நம்ம "ஏதோ சொல்கிறேன்" சிவா என்ன வருந்தி கூப்பிட்டு கொஞ்சம் உங்களுக்குளே இருக்கற விசித்ர வியாதி பத்தி சொல்லுங்க அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு. விசித்ரம்கறது என்ன? மத்த எல்லாரும் செய்யரத நாம வேர விதமா செய்யரதுதானே? இல்லனா அத செய்யாம இருக்கரது, அதுக்கும் மேல "இப்படி எப்படி"ன்னு மத்தவங்கள ஆச்சர்யப்படர மாதிரி,அருவருக்கர மாதிரி செய்யரது. அப்ப உட்கார்ந்து யோசிச்சு பார்தேன். ஒண்ணுமே தோணலை. இருக்கணுமே, ஏதாவது வித்யாசமா நம்ம கிட்ட இருக்கணுமே அப்படின்னு ரொம்பவே தீவிரமா யோசிச்சா, ஒரு பெரிய லிஸ்டே வந்திருச்சு.
பொதுவா பொண்ணுன்னா சமையல்ல ஒரளவாவது ஆர்வம் இருக்கும் இல்லையா. இங்கதாங்க நான் weird. எனக்கு அப்படில்லாம் சொல்லிக்கர மாதிரி ஆர்வம் கிடையாது.
கல்யாணம் ஆன புதுசுல வீட்ல ரொம்பவே கஷ்டப்படுதியிருக்கேன். மீனாக்ஷி அம்மாள் சமைத்து பார் புஸ்தகத்த வச்சுகிட்டு நான் பண்ணின அட்டகாசம் கொஞ்ச நஞ்சம் இல்ல. அதுக்காக சமைக்கவே மாட்டேன்லாம் இல்ல ஒரு பெரிய ஆர்வம் வரல. இப்பவும் simple and healthy சமையல்லதான் விருப்பம் எனக்கு. இப்பல்லாம் எல்லாருமே வீட்டிலேயே வித விதமான cuisine ல்லாம் ட்ரை செய்யரத பாக்கும் போது என்னுடைய poor culinary skills என் முன்னாடி வந்து பயமுருத்தும்.
அப்பரம் முகங்கள், மறக்கவே மறக்காது. ஏதாவது கோவில்லையோ,கல்யாணதிலயோ இல்ல பார்டிலயோ யாரவது எனக்கு ஒருத்தர அறிமுக படுத்திட்டாங்கன்னா அப்படியே அவங்க முகம் imprint ஆகிவிடும். எங்க போனாலும் மறக்க மாட்டேன். அவங்கள மறுபடியும் எங்கயாவது பாத்தேன்னா வெக்கபடாம போயி பேசுவேன். பல பேர தர்மசங்கடத்துலயும் ஆழ்த்தியிருக்கேன். அவங்களுக்கு நம்மள நியாபகம் இருக்குமான்லாம் யோசிக்கரதுக்கு முன்னாடி, நல்லா இருக்கீங்களா அங்க பாத்தோமே அப்படின்னு சொல்லி பேச ஆரம்பிச்சிடுவேன். I have never been able to stop myself !
இது ரொம்பவே weirdங்க !! செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்!!! அய்யயோ சிரிக்காதீங்க ப்லீஸ். செடிலேந்து பூ பறிக்கும் போது ஒரு thanks சொல்லுவேன். தண்ணிவிட மறந்திருந்தேன்னா sorry சொல்லுவேன். இது எப்ப ஆரம்பிச்சுதுன்னு தெரியல ஆனா தொடர்ந்துகிட்டு இருக்கு.
இன்னொரு விசித்ரம் என்னன்னா replay button. யாரோடையாவது பேசி முடிச்சிட்டு வந்தேன்னு வச்சுக்கோங்க. இல்ல தொலை பேசில பேசி இருக்கேன்னு வச்சுக்கோங்க. வீட்டுக்கு வந்தொடனே replay தான். நாம என்ன சொன்னோம் அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க? சரியா பேசினோமா? நம்ம இப்படி சொல்லிட்டோமே.....அவங்கள hurt பண்ணிட்டோமோ?? ரொம்ப aloofஅ இருந்துட்டோமோ? இன்னும் கொஞ்சம் கனிவா பேசியிருக்கலாம்.....இப்படி நான் பேசின எல்லாத்தயும் யோஒசிச்சிட்டு...நான் அப்படி உங்ககிட்ட சொல்லி இருக்க கூடாது sorry இல்லாட்டி நீங்க ஒண்ணும் தப்ப நினைக்கலயே? அப்ப்டீன்னு ஒரு phone பண்ணி சொல்லிடுவேன். பாதி நேரம் அவங்க சுத்தமா அத பத்தி மறந்திருப்பாங்க. But still i have to get it out of my system.....இல்லாட்டி மண்டை பிச்சுக்கும்.
இன்னும் கொசுரு கொசுரா நிரைய இருக்குங்க. தினம் பால் பொங்க விடுவேன்,அப்படியே வெட்ட வெளியா முரைச்சு பாகரது(staring into open space!), ரொம்ப fantastic dreams வரும் (நடராஜர் வந்து நடனமாடரது மாதிரி!!), திரைபடங்கள் பாக்கும் போது ரொம்ப ஒன்றி போயி அழுவது, கணவரோடு வாக்குவாதம் செய்யும் போது மட்டும் தங்கு தடயின்றி ஆங்கிலத்தில் பேசுவது, எது சாப்பிட்டாலும் கடைசியில் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிடுவது, வெளிநாட்டில் இருந்தாலும் எப்போதும் தென் நாட்டு சாப்பாட்டையே விரும்பி சாப்பிடுவது.....இந்த மாதிரி நிரைய்ய இப்போதைக்கு இது போதும்.
தங்களுடைய weirdness அ பத்தி சொல்ல நான் அழைக்கும் நண்பர்கள்
அல்வா சிடி விஜய் http://halwacity.blogspot.com/
மழை ஷ்ரேயா http://mazhai.blogspot.com/
சின்னகுட்டி http://sinnakuddy1.blogspot.com/
கால்காரி சிவா http://sivacalgary.blogspot.com/
வெளிகண்டநாதர் http://www.ukumar.blogspot.com/
அவந்திகா http://crickchat.blogspot.com/
ரவிஷங்கர் http://thamizhthendral.blogspot.com/
Thursday, March 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
பொதுவா பொண்ணுன்னா சமையல்ல ஒரளவாவது ஆர்வம் இருக்கும் இல்லையா//
சே, சே, இது ஆண்கள் கட்டிவிட்ட கட்டுக்கதை :-)
நல்ல வடிகட்டின வியர்டூதான் நீங்க.
போன் பேசிட்டு ரிப்ளே செய்தவங்க பத்திக் கேள்வீப் பட்டதே இல்லை.
ஜாயின் த க்ளப்.
//இது ரொம்பவே weirdங்க !! செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்!!! அய்யயோ சிரிக்காதீங்க ப்லீஸ். செடிலேந்து பூ பறிக்கும் போது ஒரு thanks சொல்லுவேன். தண்ணிவிட மறந்திருந்தேன்னா sorry சொல்லுவேன். இது எப்ப ஆரம்பிச்சுதுன்னு தெரியல ஆனா தொடர்ந்துகிட்டு இருக்கு.//
செடியோடு பேசுவது நீங்கள் மட்டுமல்ல.... அதோடு பேசுவது கலை என்று விஞ்ஞானரீதியாக பலர் சொல்லீட்டு இருக்காங்க
மூணாவதுலே நானும் இருக்கேன்.
ஒரு செடிக்குத் தண்ணி ஊத்தும்போது, பக்கத்துச்செடிக்கு ஊத்தலேன்னு வச்சுக்குங்க,
அந்தச் செடி 'அடிப்பாவி என்னை மறந்துட்டயா'ன்னு என்னைத் திட்டுமோன்னு
நினைச்சுக்குவேன். பசியோடு இருக்கும்போது பக்கத்துலே நல்லா மொக்குமொக்குன்னு
முழுங்குறவங்களை பார்த்தா எப்படி இருக்கும்?
செடிகொடி மட்டுமில்லை, எல்லாத்துக்கிட்டேயும் பேசுவேன். கோயில்லேயும் சாமிகிட்டே
பேச்சோ பேச்சுதான். எங்க இவர் சொல்வார்," கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு சாமி கும்புடேன்'ன்னு.
அதுக்கென்னா? மனசுக்குள்ளேயே பேசுனா ஆச்சு. இல்லீங்களா? :-))))
சமயல்://கல்யாணம் ஆன புதுசுல//
//முகங்கள், மறக்கவே மறக்காது//
//மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்//
மண்ணிப்பு://நான் அப்படி உங்ககிட்ட சொல்லி இருக்க கூடாது//
இதெல்லாம் வியர்டா?இதில் சில உங்கள் நல்ல குனங்கள் என்று நினைக்கிரேன்.correta?
நல்லாயிருக்கு...
செடி கொடிகளிடம் பேசிப்பழகு என்று ஓஷோ அடிக்கடி கூறுவார்..
வாழ்த்துக்கள்
சூர்யா
துபாய்.
butterflysurya@gmail.com
//சே, சே, இது ஆண்கள் கட்டிவிட்ட கட்டுக்கதை :-) //
உஷா திருப்பி உங்களுக்கு ஒரு :):):)
// நல்ல வடிகட்டின வியர்டூதான் நீங்க.
போன் பேசிட்டு ரிப்ளே செய்தவங்க பத்திக் கேள்வீப் பட்டதே இல்லை.
ஜாயின் த க்ளப்.//
வல்லி தப்ப புரிஞ்சுகிட்டீங்கன்னு நினக்கரேன்!! போன்ல இல்ல, என் தலைல இருக்கர ரீப்ளே பட்டன்.
//நல்ல வடிகட்டின வியர்டூதான் //
இது சரிதான் !! :):)
சின்னகுட்டி,
//செடியோடு பேசுவது நீங்கள் மட்டுமல்ல.... அதோடு பேசுவது கலை என்று விஞ்ஞானரீதியாக பலர் சொல்லீட்டு இருக்காங்க//
செடி கொடியோடு பேசுவது, அதுங்கள நல்லா வளர வைக்குதுன்னு கேள்விபட்டு இருக்கேன், ஆனா அது கலைன்னு இப்பதான் தெரியும்!! நன்றி
எப்ப உங்க பதிவு??
துளசி,
நீங்களும் என்ன மாதிரியா? நல்லது!!
உங்க வீட்டு செடி கொடியெல்லாத்தையும் கேட்டதா சொல்லுங்க!!!
சாமிகிட்ட அளவளாவற அளவு இன்னும் முன்னேறல...ஆனா சில சமயம் கோவில் போயிட்டு சாமி முன்னாடி சும்மாவே நின்னுட்டு வந்திருவேன்..!!ஒண்ணுமே தோணாது!(இது கூட வியர்டுல சேத்திருக்கலாமோ?) :):):)
////சமயல்://கல்யாணம் ஆன புதுசுல//
//முகங்கள், மறக்கவே மறக்காது//
//மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்//
மண்ணிப்பு://நான் அப்படி உங்ககிட்ட சொல்லி இருக்க கூடாது//
இதெல்லாம் வியர்டா?இதில் சில உங்கள் நல்ல குனங்கள் என்று நினைக்கிரேன்.correta///
வாங்க ஷக்தி! இதெல்ல பின்ன வியர்டோட சேத்தி இல்ல அப்படீன்கரீங்க!!
சரி உங்களுக்காக இன்னொண்ணு
ஒரு இடத்துக்கு டிரெக்ஷன்ஸ் எடுதுக்கிட்டு போனாக்க, திரும்பி வரவும் டிரெக்ஷன்ஸ் வேணூம்.இல்லாட்டி என்கேயாவது போயிருவேன்.....போன படியே திரும்பி வர தெரியாது. iam totally pathetic in directions!!!
//நல்லாயிருக்கு...
செடி கொடிகளிடம் பேசிப்பழகு என்று ஓஷோ அடிக்கடி கூறுவார்..
வாழ்த்துக்கள்//
நன்றி சூர்யா !! ஓஷோ அப்படி சொல்லியிருக்காரா? நல்லதுங்க, அவர பத்தி நிரைய கேள்வி பட்டு இருக்கேன்,
ஆனா இன்னும் படிச்சது இல்ல.
உங்க வாழ்துக்களுக்கு மறுபடியு நன்றி!!
தினமும் பால் பொங்க விடறது.
சாமிகிட்ட வேண்டிக்காமயே திருப்பி வரது ...மீ..டூ...
சிலசமயம் அப்படியே நின்னுட்டு
கிளம்பும் போது ...ஆங் உனக்கு தெரியாதா எனக்கு என்ன செய்யணும்ன்னு அதல்லாம் பாத்து
நீயே செய்வ ..நான் சும்மா உன்ன பார்த்து ஒரு ஹாய் சொல்லவந்தேன்.
இன்னைக்கு அலங்காரம் ம்...நல்லாருக்கு..பை ன்னுட்டு வருவேன்.
இல்லன்னா எல்லாரையும் நல்லாவைன்னு... அரைமணி நேரம் சன்னதியில் இருந்தாலும் அந்த ஒரு வரி தான் மனசுல தோணி இருக்கும்.
//சிலசமயம் அப்படியே நின்னுட்டு
கிளம்பும் போது ...ஆங் உனக்கு தெரியாதா எனக்கு என்ன செய்யணும்ன்னு அதல்லாம் பாத்து
நீயே செய்வ ..நான் சும்மா உன்ன பார்த்து ஒரு ஹாய் சொல்லவந்தேன்.
இன்னைக்கு அலங்காரம் ம்...நல்லாருக்கு..பை ன்னுட்டு வருவேன்.
இல்லன்னா எல்லாரையும் நல்லாவைன்னு... அரைமணி நேரம் சன்னதியில் இருந்தாலும் அந்த ஒரு வரி தான் மனசுல தோணி இருக்கும்//
ரொம்ப சரிங்க முத்துலக்ஷ்மி.நானும் அதே !! ஒரு தடவை சுகி சிவம் எழுதியிருந்தார்,நீங்க சாமிகிட்ட போயி கேட்டிங்கன்னா உங்களோட லெவெல்ல தான் கேபீங்க ஆனா சாமி உங்களுக்கு என்ன குடுக்கணும்னு அவரோட லெவெல்ல யோசிச்சு வச்சிருப்பார்,ஆனா நீங்க மனம் உருகி ப்ரார்தனை பண்ணி கேட்டிங்கன்ன நீங்க கேட்டதையே குடுத்திருவார்ன்னு.....அதில்லெந்து சாமிகிட்ட நீ என்ன குடுக்கணும்னு நினைச்சிருகியோ அதையே குடுப்பான்னு சொல்லிடரது...!!! இதெப்படி இருக்கு??:):):)
//இது ரொம்பவே weirdங்க !! செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்!!! அய்யயோ சிரிக்காதீங்க ப்லீஸ்//
சிரிக்கலைங்க :) :) :) :) :) :)
ரொம்பவே வியர்டு தான்:))))
படித்து விட்டேன் என்பதற்காக இந்த பின்னூட்டம்
கருத்து சொல்ல அப்பால வரேன்
Post a Comment