Wednesday, October 24, 2007

The Prince of Rajpipla!!

இன்றைக்குக்கு ஓப்ரா வின்ப்ரியின் (Oprah Winfrey) சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் இந்த ராஜ்பிப்லா (Princely State)என்கிற ராஜ்யத்தின் அரசகுமாரன். பெயர் மன்வேந்த்ர சிங். இவர் அப்பாதான் இப்பொது இருக்கும் அரசர் ரகுபீர் சிங். ரகுபீர் சிங்கிற்க்கு பிறகு ரரஜய்த்தை (!!)ஆளவேண்டியது இந்த மன்வேந்த்ர சிங். ஆனால் மன்வேந்த்ர சிங்கை அவர் அம்மா நிராகரித்து விட்டார், அப்பாவும் ஒத்துகொள்ளவில்லை..... இதனால் வருத்தம் அடைந்த மன்வேந்தர் தன் ராஜ்யத்தை துறந்துவிட்டார். அதற்கான காரணம் இந்த மன்வேந்தர் சிங் தான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்பதை தெரிவித்ததனால்.இவரை பற்றியும் இவர் ராஜய்த்தை பற்றிய விவரங்கள் கீழேhttp://www.uq.net.au/~zzhsoszy/ips/r/rajpipla.html

http://en.wikipedia.org/wiki/Rajpiplaஓப்ராவின் கேள்விகளுக்கு தெளிவான ஆங்கிலத்தில் அழகாக பதில் சொன்னார். தான் எப்படி குழம்பி தவித்ததையும்......சரியான வழிகாட்டுதல் இல்லாமல் எப்படி திருமணம் செய்துகொண்ட தவறையும் கூறினார். இவரது திருமணம் ஒரு வருடத்தில் விவாகரத்தில் முடிந்திருக்கிறது.


மன்வேந்தர் சிங் பேட்டியில் கூறும் பொழுது ராஜய்த்தை விட்டுகொடுத்ததினால் தனக்கு ஒரு ப்ரச்சனயும் இல்லை என்றும் தன்னுடைய sexual preference பற்றி கூறியதால் ஒரு பெரிய மன பாரம் குறைந்தது என்று சொன்னார். ஓரினசேர்ககயாளருக்கான சேவையில் தான் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதாகவும் அவருடைய மக்கள் அவரை எப்போதும் போல் மிகுந்த மரியாதையுடன் நடத்துவதாக சொன்னார்.

எனக்கு என்ன புரியவில்லை என்றால் ஓபெரா ஓரின சேர்க்கை என்பது இன்னும் ஒத்துகொள்ள படாத தண்டிக்கபட கூடிய ஒரு விஷயமாகவே இந்தியாவில் இருப்பதாக கூறியபோது மன்வேந்தர்......"Homosexuality is not punishable in India but the act of homosexuality is" என்று கூறினார்....... என்ன அர்த்தம்?


மத்தபடி ராஜகுமாரன் மாதிரியே எதற்காக உடட உடுத்தி வந்திருந்தார் என்று தெரியவில்லை.....:):)(தலையில் டர்பன், நெற்றியில் பொட்டு!) பேட்டி, ஐஸ்வர்யா ராயொடு இருந்த'தை விட நன்றாகவே இருந்தது.....

6 comments:

வல்லிசிம்ஹன் said...

இப்படி ட்ரஸ் போட்டுண்டு வந்து சொன்னால்தான் பப்ளிசிடி.
ஓப்ரா ஷோவுக்குச் சும்மா வந்துட முடியுமா.
எல்லாம் க்ளாமருக்காக்த் தானே.

நல்ல பதிவு ராதா.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

இது தான் என் முதல் பின்னூட்டம்...
//Ho.mosexuality is not punishable in India but the act of ho.mosexuality is//My interpretation based on prior coverage of this issue in Indian media is that: There is no law punishing someone who says h/she is ho.mo. But if s/he commits the "unlawful act" in Indian territory, then s/he can be punished for doing that...

இனி தான் உங்க மத்த பதிவு படிக்கணும்...
கெ.பி.

ப்ரசன்னா (குறைகுடம்) said...

welcome back :-)

Radha Sriram said...

மன்னிக்கவும் வல்லி ரொம்பவே தாமதமாக பதில் எழுதுவதற்கு


//இப்படி ட்ரஸ் போட்டுண்டு வந்து சொன்னால்தான் பப்ளிசிடி.
ஓப்ரா ஷோவுக்குச் சும்மா வந்துட முடியுமா.
எல்லாம் க்ளாமருக்காக்த் தானே//

மற்றபடி அவர் க்ளாமருக்காக உடை அணிந்து வந்தது மாதிரி தெரியவில்லை..... ஏதோ இந்தியர்கள் அதுவும் ராஜச்தான் என்றால் பாரம்பரிய உடையுடந்தான் அமெரிக்க டிவ்யில் பேட்டி தரவேண்டும் என்று(சொல்லி குடுக்க பட்டாரோ) நினைத்துகொண்டாரோ என்னவோ :):)

Radha Sriram said...

வாங்க கெபி.......ஒரு மாதிரி புரிஞ்சுகிட்டேன்னு நினைக்கரேன்.....

They cannot be married lawfully i understand.....but i want to know if it is punishable to be living together and having an intimate relationship?? I have my own doubts about it because i read an article in snegithi or aval vikatan i forget long time back about a lesbian couple living together.....anyway...

உங்க முதல் பின்னூட்டதுக்கு நன்றி.....மத்த பதிவுகளையும் படிங்க......இத சொல்ல எனக்கே ஒரு மாதிரி இருக்கு :):) but still give it a try.....

Radha Sriram said...

நன்றி ப்ரசன்னா.:) தொடர்ந்து எழுதுவது ஒரு பெரிய சவாலா இருக்கு.....:):)