சரி இப்பொ எட்டு......random facts.....
1) மஹா சாது. இப்படி அப்படியில்ல......உங்களால கற்பனை பண்ணகூட முடியாது. சின்ன வயசில ஸ்ட்ரா டம்ப்லெர்ல பால் குடிச்சிட்டிருந்த எங்கிட்ட வந்து எங்கண்ணன் "பால் குடிக்கிறியா" ன்னு கேக்க ஆமான்னு தலையாட்டினேன், நல்லாருக்கான்னு கேட்டான்.......அதுக்கும் ஆமான்னு தலையாட்ட...... அப்ப மூக்கில வச்சு குடிச்சு பாருன்னு இன்னும் நல்லாருக்கும்னு சொல்ல நான் சரிதான்னு மூக்குல வச்சு உறிய மூச்சு குழாயில பால் போயி நான் திண்டாடினத நினைச்சா......இது சாதுதனம் இல்ல மக்குத்தனம்ன்னு நீங்க நினைச்சீங்கன்ன....நான் என்ன சொல்ல.....:)
2) Bedwetting was my nemesis!! கிட்டதட்ட ஒரு பதினோரு வயசு வரைக்கும் இரவில் படுக்கையய நினைச்சிருக்கேன். இத பத்தின புரிதல் அப்பல்லாம் யாருக்கும் அவ்ளோ கிடையாது......அதனால பல முறை அவமான பட்டிருக்கேன். இதுல என்ன வேடிக்கைனா எப்படியும் ராத்திரி இந்த அசம்பாவிதம் நடக்கும்கரதுனால ஒரு செட் ட்ரெஸ் எடுத்து என் தலகாணி பக்கத்துல வச்சுகிட்ட்டு படுத்துகுவேன். காரியம் ஆனவுடனே எப்படிதான் முழிப்பு வருமோ சட்டுன்னு முழிப்பு வந்து அப்பரம் போய் எல்லலத்தையும் மாத்திட்டு வந்து படுத்து அடுத்த நிமிஷம் தூக்கம்தான்.
3) படிப்புல பெரிய சாதனைல்லாம் பண்ணினதில்ல. ஆனா பள்ளிலயும் (உயர் நிலை வந்தப்ரம்தான் இதுதான் உலகம்ன்னு புரிய ஆரம்பிச்சுது.......அதுவரைக்கும் ஒரு மண்ணும் தெரியாது...)சரி காலெஜ்லயும் சரி நல்ல பாபுலர். ஏன்னா எல்லாவிதமான போட்டிகள்லேயும் கலந்துப்பேன். இருக்கர எல்லா க்ளப்லயும் மெம்பெர். எனக்கு பள்ளில விசிரிலாம் இருந்திருக்காங்கன்னா பாத்துக்கங்க்ளேன். ஆனா அது ஒரு வேண்டாத ஈகோ பூஸ்ட்டா போனது வேர கதை.
4) விளையாட்டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஓரளவு எல்லா விளையாட்டையுமே ஃபாலோ பண்ணுவேன். பள்ளில படிக்கர காலத்துல ஒரு நல்ல அத்லீட்டா இருந்தேன். காலெஜ்ல ஃபீல்ட் ஹாக்கி கொஞ்ச நாள் விளையாடி இருக்கேன். ஒரு சமயம் ஸ்டிக்கால செமையா அடி வாங்கினதால் அம்மா தடை போட்டுடாங்க. சரி இருக்கவே இருக்கு Interact club, NCC.....ன்னு விட்டுடேன்.....
5) அப்பா......மந்திர சொல் இல்லையா?? அப்பா வாயில் கான்செர் வந்து இறந்து போனார்.ரேடியேஷன்போது அவர் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. டாடா மெமோரியல் ஹாஸ்பிடல், மும்பைலதான் அவரோட சிகிச்சை நடைபெற்றது. சாப்பாட்டு ப்ரியர்.....கடைசியில் சாபிட முடியாமலே இறந்து போனார். அவர் படும் கஷ்டம் பார்த்து நாங்களெல்லாம் அவரை சீக்கிரம் அழைத்துகொள்ள கடவுளை ப்ரார்த்தனை செய்த்தது மறக்க முடியாது. He used to be such a fun loving person. The disease changed his whole personality.
6) பெங்களூர்ல இருந்தப்ப டாக்டர் சந்த்ரசேக்கர் இன்ஸ்டிட்யுட் ஆஃப் ஸ்பீச் அண்ட் ஹியரிங் ல சைன் லாங்குவேஜ் படிச்சது ரொம்ப சுவாரஸ்யமான ஒண்ணு. அப்ப அங்க வர குழந்தைங்களோட சைன் லான்குவேஜ்ல பேச முயற்சி பண்ணுவேன்......நான் யோசிச்சு யோசிச்சு பண்ரத பாத்து அவங்களுக்கு ஒரே சிரிப்புதான்.....
7) Driving test....இத பத்தி சொல்லலனா சரி இல்ல. ஏன்னா என் வாழ்கையில failures are stepping stones for success ன்க்ர பழமொழிய நல்லா உபயோகிச்சது அப்பதான். எல்லருக்கும் தெரிஞ்ச மாதிரி அமெரிக்கால ட்ரைவிங் தெரியலனா ஒண்ணும் செய்ய முடியாது......so DMV க்கு போயி written test கொடுத்துட்டு அதுல 100% வாங்கிட்டோம்னு ஒரே பெருமை. அப்பரம் தான் ஆரம்பிச்சுது என் கிரகம்......ஒரு தடைவ written test க்கு மூணுதடவை behind the wheel test கொடுக்கலாம். நான் மூணு தடவையும் பெயில். அப்ப திரும்பியும் written test கொடுக்கணும். எனக்கு ட்ரைவிங் சொல்லி கொடுத்தவர் ரொம்ப பாவம் நான் டெஸ்ட் கொடுக்க போரச்சேல்லாம் என் கைய்ய புடிச்சிகிட்டு நல்லா ப்ரரர்த்தனை பண்ணி அனுப்புவார். மறுபடியும் டெஸ்ட் எழுதி மூணாவது தடவைததன் பாஸ் பண்ணினேன். நான் பாஸ் பண்ணினதுக்கு என்னவிட எங்க வீட்லயும் என்னோட instructer ம் தான் ரொம்ப சந்தோஷ பட்டாங்க.
8) வேர ஒண்ணும் இல்லையே எழுத......so one of the random fact அ இத வச்சுகோங்க.....நான் 5 foot 6 inches உயரம் 134 lb எடை.....
நான் அழைப்பது.....
வெங்கட்
ப்ரசன்னா
Bad News India
வினையூக்கி
எட்டின் விதிகள் இப்ப ஓரளவு எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிரேன்......இங்க நான் கூப்பிட்டு இருக்கரவங்க ஏற்கனவே எழுதிட்டாங்களா தெரியல......சரி எழுதாதவங்க எழுதுங்க......
30 comments:
அசத்தல் .சூப்பர். சிம்பிள். உண்மை. மனசு. இத்தனையும் எட்டாப் பகிர்ந்து கொடுத்தீட்டீங்க. ராதா.
அப்பாவை நினைத்தால் கஷ்டமாக இருக்கு.
யாருக்கும் இந்த உடம்பு வரக்கூடாது.
உங்க அம்மா என்ன பாடுபட்டாங்களோ.
ஓ , என்னையும் ஒரு வலைப்பதிவாளராக மதித்து அழைத்தமைக்கு நன்றி ராதா, :) இந்த விளையாட்டின் விதிமுறைகளை சொன்னா , விளையாட ஏதுவாக இருக்கும் :)
ஸ்ரீஷிவ்....:)
உங்க ஏழு + 1 அருமை. மூக்குல ஸ்ட்ரா வைத்து குடித்தேன்னு எழுதினதை படிக்கிறப்ப என்னறையும் அறியாமல் குபீர் சிரிப்பு வந்துவிட்டது.
அழைப்புக்கும் நன்றி. விரைவில் எட்டு போட்டுட்டு சொல்றேன்.
எனக்கு ட்ரைவிங் சொல்லி கொடுத்தவர் ரொம்ப பாவம் நான் டெஸ்ட் கொடுக்க போரச்சேல்லாம் என் கைய்ய புடிச்சிகிட்டு நல்லா ப்ரரர்த்தனை பண்ணி அனுப்புவார்.//
சூப்பர் :-)))
//சாப்பாட்டு ப்ரியர்.....கடைசியில் சாபிட முடியாமலே இறந்து போனார் //
:(((
// சர்வேசன் "அளவுக்கு" எதிபார்த்தீங்கன்னா ரொம்ம்ம்ம்ப ஏமாந்துதான் போவீங்க//
:)
உங்க எட்டும் சூப்பர்.
அட இந்தப் படுக்கை நனைக்கு வியாதி
ஒங்களுக்கும் இருந்ததா? சீ இது நமக்குதான் என இவ்வளவு நாளும் இறுமாப்பா வெளியே சொல்லாமல் இருந்தேன்.
எங்கம்மாவுக்கு யாரோ கோவில் நந்திக்கு வைத்த பிரசாதம் சாப்பிட்டால் நிற்குமெனக்கூற , ஐயரிடம் கேட்டு வாங்கி தந்தார்( வழமையாகக் காகத்துக்கு எறிவது)
அன்றிரவு சற்றுக் கூடப் போனதென நினைக்கிறேன்.
ராதா எட்டு போட்டுட்டேன் பா..
நீங்க சைன் லேங்குவேஜ் கத்துகிட்டீங்களா ம்...பரவால்லயே..
//அசத்தல் .சூப்பர். சிம்பிள். உண்மை. மனசு. இத்தனையும் எட்டாப் பகிர்ந்து கொடுத்தீட்டீங்க. ராதா.
அப்பாவை நினைத்தால் கஷ்டமாக இருக்கு.
யாருக்கும் இந்த உடம்பு வரக்கூடாது.
உங்க அம்மா என்ன பாடுபட்டாங்களோ.//
வல்லி மேலே 'within quotes'
ஏதோ தோணினத எழுதினேன்.... அப்பா போனது மனசுக்கு ரொம்ப கஷ்டமான விஷயம்....terminal illness அம்மா ரொம்ப கஷ்டபட்டாங்க....ஆனா bitterness இல்லாம வெளில வந்துட்டாங்க. விவேகி...இப்பொ 18 ஜூலை அமெரிக்கா வராங்க.அவங்க முதல் வருகை ரொம்ப ஆவலா எதிர்பார்க்கிரேன்....
//ஓ , என்னையும் ஒரு வலைப்பதிவாளராக மதித்து அழைத்தமைக்கு நன்றி ராதா, :) இந்த விளையாட்டின் விதிமுறைகளை சொன்னா , விளையாட ஏதுவாக இருக்கும் :)
ஸ்ரீஷிவ்....:) //
ஏங்க நீங்க ரொம்ப நாளா வலை பதியரீங்களே.....பிஹு நடனத்த பத்தி கூட நீங்க எழுதி ஒரு வீடியோ போட்ருந்தீங்க....எனக்கு அந்த நடனம் ரொம்ப பிடிக்கும். NCC ல இருந்தப்பொ அந்த நடனம் கத்துகிட்டு ஆடியிருக்கேன்....!! சீக்கரமா எட்ட போட்டு அசத்துங்க....விளையாட்டு விதிகள அனுப்பியிருந்தேன் கிடைச்சுதா?
//உங்க ஏழு + 1 அருமை. மூக்குல ஸ்ட்ரா வைத்து குடித்தேன்னு எழுதினதை படிக்கிறப்ப என்னறையும் அறியாமல் குபீர் சிரிப்பு//
ஆமாங்க எங்கண்ணனுக்கு நான் ஒரு விளையாட்டு பொருளாதான் ரொம்ப நாள் இருதேன். உங்க எட்டயும் படிச்சிட்டேன்...
//என் கைய்ய புடிச்சிகிட்டு நல்லா ப்ரரர்த்தனை பண்ணி அனுப்புவார்.//
சூப்பர் :-))) //
ஆமா உஷா பாவம் வயசானவர்.....ஒரு சைட் பிசினெஸ்ஸாதான் ட்ரைவிங் ஸ்கூல் நடத்திட்ருந்தார்.....நான் பண்ண டார்ச்சர்ல பாவம் நொந்து போயிருப்பார்.
வாங்க இளவஞ்சி.....சொல்ல முடியாத வேதனை அனுபவிச்சார்....we were helpless....ம்ம்ம்
அஹா சர்வேசன்......உங்க அளவுக்கெல்லாம் எட்ட முடியுமா என்ன??:):)
//அட இந்தப் படுக்கை நனைக்கு வியாதி
ஒங்களுக்கும் இருந்ததா? சீ இது நமக்குதான் என இவ்வளவு நாளும் இறுமாப்பா வெளியே சொல்லாமல் இருந்தேன்.
எங்கம்மாவுக்கு யாரோ கோவில் நந்திக்கு வைத்த பிரசாதம் சாப்பிட்டால் நிற்குமெனக்கூற , ஐயரிடம் கேட்டு வாங்கி தந்தார்( வழமையாகக் காகத்துக்கு எறிவது)
அன்றிரவு சற்றுக் கூடப் போனதென நினைக்கிறேன்.//
அய்யோ யோஹன் இதால பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் இல்லங்க.....எங்கம்மா வேர ஊருக்கு என்கயாவது போனா அவங்ககிட்ட என்னுடைய விஷயத்த சொல்லி, அவளுக்கு ஒரு பழைய பாய் இருந்தா கொடுத்ருங்க அப்படிம்பாங்க...அவங்களும் ஒரு நமுட்டு சிரிப்போட.....குடுப்பாங்க பாருங்க.....அழுகையும் கோவமும் சேர்ந்து வரும்....இப்ப இதுக்கு சிகிச்சையும் வந்த்ருச்சு சில பேரு இது பரம்பரைன்னு கூட சொல்ராங்க.....:):)
//:-) //
நன்றி கொத்தனார்.....:):)
உங்க அப்பா மேட்டரை படித்ததும் அப்செட். கேன்சர் வலியின் வேதனை எனக்கும் தெரியும். அதை விட இழப்பின் வலி கொடியது...
//2) Bedwetting was my nemesis!! கிட்டதட்ட ஒரு பதினோரு வயசு வரைக்கும் இரவில் படுக்கையய நினைச்சிருக்கேன். //
இதையெல்லாம் நாங்க பரம்பரை பரம்பரையா செய்துக்கிட்டு வாரோமில்ல. நான் எனக்கு நெனவு தெரிஞ்ச கொஞ்ச நாள் இதை சின்சியரா செய்து வந்தேன். இப்போ என் பையன். பேம்பர்ஸ் போட்டுக்க மாட்டேன் படுக்கைய நெனைக்காம விடமாட்டேன்னு அடம்பிடுக்கிறானே... படுக்கைய டாய்லெட்டா மாத்துறதில எனக்கிருந்த அதே சந்தோசம் அவனுக்கும்... நாறப்பய...
நன்றி ராதா.
8 பல யதார்த்த உண்மைகள். நல்லாயிருக்கு. //இது சாதுதனம் இல்ல மக்குத்தனம்ன்னு நீங்க நினைச்சீங்கன்ன....நான் என்ன சொல்ல...// ம்ம் அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு ;-)
:-)))
super
ஓ! அது நீங்கதானா மூக்கால ஸ்ரா வச்சி உறிஞ்சுனது :-)
என் பையனும் படுக்கையில் மூச்சா கேசுதான், இருந்தாலும் பெரிசு பண்றதில்ல...
#5............ ரொம்பக் கஷ்டமிங்க... :(( சாரி...
#6 சூப்பர்ப் முயற்சி... நம்மூர்ல ரொம்பக் கம்மி இந்த ஃபீல்டுல
#7 புதுசா வாரவங்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய சவால்தான் இங்க... நான் ஓட்டிப் பழகும் பொழுது வேண்டிக்குவேன் எதிர்த்தாப்பில ஒரு வண்டியும் வரக்கூடாதுடான்னு ;-)))
நன்று, நன்று...
எளிமையான எட்டு போட்டுட்டீங்க. நல்லாருக்கு.
அப்பா பத்திப் படிக்கும் போது மனசு கஷ்டமாயிருக்கு. சமீபத்துல எங்க அப்பாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அப்ப ஆஸ்பித்திரி ஐசியூல அவரை அரைமயக்கத்துல பாக்கும் போது..அப்பப்பா....மனசுக்குள்ள என்னென்ன உணர்ச்சிகள். அத்தனையையும் முகத்துலயோ ஒடம்புலயோ காட்டாம....முருகா...நான் விடுங்க..எங்கம்மா...அவங்களும் அதே மாதிரிதான். இப்ப அப்பா நல்லாயிருக்காங்க. ஆனா எங்கம்மா துணிச்சலா எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாங்க. மனசுக்குள்ள மருக்குன்னு இருந்திருந்தாலும் காட்டிக்கலை.
உண்மையிலே Super 8 !!
//இதையெல்லாம் நாங்க பரம்பரை பரம்பரையா செய்துக்கிட்டு வாரோமில்ல. நான் எனக்கு நெனவு தெரிஞ்ச கொஞ்ச நாள் இதை சின்சியரா செய்து வந்தேன். இப்போ என் பையன். பேம்பர்ஸ் போட்டுக்க மாட்டேன் படுக்கைய நெனைக்காம விடமாட்டேன்னு அடம்பிடுக்கிறானே... படுக்கைய டாய்லெட்டா மாத்துறதில எனக்கிருந்த அதே சந்தோசம் அவனுக்கும்... நாறப்பய...//
இது நிறைய குழந்தைங்களுக்கு இருக்கர பிரச்சனைதான் விஜய்.....நாமதான் கொஞ்சம் பொறுமையா ராத்திரி அலார்ம் வச்சு எழுந்து அவங்கள கொண்டு விட்டு பழக்கணும்......வழக்கம் போல சொல்ல வந்தத காமெடியா சொல்லிடீங்க.....!!!
அப்பா விஷயம்.....ஹ்ம்ம் மனசுல ஒரு வடுவா தங்கி போனது.....
//8 பல யதார்த்த உண்மைகள். நல்லாயிருக்கு. //இது சாதுதனம் இல்ல மக்குத்தனம்ன்னு நீங்க நினைச்சீங்கன்ன....நான் என்ன சொல்ல...// ம்ம் அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு //
வாங்க ஜெசிலா.... அய்யோ ஆமாங்க நான் ஒரு மாறி.என்ன சொல்லரது....பரப்ரம்மமா இருந்துட்டேன்.....:):) i was totally oblivious to things going around me....
//:-)))
super //
வாங்க சிவா...ரொம்ப நன்றி.....:):)
//ஓ! அது நீங்கதானா மூக்கால ஸ்ரா வச்சி உறிஞ்சுனது :-)
என் பையனும் படுக்கையில் மூச்சா கேசுதான், இருந்தாலும் பெரிசு பண்றதில்ல...
#5............ ரொம்பக் கஷ்டமிங்க... :(( சாரி...
#6 சூப்பர்ப் முயற்சி... நம்மூர்ல ரொம்பக் கம்மி இந்த ஃபீல்டுல
#7 புதுசா வாரவங்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய சவால்தான் இங்க... நான் ஓட்டிப் பழகும் பொழுது வேண்டிக்குவேன் எதிர்த்தாப்பில ஒரு வண்டியும் வரக்கூடாதுடான்னு ;-)))
நன்று, நன்று...//
ஆஹா வாங்க தெக்கி..... உங்க நன்றுக்கு நன்றி... ஒவ்வொணுத்துக்கும் பொறுமையா காமெண்ட் பண்ணதுக்கு இன்னொரு நன்றி.........:):)
//எளிமையான எட்டு போட்டுட்டீங்க. நல்லாருக்கு.
அப்பா பத்திப் படிக்கும் போது மனசு கஷ்டமாயிருக்கு. சமீபத்துல எங்க அப்பாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அப்ப ஆஸ்பித்திரி ஐசியூல அவரை அரைமயக்கத்துல பாக்கும் போது..அப்பப்பா....மனசுக்குள்ள என்னென்ன உணர்ச்சிகள். அத்தனையையும் முகத்துலயோ ஒடம்புலயோ காட்டாம....முருகா...நான் விடுங்க..எங்கம்மா...அவங்களும் அதே மாதிரிதான். இப்ப அப்பா நல்லாயிருக்காங்க. ஆனா எங்கம்மா துணிச்சலா எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாங்க. மனசுக்குள்ள மருக்குன்னு இருந்திருந்தாலும் காட்டிக்கலை. //
வாங்க ராகவன்.....அப்பா விஷயம் ரொம்ப மனச பாதிச்ச விஷயம்.....உங்க அப்ப நல்லாருங்காங்கன்னு கேட்டு ரொம்ப சந்தோஷம்....
வயசானப்புரம் துணைய இழக்கரது ரொம்ப வேதனை...இன்றியமையாததுன்னு தெரிஞ்சப்புரமும்....இல்லையா??
அப்புரம் ரொம்ப நாளா ஒண்ணு சொல்லணூம்ன்னு..உங்க முகதுக்கு உங்க பேரு ரொம்ப நல்ல பொறுத்தம்.:):)
நல்லா இருந்தது, வாழ்த்துக்கள்!
இந்த எட்டு தொடர்கள் நல்ல அணுகுமுறை. எளிமையான எட்டு போட்டாலும், சில வரிகள், குறிப்பாக தந்தையை பற்றியவை, எங்கள் வாழ்க்கையயும் ஒரு நிமிடம் முன்னிறுத்தி கனக்க வைக்கின்றது. எட்டு பிள்ளைகளுக்கு தந்தையான என் தந்தை, தற்பொழுது சிறு நீரகம் பழுதடைந்த்தால் மிகவும் சிரமப்படுவது கண்முன் வந்து நின்றது. எனது தாயார்தான் பார்த்துக் கொள்கிறார். தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
Post a Comment