Friday, March 02, 2007

Fascination for names!!!

நான் , ' அம்மா ஏம்மா எனக்கு ராதா ன்னு பேர் வச்சீங்க?'

அம்மா, " நம்ம தாத்தாக்கு பஜனைன்னா ரொம்ப பிடிக்கும், எப்போதும் ராதே ராதே ன்னு பாடுவாங்க அவர் நியாபகார்த்தமா வச்சதும்மா..."

இதே கேள்விய பல முரை எங்கம்மாவ கேட்டு போர் அடிச்சுருவேன். அம்மாவும் பொறுமையா பதில் சொல்லுவாங்க.

இங்க இத எதுக்கு சொல்லரேன்னா, என் பேரு எனக்கு சுத்தம்ம புடிக்காது. ராதா இரண்டே எழுத்து. ச.... செல்லமா யாராவது கூப்படணும்னா கூட ராது ன்னு கூப்படலாம். அதுவும் ரெண்டு எழுத்துதானே? என் கணக்கு இங்க சரியா வரல. வேர எப்படிதான் ஷார்ட்டா பண்ணமுடியும். எங்கம்மா மேல கோவமா வரும். அக்காக்கு மட்டும் பத்மாவதி ன்னு நீளமா பேர் வச்சீங்களே அப்படின்னு கேட்டா. எதுக்குதான் போட்டி போடர்துன்னு ஒரு விவஸ்தையே இல்லையா ன்னு அம்மா கோவத்தோட சொல்லிட்டாங்க. அம்மா அவள "பத்து பத்து" ன்னு கூப்புடும் போது எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வரும்.

so ஒரு நாள் யோசிச்சேன் எப்படியாவது என் பேர மாதிடணும்னு. என் வகுப்புல இருக்கர எல்லாரோட பேர்லயும் தனி கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். Enid Blyton படிச்சு படிச்சு Norah, Betsy, Peggy இந்த மாறி பேரு ஒகே வா தோணுச்சு. ஆனாலும் என்னொட டேஸ்டுக்கு கொஞ்சம் கம்மியா இருந்துச்சு ஏன்னா எல்லாமே ரொம்ப சின்னது.ஷாந்தி, லதா ன்ங்கர பெயர்ல எல்லாம் என்னொட கவனம் போல.எங்க வகுப்புல விதவிதமான ஷாந்தி,அதாவது a to z intital இருந்தாங்க.அதே லதா வும் வித விதமா இருந்துச்சு.(ப்ரேம லதா, மீன லதா,ஷாந்த லதா). அத தவிர "ஷாந்தி" ரொம்ப சின்னதா இருந்ததுனாலயும் "லதா" with suffix and prefix ரொம்ப காமனா இருந்ததுனாலயும் அந்த பேரு மேலலாம் கொஞ்சம் கூட ஈடுபாடு வரல.

என்னோட பெயர் hunting was getting serious. ஒரு பெயரும் சரியா மாட்டல. அப்பதான் ஒண்ணு நடந்தது. எங்க வகுப்புல புது வரவு. பெயர் என்ன தெரியுமா?? எலிஸபெத் மார்கரெட் அலெக்ஸிஸ். இவ்வளோ நீள பெயர இப்பொதான் முதல்முதலா கேக்கரேன். என் மனசுகுள்ள சித்தார் வாத்தியம். ஒரே பெண்ணுக்கு மூணு பெயர். உடனே யோசிக்காம முடிவு செஞ்சேன் எனக்கும் அதே பெயர்தான் வேணும்னு. அந்த பொண்ணு வந்து ஒரு வாரம் ஆன பிறகு நை ஸா அவ பக்கத்துல போயி உக்காந்து அவ பெயரோட ஸ்பெல்லிங் என்னன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அன்னிக்கு பூரா ரொம்ப சந்தோஷமா இருந்தேன் ஏன்னா இத்தன நாளா நான் பட்ட அவஸ்த்தைக்கு ஒரு முடிவு வந்திருச்சே!!


அடுத்த நாள் அம்மாகிட்ட போயி புத்தகம், நோட்டு புத்தகத்துல ஒட்ட வேர லேபில் வேணும்னு கேட்டேன். அம்மா கைவேலையா இருந்த்துனால போயி டெஸ்க்லேந்து எடுத்துக்கோன்னாங்க. சரின்னு நானும் எடுத்து எல்லா நோட்டு புஸ்தகத்துலயும் பொறுமையா லேபில் ஒட்டிடேன். அதுல என் புது பேரையும், அதாவது "எலிஸபெத் மார்கரெட் அலெக்ஸிஸ்" எழுதிட்டேன். அம்மாகிட்ட போயி ரொம்ப சாவதானமா " அம்மா என் பேரு இனிமே " எலிஸபெத் மார்கரெட் அலெக்ஸிஸ்", நீங்க என்ன "லீஸா" ன்னு கூப்படலாம். என் புக்லலாம் கூட பேரு மாத்தி எழுதிட்டேன்,நாளைக்கி டீச்சர்கிட்ட அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது சொல்லிடுவேன்" , அப்படின்னேன் பாருங்க.....என்கம்மாக்கு எவ்வளோ கோவம் வரும்னு அன்னிக்குதான் தெரிஞ்சது. முதுகுல வச்ச அடி ஜன்மத்த்லயும் மறக்காது.


என்னவோ ஆனா பாருங்க இன்னைக்கும் எனக்கு பெயர்கள் மேல ஒரு தனி அட்ராக்ஷன் உண்டு. என்ன வித விதமா பேரு வைக்கராங்க இப்பல்லாம்?? Baby names க்கு தனி சைடே இருக்கு.

ஹ்ம்ம் இப்ப இங்க என் பேர எப்படில்லாம் கொல்ல முடியுமோ கொன்னுகிட்டு இருக்காங்க. (ex) ரடா, ரேடா, ராடஹா இப்படி பல வேர்ஷன்........

28 comments:

Radha Sriram said...

test!

கால்கரி சிவா said...

ஒரு பேர் வைச்சு எத்தனை உணர்ச்சிகளை காட்டிவிட்டீர்கள்.
உங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்

-L-L-D-a-s-u said...

Intersting .இப்படியெல்லாமா ஆசை இருக்கும்

இப்படிக்கு
ஜோஸ் பெனடிக்ட்

SurveySan said...

மூணு பதிவிலயே உங்க எழுத்துப் பிழை கொறஞ்சுடுச்சே. 40 போட்டும் எனக்கு இன்னும் அது சரியால :)

ஒரு பேர்ல இவ்ளோ இருக்கா.

உங்க பிள்ளைகளுக்கு பெருசா வச்சீங்களா? :)

Radha Sriram said...

//ஒரு பேர் வைச்சு எத்தனை உணர்ச்சிகளை காட்டிவிட்டீர்கள்.
உங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் //

வாங்க சிவா......ஆமா இந்த பேர் தொல்லை பெரும் தொல்லையா இருந்துச்சு. It took me quite a while to come out of it.

நீமோ சவுக்யமா??

Radha Sriram said...

//Intersting .இப்படியெல்லாமா ஆசை இருக்கும் //

அய்யோ ஆமா ஜோஸ் !! சின்ன வயசுல என்னல்லாம் தோணுது பார்ங்களேன்....

Radha Sriram said...

//மூணு பதிவிலயே உங்க எழுத்துப் பிழை கொறஞ்சுடுச்சே. 40 போட்டும் எனக்கு இன்னும் அது சரியால :)//

வாங்க குரு. நிஜமாவா சொல்ரீங்க ??

//ஒரு பேர்ல இவ்ளோ இருக்கா.

உங்க பிள்ளைகளுக்கு பெருசா வச்சீங்களா?//

பிள்ளைங்களுக்கு பேர் வச்சது ஒரு பெரிய கதை. அத இன்னொரு தடவை சொல்லரேன்.

rv said...

பேரெடுக்கணும்பாங்க. அதான் தேடித்தேடி இந்த சின்ன வயசுலயும் கஷ்டப்பட்டிருக்கீங்க. அதப்புரிஞ்சுக்காம அம்மா அடிச்சுருக்காங்களே!

//நீங்க என்ன "லீஸா" ன்னு கூப்படலாம். //
லீசா சிம்ஸனோ????? அதான் இந்த வேலையெல்லாம் செஞ்சீங்களா?

யாத்ரீகன் said...

hmm.. romba podhu paer amanjathoda kashtam enakum nalla theriyum... andha aasaya thaan blog eluthura Punai paerla maathi kitaen..

இலவசக்கொத்தனார் said...

// பிள்ளைங்களுக்கு பேர் வச்சது ஒரு பெரிய கதை. அத இன்னொரு தடவை சொல்லரேன்.//

வெயிட்டிங்!

Radha Sriram said...

//பேரெடுக்கணும்பாங்க. அதான் தேடித்தேடி இந்த சின்ன வயசுலயும் கஷ்டப்பட்டிருக்கீங்க. அதப்புரிஞ்சுக்காம அம்மா அடிச்சுருக்காங்களே!//

அதுவும் பெத்த பேரா எடுக்க முயர்சி பண்ணினேன் பாருங்க.....ஹ்ம்ம்

நீங்களும் ஸிம்ஸன்ஸ் பாப்பீங்களா??

Radha Sriram said...

//hmm.. romba podhu paer amanjathoda kashtam enakum nalla theriyum... andha aasaya thaan blog eluthura Punai paerla maathi kitaen//

ரொம்ப கடுப்பா இருக்கும் இல்ல யாத்ரீகன்? அதுவும் நம்ம தமிழ் சினிமால அப்ப வர ஹீரோயின் எல்லாருக்கும் "ராதா" ன்னு பேரு. என் நிலமையா நீங்களே யோசிச்சு பாருங்க.
i think iam at peace now!!!

Radha Sriram said...

//வெயிட்டிங்//

வாங்க கொத்ஸ். ஆமாங்க அந்த கதைய சீக்கரத்துல எழுதரேன்.!!

சிறில் அலெக்ஸ் said...

ராதா,
மற்றுமொரு கலக்கல். அனுபவங்கள எழுதுறது சுவையே தனிதான்.

அருமையா எழுதுறீங்க. எங்களையெல்லாம் வெளியே தள்ளாம இருந்தா சரி.
:))

'அலெக்ஸிஸ்' ம்ம்ம். நம்ம பேரு.
:)

Radha Sriram said...

//ராதா,
மற்றுமொரு கலக்கல். அனுபவங்கள எழுதுறது சுவையே தனிதான்.//

ரொம்ப நன்றி சிரில். பழச நினைப்பது சுகம்தான் இல்லையா?

//அருமையா எழுதுறீங்க. எங்களையெல்லாம் வெளியே தள்ளாம இருந்தா சரி.//

oh, c'mon syril.....

'//அலெக்ஸிஸ்' ம்ம்ம். நம்ம பேரு.
:) //

நீங்க அலெக்ஸ் அ அலெக்ஸிஸ் ??

Shakthi said...

ராதா..சின்ன வயசுல எவலோ கஷ்டபட்டுருகீங்க..ரொம்ப பாவம் நீங்க.நினைசாலே மனசு கஷ்டமா இருக்கு.just kidding.;)
யாருக்குமே அவங்கவங்க பேரு பிடிக்காதுனு நினைக்கிறேன்..எனக்கும் அப்படிதான்.ரொம்ப நல்லா இருக்கு படிக்கறதுக்கு..நிறய எழுதுங்க.

Radha Sriram said...

//ராதா..சின்ன வயசுல எவலோ கஷ்டபட்டுருகீங்க..ரொம்ப பாவம் நீங்க.நினைசாலே மனசு கஷ்டமா இருக்கு.just kidding.;)//

ஆமாங்க ரொம்பவே கஷ்டப்பட்டேன்.


//யாருக்குமே அவங்கவங்க பேரு பிடிக்காதுனு நினைக்கிறேன்..எனக்கும் அப்படிதான்.ரொம்ப நல்லா இருக்கு படிக்கறதுக்கு..நிறய எழுதுங்க//

உங்களுக்கும் உங்களோட பேரு புடிக்காதா?? " ஷக்தி" நல்லாதானே இருக்கு?? ஊக்கத்துக்கு நன்றி ஷக்தி.

Radha Sriram said...

//Pera copy paste panininga ok.Konjam edit pani irukalamla.Adhe peraiye va vachukirathu//

க்கும்,நீங்க பேசுவீங்க லஷ்மினாரயணண்,ஜாலியா இவ்வளோ பெரிய பேர வச்சுகிட்டு.....:)

மணிகண்டன் said...

கலக்கல் பதிவு மேடம்:)
//ஹ்ம்ம் இப்ப இங்க என் பேர எப்படில்லாம் கொல்ல முடியுமோ கொன்னுகிட்டு இருக்காங்க. (ex) ரடா, ரேடா, ராடஹா இப்படி பல வேர்ஷன்........//

இவ்வளவு சின்ன பேரையே இப்படி கொல்றாங்களே, பெரிய பேர் இருந்தா?? இதையெல்லம் யோசிச்சு தான் உங்க பெற்றோர் சின்ன பேரா வச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன் :)

Radha Sriram said...

//இவ்வளவு சின்ன பேரையே இப்படி கொல்றாங்களே, பெரிய பேர் இருந்தா?? இதையெல்லம் யோசிச்சு தான் உங்க பெற்றோர் சின்ன பேரா வச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன் :) //

என் பெற்றோர தீர்க தரிசி ன்னு சொல்ரீங்க.....ஆனா நான் செலெக்ட் பண்ணின பேரு இந்த ஊருக்கு எவ்வளோ நல்லா சூட் ஆகும் நினைச்சு பாருங்க....நான் அவங்களவிட பெரீய்ய்ய்ய தீர்க தரிசி இல்லையா மணிகண்டன் ??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஐயா ஜாலி என் பேர்ல ஆங்கிலம் என்றால் 22 லெட்டர் ஸ் வரும் . வெறும் பேர்தான்.
சர் நேம் சேர்க்காமலே .
தமிழ் ன்னா 12 லெட்டர்ஸ்.அதுல பாதி தான் இங்க இருக்கு.


சில ரிசல்ட் பார்க்கப்போனா பேர தேடறது ரொம்ப ஈசி அது ஒன்னு தானே நீளமா இருக்கும்.

Radha Sriram said...

//ஐயா ஜாலி என் பேர்ல ஆங்கிலம் என்றால் 22 லெட்டர் ஸ் வரும் . வெறும் பேர்தான்.
சர் நேம் சேர்க்காமலே .
தமிழ் ன்னா 12 லெட்டர்ஸ்.அதுல பாதி தான் இங்க இருக்கு.//

நீங்க குடுத்து வச்சவங்க லக்ஷ்மி !!! :)

//சில ரிசல்ட் பார்க்கப்போனா பேர தேடறது ரொம்ப ஈசி அது ஒன்னு தானே நீளமா இருக்கும்.//

இதுல இப்படி ஒரு வசதி இருக்கா??

நாகை சிவா said...

ம்ம்ம் எனக்கு ஏன் இந்த பெயர் வச்சிங்கனு எல்லாம் கேட்டது இல்ல. ஆனா நானும் இந்த புனைப்பெயர்ல கொஞ்சம் அதிகமா ஆர்வமா இருந்தேன் - பள்ளியில் படிக்கும் போது.
ஒரு மிக நீளமான பெயர் எனக்கு நானே வச்சுக்கிட்டேன் அப்ப, காலேஜ்ல புதுசா வரவங்க கிட்ட எல்லாம் அந்த பெயர தான் சொல்லுறது.

குழம்பி போய்டுவாங்க ;-)

நாகை சிவா said...

//ஹ்ம்ம் இப்ப இங்க என் பேர எப்படில்லாம் கொல்ல முடியுமோ கொன்னுகிட்டு இருக்காங்க//

இது ஒரு பெரிய கொடுமைங்க....

Radha Sriram said...

//ம்ம்ம் எனக்கு ஏன் இந்த பெயர் வச்சிங்கனு எல்லாம் கேட்டது இல்ல. ஆனா நானும் இந்த புனைப்பெயர்ல கொஞ்சம் அதிகமா ஆர்வமா இருந்தேன் - பள்ளியில் படிக்கும் போது.
ஒரு மிக நீளமான பெயர் எனக்கு நானே வச்சுக்கிட்டேன் அப்ப, காலேஜ்ல புதுசா வரவங்க கிட்ட எல்லாம் அந்த பெயர தான் சொல்லுறது.

குழம்பி போய்டுவாங்க ;-) //

வாங்க சிவா!! நீங்களே பேர் வச்சுகிட்டீங்களா?? நல்லது போங்க....அப்ப உங்க பேரு சிவஷன்முகசுந்தரனாதன் தானே?? :)

இந்த பேர கொல்லரத ஒரு தனி பதிவாவே போடனுங்க, இல்ல??...!!

நாகை சிவா said...

//சிவஷன்முகசுந்தரனாதன் தானே?? :)
//

இது என்ன புதுசா இருக்கு.

நான் வச்சுக்கிட்டது Steve Austin Russel Umar Sivaram. :-)

பெயருக்கு தனி பதிவு தான் போடனும். :-)

பாலராஜன்கீதா said...

பல மாதங்களுக்குமுன் இணையத்தில் உலா வந்த
கலைவாணி - பெரும் பெயர் பெற்ற பதிவு
புதியதாக வந்தவர்களுக்காக :-))
===================================
En per padum paadu!!!

My full name is Kalaivani, but I call myself Kalai. This is not for scene, …like how Madhavan does in Anbe Sivam (Anbarasu –> Ars).it has a looooong and pathetic history…

I started hearing different versions of my name after coming to this country, and the painful fact is all the possible permutations and combinations of vowels in my name give meaningful words in tamil!!!

When I first joined the university, my professor wrote to me..

Dear KALAvani (meaning: thief; context: kalavani paya..)

Sari adhuvachum typo nu free ya vittudalam..Then after a year, I joined a company for internship.those people called me before I joined, to inform me about some test which I had to take..

“Hello is this Ms. Kizhavaani?” (meaning: old; context : kizha bolt..etc.)

“No..this is KALAIvaani”

“Ohh..am sorry KALAvaani” (Marupadiyum…)

Then I decided.periya pera irukkinala thane ivlo confusion?!! So, I started calling myself ‘Kalai’… but the story continued..

I joined my full-time position in another company recently. On my first day, we had a meeting..

“Let’s all welcome our new associate.Ms. Kulai” (meaning: bunch; context: kulai kulaiyai vazhaipazham kaaithadhu)

CLAP! CLAP! CLAP! CLAP! Followed by smiles.

(Dei.ennangada… ellarum serndhu comedy panreengala???)

Anniku arambichadhu…

Once my boss and I were talking about a project… after finishing the meeting…

“Ok, Kali. Nice to have you here!” (meaning: last yuga; context: kali muthi pochu.)

“That’s KALAI” (Enakku idhu thevaya?!)

“Ohh kAALi?” (meaning: goddess; context: badrakaali..)

“Hee hee .very close” (Podaannnggg…!!)

So, I stopped correcting my name after that..!

One fine morning, I was working.

“Hey kiLai (meaning: branch; context: marakiLai) .howz it going?”

“Yea good” (Sollitu thirumbitten. Nammaluku edhuku indha per thiruthura business nu…)

“Is that how you say your name?”

(Aaahaa arambichutanya…!!!)

“Uhhh. It’s KALAI”

“Kolaai?” (meaning:pump; context: kozhai adi sandai.)

(Venaaammm…)

“Kolai?” (meaning: murder; context: kolai panniduven..)

(Venaam!)

“kaLai?” (meaning: weed; context: kaLai pudinguradhu.)

(Valikkudhu… azhudhuduven…)

“May be I’ll get your name with practice. Haha.”

(Idhellam remba over da dei… Tamil la paatha rende rendu ezhuthu thaan da!!!)

Ennada, Chandramukhi la thalaivar ‘durga’ perai nakkaladikkira maathiri… namma per ayiduche nu nenaikkum podhu… my friend came up with a brilliant idea!

Adhavadhu… to compare my name with a word.so I started using this word ‘kaleidoscope’; which has the same pronunciation as ‘kalai’!

So, I started telling everyone. ‘Kalai as in kaleidoscope’!. Ippo kooda romba ellam ozhunga solradhulla. They are saying ‘kalaai’ (kalaaikiradhu)..

“Hey Kalaai!!”

“Yea?”

“Just trying to say your name. Ha ha ha”

“Ohhh ..how sweet!” (thooo thEri..)

Yedho vaandhi edukkira effect la per irundhalum… my life was in peace… until few days back…

My net connection was down, so I called up the customer service (En kiragam. Madras call center ku pochu!)

Enakku andha vishayame theriyala. So I started in complete American accent…

“Your name ma’am?”

“Kalaai”

“What? Can you repeat ma’am?”

” Kalaai as in kaleidoscope”

“I didn’t get that ma’am. Can I have your number? I can check the records”

(Sigh!… and gave the number)

“Ohh, Kalaivani, right?” (in a sarcastic tone.)

(Ada paavi makka… nee nammooora??!!! All American accents stopped. Back to Indian accent.)

I could clearly see what he was thinking… per paatha ‘urs pammingly’ nu podra category maathiri irukku… scene podradhu mattum princess Diana range kaa…

“Anna… naan sathyama andha maathiri illeeenganna!!! “
===================================

Radha Sriram said...

பாலராஜன்கீதா, வாங்க

சூப்பரா இருக்குங்க "கலைவாணி" கதை.
அவங்க ரொம்ப பாவம்தான், ஹி ஹி ஹி!!!