Thursday, December 13, 2007

கல்யாணம்தான் கட்டிகிட்டு!!(நச்சுக்கு ஆரம்பிச்சு ப்ச்சுன்னு முடிஞ்ச கதை!!)

சந்திரனுக்கு ஒரே படபடப்பாக இருந்தது. என்னதான் தொலைபேசியில் பேசி, புகைபடம் பரிமாறி, இ மெயிலில் விஷயங்கள் அலசியிருந்தாலும். நேரில் பார்ப்பது என்பது வேறு. என்ன உடை உடுத்துவது என்று வெகு நேரம் சிந்தித்து வெளீர் நீல நிற கோடுகள் போட்ட சட்டையும் கறு நீல நிற பாண்ட்டும் அணிந்து தன் அறையை விட்டு வெளியில் வந்தான். மறுபடியும் நியாபகம் வந்தவனாக உள்ளே சென்று கொலோனை கொஞ்சம் தாராளமாக போட்டுக்கொண்டான். கடிகாரத்தை பார்த்துவிட்டு திடுகிட்டு


'அப்பா..... கிளம்பியாச்சா??" உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்.


உள்ளிருந்து ஒரு பதிலும் இல்லை. இந்த அப்பாக்கு கிளம்புவதற்க்கு எத்தன நேரம் வேணுமோ...... நானே கிளம்பியாச்சு......மனதில் சலித்துக்கொண்டே அப்பா என்று கூப்பிட போக சட்டென்று வாயைமூடிக்கொண்டான். ச..ச..... நான் படற அவசரத்த பார்த்து என்னதோணூமோ அவருக்கு. இழுத்து ஒரு மூச்சை விட்டு விட்டு ஹாலில் சோபாவில் போய் உட்கார்ந்தான். தனிச்சையாக கை டிவி ரிமோட் எடுத்துக்கொண்டது. டிவியை ஆன் செய்து சானல் தாவலானான். கண் தானாக கடிகாரத்தை பார்த்தது. 6.30 மணி சுமாருக்கு வரோம்னு சொல்லியிருக்கோம் இந்தப்பாவிற்க்கு ஒரு சுறுசுறுப்பே இல்லையே என்று நினைத்கொண்டு "அப்....என்று ஆரம்பிப்பதற்க்குள் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை நெற்றியில் திருநீறு கீற்று சகிதமாக வந்து நிற்கும் அப்பாவை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை சந்திரனுக்கு. காது மடல் சிவக்க நிற்கும் மகனை பார்த்து "என்னப்பா?" என்று கேட்க" "அப்பா நம்ம என்ன கோவிலுக்கா போரோம்? எந்த எந்த நேரத்துக்கு எந்த மாதிரி உடை உடுத்தணும்னு உங்களுக்கு பாடம்தான் எடுக்கணும், ஒரு பாண்ட் ஷர்ட் போடகூடாது"?? சரி சரி வாங்க நேரம் ஆகுது என்ன பண்ணிட்டு இருந்தீங்க இத்தன நேரம் ஹ்ம்?" நடந்துகொண்டே பேசிய சந்திரனை பார்த்து, "இல்லப்பா சந்திரா இன்னிக்கு ஞாயித்து கிழமை 4.30 லேந்து 6.00 ராகுகாலம் ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பலாம்.....நல்ல விஷயமா போரோம் எதுக்கு வீணா ...உனக்கு இதுலலாம் நம்பிக்கை இல்லன்னு தெரியும் இருந்தாலும்...."என்று நீட்டி முழக்கிய அப்பாவை பார்க்கவே என்னவோ போல் இருந்தது சந்திரனுக்கு. "சரி சரி நான் அவங்களுக்கு போன் பண்ணி எப்படியும் ஏழு மணிக்குள்ள வந்திருவோம்னு சொல்லிடரேன்".....எனக்கு இதெல்லாம் சுத்தமா புடிக்கல....ஒரு டைம் சொன்னோம்ன கரெக்டா அந்த டைமுக்கு போனாதான் நம்மளுக்கும் மரியாதை அவங்களூக்கும் நம்மள பத்தி ஒரு நல்ல எண்ணம் வரும்.....ஏம்பா நீங்க'?ப்ச்....." என்று சொல்லிகொண்டே செல் போனில் விஷயத்தை அவர்களுக்கு தெரிவித்தான்.


மணி 6.00 அடித்தவுடன் அப்பாவுடன் காரில் ஏறி உட்கார்ந்து இந்திரா நகரை நோக்கி விரட்ட ஆரம்பித்தான்." சந்திரா மொதல் மொதலா அவங்க வீட்டுக்கு போரோம் ஏதாவது பூ பழம் வாங்க வேண்டாமா?" அப்பா தயக்கமா ஆரம்பிக்கவும்.....ஏம்பா இத கொஞ்சம் முன்னாடியே ஞாபகப் படுத்தக் கூடாதா? நான் போயி வாங்கிட்டு வந்திருப்பேன் இல்ல....?"


இப்ப எங்க போயி தேடுவேன்? சரி இருங்க வழில ஏதாவது இருக்கா பாக்கரேன்."கொஞ்சம் தூரம் போய் வழியில் இருந்த ஒரு கடையில் நிறுத்தி ஒரு பூங்கொத்தும் ஒரு பழ கூடையும் வாங்கிகொண்டான். அப்பாவிடம் கொடுத்துவிட்டு காரை ஓட்டிக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தான் சந்திரன். தான் செய்வது சரிதானா இல்லலயா ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. இதெல்லாம் சாத்யமா? பார்த்து, பேசி, ஒருத்தருக்கு ஒருத்தர் பிடித்து....வாழ்க்கை துணைய தேர்ந்து எடுப்பது என்பது சாதாரண விஷயமா என்ன?இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் பொழுது இப்படி ஜீவன் ஸாத்தி யில் விளம்பரம் கொடுத்து அதன் மூலம் இப்பொ இது வறை வந்திருப்பது நினைத்தால் அவனுக்கே திகைப்பாக இருந்தது. அப்பா பழங்காலத்து மனிதர் வேற......
சந்திரனுக்கு ஒரு நல்ல ரெஸ்டாரண்ட்டுக்கு போய் கொஞ்சம் இன்பார்மலா பேசலாம்னுதான் ஆசை. அப்பாவை நினைத்து பேசாமல் இருந்துவிட்டான்.

யோசித்துக்கொண்டே ஓட்டியதில் இந்திரா நகர் அருகில் வந்துவிட்டதை உணர்ந்து சரியான திருப்பமா என்று பார்த்து அந்த அபார்ட்மெண்ட் காம்ப்லெக்ஸ் முன்னாடி காரை நிறுத்தினான் சந்திரன். எந்த தளம் என்று சரி பார்த்து எலிவேட்டரில் பட்டனை அழுத்தி 12 ஆம் வீட்டுக் கதவின் முன்னால் வந்து நின்றான். அப்பாவின் கையிலிருந்த பூங்கொத்தை வாங்கிகொண்டு காலிங்பெல்லை அழுத்தினான். சிரித்த முகத்துடன் கதவை திறந்த பெண் சந்திரனை பார்த்து,

" வணக்கம் நான் நந்தினி, உள்ள வாங்க......"

"வணக்கம் நான் சந்திரன் இவர்தான் என் அப்பா கிருஷ்ணன்'
" அம்மா உள்ள இருக்காங்க....கூபட்ரேன் நீங்க உக்காருங்க....ஒஹ் அம்மா... அம்மா பேரு மீனாக்ஷி அம்மா இவர் சந்திரன் அவரோட அப்பா கிருஷ்ணன். கிருஷ்ணன் சார் ...நானும் உங்க பைய்யனும் நைறைய இதப் பத்தி பேசிட்டோம்.....நீங்களும் அம்மாவும் நேர்ல பார்த்து பேசிக்கனும்னு எங்களுக்கு தோணூச்சு அதான் இந்த ஏற்பாடு. Take your time.அவசரபட வேண்டாம். எனக்கும் சந்திரனுக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒருதருக்கு ஒருத்தர் நல்ல துணையா இருக்கணும்னு ஆசை.அவ்ளொதான். அம்மா நீயும் கிருஷ்ணன் சாரும் பேசிகிட்டு இருங்க.....நானும் சந்திரனும் போய் காபியும் கொஞ்சம் ஸ்னாக்ஸும் எடுதிட்டு வரோம்.

15 comments:

cheena (சீனா) said...

நச்சுன்னுதான் முடிஞ்சிருக்கு - ஓரளவு எதிர்பார்த்தேன் - ஏனினில் இம்மாதிரி கதைகள் அதிகம் படித்ததினால். தவறாக கருத வேண்டாம்.

போட்டிக்கு அனுப்புங்கள்

Radha Sriram said...

//ஓரளவு எதிர்பார்த்தேன் - ஏனினில் இம்மாதிரி கதைகள் அதிகம் படித்ததினால்.//

இதெனாலதாங்க போட்டிக்கு அனுப்பல :) இன்னொரு நண்பரும் இதெல்லாம் தேராதுன்னு நாசுக்கா சொல்லிட்டாரு....:):)

//தவறாக கருத வேண்டாம்.//

இதுல தவறா நினக்கரதுக்கு என்னங்க இருக்கு??...ஒண்ணும் இல்ல.....ஓகே??
வந்து கருத்து சொன்னதுக்கு நாந்தான் நன்றி சொல்லணும்....:):)

SurveySan said...

நல்லாதான் இருக்கு 'நச்'.

கொஞ்சம், format மாத்தி, paragraph ஜாஸ்தி ஆக்கினா, படிக்க ஈஸியா இருக்கும்.

குறிப்பா, கடைசி பத்தி, படிப்பதில் சிரமம் இரூந்தது.
குட்டி குட்டி பத்தியா டைலாக்ஸ் பிரிச்சா, ஈஸியா இருக்கும் :)

போட்டிக்கு சேத்துடலாம்ல?

Radha Sriram said...

சேக்கர மாறி இருந்தா சேருங்க....

//கொஞ்சம், format மாத்தி, paragraph ஜாஸ்தி ஆக்கினா, படிக்க ஈஸியா இருக்கும்.

குறிப்பா, கடைசி பத்தி, படிப்பதில் சிரமம் இரூந்தது.
குட்டி குட்டி பத்தியா டைலாக்ஸ் பிரிச்சா, ஈஸியா இருக்கும் :)//

இதெல்லாம் நினைச்சாதான் கவலையா இருக்கு:):)

Nithya-A.C.Palayam said...

Ethirpartha mudivutham, innum neriya aluthuinga

சென்ஷி said...

//இதெனாலதாங்க போட்டிக்கு அனுப்பல :) இன்னொரு நண்பரும் இதெல்லாம் தேராதுன்னு நாசுக்கா சொல்லிட்டாரு....:):)//

:)))

இலவசக்கொத்தனார் said...

ராதாக்கா, முதலிலேயே கணிக்க முடிந்ததால் கொஞ்சம் சுவாரசியம் குறைந்தது உண்மை.

Radha Sriram said...

//Ethirpartha mudivutham, innum neriya aluthuinga//
நித்யா புது பதிவரா நீங்க??இதுவரைக்கும் உங்கள பார்தது இல்லையே? ஆமாங்க நான் "நச்சு" வேணும்னு ரொம்ப யோசிச்சேனா அதுதான் "சப்புனு" முடிஞ்சிருச்சு.....:):) அதுக்குதான் டைடில்லேயே ஒரு டிஸ்கி கொடுத்துட்டேன்.:):)

Radha Sriram said...

//:)))//

அஹா சென்ஷீ.....என் கதை இங்க சிரிப்பா சிரிக்குது....!!:) நண்பர் சொன்னத ஒழுங்கா கேட்ருக்கணும் தான்....:)

//ராதாக்கா, முதலிலேயே கணிக்க முடிந்ததால் கொஞ்சம் சுவாரசியம் குறைந்தது உண்மை.//

ஆமாங்க கொத்ஸ்.....அதுக்காகதான் டைடில் டிஸ்கி..... அதையும் மீறி வந்து இந்த கதையை படிக்கணுங்கரது உங்க விதி....:):)

ப்ரசன்னா (குறைகுடம்) said...

ப்ச்சுன்னு எல்லாம் முடியல. எல்லாரும் சொல்லியிருக்க மாதிரி கொஞ்சம் யூகிக்கற மாதிரி இருந்தது. அவ்வளவுதான். :-)

Radha Sriram said...

//ப்ச்சுன்னு எல்லாம் முடியல. எல்லாரும் சொல்லியிருக்க மாதிரி கொஞ்சம் யூகிக்கற மாதிரி இருந்தது. அவ்வளவுதான். :-)//

அப்படீங்க்ரீங்க?? அப்படீன்னா ஓகே.:)

Nithiya said...

//நித்யா புது பதிவரா நீங்க??இதுவரைக்கும் உங்கள பார்தது இல்லையே?//
ஆமாங்க நான்புதுசுதாணுங்க.எனக்கு தமிழ் எழுதவராதுங்க,இப்போதுதான் பழகிக்கொன்டு இருக்கிரேன்,( நன்றி - அருட்பெருங்கோ)

Divya said...

அருமையான கதை!
பாராட்டுக்கள்.

உரையாடல்களை இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக, புரியும்படியாக எழுதியிருந்தால், சிறப்பாக அமைந்திருக்கும்.

உங்கள் முயற்ச்சிக்கு என் வாழ்த்துக்கல்!

Radha Sriram said...

//ஆமாங்க நான்புதுசுதாணுங்க.எனக்கு தமிழ் எழுதவராதுங்க,இப்போதுதான் பழகிக்கொன்டு இருக்கிரேன்,( நன்றி - அருட்பெருங்கோ)//

நித்யா இங்க இருக்கற நிறைய பேர் தட்டு தடுமாறி எழுத வந்தவங்கதான் அதனால தைர்யமா முயற்சி பண்ணுங்க!நான் இப்படிதான் முதல்ல பின்னூட்டம் மட்டும் போட்டுகிட்டு இருந்தேன். உங்க டீச்சர் அருட்பெருங்கோ நல்லா கைட் பண்ணுவார்....

Radha Sriram said...

//அருமையான கதை!
பாராட்டுக்கள்.

உரையாடல்களை இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக, புரியும்படியாக எழுதியிருந்தால், சிறப்பாக அமைந்திருக்கும்.

உங்கள் முயற்ச்சிக்கு என் வாழ்த்துக்கல்!//

பாராட்டுக்களுக்கு நன்றி திவ்யா. அடுத்த தடவை கண்டிப்பா இந்த குறைகள் இல்லாமா இருக்க முயற்சி பண்ணரேன்:)