Wednesday, April 23, 2008

இரட்டை பதிவர்கள் இம்சை...

இரண்டு வாரம் முன்னாடி நான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு ஓண்ணரை மணி நேரத்தில போயிடகூடிய மாலிபுல இருக்கர கோவிலுக்கு போயிருந்தேன். நல்ல அழகான கோவில்.அமெரிக்காவில கட்டப்பட்டிருக்கர நிறைய கோவில் போல இங்கேயும் பெருமாளும் சிவனும் இருக்காங்க.நம்மூர் போல கோபுரத்தோட உள்ள கோவில்.சரி போயி பெருமாள தரிசனம் பண்ணலாம்னு உள்ள போனா சனி கிழமைனால ஒரே கூட்டம்.பெருமாள் சர்வாலங்காரத்தோட நின்னுகிட்டு இருக்காரு..அவ்ளோ அழகு.கிட்ட போக முடியாது.சரி இருக்கட்டும் எட்டி பாத்து கன்னத்துல போட்டுகிட்டே கண்ண மூடினேன் பாருங்க......அப்படியே மனக் கண் முன்னால நம்ம KRS ரவியும், திருவரங்கப் ப்ரியாவும்(ஷைலஜா.!!) வராங்க.அடாடா இந்த பெருமாள பார்த்தா அவங்க எவ்ளோ ரசிச்சுருப்பாங்க அப்படீன்னு நினைச்சுகிட்டேன்.கொஞ்ச நேரம் நின்னு பாத்தேன் தீர்த்தம் வாங்கிக்கலாமேன்னு ஆனா நேரம் ஆகும் போல இருந்ததனால கீழ இறங்கி சிவன் சன்னிதிக்கு போயிட்டேன்.பிள்ளையார் சிவன தரிசனம் பண்ணிட்டு முருகன் சன்னிதிக்கு வந்து கண்ண மூடி நின்னு அஹா முருகனுக்கு என்ன ஸ்லோகம்னு யோசிக்கரதுக்குள்ள கண் முன்னாடி வந்து நிக்கராங்க குமரனும் ஜீராவும். இதென்னாடாது...சரியா சாமி கும்பிடகூட முடியாம இப்படி இம்சை பண்ராங்களேன்னு நினைச்சுகிட்டு ஒரு பெரிய நமஸ்காரமா பண்ணிட்டு வந்துட்டேன்.


கோவிலுகு போன கதைதான் இப்படின்னா..போன வாரம் கச்சேரிக்கு போயிருந்தேன்.தேன்னா தேனே வந்து பாய்ஞ்சுது காதுல.அப்படி ஒரு அம்சமான கச்சேரி.அங்க போயி உக்காந்து மெய்மறந்து இருக்கரச்சே திடுதிப்புன்னு வந்து நிக்கராங்க துளசி.இந்த இடத்துல துளசி இருந்திருந்தா கச்சேரிய படம் புடிச்சு ஒரு பதிவா போட்ருப்பாங்கன்னு நினைச்சுகிட்டேன்.பக்கத்துல சிமுலேஷன் இருந்திருந்தா இன்னும் கன ஜோரா ரசிச்சு ராகங்கள பத்தி பேசியிருக்கலாம்னு தோணுச்சு.அவரும் அத பத்தி விலாவாரியா ஒரு பதிவ போட்டு ஜமாய்ச்சிருப்பார்ன்னு நினைச்சுகிட்டேன்.இவங்கள பத்தின யோஜனைல RTP ல இரண்டு ராகத்தை மிஸ் பண்ணிட்டேன்.

சரி அது போகட்டும்னு வீட்டுக்கு வந்து you tube ல ஏதோ தேடரச்சே...MADLIB வீடியோ பாக்க கிடைச்சது.இது ஒரு விளையாட்டு.ஆங்கிலத்துல எழுதப்பட்ட ஒரு பத்திய எடுத்து அதுல இருக்கர noun,pronoun,verb,adverb,adjective எல்லாத்தையும் எடுத்துட்டு நமக்கு இஷ்டமானத போட்டு படிக்கரது. அப்ப ரொம்ப வேடிக்கையா அர்த்தம் வேறுபட்டு சம்பதமில்லாமல் அந்த பத்தியே திரிஞ்சு போயிடும்.ஒவ்வொருத்தரும் அவங்க கற்பனைய இதுல காட்டலாம்.இதன் மூலம் ஆங்கில இலக்கணத்தையும்,பல வார்த்தைகள உபயோகபடுதுவதையும் ஒரு விளையாட்டு முறையில் சொல்லித்தரலாம்..Genetic Blend ன்னு ஒருத்தர் மத்த you tube உபயோகப்படுத்தரவங்க கிட்ட இந்த மாறி நிறைய வார்த்தைகள வீடியோ ரெஸ்பான்ஸ் பண்ண சொல்லியிருந்திருக்கிரார்.அவங்கெல்லாம் குடுத்த வார்த்தைகள வச்சு அவர் ஒரு சூப்பெர் வீடியோ தயாரிச்சிருக்கிரார். கிட்டதட்ட 130 பேர் பங்கு பெற்றிருக்காங்க.வீடியோ லிங்க் கீழே

http://www.youtube.com/watch?v=rajiaHpIoKM

இத பாத்தொடனே எனக்கு என்ன தோணுச்சு அடாடா நம்ம பெனாத்தலார் கிட்டயோ கொத்ஸுகிட்டயோ இத சொல்லி தமிழ்ல இந்த மாதிரி ஏதாவது பண்ண சொல்லனும்னு.:)


அதனால நான் இங்க என்ன சொல்ரேன்னா இந்த மாதிரி எங்க போனாலும் எதை பண்ணினாலும் இரண்டு இரண்டு பதிவர்களா வந்து இம்சை பண்ராங்க......இதுக்கும் நான் வெறும் தமிழ்மணம் தேன்கூடுன்னு இரண்டே இரண்டு திரட்டிதான் படிக்கரேன்..

வ.வா சங்கப்போட்டிக்கு...

Monday, April 14, 2008

அகேலி ஹூங் தோ க்யா கம் ஹே-தனிமை
இது லாஸ் ஏஞ்செலெசிலிருந்து சான் டியாகோ போகும் வழியில் உள்ள என்சினிடாஸ் என்ற ஊரில் உள்ள பரமஹம்சர் யோகானந்தா ஆஸ்ரமத்தில் எடுத்தது(அம்மா!!). இங்கு ப்ரத்யேகமாக த்யானத்திற்காகவே பசிபிக்ஃ கடலை நோக்கி அழகான ஒரு தோட்டம் அமைத்திருக்கிரார்கள்.(த்யான தோட்டம்- Meditation Gardens) உட்காருவதற்கு வசதியாக அங்கங்கே பெஞ்சுக்கள்,வகையான வகையான மரங்கள்,செடிகள், பூக்கள் ........மற்றும் அமைதி அமைதி அமைதி.கடலின் சத்ததை தவிற ஒன்றும் இல்லை. நாள் முழுதும் கடலை பார்த்துக்கொண்டு அமர்ந்து விடலாம்...!பரமஹம்சர் இங்கு தங்கியிருந்த பொழுதுதான் ,"An Autobigraphy Of a Yogi" எழுதியிருக்கிரார். யேசு க்றிஸ்து இவருக்கு காட்சியளித்ததும் இங்குதான்!! அம்மா போட்டோ போட்டிக்கு !!

http://www.yogananda-srf.org/temples/encinitas/encinitas.html