Thursday, January 24, 2008

பாங்காய் வென்றார் சோங்கா(Tsonga)



ஆஸ்ட்ரேலியன் ஓபென் அறையிருதி ஆட்டத்தில் ரfபேல் நடாலை 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட்டுக்களில் தோற்கடித்தார் ட்சோங்கா. நல்ல விறுவிறுப்பான ஆட்டம்.நான் லைவாக ஆட்டத்தை பார்க்கவில்லை ரிசல்டும் தெரிந்துவிட்டது. இருந்தாலும் நடால் இப்படி பேர் தெரியாத ஒருவரிடம் நேர் செட்டுக்களில் தோற்றார் என்றவுடன் எனக்கு ஒரு ஆர்வம். ட்சொங்கா fரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். unseeded ஆக உள்ளே வந்து இப்பொழுது இறுதி ஆட்டம் வரை வந்துள்ளார். இவரை பார்த்தவுடன் எனக்கு அந்த நாள் மைகெல் பிலிபோஸீஸ் நியாபகம். உடல் வாகு அப்படி.நல்ல சேர்வ். நல்ல கோர்ட் ப்ரெசென்ஸ் இருக்கிறது இவரிடம். நடாலின் பவர் டென்னிஸை எதிர்த்து வென்றது இவருக்கு ஒரு நல்ல மாரல் பூஸ்ட். இறுதி ஆட்டத்தை பாஸிட்டிவாக எதிர்நோக்க இந்த வெற்றி தயார்படுத்தும். நடால் இஞ்சுரிகளுடன் போராடி கொண்டிருப்பதால் அவருடைய oomph டென்னிஸ்ஸை பார்க்கமுடியவில்லை. முதல் இரண்டு செட் தோற்றும் பல முறை பீனிக்ஸ் பறவையாய் அடுத்த மூன்று செட்டும் வென்றுள்ள நடால் இந்த முறை என்னவோ அவ்வாறு செய்ய முடியவில்லை. மூன்று முறை ப்ரேக் பாயிண்ட் வரை வந்தும் அதை கண்வேர்ட் செய்ய முடியாமல் தடுமாறினார் நடால். ட்சோங்காவின் 17 aces க்கு நடாலால் 2 ace ஏ தர முடிந்தது. நடாலின் அட்டகாசமான பவர்fபுல் fஓர்ஹாண்ட் அவ்வப்போது ஆட்டத்தின் திசையை திறுப்பிவிடுமோ என்ற தோன்ற வைத்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. அவருடைய டாப்ஸ்பின் ஷாட் அனைத்தும் fளாட்டாகவே போனது. உலக # 2 ஆட்டக்காரர் ஒரு செட் கூட வெல்ல முடியாமல் போனது வருத்தம். 2006 ஆஸ்ட்ரேலியன் ஓபென் இறுதி ஆட்டதிற்கு வந்த சைப்ரஸ் நாட்டை சேர்ந்த மார்கோஸ் பாக்டாடிஸ்(unseeded) இப்படித்தான் எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பெடெரெரிடம் ஒரு செட் கூட வென்றார். ட்சோங்கா என்ன செய்ய போகிறார் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவருக்கு நல்ல ப்ரகாசமான எதிர்காலம் உள்ளது என்று தோன்றுகிறது.Is he going to be a one time wonder or is he going to be there for long?? இதுவே கேள்வி.......

2 comments:

இலவசக்கொத்தனார் said...

தல எளிதாக இறுதி ஆட்டத்தில் ஜெயிக்கப் போகிறார். பாவம் இந்தப் பையன்.

Radha Sriram said...

ஆமாங்க கொத்ஸ். ஆனா முதல்ல தல semifinals தாண்டனும். எங்க ட்ஜொகெர கம்மியா எடை போட்ராதீங்க. நிச்சயம்மா Federerக்கு ஒரு scare கொடுப்பாரு....:):) தாண்டிட்டார்ன்னா ட்சோங்கால்லாம் ஜுஜுபி.....:)