Wednesday, March 07, 2007

Kite Runner - புத்தக சிபாரிசு

பல நாள் கழிச்சு மூச்சு விடாம படிச்சு முடிச்ச புத்தகம் " Kite Runner "- ஆங்கில நாவல். என்னோட தோழியின் சிபாரிசில் லைப்ரரி போயி எடுத்துட்டு வந்து படிச்சேன். கொஞ்சம் யோசனையோடதான் படிக்க ஆரம்பிச்சேன். ஏன்னா இதுக்கு முன்னாடி அவ எனக்கு சிபாரிசு செஞ்சது ஜும்பா லாஹிரி யோட "namesake". அவ அஹா ஒஹோன்னு புகழ்ந்து தள்ளிட்டு namesake படிக்காதவங்க எல்லாம் மனுஷங்களே இல்லங்கர மாதிரி ரொம்ப என்ன இழிவா பேசிட்டா. ரொம்ப மனசு நொந்து போயி நானும் நூலகதுக்கு போயி அத ஹோல்ட்ல போட்டு வாங்கி படிச்சா. அத படிக்காமையே நொந்திருக்கலாம் போல படிச்சு இன்னும் நொந்து நூலா போனேன். அப்படி ஒரு சாதாரணமான கதை களம். எனக்கு என்னமோ ரசிக்கவே இல்ல. சரி அத வுடுங்க.

"Kite Runner" ன்கர இந்த புத்தகத்த ஒரு ஆFகான் அமெரிக்கனான காலெத் ஹொசேனி(Khaledh Hosseini) எழுதியிருக்கிறார். தெளிந்த நீரோடையான எழுத்து. பாசாங்கு இல்லாமல் கோர்வையாக இருக்கிறது இவருடைய எழுத்து நடை. இது இவருடைய முதல் புத்தகமும் கூட. 2003 ல் வெளிவந்திருக்கிரது. திரைபடமாகவும் எடுத்துட்டு இருக்காங்க. 2007 நவெம்பரில் ரிலீஸ்.


அமீர்- கதாநாயகன். அமெரிக்காவில் கலிFஒர்னியாவில் வாழும் பிரபல எழுத்தாளன். இவன் தன்னுடைய கடந்த காலத்தை நினைச்சு பாக்கரது போல் ஆரம்பம். கதை அFகானிசஸ்தான்(ரஷ்ய ஆக்ரமிப்புக்கு முன்)காபுல் -பாகிஸ்த்தான், அமெரிக்கா, அfகானிச்த்தான் (டாலிபன் ஆட்சிக்கு கீழ் )என்று போகிறது..............

இதுக்கு மேல எழுதி எழுதி அழிச்சுட்டேங்க.....எனக்கே புடிக்கல.(spoilers and i thought i wasn't doing justice to the book!!) மன்னிச்சுக்கோங்க.....

இது ஒரு நல்ல நாவல் கண்டிப்பா படிங்க. வேற என்ன சொல்ல ??

8 comments:

சென்ஷி said...

//இதுக்கு மேல எழுதி எழுதி அழிச்சுட்டேங்க.....எனக்கே புடிக்கல.(spoilers and i thought i wasn't doing justice to the book!!) மன்னிச்சுக்கோங்க.....//

இதுக்கு நீங்க எழுதியிருக்கலாம். :(

சென்ஷி

Radha Sriram said...

வாங்க சென்ஷி...... மூணு நாலு தடவ எழுதினேன் பாருங்க......சரியாவே வரல ரொம்ப frustratingஅ இருந்துச்சு
அதான் அப்படியே விட்டுடேன்....

ஆனா கண்டிப்பா படிங்க.....Please :)

J S Gnanasekar said...

கீழ்க்கண்ட சுட்டியில் இப்புத்தகத்தைப் பற்றி எனது நண்பர் ஒருவரின் தளத்தில் நான் எழுதி இருக்கிறேன்.

http://puththakam.blogspot.com/2006/08/12-kite-runner.html

- ஞானசேகர்

Radha Sriram said...

வாங்க ஞானசேகர்,

உங்க பதிவ படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க. முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஒரு லின்கா குடுத்திருக்கலாம்.

எனக்கு விமர்சனமா எழுதற அளவு எழுத்து அனுபவம் இல்ல அதனால அப்படியே விட்டுடேன்...:)
Maybe this will lure some readers into reading this book!! :)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

எனக்குப் பிடிச்ச புத்தகம். சிறுவர்களின் உலகம் அழகாய் விரியும். அமீர் கதைகளை வாசிப்பது போல உருவாக்கிச் சொல்வது எதோ கண்முன்னால் பார்த்துக் கொண்டிருக்க நடப்பது போலிருந்தது. நானும் இதைப் பற்றி விமர்சனம் எழுதணும் என்று ஆரம்பித்து கடைசியாய் எழுதாமலே விட்டு விட்டேன். நான் வாசித்ததை குலைக்க விருப்பம் வரவில்லை.

உங்களுக்குப் பிடிக்குமா தெரியவில்லை.. எதற்கும் எடுத்து வாசித்துப் பாருங்கள். [பிடிக்கவில்லையென்றால் மூடி வைத்தால் ஆயிற்று. :O)) ]
Life of Pi (by Yann Martel)
The Alchemist (by Paulo Coelho)
The time travellers wife (by Audrey Niffenegger)
[We need to talk about Kevin (by Lionel Shriver)ம் பரிந்துரைத்தார்கள்.. இன்னும் வாசிக்கவில்லை.. நீங்களும் முயற்சிக்கலாம். :O)]

Radha Sriram said...

வாங்க ஷ்ரேயா,

எனக்கும் அமீரோட காரக்டெர் ரொம்ப பிடிச்சது...."Traumatised soul" அவனுடையது இல்லையா?
உங்களோட பரிந்துரைகளுக்கு ரொம்ப நன்றி ஷ்ரேயா..அதில் The alchemist மட்டுமே படித்திருக்கிரேன்.
இப்போது படித்துகொண்டிருப்பது
"The No 1 Ladies detective agency" by Alexander McCall Smith

ப்ரசன்னா (குறைகுடம்) said...

உங்களுடைய இந்த பதிவிற்கான சுட்டியை எனது "Kite Runner" பற்றிய பதிவில் இணைத்திருக்கிறேன், தங்களுக்கு ஆட்சேபம் இருக்காது என்று நம்புகிறேன்.

சரவணன் said...

spoilers சொல்லாமல்விட்டது பெரிய விஷயம். நிறைய பேர் சினிமா விமர்சனம் செய்கிறேன் பேர்வழின்னு கதையை ஆதியோட அந்தமா சீன் பை சீன் சொல்லிடறாங்க...A Thousand Splendid Suns படிச்சாச்சா? அதுபத்தி விரிவா எழுதுங்க! spoilers இல்லாமதான் :-)