சீனா, பீய்ஜிங்கில் நடக்கப் போகும் 2008 சம்மர் ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் சார்பாக கலந்துகொள்ளப் போகும் அஞ்சு பாபி ஜோர்ஜ், சமீபத்தில் கொடுத்த பேட்டியில், தான் பி.டி. உஷாவை ஒரு உலகத் தரம் வாய்ந்த ஒரு தடகள வீராங்கனையாக பார்க்கவில்லை என்று கூறியிருக்கிரார்.
இதை படித்தவுடன் மிக வருத்தமாக இருந்தது. உஷா ஒரு சிறந்த ஓட்டப்பந்தையகாரர். அவர் இருந்த/பங்கு பெற்ற காலகட்டங்களில் தடகள விளையாட்டுக்கு இவ்வளவு முக்யத்துவம் இல்லை. அதுவும் பெண்கள் இத் துறையில் பங்கு பெறுவது மிக அறியதாகவே இருந்தது. ஷைனி வில்சன், M.D. வல்சம்மா முதலியோர் இவருக்கு பின்னால் வந்தவர்கள். கமல்ஜித் சாந்து, கீதா சுட்ஷி ஆகியோர் உஷாவிற்கு முன்னே ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றிருந்த போதிலும், தெற்கில் தடகள விளையாட்டை ஆர்வத்தோடு பார்க்க வைத்தது உஷாதான். உஷா, பெண்கள் இந்த துறையை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முன்னோடி என்றே சொல்லலாம். அவர் ஒரு சிறந்த வீராங்கனை. அவருடைய strides பார்ப்பதற்கே அவ்வளவு அருமையாக இருக்கும். நல்ல long stride மற்றும் அவருடைய body movement in motion ஒரே மாதிறி இருக்கும். அதாவது ஷைனி வில்சனை பார்த்திருந்தீர்கள் ஆனால் தெரியும், அவர் ஓடும் போது நிறைய தலையை அசைத்து சக்தியை செலவழித்து விடுவார், ஆனால் உஷாவிடம் அது இருக்காது. இந்த "பைய்யோலி எக்ஸ்ப்ரெஸ்" ஓடுவதை பார்க்க அத்தனை அழகு. லாஸ் ஏஞ்லெஸ் சம்மர் ஒலிம்பிக்ஸில் 400 மீட்டர் (hurdles) கலந்துகொண்டு வெண்கல பதக்கத்தை மயிரிழையில் (1/100th) தவறவிட்டார். இதன் மூலம் ஒரு ஒலிம்பிக் ஓட்டப்பந்த இறுதியில் கலந்து கொண்ட முதல் இந்திய பெண்மணியானார்.பேட்டியில் இதை குறிப்பிட்டு அஞ்சு, உஷா இவ்வளவு தூரம் வந்ததே சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மனி முதலான நாடுகள் கல்ந்துகொள்ளாததால்தான் என்று கூறியிருக்கிரார்.
மேலே கொடுத்திருக்கும் தளத்தில் இந்த செய்தியை வைத்து ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சர்ச்சை குறித்து உஷாவிடம் கேட்க்கபட்ட பொழுது, " அஞ்சு ஒரு குழந்தை மாதிரி, அவள் வளர்ச்சியை நான் பார்த்துகொண்டுதான் இருக்கிரேன். இந்தியா அவளிடம் இருந்து ஒரு பதக்கத்தை எதிர்பார்க்கிறது. இந்த வேளையில் நான் ஏதும் சொல்லி அவள் மனம் பாதிக்கப் படுவதை நான் விரும்பவில்லை" என்று மிகவும் பெருந்தன்மையாக கூறியிருக்கிரார்.
இப்படி பேசுவது Confidence or Arrogance ?? நான் அறியேன் பராபரமே.....!!! என்னவாக இருந்தாலும் எனக்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை.....
4 comments:
மக்களே என்னாவோ பண்ணபோயி என்னவோ ஆயிருச்சு....என்னோட பீட்டர் பதிவெல்லம் வெளில வந்து......அய்யோ கூச்சமா போயிருச்சு:):)என்ன பண்ணர்துன்னு தெரியாமா சத்தம் போடாம மூடி வச்சுட்டு வால்மார்ட் போயிட்டேன்........இதொ இந்த பதிவ பப்லிஷ் பண்ணத்தான் இத்தனை கூத்து:):)MY bad My bad........
இந்த கர்வம்..ஏதோவொரு கணத்தில் இவர்களுக்கெல்லாம் வந்து விடுகிறது..உஷாவின் பெருந்தன்மை..great!
ஆமாங்க பாசமலர், ஏன் இப்படி பேசிடராங்கன்னனு தெரியல.....எப்படியோ பதக்கத்தோட வந்து சேந்தா சரி..:):)
அறிவன் உங்க ஸ்மைலிக்கு நன்றி....:):) உங்க ஸ்மைலிய தொலைச்சிட்டேன் (deleted by mistake)மன்னிக்கவும்....:):)
Post a Comment