Saturday, April 28, 2007

அழகு - கூனி சுந்தரி- Beauty Tips

சத்யப்ரியன் அழகு பதிவு போட சொல்லி கூப்பிட்டு கொஞ்ச காலம் ஆச்சு. என்னன்னா நான் அழகுன்னு நினைச்சத எல்லாருமே எழுதி முடிச்சதனால எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவையா இருந்தது. என்னோட அழகுகள பட்டியல் இட்டு எழுத முடியுமா தெரியல. இங்க சில அழகான தருணங்கள உங்களோட பகிர்ந்துக்கரேன்.போனஸ்சா ஒரு கதை!!

1) நாங்க கொஞ்ச நாள் முன்னாடி whale watching போயிருந்தோம். ரொம்ப நேரம் நின்னு திமிங்கிலம் வருதா வருதா பாத்து பாத்து கண்ணே பூத்து போயிருந்த நிலைல சரி கொஞ்ச நேரம் உக்காரலாம்ன்னு அங்க இருந்த பென்ச்ல போயி உக்கார போனேன். அப்ப அங்க உக்கார்ந்திருந்த ஒரு பெண் கொஞ்சம் கோவத்தோட," இந்த இடத்துல நாங்க எல்லாரும் சேர்ந்து உக்கார போரோம்ன்னு," சொல்லி அவங்களோட கூட வந்தவங்கள காமிச்சிட்டு ஒரு பார்வை பாத்தாங்க. நம்ம யாராவது கொஞ்சம் சத்தமா பேசினாலெ பயந்து போர டைப். சரி எதுக்கு வம்புன்னு மறுபடியும் போய் நின்னுகிட்டேன். அப்படியே கொஞ்ச நேரம் போச்சு. படகு செம ஆட்டம். மெதுவா மறுபடியும் திரும்பி பாத்தேன். அந்த பெண்ண தவிர வேற யாரும் அங்க உக்காந்திருக்கல. சரி கொஞ்சம் ஓரமா பாத்து உக்காந்துக்கலாம்ன்னு போனேன் பாருங்க, அந்த பெண்னுக்கு என்ன தோணுச்சோ தெரியல என்கிட்ட வந்து, " என்ன மன்னிச்சிருங்க நான் ஒங்க கிட்ட அப்படி நடந்திருக்க கூடாதுன்னு", (sorry i was rude to you!)அப்படின்னு சொல்லிட்டா. எனக்கு ரொம்ப ஆச்சர்யம். அறிமுகமில்லாத ஒரு அன்னியரிடம் மன்னிப்பு கேட்ட அந்த பெண்ணோட குணம் எனக்கு ரொம்ப அழகா தெரிஞ்சது. She made my day really beautiful.
2) இதுவும் மிக சமீபத்துல நடந்தது. வர்ஜினியா டெக் கொலை சம்பவம் நடந்து முடிஞ்சு, எல்லா தொலைகாட்சியிலயும் அத பத்தியே பேசிகிட்டு இருந்த நேரம். இரண்டு இந்தியர்களும் அதில் அடக்கம்ன்னு தெரிஞ்சது. அதிலும் ஆசிரியர் லோகனாதன் தமிழ்நாட்டை சேந்தவர்ன்னு கொஞ்சம் கூடுதல் அனுதாபத்தை நான் காட்டிட்டு உக்காந்து செய்திய பாத்துகிட்டு இருந்த நேரம். அப்போ பைய்யன் அங்க வரவும் அவன்கிட்ட, "ச்ச பாத்தியா தமிழ்நாட்டை சேந்த ஒருத்தரும் இறந்து போயிட்டாராம் அப்படின்னு சொன்னேன்", அப்ப அவன் என்ன விசித்ரமா பாத்துட்டு, ' Should i be more enraged because an Indian has been killed ?" அப்ப்டின்னு கேட்டுட்டு போயிட்டான். அப்படியே கொஞ்ச நேரம் உக்காந்துட்டேன். எல்லா உயிர்களையும் சமமா பாவிக்க தெரிஞ்ச அவனுடைய மன முதிர்ச்சி எனக்கு ரொம்ப அழகா தெரிஞ்சது.


இப்ப கதை!நான் பள்ளியில் படிக்கும் போது தூர்தர்ஷனில் ஒரு நாடகத்தை ஒளிபரப்பினாங்க. அது ராஜாஜியோட ஒரு சிறுகதைன்னு நியாபகம். அந்த நாடகத்தின் பேரு "கூனி சுந்தரி". என்ன மிகவும் பாதிச்ச கதை அது. ரொம்ப நல்லாவும் எடுத்திருந்தாங்க. ஷரத்பாபு நடிச்சிருந்தார்ன்னு நினைக்கரேன். சரி கதைக்கு வருவோம்!!

ஒரு மெத்த படித்த வாத்யார் இருப்பார். வேதங்களில் எல்லாம் தேர்ச்சி பெற்றவர் அவருக்கு எட்டு வயதில் ஒரு பெண் இருப்பாள். முதல் மனைவி அகாலமாக மரணம் அடைந்ததனால் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வார். அந்த பெண்ணிற்கு கூன் முதுகு. கூன் முதுகினாலோ என்னவோ அந்த வாத்யார் தன் இரண்டாவது மனைவியின் மேல் எந்த வகை ஈடுபாடும் இல்லாமல் இருப்பார். அவளோ அவருக்கு வேண்டிய எல்லாவற்றையும் மிகுந்த சிரத்தையோடு செய்துகொண்டு அவரிடம் வேறு எந்த வித எதிர்பார்பு இல்லாமல் இருப்பாள். அவளோட உலகமே அந்த எட்டு வயது சிறுமியை சுற்றியே போய்கொண்டிருக்கும். அந்த சிறுமியை மிகுந்த பாசத்தோடு பார்த்துகொள்வாள். ஒரு சமயம் சுந்தரி வீட்டிற்கு வெளியே இருக்கும் கிணற்றில் நீர் இறைக்க செல்வாள். சிறுமியும் கூடவே செல்வாள். அப்போது அங்கு இருக்கும் மற்ற பெண்கள், " கூனி சுந்தரி" என்று கூப்பிட்டு கேலி செய்வார்கள். சுந்தரி ஒன்றும் சொல்லாமல் சிறுமியை அழைத்துகொண்டு வந்துவிடுவாள். அனால் அந்த சிறுமியை அந்த கிண்டல் ரொம்பவே பாதித்திதுவிடும். பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு அப்பாவுடன் உட்கார்ந்து கொண்டு பேசும் பொழுது அவள் கேப்பாள்," அப்பா ஏன் எல்லாரும் அம்மாவ கூனி சுந்தரின்னு சொல்லி கூப்பிட்டு கிண்டல் பண்ணராங்க? நம்ம அம்மா ரொம்ப அழகா இருக்காங்களே?" அந்த நிமிஷம் அந்த வாத்யாருக்கு கன்னத்தில் யாரோ பொளேர் என்று அறைந்தது போல் இருக்கும். பின்னர் சிறுமி, சுந்தரியுடனும் அப்பாவுடனும் உட்கார்ந்து சந்தோஷமாக ஊஞசல் ஆடுவது போல் முடித்திருப்பார்கள்."Beauty is in the heart of the beholder"

H.G. Wells(இது நினைவுலேந்து எழுதினது, அதனால ஏதாவது முக்க்யமான குறிப்பு விட்டு போயிருக்காலாம், மொத்த கருத்து இதுதான்னு நினைக்கரேன்!)

Beauty Tips From a beautiful woman !!


The following was written by Audrey Hepburn who was asked to share "beauty tips."
For attractive lips, speak words of kindness.
For lovely eyes, seek out the good in people.
For a slim figure, share your food with the hungry.
For beautiful hair, let a child run his or her fingers through it once a day.
For poise, walk with the knowledge that you never walk alone.
People, even more than things, have to be restored, renewed, revived, reclaimed and redeemed; never throw out anyone.
Remember, if you ever need a helping hand, you'll find one at the end of each of your arms. As you grow older, you will discover that you have two hands, one for helping yourself, the other for helping others.
The beauty of a woman is not in the clothes she wears, the figure that she carries, or the way she combs her hair. The beauty of a woman must be seen from in her eyes, because that is the doorway to her heart, the place where love resides.
The beauty of a woman is not in a facial mode, but the true beauty in a woman is reflected in her soul.
It is the caring that she lovingly gives the passion that she shows.
The beauty of a woman grows with the passing years.
If you share this with another woman, something good will happen -- you will boost another woman's self esteem, and she will know that you care about her.இதோட என் அழகு பதிவ முடிச்சுக்கரேன்
சர்வேசன் சர்வே போட்டு களைச்சு போயிருப்பீங்க ஒரு மாறுதலுக்கு அழகு பதிவு போடுங்களேன் !!!!நெல்லை சிவா க்ரிகெட்ல்லாம் ஒரு வழியா முடிஞ்சிருச்சே.......relaxed அ அழகு பதிவு போட வாங்க.

11 comments:

நெல்லை சிவா said...

நீங்க அழகா எழுதிட்டீங்க, அழைப்பும் விடுத்திட்டீங்க..முயற்சிக்கிறேன்..

SurveySan said...

அழகு பதிவும் போட்டாச்சா? தூள்.

//' Should i be more enraged because an Indian has been killed ?" //

இது கண்டிப்பா அழகுதான்.

அடுத்த தலைமுறையாவது குழப்பம் இல்லாம இருந்தா நல்லதே.

நானும் பதிவ போடறேன். யோசிக்கணும் :)

பி.கு: என் லிங்க் வேல செய்யல பாருங்க. http ல ttp மட்டும்தான் இருக்கு.

SathyaPriyan said...

அழக அருமையா சொல்லி இருக்கீங்க. நன்றி.

//
எல்லா உயிர்களையும் சமமா பாவிக்க தெரிஞ்ச அவனுடைய மன முதிர்ச்சி எனக்கு ரொம்ப அழகா தெரிஞ்சது.
//
பொட்டில் அடித்தது போல் இருந்தது ராதா. பேராசிரியர் லோகனாதன் அவர்களின் மறைவு மிகுந்த கவலை அளிக்கிறது. அதே நேரத்தில், அவர் ஒரு சராசரி NRI அவ்வளவே. அவரது இறுதி ஊர்வலத்தில் கலத்து கொள்வதற்காக பல லட்சம் ரூபாய்களை தமிழக அரசு செலவு செய்வது தேவை இல்லாத ஒன்று. அவருக்கு இன்ஷூரன்ஸ் பல லட்சம் வரும். அவர்களால் அந்த செலவை ஏற்றுக் கொள்ள முடியாதா?

அதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஆளில்லா இரயில் க்ராசிங்கில் இப்பொழுது 12 பேர் 6 மாதங்களுக்கு முன்னால் 25 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தினர் அமெரிக்க போகிர செலவில், 10 ரயில் க்ராசிங்களில் கேட் போட்டு விடலாம்.

அமெரிக்க தமிழரின் உயிர் என்றால் உயர்வு, இந்தியத் தமிழரின் உயிர் என்றால் குறைச்சலா?

SathyaPriyan said...

உங்க கதையும் அழகு குறிப்பும் அருமை.

Shakthi said...

super..கூனி சுந்தரி கதை எங்கேயோ கேட்டுரிக்கேன்..

Radha Sriram said...

//நீங்க அழகா எழுதிட்டீங்க, அழைப்பும் விடுத்திட்டீங்க..முயற்சிக்கிறேன்//


நெல்லை சிவா கண்டிப்பா எழுதுங்க!!

நீங்களாம்தான் கண்டிப்பா எழுதணும் :):)

Radha Sriram said...

//நானும் பதிவ போடறேன். யோசிக்கணும் :)//

ரொம்ப யோசிக்காம் எழுத ஆரம்பிங்க வார்த்தைகள் தான வந்து விழும் :):)

//பி.கு: என் லிங்க் வேல செய்யல பாருங்க. http ல ttp மட்டும்தான் இருக்கு.//

எப்படி சரி செய்யணும்னு தெரியலயே!!

Radha Sriram said...

சத்யா வழக்கம் போல உங்க நீண்ட தெளிவான பின்னூட்டம் நன்றி!!

அமாம் சத்யா நீங்க சொல்லி இருகரது முற்றிலும் உண்மை!


மத்தபடி என்னுடைய அழகு பதிவ பத்தி........
எனக்கு என்னவோ கொஞ்சம் சொதப்பிட்ட மாதிரி தோணுது.
i feel as though i did not do enough justice for your invite.

எனிவே எழுதி முடிச்சு பப்லிஷும் பண்ணியாச்சு.:):)

Radha Sriram said...

//super..கூனி சுந்தரி கதை எங்கேயோ கேட்டுரிக்கேன்.. //

நன்றி ஷக்தி ! கூனி சுந்தரி கதை கேட்ருகீங்களா?? நல்ல கதை இல்லையா?

SathyaPriyan said...

//
எனக்கு என்னவோ கொஞ்சம் சொதப்பிட்ட மாதிரி தோணுது.
i feel as though i did not do enough justice for your invite.

எனிவே எழுதி முடிச்சு பப்லிஷும் பண்ணியாச்சு.:):)
//
நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்கன்னு தெரியவில்லை.
தவறு செய்வது மனித இயல்பு. அதை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் குணம், அதுவும் முன் பின் தெரியாதவர்களிடம் அதை கேட்பது நிச்சயமாக அழகு தான். அதே போன்று தான் தங்கள் மகனின் செயலும்.

இனி தங்கள் கதை மற்றும் அழகு குறிப்பு. அகத்தில் மட்டுமே அழகை தேட வேண்டும் என்பதை இதை விட அழகாக கூற முடியாது.

சும்மா பாராட்ட வேண்டும் என்பதற்காக கூறவில்லை. உண்மையாக குறிப்பிடுகிறேன். உங்கள் பதிவு நன்று.

Radha Sriram said...

சத்யா,

எதோ அப்படி தோணிச்சு அதனால எழுதிட்டேன்.....உங்களோட புரிதலுக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி....

// சும்மா பாராட்ட வேண்டும் என்பதற்காக கூறவில்லை. உண்மையாக குறிப்பிடுகிறேன்//

அய்யோ நான் அப்படியெல்லாம் நினைக்கல.....சில சமயம் நம்ம எழுத்து நம்மளுக்கே திருப்தியா இருக்காது இல்லையா? அது மாதிரி இருந்தது இன்னும் கொஞ்சம் உழைச்சிருக்கலாமொன்னு.....thats it !!