Monday, March 26, 2007

விக்கி பசங்க மாதிரி !!

ஆரஞ்சு கவுண்டி ரெஜிஸ்டரில்(orange county register) சுமார் இரண்டு மாதம் முன்பு இந்த தளத்தை கொடுத்திருந்தார்கள். இந்த தளத்திற்க்கு நீங்கள் உங்களுக்கு பதில் தெரிந்து கொள்ளவேண்டிய கேள்விகளை வீடியோவாகவோ, இ மெயிலிலோ அனுப்பலாம். இங்கு என்ன விசேஷம் என்றால் அந்தந்த கேள்விகளுக்கான பதிலை அந்த துரையை சார்ந்தவர்களிடம் நேரில் சென்று வீடியோவாக எடுத்து போடுகிரார்கள். எல்லா கேள்விகளூக்கும் பதில் வரும் என்று சொல்ல முடியாது......கேள்விகளை அவர்கள் தேர்ந்தெடுத்து பதில் போடுவார்கள் என்று நினைக்கரேன். பல சுவாரசியாமான கேள்வி பதில்கள் இந்த தளத்தில் உள்ளன.

மிக சுவாரஸ்யமான ஒரு கேள்வி,

லாஸ் வேகாஸ் நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு ஹோட்டெல் அரையிலும் ஒரு இரவு கழிக்க விரும்பினால் எவ்வளவு காலம் நான் அந்த நகரத்தில் தங்க வேண்டி இருக்கும்??

பதில் : உலகத்திலேயே பெரிய ஹோட்டெல்களில் பதினேழு ஹோடெல்கள் லாச் வேகாஸ் நகரத்தில் உள்ளன. இந்த ஹோடெல்களில் மொத்தம் 135,503 அரைகள் உள்ளன. ஒவ்வொரு அரையிலும் ஒரு இரவு கழிக்க விரும்பினால், 371 வருடங்களில் முடித்து விடலாம். ஒரு அரையின் வாடகை ஒரு இரவுக்கு சுமார் $85 என்றாலும் $11.5 மில்லியன் செலவாகும்.

http://www.ansathat.com/


இந்த கேள்வியும் பதிலும் எப்படி நமக்கு useful அ இருக்கும் அப்படின்னு கேடிங்கன்னா.......எனக்கு சுத்தமா தெரியாது ! நம்ம வாழ்னாள்ல எவ்வளவோ junkஅ மண்டைகுள்ளா சேகரிக்கரோம் இதையும் வச்சுக்கோங்க அவ்வளவுதான் சொல்லுவேன்!!!

ஆனா நிஜத்துல பல நல்ல கேள்வி பதிலும் இருக்குங்க !!! chek it out !!

Thursday, March 22, 2007

என்னுடைய விசித்ர குணாதிசயங்கள் - weirdo??

நம்ம "ஏதோ சொல்கிறேன்" சிவா என்ன வருந்தி கூப்பிட்டு கொஞ்சம் உங்களுக்குளே இருக்கற விசித்ர வியாதி பத்தி சொல்லுங்க அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு. விசித்ரம்கறது என்ன? மத்த எல்லாரும் செய்யரத நாம வேர விதமா செய்யரதுதானே? இல்லனா அத செய்யாம இருக்கரது, அதுக்கும் மேல "இப்படி எப்படி"ன்னு மத்தவங்கள ஆச்சர்யப்படர மாதிரி,அருவருக்கர மாதிரி செய்யரது. அப்ப உட்கார்ந்து யோசிச்சு பார்தேன். ஒண்ணுமே தோணலை. இருக்கணுமே, ஏதாவது வித்யாசமா நம்ம கிட்ட இருக்கணுமே அப்படின்னு ரொம்பவே தீவிரமா யோசிச்சா, ஒரு பெரிய லிஸ்டே வந்திருச்சு.

பொதுவா பொண்ணுன்னா சமையல்ல ஒரளவாவது ஆர்வம் இருக்கும் இல்லையா. இங்கதாங்க நான் weird. எனக்கு அப்படில்லாம் சொல்லிக்கர மாதிரி ஆர்வம் கிடையாது.
கல்யாணம் ஆன புதுசுல வீட்ல ரொம்பவே கஷ்டப்படுதியிருக்கேன். மீனாக்ஷி அம்மாள் சமைத்து பார் புஸ்தகத்த வச்சுகிட்டு நான் பண்ணின அட்டகாசம் கொஞ்ச நஞ்சம் இல்ல. அதுக்காக சமைக்கவே மாட்டேன்லாம் இல்ல ஒரு பெரிய ஆர்வம் வரல. இப்பவும் simple and healthy சமையல்லதான் விருப்பம் எனக்கு. இப்பல்லாம் எல்லாருமே வீட்டிலேயே வித விதமான cuisine ல்லாம் ட்ரை செய்யரத பாக்கும் போது என்னுடைய poor culinary skills என் முன்னாடி வந்து பயமுருத்தும்.

அப்பரம் முகங்கள், மறக்கவே மறக்காது. ஏதாவது கோவில்லையோ,கல்யாணதிலயோ இல்ல பார்டிலயோ யாரவது எனக்கு ஒருத்தர அறிமுக படுத்திட்டாங்கன்னா அப்படியே அவங்க முகம் imprint ஆகிவிடும். எங்க போனாலும் மறக்க மாட்டேன். அவங்கள மறுபடியும் எங்கயாவது பாத்தேன்னா வெக்கபடாம போயி பேசுவேன். பல பேர தர்மசங்கடத்துலயும் ஆழ்த்தியிருக்கேன். அவங்களுக்கு நம்மள நியாபகம் இருக்குமான்லாம் யோசிக்கரதுக்கு முன்னாடி, நல்லா இருக்கீங்களா அங்க பாத்தோமே அப்படின்னு சொல்லி பேச ஆரம்பிச்சிடுவேன். I have never been able to stop myself !


இது ரொம்பவே weirdங்க !! செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்!!! அய்யயோ சிரிக்காதீங்க ப்லீஸ். செடிலேந்து பூ பறிக்கும் போது ஒரு thanks சொல்லுவேன். தண்ணிவிட மறந்திருந்தேன்னா sorry சொல்லுவேன். இது எப்ப ஆரம்பிச்சுதுன்னு தெரியல ஆனா தொடர்ந்துகிட்டு இருக்கு.


இன்னொரு விசித்ரம் என்னன்னா replay button. யாரோடையாவது பேசி முடிச்சிட்டு வந்தேன்னு வச்சுக்கோங்க. இல்ல தொலை பேசில பேசி இருக்கேன்னு வச்சுக்கோங்க. வீட்டுக்கு வந்தொடனே replay தான். நாம என்ன சொன்னோம் அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க? சரியா பேசினோமா? நம்ம இப்படி சொல்லிட்டோமே.....அவங்கள hurt பண்ணிட்டோமோ?? ரொம்ப aloofஅ இருந்துட்டோமோ? இன்னும் கொஞ்சம் கனிவா பேசியிருக்கலாம்.....இப்படி நான் பேசின எல்லாத்தயும் யோஒசிச்சிட்டு...நான் அப்படி உங்ககிட்ட சொல்லி இருக்க கூடாது sorry இல்லாட்டி நீங்க ஒண்ணும் தப்ப நினைக்கலயே? அப்ப்டீன்னு ஒரு phone பண்ணி சொல்லிடுவேன். பாதி நேரம் அவங்க சுத்தமா அத பத்தி மறந்திருப்பாங்க. But still i have to get it out of my system.....இல்லாட்டி மண்டை பிச்சுக்கும்.


இன்னும் கொசுரு கொசுரா நிரைய இருக்குங்க. தினம் பால் பொங்க விடுவேன்,அப்படியே வெட்ட வெளியா முரைச்சு பாகரது(staring into open space!), ரொம்ப fantastic dreams வரும் (நடராஜர் வந்து நடனமாடரது மாதிரி!!), திரைபடங்கள் பாக்கும் போது ரொம்ப ஒன்றி போயி அழுவது, கணவரோடு வாக்குவாதம் செய்யும் போது மட்டும் தங்கு தடயின்றி ஆங்கிலத்தில் பேசுவது, எது சாப்பிட்டாலும் கடைசியில் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிடுவது, வெளிநாட்டில் இருந்தாலும் எப்போதும் தென் நாட்டு சாப்பாட்டையே விரும்பி சாப்பிடுவது.....இந்த மாதிரி நிரைய்ய இப்போதைக்கு இது போதும்.


தங்களுடைய weirdness அ பத்தி சொல்ல நான் அழைக்கும் நண்பர்கள்

அல்வா சிடி விஜய் http://halwacity.blogspot.com/

மழை ஷ்ரேயா http://mazhai.blogspot.com/

சின்னகுட்டி http://sinnakuddy1.blogspot.com/

கால்காரி சிவா http://sivacalgary.blogspot.com/

வெளிகண்டநாதர் http://www.ukumar.blogspot.com/

அவந்திகா http://crickchat.blogspot.com/

ரவிஷங்கர் http://thamizhthendral.blogspot.com/

Friday, March 16, 2007

ஆறு வித்யாசங்கள் கண்டுபிடிக்கவும்!!

1) முதல் படம்






2) இரண்டாவது படம்



இவங்க முக ஒத்துமைய பாத்து நான் அசந்துட்டேன் அதான் இந்த அவசர பதிவு !!!

ஏதாவது காமெடியா எழுதி கலாய்கலாம்னு தோணுது......மேல் மாடி காலி!! நம்ம பெனாதலார்ட்ட விட்டிருந்தா சூப்பரா ஏதாவது செஞ்ச்சிருப்பார்!!


scroll down to find out who is in the second picture!!
























Montoya

Wednesday, March 07, 2007

Kite Runner - புத்தக சிபாரிசு

பல நாள் கழிச்சு மூச்சு விடாம படிச்சு முடிச்ச புத்தகம் " Kite Runner "- ஆங்கில நாவல். என்னோட தோழியின் சிபாரிசில் லைப்ரரி போயி எடுத்துட்டு வந்து படிச்சேன். கொஞ்சம் யோசனையோடதான் படிக்க ஆரம்பிச்சேன். ஏன்னா இதுக்கு முன்னாடி அவ எனக்கு சிபாரிசு செஞ்சது ஜும்பா லாஹிரி யோட "namesake". அவ அஹா ஒஹோன்னு புகழ்ந்து தள்ளிட்டு namesake படிக்காதவங்க எல்லாம் மனுஷங்களே இல்லங்கர மாதிரி ரொம்ப என்ன இழிவா பேசிட்டா. ரொம்ப மனசு நொந்து போயி நானும் நூலகதுக்கு போயி அத ஹோல்ட்ல போட்டு வாங்கி படிச்சா. அத படிக்காமையே நொந்திருக்கலாம் போல படிச்சு இன்னும் நொந்து நூலா போனேன். அப்படி ஒரு சாதாரணமான கதை களம். எனக்கு என்னமோ ரசிக்கவே இல்ல. சரி அத வுடுங்க.

"Kite Runner" ன்கர இந்த புத்தகத்த ஒரு ஆFகான் அமெரிக்கனான காலெத் ஹொசேனி(Khaledh Hosseini) எழுதியிருக்கிறார். தெளிந்த நீரோடையான எழுத்து. பாசாங்கு இல்லாமல் கோர்வையாக இருக்கிறது இவருடைய எழுத்து நடை. இது இவருடைய முதல் புத்தகமும் கூட. 2003 ல் வெளிவந்திருக்கிரது. திரைபடமாகவும் எடுத்துட்டு இருக்காங்க. 2007 நவெம்பரில் ரிலீஸ்.


அமீர்- கதாநாயகன். அமெரிக்காவில் கலிFஒர்னியாவில் வாழும் பிரபல எழுத்தாளன். இவன் தன்னுடைய கடந்த காலத்தை நினைச்சு பாக்கரது போல் ஆரம்பம். கதை அFகானிசஸ்தான்(ரஷ்ய ஆக்ரமிப்புக்கு முன்)காபுல் -பாகிஸ்த்தான், அமெரிக்கா, அfகானிச்த்தான் (டாலிபன் ஆட்சிக்கு கீழ் )என்று போகிறது..............

இதுக்கு மேல எழுதி எழுதி அழிச்சுட்டேங்க.....எனக்கே புடிக்கல.(spoilers and i thought i wasn't doing justice to the book!!) மன்னிச்சுக்கோங்க.....

இது ஒரு நல்ல நாவல் கண்டிப்பா படிங்க. வேற என்ன சொல்ல ??

Sunday, March 04, 2007

வார்த்தைகள் அர்த்தமற்றவை !!

http://www.fireball20xl.com/slapdash/bb.swf

இப்பதான் சிரிலோட மொழி திரைபட விமர்சனத்த படிச்சிட்டு வந்தேன். ரொம்ப நல்லா இருக்கரதா எழுதி இருக்கார். விமர்சனமும் நல்லா வந்திருக்கு. " வார்த்தையில்லாம பாஷை உண்டாகலாம்னு" எழுதி இருக்கார். நான் இங்க குடுத்து இருக்கர லின்க்க போயி பாருங்க, வார்தைகள் எவ்வளவு அர்த்தமற்றவையா இருக்குன்னு புரியும்.


http://http://www.ebenezerreformed.com/xstream/bulbousBouffant.php

இங்க அதோட முழு லிரிக்ஸ்ம் இருக்கு. ட்ரை பண்ணி பாருங்களேன். பாத்துட்டு கண்டிப்பா பின்னூடுங்க.

முதல் தடவையா லின்க் போட்டிடுக்கேன். வேலை செய்யுமா தெரியல.....!!!!

Friday, March 02, 2007

Fascination for names!!!

நான் , ' அம்மா ஏம்மா எனக்கு ராதா ன்னு பேர் வச்சீங்க?'

அம்மா, " நம்ம தாத்தாக்கு பஜனைன்னா ரொம்ப பிடிக்கும், எப்போதும் ராதே ராதே ன்னு பாடுவாங்க அவர் நியாபகார்த்தமா வச்சதும்மா..."

இதே கேள்விய பல முரை எங்கம்மாவ கேட்டு போர் அடிச்சுருவேன். அம்மாவும் பொறுமையா பதில் சொல்லுவாங்க.

இங்க இத எதுக்கு சொல்லரேன்னா, என் பேரு எனக்கு சுத்தம்ம புடிக்காது. ராதா இரண்டே எழுத்து. ச.... செல்லமா யாராவது கூப்படணும்னா கூட ராது ன்னு கூப்படலாம். அதுவும் ரெண்டு எழுத்துதானே? என் கணக்கு இங்க சரியா வரல. வேர எப்படிதான் ஷார்ட்டா பண்ணமுடியும். எங்கம்மா மேல கோவமா வரும். அக்காக்கு மட்டும் பத்மாவதி ன்னு நீளமா பேர் வச்சீங்களே அப்படின்னு கேட்டா. எதுக்குதான் போட்டி போடர்துன்னு ஒரு விவஸ்தையே இல்லையா ன்னு அம்மா கோவத்தோட சொல்லிட்டாங்க. அம்மா அவள "பத்து பத்து" ன்னு கூப்புடும் போது எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வரும்.

so ஒரு நாள் யோசிச்சேன் எப்படியாவது என் பேர மாதிடணும்னு. என் வகுப்புல இருக்கர எல்லாரோட பேர்லயும் தனி கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். Enid Blyton படிச்சு படிச்சு Norah, Betsy, Peggy இந்த மாறி பேரு ஒகே வா தோணுச்சு. ஆனாலும் என்னொட டேஸ்டுக்கு கொஞ்சம் கம்மியா இருந்துச்சு ஏன்னா எல்லாமே ரொம்ப சின்னது.ஷாந்தி, லதா ன்ங்கர பெயர்ல எல்லாம் என்னொட கவனம் போல.எங்க வகுப்புல விதவிதமான ஷாந்தி,அதாவது a to z intital இருந்தாங்க.அதே லதா வும் வித விதமா இருந்துச்சு.(ப்ரேம லதா, மீன லதா,ஷாந்த லதா). அத தவிர "ஷாந்தி" ரொம்ப சின்னதா இருந்ததுனாலயும் "லதா" with suffix and prefix ரொம்ப காமனா இருந்ததுனாலயும் அந்த பேரு மேலலாம் கொஞ்சம் கூட ஈடுபாடு வரல.

என்னோட பெயர் hunting was getting serious. ஒரு பெயரும் சரியா மாட்டல. அப்பதான் ஒண்ணு நடந்தது. எங்க வகுப்புல புது வரவு. பெயர் என்ன தெரியுமா?? எலிஸபெத் மார்கரெட் அலெக்ஸிஸ். இவ்வளோ நீள பெயர இப்பொதான் முதல்முதலா கேக்கரேன். என் மனசுகுள்ள சித்தார் வாத்தியம். ஒரே பெண்ணுக்கு மூணு பெயர். உடனே யோசிக்காம முடிவு செஞ்சேன் எனக்கும் அதே பெயர்தான் வேணும்னு. அந்த பொண்ணு வந்து ஒரு வாரம் ஆன பிறகு நை ஸா அவ பக்கத்துல போயி உக்காந்து அவ பெயரோட ஸ்பெல்லிங் என்னன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அன்னிக்கு பூரா ரொம்ப சந்தோஷமா இருந்தேன் ஏன்னா இத்தன நாளா நான் பட்ட அவஸ்த்தைக்கு ஒரு முடிவு வந்திருச்சே!!


அடுத்த நாள் அம்மாகிட்ட போயி புத்தகம், நோட்டு புத்தகத்துல ஒட்ட வேர லேபில் வேணும்னு கேட்டேன். அம்மா கைவேலையா இருந்த்துனால போயி டெஸ்க்லேந்து எடுத்துக்கோன்னாங்க. சரின்னு நானும் எடுத்து எல்லா நோட்டு புஸ்தகத்துலயும் பொறுமையா லேபில் ஒட்டிடேன். அதுல என் புது பேரையும், அதாவது "எலிஸபெத் மார்கரெட் அலெக்ஸிஸ்" எழுதிட்டேன். அம்மாகிட்ட போயி ரொம்ப சாவதானமா " அம்மா என் பேரு இனிமே " எலிஸபெத் மார்கரெட் அலெக்ஸிஸ்", நீங்க என்ன "லீஸா" ன்னு கூப்படலாம். என் புக்லலாம் கூட பேரு மாத்தி எழுதிட்டேன்,நாளைக்கி டீச்சர்கிட்ட அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது சொல்லிடுவேன்" , அப்படின்னேன் பாருங்க.....என்கம்மாக்கு எவ்வளோ கோவம் வரும்னு அன்னிக்குதான் தெரிஞ்சது. முதுகுல வச்ச அடி ஜன்மத்த்லயும் மறக்காது.


என்னவோ ஆனா பாருங்க இன்னைக்கும் எனக்கு பெயர்கள் மேல ஒரு தனி அட்ராக்ஷன் உண்டு. என்ன வித விதமா பேரு வைக்கராங்க இப்பல்லாம்?? Baby names க்கு தனி சைடே இருக்கு.

ஹ்ம்ம் இப்ப இங்க என் பேர எப்படில்லாம் கொல்ல முடியுமோ கொன்னுகிட்டு இருக்காங்க. (ex) ரடா, ரேடா, ராடஹா இப்படி பல வேர்ஷன்........