Saturday, April 28, 2007

அழகு - கூனி சுந்தரி- Beauty Tips

சத்யப்ரியன் அழகு பதிவு போட சொல்லி கூப்பிட்டு கொஞ்ச காலம் ஆச்சு. என்னன்னா நான் அழகுன்னு நினைச்சத எல்லாருமே எழுதி முடிச்சதனால எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவையா இருந்தது. என்னோட அழகுகள பட்டியல் இட்டு எழுத முடியுமா தெரியல. இங்க சில அழகான தருணங்கள உங்களோட பகிர்ந்துக்கரேன்.போனஸ்சா ஒரு கதை!!

1) நாங்க கொஞ்ச நாள் முன்னாடி whale watching போயிருந்தோம். ரொம்ப நேரம் நின்னு திமிங்கிலம் வருதா வருதா பாத்து பாத்து கண்ணே பூத்து போயிருந்த நிலைல சரி கொஞ்ச நேரம் உக்காரலாம்ன்னு அங்க இருந்த பென்ச்ல போயி உக்கார போனேன். அப்ப அங்க உக்கார்ந்திருந்த ஒரு பெண் கொஞ்சம் கோவத்தோட," இந்த இடத்துல நாங்க எல்லாரும் சேர்ந்து உக்கார போரோம்ன்னு," சொல்லி அவங்களோட கூட வந்தவங்கள காமிச்சிட்டு ஒரு பார்வை பாத்தாங்க. நம்ம யாராவது கொஞ்சம் சத்தமா பேசினாலெ பயந்து போர டைப். சரி எதுக்கு வம்புன்னு மறுபடியும் போய் நின்னுகிட்டேன். அப்படியே கொஞ்ச நேரம் போச்சு. படகு செம ஆட்டம். மெதுவா மறுபடியும் திரும்பி பாத்தேன். அந்த பெண்ண தவிர வேற யாரும் அங்க உக்காந்திருக்கல. சரி கொஞ்சம் ஓரமா பாத்து உக்காந்துக்கலாம்ன்னு போனேன் பாருங்க, அந்த பெண்னுக்கு என்ன தோணுச்சோ தெரியல என்கிட்ட வந்து, " என்ன மன்னிச்சிருங்க நான் ஒங்க கிட்ட அப்படி நடந்திருக்க கூடாதுன்னு", (sorry i was rude to you!)அப்படின்னு சொல்லிட்டா. எனக்கு ரொம்ப ஆச்சர்யம். அறிமுகமில்லாத ஒரு அன்னியரிடம் மன்னிப்பு கேட்ட அந்த பெண்ணோட குணம் எனக்கு ரொம்ப அழகா தெரிஞ்சது. She made my day really beautiful.




2) இதுவும் மிக சமீபத்துல நடந்தது. வர்ஜினியா டெக் கொலை சம்பவம் நடந்து முடிஞ்சு, எல்லா தொலைகாட்சியிலயும் அத பத்தியே பேசிகிட்டு இருந்த நேரம். இரண்டு இந்தியர்களும் அதில் அடக்கம்ன்னு தெரிஞ்சது. அதிலும் ஆசிரியர் லோகனாதன் தமிழ்நாட்டை சேந்தவர்ன்னு கொஞ்சம் கூடுதல் அனுதாபத்தை நான் காட்டிட்டு உக்காந்து செய்திய பாத்துகிட்டு இருந்த நேரம். அப்போ பைய்யன் அங்க வரவும் அவன்கிட்ட, "ச்ச பாத்தியா தமிழ்நாட்டை சேந்த ஒருத்தரும் இறந்து போயிட்டாராம் அப்படின்னு சொன்னேன்", அப்ப அவன் என்ன விசித்ரமா பாத்துட்டு, ' Should i be more enraged because an Indian has been killed ?" அப்ப்டின்னு கேட்டுட்டு போயிட்டான். அப்படியே கொஞ்ச நேரம் உக்காந்துட்டேன். எல்லா உயிர்களையும் சமமா பாவிக்க தெரிஞ்ச அவனுடைய மன முதிர்ச்சி எனக்கு ரொம்ப அழகா தெரிஞ்சது.


இப்ப கதை!



நான் பள்ளியில் படிக்கும் போது தூர்தர்ஷனில் ஒரு நாடகத்தை ஒளிபரப்பினாங்க. அது ராஜாஜியோட ஒரு சிறுகதைன்னு நியாபகம். அந்த நாடகத்தின் பேரு "கூனி சுந்தரி". என்ன மிகவும் பாதிச்ச கதை அது. ரொம்ப நல்லாவும் எடுத்திருந்தாங்க. ஷரத்பாபு நடிச்சிருந்தார்ன்னு நினைக்கரேன். சரி கதைக்கு வருவோம்!!

ஒரு மெத்த படித்த வாத்யார் இருப்பார். வேதங்களில் எல்லாம் தேர்ச்சி பெற்றவர் அவருக்கு எட்டு வயதில் ஒரு பெண் இருப்பாள். முதல் மனைவி அகாலமாக மரணம் அடைந்ததனால் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வார். அந்த பெண்ணிற்கு கூன் முதுகு. கூன் முதுகினாலோ என்னவோ அந்த வாத்யார் தன் இரண்டாவது மனைவியின் மேல் எந்த வகை ஈடுபாடும் இல்லாமல் இருப்பார். அவளோ அவருக்கு வேண்டிய எல்லாவற்றையும் மிகுந்த சிரத்தையோடு செய்துகொண்டு அவரிடம் வேறு எந்த வித எதிர்பார்பு இல்லாமல் இருப்பாள். அவளோட உலகமே அந்த எட்டு வயது சிறுமியை சுற்றியே போய்கொண்டிருக்கும். அந்த சிறுமியை மிகுந்த பாசத்தோடு பார்த்துகொள்வாள். ஒரு சமயம் சுந்தரி வீட்டிற்கு வெளியே இருக்கும் கிணற்றில் நீர் இறைக்க செல்வாள். சிறுமியும் கூடவே செல்வாள். அப்போது அங்கு இருக்கும் மற்ற பெண்கள், " கூனி சுந்தரி" என்று கூப்பிட்டு கேலி செய்வார்கள். சுந்தரி ஒன்றும் சொல்லாமல் சிறுமியை அழைத்துகொண்டு வந்துவிடுவாள். அனால் அந்த சிறுமியை அந்த கிண்டல் ரொம்பவே பாதித்திதுவிடும். பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு அப்பாவுடன் உட்கார்ந்து கொண்டு பேசும் பொழுது அவள் கேப்பாள்," அப்பா ஏன் எல்லாரும் அம்மாவ கூனி சுந்தரின்னு சொல்லி கூப்பிட்டு கிண்டல் பண்ணராங்க? நம்ம அம்மா ரொம்ப அழகா இருக்காங்களே?" அந்த நிமிஷம் அந்த வாத்யாருக்கு கன்னத்தில் யாரோ பொளேர் என்று அறைந்தது போல் இருக்கும். பின்னர் சிறுமி, சுந்தரியுடனும் அப்பாவுடனும் உட்கார்ந்து சந்தோஷமாக ஊஞசல் ஆடுவது போல் முடித்திருப்பார்கள்.



"Beauty is in the heart of the beholder"

H.G. Wells



(இது நினைவுலேந்து எழுதினது, அதனால ஏதாவது முக்க்யமான குறிப்பு விட்டு போயிருக்காலாம், மொத்த கருத்து இதுதான்னு நினைக்கரேன்!)





Beauty Tips From a beautiful woman !!






The following was written by Audrey Hepburn who was asked to share "beauty tips."
For attractive lips, speak words of kindness.
For lovely eyes, seek out the good in people.
For a slim figure, share your food with the hungry.
For beautiful hair, let a child run his or her fingers through it once a day.
For poise, walk with the knowledge that you never walk alone.
People, even more than things, have to be restored, renewed, revived, reclaimed and redeemed; never throw out anyone.
Remember, if you ever need a helping hand, you'll find one at the end of each of your arms. As you grow older, you will discover that you have two hands, one for helping yourself, the other for helping others.
The beauty of a woman is not in the clothes she wears, the figure that she carries, or the way she combs her hair. The beauty of a woman must be seen from in her eyes, because that is the doorway to her heart, the place where love resides.
The beauty of a woman is not in a facial mode, but the true beauty in a woman is reflected in her soul.
It is the caring that she lovingly gives the passion that she shows.
The beauty of a woman grows with the passing years.
If you share this with another woman, something good will happen -- you will boost another woman's self esteem, and she will know that you care about her.



இதோட என் அழகு பதிவ முடிச்சுக்கரேன்




சர்வேசன் சர்வே போட்டு களைச்சு போயிருப்பீங்க ஒரு மாறுதலுக்கு அழகு பதிவு போடுங்களேன் !!!!



நெல்லை சிவா க்ரிகெட்ல்லாம் ஒரு வழியா முடிஞ்சிருச்சே.......relaxed அ அழகு பதிவு போட வாங்க.

Thursday, April 19, 2007

புதிய நட்பு ! (சிறுகதை)

காலையில் அலாரம் அடிக்கும் முன்பே விழிப்பு வந்தது யசோதாவிற்கு. கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருக்கலாம் என்று தோன்றியது. இரண்டு வாரமாக உடம்பில் ஏதோ அசதி. அதும் காலையில் எழுந்திருப்பது ப்ரம்ம ப்ரயத்தனமாக தோன்றியது அவளுக்கு. மறுத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். மெதுவாக எழுந்து நின்றவளுக்கு தலை சுத்துவது போல் இருந்தது. சமாளித்துக்கொண்டு பாத்ரூம் சென்றபோதுதான் நியாபகம் வந்தது இன்று மாயாவிற்கு சீக்கரம் பள்ளி செல்லவேண்டும் என்று. தன்னைதானே கோபித்துக்கொண்டு அவசரமாக வெளியில் வந்து மாயாவிற்கு ஒரு குரல் கொடுத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்று காபி மேக்கரில் பொடியை போட்டு விட்டு அவளுக்கான காலை உணவை எடுத்து வைத்தாள்.

மாயாவிற்கு பதினைந்து வயது. உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு. நல்ல சுறுசுறுப்பான பெண். முரளியும் யசோதாவும் அமெரிக்கா வந்து இரண்டு வருடம் கழித்து பிறந்தாள் மாயா. முரளிதான் தன் பெண்ணிற்க்கு தன்னுடைய பெயரின் முதல் எழுத்தையும்
யசோதாவின் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து மாயா என்று பெயர் வைத்தது.

" Rise and Shine, mom! குரல் கேட்டு திடுகிட்டு விழித்த போதுதான் தெரிந்தது யசோதவிற்கு தான் அப்படியே டைனிங் டேப்லில் தலையை சாய்த்து தூங்கியிருப்பது.
என்ன தூக்கமோ? என்று நினைத்துக்கொண்டு, ஆரஞ்சு ஜூசை எடுத்து கிலாசில்விட்டு பெண்ணிடம் நீட்டவும், அதை வாங்கி குடித்துகொண்டே, "Mom are you ok??" என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்காமல் mp3 player ஐ எடுத்து காதில் மாட்டிகொண்டாள் மாயா. பின்னர் எதையோ நினைத்துகொண்டவளா, ' Mom Michelle is going to give me a ride back home, so you dont bother, now hurry up mommy dearest!" என்று சொல்லிவிட்டு காரில் போய் உட்கார்ந்தாள். அவசரமாக காபியை ஒரே மடக்காக குடித்துவிட்டு, மாயாவை பள்ளியில் கொண்டுவிட்டு திரும்பும் போது வயிற்றில் ஏதோ பிசைவது போல் உணர்வு யசோதாவிற்கு. இன்று கண்டிப்பாக அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிடவேண்டும் என்று பள்ளியில் இருந்து திரும்பியபின் முதல் வேலையாக மருத்துவரை கூப்பிட்டாள் யசோதா.
இரண்டு வாரம் கழித்து ஒரு தேதி கொடுக்கவும் யசோதாவிற்கு ஆயாசமாக இருந்தது.
அவளுடைய நிலைமையை எடுத்து சொல்லி,' can you sqeeze me in somewhere today?" என்று கேட்டுவிட்டு, அவள் கான்செலேஷன் இருந்தால் கூப்பிடுவதாக சொன்னபின் போனை கீழே வைத்துவிட்டு முரளியை கூப்பிட்டு விவரம் சொன்னாள்.

முரளிக்கு வெளியூரில் வேலை. நான்கு நாட்கள் வெளியிலும், வெள்ளி வீட்டிலிருந்தும் வேலை. சனி ஞாயிறு எப்படியும் விடுமுறை. புதிய பிராஜெக்ட் ஆறு மாதம் இப்படிதான் வேலை என்று சொல்லியிருந்தான். "திருப்பியும் டாக்டர் ஆபிச கூப்பிட்டு bug them ", one a day women" சாப்பிடர்யா தினமும்?? நான் கார் ஓட்டிட்டு இருக்கேன் இப்ப, கூபட்ரேன் ok? take care' என்று சொல்லி போனை வைப்பதற்கும் டாக்டர் ஆபிசிலிருந்து மதியம் 1.30 க்கு அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதாக போன் வருவதற்கும் சரியாக இருந்தது.

யசோதா பிரிட்ஜ் திறந்து பாத்தாள் வகை வகையாக மிச்சம் மீதி இருப்பதை பார்த்துவிட்டு மதியத்துக்கு வெறும் தயிர் சாதம் போதும் என்று நினைத்துக்கொண்டாள்.
தான் வாலண்டியர் செய்யும் கம்யுனிடி செண்டெர்கு போன் செய்து இன்று வர முடியாது என்று சொன்னாள். மனது எந்த வேலையிலும் ஈடுபட மறுத்தது அவளுக்கு. ஏன் இப்படி மந்தமாக இருக்கிரது என்று நினைத்துகொண்டிருக்கும் போதே திடீரென்று இது ஒரு வேளை மெனோபாசாக இருக்குமோ என்று தோன்றியது அவளுக்கு. hot flush ஒண்ணும் வந்த மாதிரி தெரியலயே என்று தோன்றியது. நாப்பது வயதில் மெனோபாஸ் வந்துவிடுமா தெரியலயே. மனதுபாட்டு கட்டுபாடில்லாமல் சுற்றி சுற்றி வந்தது. தான் எப்போதும் ரெகுலர் என்று தன்னைதானே சமாதானம் செய்துகொண்டாள்.ஏதோ நினைவு வந்து அவளை பயமுறுத்தியது. உடனே டாக்டரிடம் சென்று எல்லவற்றையும் கிளியர் செய்ய வேண்டும் என்று மனது பரபரக்கவும், மட மட என்று குளித்து ரெடியாகி ஏனோதானோ என்று சாப்பிட்டு விட்டு, தன்னுடைய அப்பாயிண்ட்மெண்ட்க்கு அரை மணி நேரம் முன்னாடி போய் உட்கார்ந்தாள்.

அங்கிருந்த எல்லா பத்ரிகைகளையும் புரட்டினாளே ஒழிய மனது இனம் புறியாத பயத்தில் நிலை கொள்ளாமல் தவித்தது. அவள் பேரை நர்ஸ் கூப்பிடவும் மட மட என்று எழுந்து போனாள். வழக்கம் போல் ரெகுலர் கேள்விகள் பதில்கள், டாக்டரிடம் சிம்டம்களளை சொல்லி முடித்தவுடன் எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் டாக்டர் சில டெஸ்டுகளை எழுதி குடுத்துவிட்டு, Mrs. Murali did you have your cycle yet?? அவள் திடுக்கிட்டு no என்றவுடன்...." I think, you should better take a pregnancy test,can you wait for half an hour?" வாயிலிருந்து வார்த்தை வரவில்லை யெஸ் என்பது போல் மண்டையை ஆட்டினாள். அடுத்த அரை மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை அவளூக்கு. எல்லாம் டெஸ்ட்டும் முடிந்து, Congrats Mrs Murali you are 4 weeks pregnant"என்று சொல்லவும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள். டாக்ட்டரிடம் என்ன சொன்னாள் எப்படி வெளியில் வந்தாள் ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.

இது எப்படி?? முருகா, முருகா.என்று வாய் முணு முணுத்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. எது என்ன அசிங்கம்? அய்யோ இந்த அவமானத்தை எப்படி தாங்குவேன். பதினைந்து வயது மகள் இருக்கையில்!! எப்படி, இதை பற்றி யோசிக்காமல் இருந்தேன்??
முருகா இது தப்பா இருக்கணுமே....மனது புலம்பியது. கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் கண்ணீர் அப்படியே வழிய வழிய காரை ஓட்டிகொண்டு வீடு வந்து சேர்ந்தாள். முரளியிடம் சொல்லவேண்டும். என்ன சொல்லுவான்? அவன் என்ன சொல்ல? அவனும் சேர்ந்து அவமான படட்டும், மனது குரூரமாக எண்ணி தப்பிக்க பார்த்தது. மாயவிடம் என்ன சொல்லுவது?? நினைக்கும் போதே கூசியது அவளுக்கு. சீ சீ என்ன நினைப்பாள் அவள்? are these guys still doing this?? என்று நினைப்பாளோ? அவளுக்கு தெரியாமல் டெர்மினேட் பண்ணிவிடலாமா? முரளியிடம் பேசவேண்டும். எல்லாம் அவனால்தான்.

மாயா, thanks guys! என்று சொல்வது கேக்கவும் பாத்ரூம் சென்று முகம் கழுவினாள். பள்ளீயிலுருந்து வந்துவிட்ட மகளுக்கு எதாவது குடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு மாடியிலுருந்து கீழே இரங்கும் போது, mom you look terrible, what happened? என்று கேட்டவுடன்.....அப்படியே உடைந்து போய் மாடி படியில் உட்கார்ந்து விசும்ப ஆரம்பித்தாள் யசோதா. அம்மா....did you get any phone call from India?? are thatha and patti ok?? அவள் கேள்வி செல்லும் திசை புரிந்து அதெல்லாம் ஓண்ணும் இல்லை என்று சொல்ல, யசோதவை எழுப்பி மெதுவாக கூட்டி சென்றாள் மாயா. Would you like to talk to me about what is bothering you?? டைனிங் டேப்பில் லில் உட்கார்ந்து கொண்டு நிஜமான கரிசனத்தோடு கேக்கும் தன் பெண்ணை கூர்ந்து நோக்கிவிட்டு கண்கள் மீண்டும் குளமாக தலையை குனிந்து கொண்டாள் யசோதா."Mom, trust me i can handle stuff talk to me" என்று கூறிய மகளை வியப்புடன் பாத்தாள். தனக்கும் இவளுக்கும்தான் எவ்வளவு வித்யாசம். எத்தனை தன்னபிக்கையோடு பெரிய பெண் போல் பேசுகிறாள். இவளிடம் சொல்வதா? எப்படி?? முரளியிடம் முதலில் சொல்ல வேண்டாமா? இந்தியாவிற்கு அம்மாவிடம் கூப்பிட்டு பேசலாமா?

Mom come lets go for a drive.....மாயா. சரி அவளோடு கொஞ்சம் வெளியில் போனாலாவது மனது தெளிவாக சிந்திக்கும் என்று தோன்றியது யசோதவிற்கு. யசோதவின் மனதை மாற்றுவதற்காக மாயா வழியில் எதேதோ பள்ளி விஷயமாக பேசிகொண்டே வந்தாள். சிலை போல் உட்கார்ந்து காரை ஓட்டும் அம்மாவை பார்க்கையில் கொஞ்சம் கவலையாக இருந்தது அவளுக்கு. காரை பார்க் செய்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள் இரண்டு பேரும். வள வள என்று பேசிகொண்டு வந்த மகள் மௌனமாக நடக்கவும் பாவமாக இருந்தது யசோதவிற்கு. தன்னுடைய கவலையில் அவளையும் சேர்த்துவிட்டோமே என்று. பார்க் பென்ச்ல் போய் உட்கார்ந்தார்கள். அம்மா, என்று சொல்லி கையை பிடித்து அழுத்தி,' என்னிடம் சொல், என்பது போல் பார்த்த மகளை அணைத்துகொண்டாள் யசோதா.

Maya i have something important to tell you", என்று சொல்லிவிட்டு தான் மறுபடியும் அம்மா ஆகப்போவதை எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சொல்லி முடித்தாள். சொல்லி முடித்த மறு கணம் சொல்லி இருக்க வேண்டாமோ என்று தோன்றியது யசோதவிற்கு. மாயா இதை எப்படி எடுத்துகொள்வாளோ என்ற கவலையோடு பார்த்தாள்.
முதலில் குழப்பமான முகபாவம் காட்டி, பின்னர் யே என்று கத்திகொண்டு ஓடி வந்து இருக்க கட்டி அழுத்தமாக முத்தம் கொடுத்த மகளை,தானும் அணைத்துக்கொண்டாள். இவளுக்கு தான் சொன்ன செய்தியின் முழு அர்த்தம் விளங்கியதா என்று ஆச்சர்யமாக இருந்தது யசோதவிற்கு. அவளை தள்ளி நிறுத்தி, ' did you get what i said ?" என்று கேட்டாள் யசோதா. " of course, mom !" என்று கூறி விட்டு, 'Iam so happy for you guys, when did you find out? " இன்று தான் என்று கூறி தான் இன்னும் முரளியிடமே சொல்லவில்லை என்றாள் யசோதா. Crazy'! என்று யசோதாவை பார்த்து கூறி விட்டு.....யசோதாவிடம், எப்படி முரளியிடம் இந்த மகிழ்சியான விஷயத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று பெரிய ப்ளான் போட்டு விலாவாரியாக சொல்ல ஆரம்பித்தாள் மாயா. தான் அன்று தன் தோழி வீட்டிற்கு சென்று விடுவதாகவும், யசோதா எப்படி தன்னை தயார் செய்துகொண்டு அப்பாவை எப்படி ஆச்சரியபடுத்த வேண்டும் என்று பேசிகொண்டே போகும் மகளை, அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் பார்த்துகொண்டு இருந்தாள் யசோதா. பின்னர் என்ன தோன்றியதோ, மாயா அம்மா பக்கம் திரும்பி,"Were you upset because of this?" என்று கேட்டாள். ஆமாம் என்பது போல் யசோதா தலையசைக்கவும், ஏன் என்பது போல் பார்த்து,உடல் ரீதியாக டாக்டர் ஏதாவது சொன்னாரா என்று கேட்டாள் மாயா. இல்லை என்று சொல்லிவிட்டு தான் எப்படியெல்லாம் குழம்பி தவித்தோம் இந்த பெண் என்னடாவென்றால் ரொம்ப சாதரணமாக எடுத்துகொண்டுவிட்டாளே என்று தோன்றியது யசோதவிற்கு.

மாயா, "How do you really feel about this?" யசோதா கேட்கவும், Why mom? i feel really happy about it.....தன்னால் எந்த விதமான சங்கடத்துக்கும் தன் மகள் உள்ளாககூடாது என்று தீர்மானமாக எண்ணியவாறு,"Are you embarased about the whole situation?",மறுபடியும் மறுபடியும் கேள்விகள் கேட்ட யசோதாவை, சிறிய அதிர்ச்சியுடன் பார்த்தாள் மாயா. பின்னர் யசோதாவின் கேள்விகளுக்கு பின்னால் இருந்த அர்த்ததை ஊகித்தவாறு சிறிது உணர்ச்சி வசபட்டவளாக, "அம்மா, நீ கேட்கும் கேள்விகள் எனக்கு கோபத்தை உண்டு பண்னுகிறது, இது நீயும் அப்பாவும் சேர்ந்து தீர்மானம் செய்ய வேண்டியது, உன் படுக்கை அறையை எட்டி பார்ப்பது என் வேலையில்லை, என்று சொல்லிவிட்டு அம்மாவிடம் தேவைக்கு அதிகமாக பேசிவிட்டோமொ என்று தோன்ற, "mom forgive my language" என்று கூறிவிட்டு அம்மாவின் அருகில் உட்கார்ந்துகொண்டாள்.

அம்மாவின் கைககளை மெதுவாக பிடித்து," உனக்கு இது எதிர்பாராமல் வந்த செய்தி என்று புரிகிறது, அனால் ஏதோ உலகமகா தப்பு செய்துவிட்டது போல் நீ புலம்புவது எனக்கு கொஞசம் கூட புரியவில்லை. உனக்கு இன்னும் வயது இருக்கிரது....இந்த குழந்தயை பெற்று வளர்க்க முடியுமா என்று தீர்மானம் செய்வது நீயும் அப்பாவும் மட்டுமே. நான் என்ன சொல்வேன் மற்ற உன் தோழிகள்,உறவினர் என்ன சொல்வார்கள் என்று குழம்புவது வேண்டாத வேலை. இதில் அவமான படவோ குற்ற உணர்வில் தவிப்பதோ அவசியமே இல்லை," பேசிகொண்டே போன மகளின் தோளில் தலையை சாய்த்து ஒரு புதிய நட்பு கிடைத்த மகிழ்ச்சியில் கண்களை இருக்க மூடி தன் தாய்மையை அனுபவிக்க தயாரானாள்.


P.S இதில் கொஞ்சம் உண்மை கலந்து இருக்கிரேன். முதல் கதை முயற்சி. நடை, உடை பாவனை எதுவும் இல்லாததற்கு மன்னிக்கவும்.!!! சர்வேசன் கதை போட்டிக்கு எழுத ஆரம்பிச்சு இப்பதான் முடிச்சேன்....:):)











Saturday, April 07, 2007

இந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்!

ஏப்ரல் மாத டைம் பத்ரிகையில் க்லோபல் வார்மிங்கை(Global Warming) கட்டுபடுத்த நாம் ஒவ்வொருவரும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி ஒரு ஐம்பத்தி ஒரு விஷயங்கள் எழுதியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் நம்மால் கடைபிடிக்க முடியாவிட்டாலும் சிலதை நம்மால் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. நடைமுறை வாழ்கையில் கடைபிடிக்க முடியும் என்று எனக்கு தோன்றியவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.

1) லைட் பல்ப்ஸ்.

நாம் சாதரணமாக உபயோகிக்கும் பல்ப்பை (conventional incandescent bulbs) விடுத்து குழல் விளக்கை சுற்றி வைத்த மாறி இருக்கும் பல்பை உபயோகிப்பது -{compact fluorescent light bulb(CFL)} நல்லது. CFL சாதரண பல்பைவிட இரண்டிலிருந்து ஐந்து மடங்கு விலை அதிகமாக இருந்தாலும் இதன் நீடித்த உழைப்பு அதை சரிகட்டி விடுகிறது. ஒரு 7 வாட் CFL பல்ப் ஒரு 40 வாட் ரெகுலர் பல்புக்கு சமம். இது ஒரு சிறந்த
எனர்ஜி சேவராக செயல் படுகிரது. ஆனால் இந்த வகை பல்பில் 5 mg மெர்குரி இருப்பதால் இதை மற்ற எல்லாவகை கழிவு பொறுள்களுடன் எறிய முடியாது.

2) துணி துவைத்தல்:



மிகவும் இன்றியமையாத ஒரு தினப்படி செயல். அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை!! ஆனால் அதைதான் இங்கு ஒரு சிறந்த எனர்ஜி சேவராக குறிபிடுகிரது Time Magazine. கொஞ்சம் கொஞ்சமாக (வாஷிங் மஷின் உபயோகிப்பவர்களுக்கு!) துணிகளை போட்டு தோய்ப்பதைவிட, துணிகளை சேர்த்து வைத்து ஒரு பெரிய கும்பலாக தோயித்து எடுப்பது ஒரு சிறந்த ஷக்தி சேமிப்பு. அதிலும் கொதிக்கும் சுடு தண்ணியை உபயோக படுத்தாமல், மிதமான சூடுள்ள தண்ணியை உபயோக படுத்துதல் நல்லது. ரொம்ப முக்யமான இன்னொரு விஷயம், ட்ரைய்யெரை(dryer) உபயோக படுத்தாமல் கொடி கட்டி துணியை உலர்த்துவதால் நம் வாஷிங் மெஷினால் உற்பத்தியாகும் 90% co2 வை குறைக்கலாம்.

3) முடிந்த வரை பேருந்தை உபயோகியுங்கள்!:



இது எவ்வளவு தூரம் சாத்யம் என்று தெரியவில்லை. நாம் எல்லோருமே நம் சவுகரியத்துக்கு தகுந்தாற்போல் போக வர பழகி விட்டோம். பஸ்ஸுக்காக காத்திருந்து போவது எல்லாம் மலையேறி போய்விட்டது. இருந்தாலும் போக்குவரத்து மட்டுமே அமெரிக்காவில் 30% கார்பண்டை ஆக்சைட் உமிழ்தலுக்கு காரணமாக உள்ளது நிறைய கவலையை அளிக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை பொதுதுறை போக்குவரத்து, சில பெரிய நகரங்களை தவிர வேறு எங்குமே சரியாக இருப்பதாக தெரியவில்லை. பொதுதுறை போக்குவரத்தை(பேருந்து மற்றும் புகைவண்டி) உபயோகிப்பதால் ஒரு வருடத்துக்கு 1.4 மில்லியன் பெட்ரோலை சேமிக்கலாம். அவ்வாறு சேமிப்பதால் 1.5 மில்லியன் அளவு co2 உமிழ்தலை தவிற்கலாம். நம்மால் நிச்சயம் செய்யகூடிய ஒன்று என்றால் car pooling!

4) கணிணி மூலம் பணம் செலுத்தலாம்!

உங்கள் கணிணி மூலம் நீங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் மாதிரி பல வகையான கட்டணங்களை செலுத்தினீர்களானால், மரங்களை மட்டும் காக்கவில்லை, காகித காசோலைகளை எடுத்து செல்லும் விமானம் மற்றும் லாரிகளின் பெட்ரோல் செலவையும் கட்டுபடுத்துகிரீர்கள். அது உமிழும் co2 வை மட்டுபடுத்துகிரீர்கள்.

5) ஜன்னலை திறந்து வையுங்கள் !

குளிரூடுபெட்டியை மிதமாக உபயோகியுங்கள்.

6) ப்லாஸ்டிக் பைகளூக்கு ஒரு பெரிய தடா போடுங்கள்!

இந்த பைகள் அழிய தோராயமாக 1000 ஆண்டுகள் ஆகின்றன. துணி பையை உபயோகிப்பது சிறந்தது.

7) மூங்கில் வேலி !

உங்கள் வீடுகள் மற்றும் தோட்டத்ற்க்கு மூங்கில் வேலி அமையுங்கள். மூங்கில் ஒரு நாளைக்கு 1 அடி வளரகூடியது. ஒரு ரோஜா செடியை விட பல மடங்கு co2 வை தன்னுள் ஈர்த்துக்கொள்ளகூடிய ஷக்தி உடையது.

8) உள்ளூர் விவசாயியை ஆதரியுங்கள்!

பெரிய பெரிய கடைகளில் போய் காய் கனிகள் வாங்குவதை தவிறுங்கள். உள்ளூர் சந்தையில் வாங்குவதால், பல மயில் தூரத்திலிருந்து பெரிய பெரிய வாகனங்களில் சாமான்கள் கொண்டு வரபடுவதை தவிற்கிரீர்கள். இதன் மூலம் பெட்ரோலும் அதனால் உமிழபடும் co2 வும் குறைகிறது.

9)உபயோகிக்காதபோது கணிணியை அணைத்து வையுங்கள்!

ஸ்க்ரீன் சேவெரை உபயோகிப்பதால் எந்தவித சேமிப்பும் நமக்கு கிடைப்பதில்லை. உபயோகிகாத போது அணைத்து வைப்பது நல்லது.

10) விளக்கை அணையுங்கள்!

வேலை பார்க்கும் இடத்தில் மற்றும் வீட்டிலும் தேவையில்லாத விளக்குகளை கண்டிப்பாக அணைத்து வையுங்கள். பிள்ளைகளையும் அதற்கு பழக்குங்கள் :):)

இதில் குறைந்தது ஒன்றை மட்டுமாவது நாம் கடைபிடிக்க முடிந்தால், இந்த பூமிக்கு பெரிய சேவை செய்ததாக நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளலாம். சிறு துளி பெறு வெள்ளம்!!

கீழே கொடுத்திருக்கும் லின்கையும் போய் பார்க்கவும்!

http://www.earthday.org/

P.S மொழிபெயர்ப்பு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்.......பொறுத்துகொள்ளவும்!! நன்றி :):)