Monday, June 15, 2009
32 !
பதிவுகள் எழுத ஆரம்பித்த போது இருந்த ஆர்வம் குறைந்துபோன நேரத்தில் ஸ்ரீதரின் அழைப்பு வந்தது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.அங்கீகாரத்திற்குத் தான் மனது எப்படி ஏங்குகிறது என்று நினைத்துக் கொண்டேன். வாய்பை கொடுத்த ஸ்ரீதர் நாராயணனுக்கு நன்றி. 32 கேள்விகளுக்கும் பதில் அளிக்க முயற்சி செய்துள்ளேன்.
1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
சரியான ஆளைப் பார்த்து சரியான கேள்வி.என் பெயர் எனக்கு சுத்தமா பிடிக்காது.இதை பற்றி எழுத ஆரம்பித்த புதிதில் ஒரு பதிவே சமர்பணம்.ஆர்வம் உள்ளவர்கள் படிக்காலாம். மற்றபடி பெயர் காரணம் தாத்தாவின் பஜனை ப்ரியத்தால்.
2) கடைசியா அழுதது எப்போது?
இரண்டு வாரம் இருக்கும் என்று நினைக்கிறேன். பொசெல்லியின் " நேசும் டார்மா" கேட்டு.
3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பிடிக்கும் பிடிக்காது என்றெல்லாம் இதுவரை யோசித்தது இல்லை. கேள்விக்கு பின் யோசித்த போதும் சரியான பதிலை சொல்லத் தெரியவில்லை.பிடிப்பதற்கும் பிடிக்காமல் இருப்பதற்கும் இதில் என்ன இருக்கிறது என்றே தோன்றுகிறது.புரியும்படி இருந்தால் எதேஷ்ட்டம்.
4) பிடித்த மதிய உணவு?
நெய் விட்டு பிசைந்த பருப்பு சாதத்தோடு வற்றல் குழம்பு.அமிர்தம்:)
5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
வைத்துக்கொள்வேன்.
6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
இரண்டும் பிடிக்காது.குளியலறையே வசதி.
7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
மொத்தமா ஒரு பார்வை பார்த்துவிட்டு பேச ஆர்மபித்த பின் அதில் மட்டுமே கவனம்.கை ஆட்டி பேசும் போது நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்கிறார்களா என்பதில் சிறு கவனம் உண்டு.
8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
மறதி.(பல விஷயங்களில்) இதுவே பிடிச்சதும் பிடிக்காததும்.
9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
நேரம் தவறாமை பிடிச்ச விஷயம். அதற்காக முந்திரிக் கொட்டை போல் எப்போதும் முன்னாடி போய் உட்காருவது சில சமயம் சங்கடம் !
10) இப்போ யார் பக்கத்துல இல்லாமல் போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்பா.
11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
க்ரே நிற டி- ஷ்ர்ட், வெள்ளை பஜாமாஸ்.
12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
டி.வி அணைத்து வைத்துள்ளேன்.பாட்டும் ஒண்ணும் கேட்டுக் கொண்டு இல்லை
13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
படிக்கும் காலத்தில் பிடித்த ஹீரோ பேனாவின் வர்ணத்தில். கீழெ மெரூன், மூடி தங்க நிறம்.
14) பிடித்த மணம்?
ஈயச் சொம்பில் கொத்திக்க வைத்த ரசத்தின் மணம், கருவேப்பிலையின் மணம், புத்தகத்தில் வைத்திருக்கும் காய்ந்து போன அரச இலையின் மணம்.
15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
சிரில் அலெக்சிஸ். தேன்னாட்டம் இனிக்கும் எழுத்து இவருடையது.ரொம்ப நாளா ஆளை காணோம்.
பத்மா அர்விந்த்.தேன் துளியில் சமூக சிந்தனையோடு பல பதிவுகளை பார்க்கலாம்.
சர்வேசன் நல்ல ஒரு காக்டெயில் இவருடைய பதிவுகள்
16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
இவருடைய வித்யாசமான சிறு கதைகள்.எழுத்து நடை அழகு கூடிக் கொண்டே போகிறது.
17) பிடித்த விளையாட்டு?
எல்லா விளையாட்டுமே பிடிக்கும்.
18) கண்ணாடி அணிபவரா?
இல்லை.
19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
வரலாறு சார்ந்த திரைபடங்கள் ரொம்ப பிடிக்கும்.
20) கடைசியாகப் பார்த்த படம்?
Lives of others.
21) பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம்.
22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
Home - A Memoir of My Early Years by Julie Andrews
23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
நான் மாறுவதில்லை.வீட்டில் யாராவது மாற்றினால் தான் உண்டு.
24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது-காலையில் கேட்கும் குருவிகளின் சத்தம்.வீட்டுக்கு பின்னாடி பேர்ட் ஃபீட் வைத்திருப்பதால் தினம் தோறும் கேட்க ரம்யமாக் இருக்கிறது.
பிடிக்காதது- வேறென்ன காலை அலாரம் தான்!
25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்தது அதிக தொலைவுதானே?மற்றபடி லாஸ் ஆஞ்செலெசிலிருந்து நியு யார்க் போனது.
26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
தெரியவில்லை.
27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அந்த விஷயத்தை உதாசீனப் படுத்திவிட்டு போய் கொண்டே இருக்க பழகியாச்சு.
28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அவ்வபோது எட்டிப் பார்க்கும் மன சோர்வு.
29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
இந்தியாவில் மூணார் ரொம்ப பிடித்திருந்தது.
30) எப்படி இருக்கணும்னு ஆசை?
நல்ல சந்தோஷமாய் இப்படியே இருக்க.
31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
தனியாக ஒரு ரோட் ட்ரிப் பண்ண ஆசை.
32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
Box of Chocolates?!!
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
Radha,உண்மைப் பிரியை!! படிக்க சுவாரஸ்யமா இருந்தது.
அதென்ன அரச இலை மணம்!! ம்ம். வாசனை பார்க்கணும்.
ஜூலி அண்ட்ரூஸா:)) ஸ்ப்ரிங் இன் த ஏர் ராதா:)????
அங்கீகாரத்திற்குத் தான் மனது எப்படி ஏங்குகிறது என்று நினைத்துக் கொண்டேன்.--//
உண்மைதான் அதற்க்காக எழுத எழுததான் அங்கீகாரம் வரும் , எழுதுங்கள் நிறைய எழுதுங்கள் எழுத எழுததான் எழுத்தில் முதிர்ச்சி வரும்
அன்புடன் ஜாக்கி
Lives of others
இந்த படத்தின் கிளைமாக்ஸ் மறக்க முடியாத ஒன்று
நெய் விட்டு பிசைந்த பருப்பு சாதத்தோடு வற்றல் குழம்பு.அமிர்தம்:)
அப்ப நீங்க அமெரிக்க மாமிதானே?
///நேரம் தவறாமை பிடிச்ச விஷயம். அதற்காக முந்திரிக் கொட்டை போல் எப்போதும் முன்னாடி போய் உட்காருவது சில சமயம் சங்கடம் !//
sirippai varavaithadhu. :)
same pinch here.
thanks for the invite. will comeup with my 32 soon.
:) சங்கிலியை தொடர்ந்ததற்கு மிகவும் நன்றி.
சிறில், பத்மா, சர்வேசன் எல்லோரும் தொடர்வார்கள் என்றே நினைக்கிறேன்.
பதிவில் அங்கீகாரம் எல்லாம் ’நமக்கு நாமே’ போலத்தானே. தொடர்ந்து எழுதுங்கள்.
வல்லி வாங்க..காய்ந்து போன இலைகளுக்கு ஒரு வாசனை உண்டு அதைத்தான் சொன்னேன்.
ஜூலி ஆண்ட்ர்ரூஸ் எனி டைம் வல்லி:):)
ஜாக்கி சேகர், வாங்க. எழுத எழுத அங்கீகாரம் வரும் தான். மறுபடியும் தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கறேன்.
Lives of others.. எனக்கும் அதன் முடிவு ரொம்பவே பிடித்திருந்தது:):)
ஸ்ரீதர் என்னதான் நமக்கு நாமே என்றாலும்..கூப்பிட்டவுடன் ஏதோ சந்தோஷமாக இருந்தது.
நன்றி லாம் எதுக்கு?? :):)
சர்வேஸ் உங்கள் சுவாரஸ்யமான 32 எதிர்பார்க்கிறேன். உங்க 8 ஐ மறக்க முடியுமா??:):)
Radha, போட்டாச்சு.
http://surveysan.blogspot.com/2009/07/blog-post.html
ஆஃபீஸ்ல மண்டை காயுவதில், சுவாரஸ்யமெல்லாம் மைனஸாயிடுச்சு ;)
Post a Comment