்ணு இமையெல்லாம் வெள்ளயா இருக்கரத பாத்து எங்களுக்கே சிரிப்பு தாங்காது.இப்படி எங்கள ஒரு மாதிரியா தயார் பண்ணிகிட்டு விளையாட்டை ஆரம்பிப்போம். அடுத்து dialogues யார் என்ன பேசரதுன்னு. முதல்லயே ஒருத்ருக்கு ஒருத்தர் சொல்லிடுவோம். " நான் இப்படி கேப்பேன் நீ இப்படி சொல்லணும்னு"!! இதுலயும் main characters and supporting characters லாம் உண்டு அனா ரொம்ப subtle அ இருக்கும்,யாரும் மனசு நோகாதபடி. வள்ளியா இருக்கரப்போ பெரிய பொட்டு, சைட் கொண்டை கஞ்சி, கூழு பழையது சாப்பிடுவோம். குடத்தை எடுத்துகிட்டு
போய் தண்ணி கொண்டு வருவோம். காயத்ரியா இருக்கும் போது ஒத்தை பின்னல், சின்ன பொட்டு இட்லி, தோசை, சாதம் சாப்பிடுவோம். காலெஜுக்கு போவோம். பிங்கி அல்லது பாபியா இருக்கும் போது bread ம் soup ம் சாப்பிடுவோம்,நோ பொட்டு, ஆஷா வச்சு lipstick போடுக்குவோம் தியேட்டருக்கு போய் சினிமா பாப்போம்.
இப்ப இத நினைச்சு பாக்கரபோது N.S.k "ஓட விஞ்ஞானத்த வளக்க பொரேண்டி" பாட்டு நியாபகம் வருது. I had so much fun playing those pretend games in which i could lose myself completely. இதுல உளவியல் ரீதியா ஏதாவது இருக்கா தெரியல தெரிஞ்சவங்க சொல்லுங்க.

Saturday, February 17, 2007

சாகரன் - கல்யாண்- அஞ்சலி

இவரபத்தி ஒண்ணுமே தெரியாமதான் இருந்தேன். பல பதிவர் அவர பத்தி எழுதினத படிக்க அடாடா ஒரு நல்ல மனிதரோட அறிமுகம் கிடைக்காம போயிடுச்சேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. இந்த மாறி இவரோட நண்பர்கள், குடும்பத்தினர் மட்டும் இல்லாம என்ன மாறி பல பேர அவரோட அகால மரணம் ரொம்பவே பாதிச்சிடுச்சு. அவரோட ஆன்மா ஷாந்தி அடையட்டும்.

மனசு ரொம்ப வேதனையா இருக்கும்போது Beatles "let it be" பாட்ட கேப்பேன். இந்த பாட்ட, அவர இழந்து தவிக்கர நண்பர்கள், குடும்பத்தினர்க்கு சமர்பிக்கரேன்.

Let it be (lyrics)
The Beatles (Lennon/McCartney)
When I find myself in times of trouble
Mother Mary comes to me
Speaking words of wisdom, let it be.
And in my hour of darkness
She is standing right in front of me
Speaking words of wisdom, let it be.
Let it be, let it be.
Whisper words of wisdom, let it be.
And when the broken hearted people
Living in the world agree,
There will be an answer, let it be.
For though they may be parted there is
Still a chance that they will see
There will be an answer, let it be.
Let it be, let it be. Yeah
There will be an answer, let it be.
And when the night is cloudy,
There is still a light that shines on me,
Shine on until tomorrow, let it be.
I wake up to the sound of music
Mother Mary comes to me
Speaking words of wisdom, let it be.
Let it be, let it be.
There will be an answer, let it be.
Let it be, let it be,
Whisper words of wisdom, let it be

Thursday, February 15, 2007

அறிமுகம்- தொடர்ச்சி, மட்றும் நன்றி

அமெரிக்கா வந்து கொஞ்ஜம் பிரம்மிப்புலேந்து மீண்டு பின்னர் ட்ரைவிங் லைஸென்ஸ் வாங்கி குழ்ந்தைகளை பள்ளில சேர்த்தபின்னர் கையில் மிச்சம் இருந்தது நேரம். நேரம்னா கொஞச நஞ்சம் இல்ல. ரொம்பவே. அப்போ கணிணிய செய்திகள் படிக்க , e-mail அனுப்ப மட்றும் chat செய்ய மட்டுமே உபயோகம் பண்ணிட்றுந்தேன். நடுவுல எப்படியோ தடுக்கி விழுந்து blogs பக்கம் வந்து சேந்தேன். முதல்ல ஆங்கில blogs மட்டுமே படிச்சிட்ருந்த நான் எப்படி தமிழழுக்கு வந்தேன்னு நியாபகம் இல்ல. ஆனா என்ன முழுமையா ஆக்ரமிச்சுது இந்த blog world. முதல்ல நிறுத்தினது மங்கையர் மலர் subscription!!

ஆரம்பத்துல நான் ரொம்ப ஆர்வமா படிக்க ஆரம்பிச்ச தமிழ் blog அல்வா சிட்டி விஜையோடது . நல்ல ஜனரஞ்ஜகமான எழுத்து அவரோடது. அவரோட blog அ விடாம படிச்சிருவேன்(அவர் இப்போ எழுதறது இல்லையா??), சிவா(இளையராஜாவோட பரம் ரசிகர், போட்டில்லாம் வச்சு கலக்குவார்!! இப்பொ கிட்டார் கத்துக்க போயிட்டார்!!), முத்துக்கு முத்து, கோ கணேஷ், உஷா இவங்க blogs கெல்லாம் நான் ரெகுலர் விசிட்ட்ர்.(நான் படிச்சவங்க பாதி பேர காணலை!! உஷா temperory break.) இவங்கள எல்லாம் படிச்சுட்டு தயங்கி தயங்கி முதல்ல ஆங்கிலத்திலும்,thanglishlayum...அப்புரம் தட்டு தடுமாறி தமிழ்லயும் பின்னூட்டம் போட ஆரம்பிச்சேன்.One fine day சும்மா ஏதாவது எழுதிவைப்போம்னு ஒரு ஆங்கில intro எழுதிவச்சேன்.ஆச்சர்யம் என்னடான்னா நம்ப தேன் சிரில்லும் surveys புகழ் சர்வேசனும் வந்து ஏன் நிருத்திட்டீங்க எழுதுங்க ஊக்கம் அளிக்கரோம்ன்னு பின்னூட்டிடு போயிட்டாங்க. சரி இத விட நல்ல சகுனம் கிடைக்காதுன்னு நினைச்சு நம்ப புராணத்த ஆரம்பிசிடலாம்னு முடிவு பண்ணி ரெண்டு நாளா டைப் அடிச்சிட்டு இருக்கேன்!!(no kidding!! Bengay in priority mail please).

இப்போ தமிழ்மணத்துல ஒரளவு எல்லா பதிவுமே மேஞ்சிருவேன்(skim read).அட்டகாசமான எழுத்துக்கள் !! அறிவான எழுத்துக்கள் !! creativity at its best with its unavoidable hiccups இங்க பாக்கமுடியுது. so என்னோட எழுத்துக்கள் இங்க ஒரு எலிமெந்டரி மாணவியோட எழுத்து மாதிரிதான் இருக்கும். But still i want to give it a try!!(நன்றி சர்வேசன், சிரில்!)

Tuesday, February 13, 2007

அறிமுகம்

ஆங்கில அறிமுகம் எழுதியாச்சு சின்னதா தமிழிலும் எழுதிடலாம்னு ஆரம்பிசிட்டேன். பெரிசா சொல்லிக்கர மாறி ஒண்ணும் இல்ல. பொறந்து வளந்ததெல்லாம் தமிழ்நாடுதான். அப்பா ரயில்வேச்ல வேல.நிரைய வேலை மாத்தம் வரும். அத்னால நிரைய ஊர், நிரைய அனுபவம், பல பள்ளிகூடம்,நண்பர்கள் கூட்டம். காலெஜ் நாட்கள் திருச்சில. எல்லார் மாரியும் எனக்கும் ரொம்ப இனிமையான நாட்கள் அவை. அப்பரம் கல்யாணம். மறுபடியும் இட மாட்றம்.வாசுதேவநல்லூர், மதுரை,அஹமதாபாத்,பெங்களூர் இப்ப இருப்பது அமெரிக்காவில். அப்படியே சம்சார சாகரத்தில் மூழ்கி இருக்கேன். மூச்சுவிட்டு கொள்வதற்க்கு அப்ப அப்ப மேல வந்து தமிழ்ம்ணம் படிச்சிருவேன். மத்தபடி ரொம்ப varied interests உள்ள ஆள் நான்.