Sunday, November 16, 2008

வெந்து தணிந்தது காடு + Twilight series!

ஆமாங்க நேற்று முன் தினம் ஆரம்பித்த இந்த காட்டு தீ தென் கலிஃபோர்னியா மாநிலத்தில பல ஆயிரம் ஏக்கர்களை கண்டபடி கபளீகரம் செய்துகொண்டு இருக்கிறது. தென் கலிஃபோர்னிய மாநிலத்தில் இந்த காட்டுத் தீ அபாயம் உண்டு ஆனால் அதை இவ்வளவு சமீபத்துல பார்த்தது இந்த முறைதான்.

நேற்று காலை டிவி யை ஆன் செய்துவிட்டு வெளியில் செய்தி தாள் எடுக்க போன போதே காற்றில் ஒருவித வாசனை கொஞ்சம் தூரத்தில் புகை மூட்டம் தெரிந்தது. உடனே உள்ளே வந்து டிவியில் செய்தி பார்க்க உட்கார்ந்தேன்.லாஸ் ஏஞ்சலிஸ் கவுண்டியிலும் ஆரஞ்சு கவுண்டியிலும் காட்டு தீ பரவி வருவதை காட்டி கொண்டிருந்தார்கள்.சிறிது நேரத்திற்குள் நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து பதினைந்து மயில் தூரத்தில் கட்டுக்கங்காத தீ பரவி வருவது புரிந்தது. அதை கட்டுப்படுத்த தீ அணைப்பு படை படாத பாடு பட்டு கொண்டிருந்தார்கள்.தீ சிறு சிறு குன்றுகள் மேல் இருக்கும் மில்லியன் டாலர் வீடுகளை பதம் பார்க்க பார்க்க இங்கு எங்களுக்கு ஒரே பதட்டம். வெளியில் சென்று ஏதாவது சேதி கிடைக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தோம். காற்று வேறு விர் விரென்று அடித்துக் கொண்டு இருந்தது. இதற்கு ஸாண்டா ஆனா விண்ட்ஸ் என்று பெயர்.இது மேலும் தீயை வேகமாக பரவ வைத்துக் கொண்டிருந்தது. அதற்குள் பக்கத்து வீடுகளில் இருக்கும் அத்தனை மக்களும் கூட்டம் கூட்டமாக சேர. எல்லோரும் வெளியில் நின்று கொண்டு ஒருத்தரை ஒருத்தர் சமாதானம் படுத்திக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று பேச ஆரம்பித்த வேளையில், எங்கள் கம்யூனிடி வாலண்டரி இவாகுவேஷன்(voluntary evacuation) ஏரியவிற்குள் வந்துவிட்டதாக ட்ரக்கை ஒட்டிவந்த பெண்மணி அறிவித்து போனாள். உங்களுக்கு வேண்டிய இன்றியமையாத சாமான்களை பெட்டிகளுக்குள் போட்டு ரெடியாக இருக்குமாறு சொல்லிவிட்டு இஷ்டப்பட்டவர்கள் இப்பவே கிளம்பி பக்கத்தில் இருக்கும் இவாகுவேஷன் ஷெல்டெருக்கு போகுமாறு சொல்லிவிட்டு போனாள். உடனே நாங்கள் திபு திபுவென்று உள்ளே ஓடி சென்று தோணியவற்றை எல்லாம் எடுத்து பெட்டுக்குள் அடைக்க தொடங்கினோம்.இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தமான மஹா பெரிய பெட்டிகளை எடுத்து முக்கியமான சாமன்களை போட்டு கராஜில் கொண்டு வைத்துவிட்டோம்.ஆனால் ஆசை ஆசையாக வாங்கின வீட்டை விட்டு செல்ல மனம் வருமா? என்ன செய்வது என்று புரியாமல் திரும்பவும் வாசலுக்கு உள்ளுக்குமாய் நடை பழகினோம். அதற்குள் நாங்கள் இருக்கும் ஊரில் எரிந்து கொண்டிருந்த தீயும் அடுத்து உள்ள ஊரின் தீயும் ஒன்றாக சேர்ந்து இன்னும் கொழுந்துவிட்டு எரிவதை டிவியில் பார்த்து திகில் அடைந்து பெட்டிகள் எல்லாவற்றையும் காரில் ஏற்றிவிட்டு மாண்டடரி இவாகுவேஷன் (Mandatory evacuation)சொன்னால் மட்டுமே கிளம்புவது என்று அக்கம் பக்கத்தில இருக்கற எல்லொரும் சேர்ந்து முடிவெடுத்தோம்.ஆனால் எல்லோரும் அவர் அவர் பொருள்களோடு ரெடியாக இருந்தோம். புகை மண்டலமா கிளம்பி மேலே எழும்புவதும், தீ அணைப்பு மற்றும் காவல் துறையின் சைரன் போட்ட வண்டிகளும் போவதும் வருவதும் ஒன்றுமே புரியவில்லை. அதற்குள் இரண்டு வீடு தள்ளி ஒருவர் கூரை மீது ஏரி தண்ணீர் பீய்ச்சி அடிக்க ஆரம்பிக்கவும் நாங்கள் போய் அனாவசியமாக தண்ணீர் செலவழிக்க வேண்டாம்....இம்மாதிரி செய்வதால் தீ அணைப்பு படைக்கு போதுமளவு தண்ணீர் அழுத்தம் கிடைக்காது என்று சொல்லி ஒரு மாதிரி சமாளித்து அவரை இறக்கினோம்.(இதை பற்றி டிவியில் அறிக்கை விட்டிருந்தார்கள்). நிறைய வீடுகளில் சாயந்திரத்தில் ஆட்டோமாடிக் ஸ்ப்ரிங்ளெர் தண்ணீர் பாய்ச்ச அதை ஓடி போய் சொல்லி அணைத்து எங்களால் ஆன உதவியை செய்தோம். புகையினால் சூரியனே சிகப்பாக மாறி இருந்தான்.வெப்பமோ 90 டிகிரிக்கு மேல் போய்விட்டது.காத்திருக்க தொடங்கினோம்.நடு நடுவே நண்பர்கள், உறவினர், இந்தியா ஃபோன்.எல்லோருக்கும் நிலைமையை சொல்லி கவலைபட வேண்டாமென்று சொல்லிகொண்டே கவலைபட்டுக்கொண்டிருந்தோம். இருட்ட ஆரம்பித்தவுடன் சரி ஓருத்தர் மாற்றி ஒருத்தர் சுழற்ச்சி முறையில் பார்த்துக்கொள்ளலாமென்று முடிவெடுத்து இரவு முழுக்க பார்த்துக்கொண்டோம்.தீ கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் ஊரை விட்டு தள்ளி போய்விட்டது......இன்னும் சில இடங்களில் முழு கட்டு பாடில் இல்லை. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பல நூறு வீடுகளையும் நிமிஷமாய் இந்த அக்னி விழுங்கியதை பார்த்தவுடன் இயற்கையின் சீற்றத்தை நன்கு உணர முடிந்தது. தன்னுயிரை துச்சமாக மதித்து தீயுடன் போராடிய தீ அணைப்பு படையினருக்கு ஒரு பெரிய சல்யூட்! 1961 ல் வந்த லாஸ் ஏஞ்சலிஸ் பெல்- ஏர் பகுதி தீ க்கு பின்னர் மிக்க சேதத்தை ஏற்படுத்தி உள்ளது இதுதானாம்.இன்னும் வெளியில் காற்று புகையோடுதான் உள்ளது. வீட்டு கூரை வெளியே எல்லாம் ஒரே சாம்பல். வீட்டை இழந்து பொருளை இழந்து நிற்பவர்களை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது...oh we were this close!

அடுத்தது காட்டு தீயை போல டீனேஜர்களின் மத்தியில் பரவி வருவது இந்த புத்தகம்தான்.இது ஹாரி பாட்டெரை போல ஒரு தொடர் நாவல் வகையை சார்ந்தது. இந்த தொடரின் முதல் புத்தகத்தை(Twilight by Stephanie Meyers) ஒட்டி எடுக்க பட்டுள்ள திரைபடம் நவெம்பெர் 21 ர்லீஸ்......இங்கு ஒரே அல்லோலகல்லோல படுகிறது. இந்த புத்தகத்தை பற்றி எனக்கு தோன்றியவற்றை பின்னர் எழுதுகிறேன்...இப்பொழுது தூக்கம்..:)

Thursday, October 16, 2008

சினிமா - கேள்வி பதில்

என்னை இந்த கேள்வி பதில் தொடருக்கு அழைத்த வல்லிசிம்ஹனுக்கு நன்றி.ஏதோ தெரிந்த அளவுக்கு பதில் சொல்லியிருக்கிறேன்.


1). எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

சினிமாவில் அதிக ஆர்வம் இல்லாத குடும்பம், பார்த்தால் படிப்பு கெட்டு போய்விடும் என்று சொல்லபட்டு வளர்ந்ததால், சின்ன வயதில் சினிமா ஒரு அதிசயமாகவே இருந்தது.ரொம்பவே யோசித்ததில் கலங்கலாக நியாபகம் வருவது ஸ்வாமி ஐயப்பன் என்கிற திரைபடம்.பாட்டியும் கூட வந்திருந்தார்கள்.அவர்களுக்காக இடைவேளையில் சாப்பிடுவதற்கு பக்ஷணங்களோடு போனதும், ஐயப்பன் புலி மேல் வருவதும் மஹிஷியோடு சண்டை போடுவதும் நியாபகம் உள்ளது. எதுவும் உணர்ந்ததாக நியாபகம் இல்லை.

2). கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா

தசாவதாரம். இந்த முறை இந்தியா சென்ற போது பார்த்தது. அக்காகளோடு உட்கார்ந்து பார்த்தது மறக்க முடியாது. ஃளெட்செர் கதாபத்திரம் வரும் போதெல்லாம் அடக்க முடியாமல் சிரித்தது பக்கத்தில் உட்கார்ந்த்ருந்தவரை எரிச்சல் மூட்டியது.

3). கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சமீபத்தில் வீட்டில் உட்கார்ந்து பார்த்த தமிழ் படம் கல்லூரி. ரொம்ப பிடித்திருந்தது. கயல்விழி, ரமேஷ் கதாபாத்திரங்கள் மிக யதார்தமாக இருந்தது. கை வளைகளை தோழிகள் மாற்றிக்கொள்வது, சண்டைபோது திருப்பி கொடுப்பது போன்ற இடங்கள் டைரெக்டெர் நன்றாக யோசித்து இருக்கிறார் என்றூ தோன்றியது.என்ன உணர்ந்தேன் என்று தெரியவில்லை.கல்லூரி, பள்ளி தோழமை பல பேர்களுக்கு ரொம்ப நேர்மையானதாகவும் இனிமையானதாகவும் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.இதை எழுதுவதற்கு முன்னாடி கீழே இருந்த பத்தியை எழுதிவிட்டேன்.எழுதியதை எதற்கு அழிக்க வேண்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

மிக சமீபத்தில் பார்த்தது "My fair Lady", TCM ல் வந்தது.வீட்டில் பார்த்தேன். ரொம்ப ரசித்து பார்த்தேன். ப்ரொஃபெசெர் ஹிக்கின்ஸை பார்த்து கோபமும் கடைசியில் பரிதாபமுமாக உணர்ந்தேன். ஆட்ரி ஹெப்பேர்னின் அழகும்,நடிப்பும் நடிகர்கள் இரண்டு பேரும் மொழியை கையாண்ட விதமும் அருமை.


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

சின்ன வயதில் பார்த்த எல்லா சினிமாக்களுமே ஏதோ வகையில் என்னை தாக்கியது என்று சொல்லலாம். கப்பலோட்டிய தமிழன்,வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற தேச பக்தி சினிமாக்களை குறிப்பிட்டு சொல்லலாம்.(இந்த படங்களெல்லாம் பள்ளியிலேயே காமித்து விடுவார்கள்!)

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

அப்படி ஒன்றுமில்லை.

ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

எப்போதுமே இரட்டை வேடங்கள் ஒரே சீனில் வருவதை பார்த்து வியப்பு உண்டு.....இது சரியான பதிலா??:)

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

தேடி தேடி வாசிப்பது இல்லை. கண்ணில் பட்டால் வாசித்து விடுவேன்.

7.தமிழ்ச்சினிமா இசை?

இந்தியாவில் இருந்த வரைக்கும் எல்லா இடங்களிலும் ஒலிக்கும் சினிமா பாட்டுக்களை கேட்டு பரிச்சயமாகிவிடும். இங்கு அந்த வாய்ப்பு இல்லாததினால் கேட்பது குறைந்து போய்விட்டது. பிடிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

கண்டிப்பாக.இந்திய மொழிகளில் தமிழ் தவிர மலையாளம், ஹிந்தி பார்ப்பதுண்டு. சமீபத்துல் பார்த்த வாட்டெர் என்னை மிகவும் பாதித்தது.ஷ்வாஸ் என்கிற மராத்தி படமும் நெகிழ வைத்தது. உலக மொழியென்றால் ஆங்கிலம் மட்டுமே ப்ரதானமாக பார்த்து வருகிரேன்.இண்டெர்னாஷனல் சானெலில் வரும் ஃப்ரென்ச் மொழி படங்களை அதிசயமாக பார்ப்பதுண்டு. பதிவுகளில் படித்துவிட்டு ஒரு முறை ஸ்பானிஷ் மொழி திரைபடம்(பேர் மறந்துவிட்டது!)பார்க்க ஆரம்பித்தேன் அதீத பாலுணர்வு காட்சிகள் இருந்ததினால் கால் வாசியோடு நின்றது.மஜிட் மஜிடியின் படங்களுக்கும் நான் விசிறி.ஆங்கிலத்தில் நிறைய படங்கள் மனதை பாதித்து இருக்கிறது.மிக நீள பட்டியல்.சாம்பிலுக்கு......Mr. Holland's OPus, Goodbye Mr Chips, Amadeus...etc.


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?


இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதை பற்றி எழுதுவதற்கு எனக்கு ஒன்றுமில்லை.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


தமிழர்கள் கொஞ்சம் பேஸ்து அடித்து போய் விடுவார்கள்.:) தமிழ் சினிமா இல்லையேன்றால் மற்ற மொழிக்கு தாவிவிடுவேன்.தமிழர்களும் அதையே செய்வார்கள். மற்ற பொழுதுபோக்கு சமாசாரங்களீல் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.


நான் அழைக்கும் ஐந்து பேர்.


தேன் சிரில் http://cyrilalex.com/

பதிவுகள் சத்யா http://sathyapriyan.blogspot.com/

கெக்கெபிக்குணி http://kekkepikkuni.blogspot.com/

சர்வேசன் http://surveysan.blogspot.com/

குறைகுடம் ப்ரசன்னா http://kuraikudam.blogspot.com/

Tuesday, June 17, 2008

சில விஷயங்கள்.........

மெட்ராஸ்ஸ சுத்திப் பாக்க போரேன்: யெஸ் யெஸ் யெஸ்.......மூணு வருஷம் கழிச்சு இந்தியா போரேன் அதுவும் மெட்ராஸ்ல இறங்கப் போரேன்.ரொம்ப குஷியா இருக்கு. மெட்ராஸ் பழக்கமில்லாத ஊர். அப்பப்ப கல்யாணம் கார்த்திகைக்கு மட்டுமே போயிருக்கேன்.இந்த தடவை கொஞ்சம் நல்லா சுத்தி பாக்கலாம்னு ப்ளான். வெய்யிலுக்கு பயப்படற ஆளு நான் இல்ல......நல்லா மஜா பண்ணலாம்னு இருக்கேன். மெரீனா பீச் போகணும்,தசாவதாரம் பாக்கணும்,கிரி ட்ரேடர்ஸ்ல வாங்கணும்.


ஃப்ரென்ச் ஓபென் : இப்படி ஒரு எர்ரர் ஃப்ரீ டென்னிஸ் பாத்து பல காலம் ஆச்சுது. நடால் மடால் மடால்.....! என்ன ஆங்கிள் ஷாட்ஸ். கண் கொள்ளா காட்சி. ராஜர் மூணாவது செட்டு முட்டைல போனது மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் நடாலோட ஆட்டம் அப்படி இருந்தது. இரண்டு பேரும் ஹம்பிள் சாம்பியன்ஸ்.மேலும் காமெண்ட்டரி பாக்ஸுல அரான்xஆ ஸான்செஸையும் vip பாக்ஸ்ஸுல போர்க்கையும் ரொம்ப நாள் கழிச்சு பாத்தது நல்லா இருந்தது.


NBA Finals 5th கேம்: நேத்து உசுர கையிலதான் எல்லாரும் புடிச்சிருந்தோம். லேக்கர்ஸ் ஒரு வழியா ஜெயிச்சாங்க.போன கேம் ஹோம் கோர்ட்ல தோத்தது படு அசிங்கம். அதுவும் முதல் க்வார்ட்டர்ல 24 பாயிண்ட் லீட் இருந்துடுட்டு.


அம்பிக்கு வாழ்த்துக்கள் & ஒரு கேள்வி : எப்பலேந்து சோப்பு வியாபாரம் ஆரம்பிச்சீங்க?? இண்டெர்னாஷனல் லெவெல்ல வந்து கூட யார் கிட்டையும் ஏன் சொல்லல??





இனிமே ஊர்லேந்து வந்துதான் பதிவு.!! இந்த பதிவுக்கும் பதில் சொல்ல முடியுமா தெரியல. முயற்சி செய்யரேன்.

Saturday, May 10, 2008

ஜனக் ஜனக் பாயல்-அனார்கலி- அம்மாக்காக!




ஜனக் ஜனக் பாயல் பாஜே..இந்த திரைபடம் 1955 வருடம் வி. ஷாந்தாராம் இயக்கத்தில் சந்தியா மற்றும் கோபிக்ருஷ்னா என்ற ப்ரபல கதக் கலைஞர் நடித்து வெளிவந்தது.இதில் உள்ள அத்தனை பாட்டுக்களும் மிக ப்ரபலம். சாஸ்த்ரிய நடனத்தை சுற்றி அமைக்கப்பட்ட கதை, அதனால் பாட்டுக்களும் அருமையாக இருக்கும். நம்ம ஊர் சலங்கை ஒலி மாறி.வசந்த் தேசாய் இசை.மொத்தம் ஒன்பது பாட்டுக்கள்.மன்னா டே மற்றும் அந்த கால லதா மங்கேஷ்கர் ஜோடி.(இப்ப இவங்க குரல கேக்க முடியல.வெரி சாரி லதாஜி).இந்த ஒன்பது பாட்டுக்களில் ஒன்றே ஒன்று லதாஜியும் ஹேமந்த்குமாரும் பாடியது.



அம்மாவும் அப்பாவும் கல்யாணம் ஆன புதிதில் பார்த்த திரைபடம் இது.அப்போது அப்பாக்கு ஷோலாபூரில் வேலை. ஹிந்தி சரியாக புரிய ஆரம்பிக்கவில்லை, ஆனால் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த இந்த படத்தை போய் பார்த்திருக்கிரார்கள். அம்மாக்கு திரைபடத்தின் கதையும் பாட்டுக்களும் ரொம்பவே பிடித்து போய்விட்டது. இதில் லதாஜியும் ஹேமந்த்குமாரும் பாடியிருக்கும்,"நேன் செ நேன் நாஹி மில்லாவொ"-(கண்ணோடு கண் பாக்காதீங்க) பாட்டு அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாட்டு.இந்த படத்தின் கதையும் இந்த பாட்டும் பாடி காட்டுவார்கள் அம்மா.அருமையான டூயட், லதாஜியின் குரல் இனிமையுடன் ஹேமந்த்குமாரின் குரல் ஒன்றி பாடுவதை கவனியுங்கள்.மெலோடியஸ்ஸ்ஸ்ஸ்..........



அடுத்து அம்மா அடிக்கடி முணுமுணுக்கும் பாட்டு அனார்க்கலி படத்திலிருந்து.ப்ரதீப் குமார் பினா ராய் நடித்தது."யெ ஸிந்தகி உசீக்கி ஹே".இதுவும் ஒரு அருமையான மெலடி.வேற யாரு லதாஜி தான்.கேட்டு பாருங்களேன்......





"Happy Mother's Day"

Wednesday, April 23, 2008

இரட்டை பதிவர்கள் இம்சை...

இரண்டு வாரம் முன்னாடி நான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு ஓண்ணரை மணி நேரத்தில போயிடகூடிய மாலிபுல இருக்கர கோவிலுக்கு போயிருந்தேன். நல்ல அழகான கோவில்.அமெரிக்காவில கட்டப்பட்டிருக்கர நிறைய கோவில் போல இங்கேயும் பெருமாளும் சிவனும் இருக்காங்க.நம்மூர் போல கோபுரத்தோட உள்ள கோவில்.சரி போயி பெருமாள தரிசனம் பண்ணலாம்னு உள்ள போனா சனி கிழமைனால ஒரே கூட்டம்.பெருமாள் சர்வாலங்காரத்தோட நின்னுகிட்டு இருக்காரு..அவ்ளோ அழகு.கிட்ட போக முடியாது.சரி இருக்கட்டும் எட்டி பாத்து கன்னத்துல போட்டுகிட்டே கண்ண மூடினேன் பாருங்க......அப்படியே மனக் கண் முன்னால நம்ம KRS ரவியும், திருவரங்கப் ப்ரியாவும்(ஷைலஜா.!!) வராங்க.அடாடா இந்த பெருமாள பார்த்தா அவங்க எவ்ளோ ரசிச்சுருப்பாங்க அப்படீன்னு நினைச்சுகிட்டேன்.கொஞ்ச நேரம் நின்னு பாத்தேன் தீர்த்தம் வாங்கிக்கலாமேன்னு ஆனா நேரம் ஆகும் போல இருந்ததனால கீழ இறங்கி சிவன் சன்னிதிக்கு போயிட்டேன்.பிள்ளையார் சிவன தரிசனம் பண்ணிட்டு முருகன் சன்னிதிக்கு வந்து கண்ண மூடி நின்னு அஹா முருகனுக்கு என்ன ஸ்லோகம்னு யோசிக்கரதுக்குள்ள கண் முன்னாடி வந்து நிக்கராங்க குமரனும் ஜீராவும். இதென்னாடாது...சரியா சாமி கும்பிடகூட முடியாம இப்படி இம்சை பண்ராங்களேன்னு நினைச்சுகிட்டு ஒரு பெரிய நமஸ்காரமா பண்ணிட்டு வந்துட்டேன்.


கோவிலுகு போன கதைதான் இப்படின்னா..போன வாரம் கச்சேரிக்கு போயிருந்தேன்.தேன்னா தேனே வந்து பாய்ஞ்சுது காதுல.அப்படி ஒரு அம்சமான கச்சேரி.அங்க போயி உக்காந்து மெய்மறந்து இருக்கரச்சே திடுதிப்புன்னு வந்து நிக்கராங்க துளசி.இந்த இடத்துல துளசி இருந்திருந்தா கச்சேரிய படம் புடிச்சு ஒரு பதிவா போட்ருப்பாங்கன்னு நினைச்சுகிட்டேன்.பக்கத்துல சிமுலேஷன் இருந்திருந்தா இன்னும் கன ஜோரா ரசிச்சு ராகங்கள பத்தி பேசியிருக்கலாம்னு தோணுச்சு.அவரும் அத பத்தி விலாவாரியா ஒரு பதிவ போட்டு ஜமாய்ச்சிருப்பார்ன்னு நினைச்சுகிட்டேன்.இவங்கள பத்தின யோஜனைல RTP ல இரண்டு ராகத்தை மிஸ் பண்ணிட்டேன்.

சரி அது போகட்டும்னு வீட்டுக்கு வந்து you tube ல ஏதோ தேடரச்சே...MADLIB வீடியோ பாக்க கிடைச்சது.இது ஒரு விளையாட்டு.ஆங்கிலத்துல எழுதப்பட்ட ஒரு பத்திய எடுத்து அதுல இருக்கர noun,pronoun,verb,adverb,adjective எல்லாத்தையும் எடுத்துட்டு நமக்கு இஷ்டமானத போட்டு படிக்கரது. அப்ப ரொம்ப வேடிக்கையா அர்த்தம் வேறுபட்டு சம்பதமில்லாமல் அந்த பத்தியே திரிஞ்சு போயிடும்.ஒவ்வொருத்தரும் அவங்க கற்பனைய இதுல காட்டலாம்.இதன் மூலம் ஆங்கில இலக்கணத்தையும்,பல வார்த்தைகள உபயோகபடுதுவதையும் ஒரு விளையாட்டு முறையில் சொல்லித்தரலாம்..Genetic Blend ன்னு ஒருத்தர் மத்த you tube உபயோகப்படுத்தரவங்க கிட்ட இந்த மாறி நிறைய வார்த்தைகள வீடியோ ரெஸ்பான்ஸ் பண்ண சொல்லியிருந்திருக்கிரார்.அவங்கெல்லாம் குடுத்த வார்த்தைகள வச்சு அவர் ஒரு சூப்பெர் வீடியோ தயாரிச்சிருக்கிரார். கிட்டதட்ட 130 பேர் பங்கு பெற்றிருக்காங்க.வீடியோ லிங்க் கீழே

http://www.youtube.com/watch?v=rajiaHpIoKM

இத பாத்தொடனே எனக்கு என்ன தோணுச்சு அடாடா நம்ம பெனாத்தலார் கிட்டயோ கொத்ஸுகிட்டயோ இத சொல்லி தமிழ்ல இந்த மாதிரி ஏதாவது பண்ண சொல்லனும்னு.:)


அதனால நான் இங்க என்ன சொல்ரேன்னா இந்த மாதிரி எங்க போனாலும் எதை பண்ணினாலும் இரண்டு இரண்டு பதிவர்களா வந்து இம்சை பண்ராங்க......இதுக்கும் நான் வெறும் தமிழ்மணம் தேன்கூடுன்னு இரண்டே இரண்டு திரட்டிதான் படிக்கரேன்..

வ.வா சங்கப்போட்டிக்கு...

Monday, April 14, 2008

அகேலி ஹூங் தோ க்யா கம் ஹே-தனிமை




இது லாஸ் ஏஞ்செலெசிலிருந்து சான் டியாகோ போகும் வழியில் உள்ள என்சினிடாஸ் என்ற ஊரில் உள்ள பரமஹம்சர் யோகானந்தா ஆஸ்ரமத்தில் எடுத்தது(அம்மா!!). இங்கு ப்ரத்யேகமாக த்யானத்திற்காகவே பசிபிக்ஃ கடலை நோக்கி அழகான ஒரு தோட்டம் அமைத்திருக்கிரார்கள்.(த்யான தோட்டம்- Meditation Gardens) உட்காருவதற்கு வசதியாக அங்கங்கே பெஞ்சுக்கள்,வகையான வகையான மரங்கள்,செடிகள், பூக்கள் ........மற்றும் அமைதி அமைதி அமைதி.கடலின் சத்ததை தவிற ஒன்றும் இல்லை. நாள் முழுதும் கடலை பார்த்துக்கொண்டு அமர்ந்து விடலாம்...!பரமஹம்சர் இங்கு தங்கியிருந்த பொழுதுதான் ,"An Autobigraphy Of a Yogi" எழுதியிருக்கிரார். யேசு க்றிஸ்து இவருக்கு காட்சியளித்ததும் இங்குதான்!! அம்மா போட்டோ போட்டிக்கு !!





http://www.yogananda-srf.org/temples/encinitas/encinitas.html

Wednesday, March 26, 2008

Not Funny ??!!

Absolutely Funny! மிகவும் ரசித்தேன்.......:)


Bluduh! Bluduh!


Tuesday, March 18, 2008

இப்படி சொல்லலாமா அஞ்சு??


சீனா, பீய்ஜிங்கில் நடக்கப் போகும் 2008 சம்மர் ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் சார்பாக கலந்துகொள்ளப் போகும் அஞ்சு பாபி ஜோர்ஜ், சமீபத்தில் கொடுத்த பேட்டியில், தான் பி.டி. உஷாவை ஒரு உலகத் தரம் வாய்ந்த ஒரு தடகள வீராங்கனையாக பார்க்கவில்லை என்று கூறியிருக்கிரார்.


இதை படித்தவுடன் மிக வருத்தமாக இருந்தது. உஷா ஒரு சிறந்த ஓட்டப்பந்தையகாரர். அவர் இருந்த/பங்கு பெற்ற காலகட்டங்களில் தடகள விளையாட்டுக்கு இவ்வளவு முக்யத்துவம் இல்லை. அதுவும் பெண்கள் இத் துறையில் பங்கு பெறுவது மிக அறியதாகவே இருந்தது. ஷைனி வில்சன், M.D. வல்சம்மா முதலியோர் இவருக்கு பின்னால் வந்தவர்கள். கமல்ஜித் சாந்து, கீதா சுட்ஷி ஆகியோர் உஷாவிற்கு முன்னே ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றிருந்த போதிலும், தெற்கில் தடகள விளையாட்டை ஆர்வத்தோடு பார்க்க வைத்தது உஷாதான். உஷா, பெண்கள் இந்த துறையை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முன்னோடி என்றே சொல்லலாம். அவர் ஒரு சிறந்த வீராங்கனை. அவருடைய strides பார்ப்பதற்கே அவ்வளவு அருமையாக இருக்கும். நல்ல long stride மற்றும் அவருடைய body movement in motion ஒரே மாதிறி இருக்கும். அதாவது ஷைனி வில்சனை பார்த்திருந்தீர்கள் ஆனால் தெரியும், அவர் ஓடும் போது நிறைய தலையை அசைத்து சக்தியை செலவழித்து விடுவார், ஆனால் உஷாவிடம் அது இருக்காது. இந்த "பைய்யோலி எக்ஸ்ப்ரெஸ்" ஓடுவதை பார்க்க அத்தனை அழகு. லாஸ் ஏஞ்லெஸ் சம்மர் ஒலிம்பிக்ஸில் 400 மீட்டர் (hurdles) கலந்துகொண்டு வெண்கல பதக்கத்தை மயிரிழையில் (1/100th) தவறவிட்டார். இதன் மூலம் ஒரு ஒலிம்பிக் ஓட்டப்பந்த இறுதியில் கலந்து கொண்ட முதல் இந்திய பெண்மணியானார்.பேட்டியில் இதை குறிப்பிட்டு அஞ்சு, உஷா இவ்வளவு தூரம் வந்ததே சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மனி முதலான நாடுகள் கல்ந்துகொள்ளாததால்தான் என்று கூறியிருக்கிரார்.



மேலே கொடுத்திருக்கும் தளத்தில் இந்த செய்தியை வைத்து ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சர்ச்சை குறித்து உஷாவிடம் கேட்க்கபட்ட பொழுது, " அஞ்சு ஒரு குழந்தை மாதிரி, அவள் வளர்ச்சியை நான் பார்த்துகொண்டுதான் இருக்கிரேன். இந்தியா அவளிடம் இருந்து ஒரு பதக்கத்தை எதிர்பார்க்கிறது. இந்த வேளையில் நான் ஏதும் சொல்லி அவள் மனம் பாதிக்கப் படுவதை நான் விரும்பவில்லை" என்று மிகவும் பெருந்தன்மையாக கூறியிருக்கிரார்.
இப்படி பேசுவது Confidence or Arrogance ?? நான் அறியேன் பராபரமே.....!!! என்னவாக இருந்தாலும் எனக்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை.....

Sunday, January 27, 2008

ராமனாதன் என் கண்ண திறந்துட்டீங்க!!

ட்ஜோகெருக்கு மட்டும் attitude ப்ராப்ளெம் இல்ல.அவங்க family க்கே இருக்கும் போல இருக்கே??!!


http://msn.foxsports.com/tennis/story/7726158


"As you say, the king is dead. Long live the (new) king," Djokovic's mother, Dijana, told FOXSports.com.

என்ன ரொம்ப infuriate பண்ண ஸ்டேட்மெண்ட்.......!

I knew he could do it," Dijana said. "He was so mentally strong. At the U.S. Open, when he played Federer, he was playing the king. He's only 20 (years old playing) in front of 23,000 people. He was shaky and didn't take the many opportunities he had. But when that was over, my husband told him, 'you'll never lose to Federer again if you get more mature .


"This is the moment we've been waiting for," Dijana said. "This is the first of many Grand Slams. You need to remember that."


அட கண்றாவியே?? pushy யா இருக்க வேண்டியதுதான் ஆனா இப்படியா?? தாங்கலடா சாமி..........!!

Thursday, January 24, 2008

பாங்காய் வென்றார் சோங்கா(Tsonga)



ஆஸ்ட்ரேலியன் ஓபென் அறையிருதி ஆட்டத்தில் ரfபேல் நடாலை 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட்டுக்களில் தோற்கடித்தார் ட்சோங்கா. நல்ல விறுவிறுப்பான ஆட்டம்.நான் லைவாக ஆட்டத்தை பார்க்கவில்லை ரிசல்டும் தெரிந்துவிட்டது. இருந்தாலும் நடால் இப்படி பேர் தெரியாத ஒருவரிடம் நேர் செட்டுக்களில் தோற்றார் என்றவுடன் எனக்கு ஒரு ஆர்வம். ட்சொங்கா fரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். unseeded ஆக உள்ளே வந்து இப்பொழுது இறுதி ஆட்டம் வரை வந்துள்ளார். இவரை பார்த்தவுடன் எனக்கு அந்த நாள் மைகெல் பிலிபோஸீஸ் நியாபகம். உடல் வாகு அப்படி.நல்ல சேர்வ். நல்ல கோர்ட் ப்ரெசென்ஸ் இருக்கிறது இவரிடம். நடாலின் பவர் டென்னிஸை எதிர்த்து வென்றது இவருக்கு ஒரு நல்ல மாரல் பூஸ்ட். இறுதி ஆட்டத்தை பாஸிட்டிவாக எதிர்நோக்க இந்த வெற்றி தயார்படுத்தும். நடால் இஞ்சுரிகளுடன் போராடி கொண்டிருப்பதால் அவருடைய oomph டென்னிஸ்ஸை பார்க்கமுடியவில்லை. முதல் இரண்டு செட் தோற்றும் பல முறை பீனிக்ஸ் பறவையாய் அடுத்த மூன்று செட்டும் வென்றுள்ள நடால் இந்த முறை என்னவோ அவ்வாறு செய்ய முடியவில்லை. மூன்று முறை ப்ரேக் பாயிண்ட் வரை வந்தும் அதை கண்வேர்ட் செய்ய முடியாமல் தடுமாறினார் நடால். ட்சோங்காவின் 17 aces க்கு நடாலால் 2 ace ஏ தர முடிந்தது. நடாலின் அட்டகாசமான பவர்fபுல் fஓர்ஹாண்ட் அவ்வப்போது ஆட்டத்தின் திசையை திறுப்பிவிடுமோ என்ற தோன்ற வைத்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. அவருடைய டாப்ஸ்பின் ஷாட் அனைத்தும் fளாட்டாகவே போனது. உலக # 2 ஆட்டக்காரர் ஒரு செட் கூட வெல்ல முடியாமல் போனது வருத்தம். 2006 ஆஸ்ட்ரேலியன் ஓபென் இறுதி ஆட்டதிற்கு வந்த சைப்ரஸ் நாட்டை சேர்ந்த மார்கோஸ் பாக்டாடிஸ்(unseeded) இப்படித்தான் எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பெடெரெரிடம் ஒரு செட் கூட வென்றார். ட்சோங்கா என்ன செய்ய போகிறார் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவருக்கு நல்ல ப்ரகாசமான எதிர்காலம் உள்ளது என்று தோன்றுகிறது.Is he going to be a one time wonder or is he going to be there for long?? இதுவே கேள்வி.......

Friday, January 18, 2008

சிறுவர் புத்தகம் - சிபாரிசு - Junie.B.Jones


பொதுவா இந்தியாவில் படித்த/இருந்த முக்கால்வாசி பேருக்கு ஆங்கிலத்தில் எழுதுகிற குழந்தைகள் புத்தக ஆசிரியர்னா உடனே நினைவில் வருவது ஈனிட் ப்லைட்டன்(Enid Blyton). எனக்கும் அப்படித்தான். ஆனால் அமெரிக்காவில் பொது நூலகங்களில் இவருடைய புத்தகங்கள் கிடைப்பது அபூர்வம். ஆச்சர்யம் என்னவென்றால் நான் போன நூலகத்தில் இருந்த லைப்ரேரியனுக்கு ஈனிட் ப்லைட்டன் என்ற எழுத்தாளரையே தெரியவில்லை!


அது போகட்டும்


எனக்கு குழந்தைகள் புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம். இந்த ஹாரி பாட்டர் வகையராக்களை சொல்லவில்லை. அதற்கும் கீழே... அதாவது ஒரு ஐந்து வயதிலிருந்து ஏழு எட்டு வயது வரை குழந்தகளுக்காக எழுதப்படும் புத்தக்கங்கள். ஏனென்றால் அதை எழுதும் எழுத்தாளர்களுக்கு குழந்தைகளை/சிறுவர்களை பற்றிய நிஜமான ஆர்வமும் புரிதலும் இருக்க வேண்டும். குழந்தகளின்/சிறுவர்களின் உலகத்தில் எந்த தடையுமின்றி உலவ கூடிய மனநிலை இருக்க வேண்டும். அந்த வயது குழந்தைகளுக்கு/சிறுவர்களுக்கு இருக்ககூடிய ஆசைகள், ஆர்வங்கள்,தயக்கங்கள் பயங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளகூடிய தன்மை இந்த ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியமான ஓன்று. இதை எல்லாவற்றையும் விட மிகவும் முக்யமான ஒன்றாக நான் நினைப்பது சொல்லாடல்கள். சிறுவர்கள் பொதுவாக உபயோகப் படுத்தும் சொற்கள் மற்றும் உரையாடல்களை கவனமாக உள்வாங்கி ப்ரதிபலிப்பது மிகவும் முக்யம். அந்தவகை எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் பார்பரா பார்க் Barbara Park. (இங்கு அவருடைய பேட்டியில் நான் மேலே எழுதியிருப்பதற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பது விசித்திரம்!! இங்கு இவர் தன்னுடைய எழுத்தை ஒரு வேலையாகதான் பார்ப்பதாகவும் எந்த நிகழ்சியை பார்த்து உந்துதலில் எழுதவில்லை என்றும் குறிப்பிடுகிரார். தன்னுடைய கதாபாத்திரங்கள் தானே எழுதிகொள்வதாக சொல்கிரார்.) எப்படியும் இவர் ஒரு புதிசாலியான எழுத்தாளராகவே எனக்கு தோன்றுகிறது,



இவருடைய புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்தது ஜுனி.பி.ஜோன்ஸ் தொடர் வரிசை புத்தகங்கள். மிக எளிமையாகவும் நகைச்சுவையோடும் எழுதப்பட்ட புத்தகங்கள். ஒன்றாவதிலிருந்து மூன்றாவது நான்காவது வரை படிக்கும் சிறுமிகளுக்கு ஏற்ற புத்தகம். சின்ன சின்ன வாக்யங்கள், நான்கு பக்க அத்தியாயம், படிக்கும் ஆரவத்தை தூண்டும் படியான வரை படங்கள்,மேலும் ஐம்பது அல்லது அறுபதே பக்கங்கள். இங்கு அறிமுகத்திற்கு ஒரு சின்ன மாதிரி (sample)

Junie.B.Jones and her Big Fat Mouth

"My name is Junie.B.JOnes. The B stands for Beatrice. Except i dont like Beatrice. I just like B and that's all.

I go to kindergarten.My room is named Room Nine. There are lots of rules in that place.

Like no shouting.

And no running in the hall.

And no butting the other children in the stomach with your head.

My teacher's name is Mrs.

She has another name,too. But i just like Mrs.and thats all.


Last week Mrs. clapped her loud hands together. Then she made a 'nouncement to us.

A nouncement is the school word for telling us something important."

ஜுனி.பி.ஜோன்ஸ் அவள் அப்பா அம்மா மற்றும் தம்பியுடன் வாழ்கிறாள்.அவ்வப்போது தாத்தா பாட்டி வந்து அவளையும் தம்பியையும் பார்த்துக்கொள்கிறார்கள். அவள் கிண்டெர்கார்டென்னில் சேர்ந்து படிப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது புத்தகம். இப்பொழுது ஒன்றாவது படிக்க ஆரம்பித்துவிட்டாள். நல்ல துடிப்பான பெண். அவள் செய்யும் சில விஷமங்கள் எல்லாம் கொஞ்சம் அதிகப்படியாக இருந்தாலும் ரசிக்கலாம்.
புத்தகம் சிறுமிகளுக்காகவே எழுதப்பட்டிருந்தாலும் சிறுவர்களும் முயற்சி செய்யலாம்.இது அமெரிக்காவில் வாழும் குழந்தைகளை நோக்கி எழுதப்படுவதால்,இங்கு மட்டும் ப்ரத்யேகமாக உபயோகபடுத்தபடும் வார்தைகள், இந்தியா மற்றும் வேறு நாடுகளில் வாழும் சிறுமிகளுக்கு அந்த சில வார்த்தைகள் சட்டென்று புரியாமல் போகலாம்.ஆனால் என்ன அம்மா அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்லலாமே? ஜுனி.பி.ஜோன்ஸ் ஒரு ஆரம்பநிலை படிப்பாளிக்கு மிக நல்ல புத்தகம். அதிலேயே A first stepping stone book என்று விளம்பர படுத்துகிறார்கள்.
One more sample
Junie.B.Jones and her Big Fat Mouth
About police officers
One time some cops rested a guy on my street. and so that means they made him take a nap, i think !!












































Tuesday, January 01, 2008

LOVE 2008-video

நான் மிகவும் ரசித்தேன் இந்த விடியோவை.......நீங்களும் கொஞ்சம் பொறுமையாக பார்த்து ரசியுங்களேன்.......!!

http://www.sandfantasy.com/