Monday, March 26, 2007

விக்கி பசங்க மாதிரி !!

ஆரஞ்சு கவுண்டி ரெஜிஸ்டரில்(orange county register) சுமார் இரண்டு மாதம் முன்பு இந்த தளத்தை கொடுத்திருந்தார்கள். இந்த தளத்திற்க்கு நீங்கள் உங்களுக்கு பதில் தெரிந்து கொள்ளவேண்டிய கேள்விகளை வீடியோவாகவோ, இ மெயிலிலோ அனுப்பலாம். இங்கு என்ன விசேஷம் என்றால் அந்தந்த கேள்விகளுக்கான பதிலை அந்த துரையை சார்ந்தவர்களிடம் நேரில் சென்று வீடியோவாக எடுத்து போடுகிரார்கள். எல்லா கேள்விகளூக்கும் பதில் வரும் என்று சொல்ல முடியாது......கேள்விகளை அவர்கள் தேர்ந்தெடுத்து பதில் போடுவார்கள் என்று நினைக்கரேன். பல சுவாரசியாமான கேள்வி பதில்கள் இந்த தளத்தில் உள்ளன.

மிக சுவாரஸ்யமான ஒரு கேள்வி,

லாஸ் வேகாஸ் நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு ஹோட்டெல் அரையிலும் ஒரு இரவு கழிக்க விரும்பினால் எவ்வளவு காலம் நான் அந்த நகரத்தில் தங்க வேண்டி இருக்கும்??

பதில் : உலகத்திலேயே பெரிய ஹோட்டெல்களில் பதினேழு ஹோடெல்கள் லாச் வேகாஸ் நகரத்தில் உள்ளன. இந்த ஹோடெல்களில் மொத்தம் 135,503 அரைகள் உள்ளன. ஒவ்வொரு அரையிலும் ஒரு இரவு கழிக்க விரும்பினால், 371 வருடங்களில் முடித்து விடலாம். ஒரு அரையின் வாடகை ஒரு இரவுக்கு சுமார் $85 என்றாலும் $11.5 மில்லியன் செலவாகும்.

http://www.ansathat.com/


இந்த கேள்வியும் பதிலும் எப்படி நமக்கு useful அ இருக்கும் அப்படின்னு கேடிங்கன்னா.......எனக்கு சுத்தமா தெரியாது ! நம்ம வாழ்னாள்ல எவ்வளவோ junkஅ மண்டைகுள்ளா சேகரிக்கரோம் இதையும் வச்சுக்கோங்க அவ்வளவுதான் சொல்லுவேன்!!!

ஆனா நிஜத்துல பல நல்ல கேள்வி பதிலும் இருக்குங்க !!! chek it out !!

6 comments:

காட்டாறு said...

கலக்கலுங்க! மக்கள் எவ்வளவு Creative-ஆ இருக்குறாங்க பாத்தீங்களா? அசந்துதான் போய்ட்டேன்.

வெளிகண்ட நாதர் said...

சும்மா நீங்க போட்ட கணக்கு வெறும் ரூம் வாடகையோட போய்ட்டாதான் பரவாயில்லையே... அதுக்கும் மேலே போனா....!!!!

இலவசக்கொத்தனார் said...

நல்ல சுட்டி. இந்த மாதிரி நாங்க பண்ணனுமுன்னா ரொம்ப தூரம் போகணும். இப்போதைக்கு கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லறதோட நிறுத்திக்கிறோம். :))

நாகை சிவா said...

கண்ணக் கட்டுதே.....

பாரதிய நவீன இளவரசன் said...

useful information. thanks.
cheers- VV

சேதுக்கரசி said...

அது யாரப்பா விக்கி பசங்களக் காப்பியடிக்கிறது? :)