Wednesday, April 23, 2008

இரட்டை பதிவர்கள் இம்சை...

இரண்டு வாரம் முன்னாடி நான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு ஓண்ணரை மணி நேரத்தில போயிடகூடிய மாலிபுல இருக்கர கோவிலுக்கு போயிருந்தேன். நல்ல அழகான கோவில்.அமெரிக்காவில கட்டப்பட்டிருக்கர நிறைய கோவில் போல இங்கேயும் பெருமாளும் சிவனும் இருக்காங்க.நம்மூர் போல கோபுரத்தோட உள்ள கோவில்.சரி போயி பெருமாள தரிசனம் பண்ணலாம்னு உள்ள போனா சனி கிழமைனால ஒரே கூட்டம்.பெருமாள் சர்வாலங்காரத்தோட நின்னுகிட்டு இருக்காரு..அவ்ளோ அழகு.கிட்ட போக முடியாது.சரி இருக்கட்டும் எட்டி பாத்து கன்னத்துல போட்டுகிட்டே கண்ண மூடினேன் பாருங்க......அப்படியே மனக் கண் முன்னால நம்ம KRS ரவியும், திருவரங்கப் ப்ரியாவும்(ஷைலஜா.!!) வராங்க.அடாடா இந்த பெருமாள பார்த்தா அவங்க எவ்ளோ ரசிச்சுருப்பாங்க அப்படீன்னு நினைச்சுகிட்டேன்.கொஞ்ச நேரம் நின்னு பாத்தேன் தீர்த்தம் வாங்கிக்கலாமேன்னு ஆனா நேரம் ஆகும் போல இருந்ததனால கீழ இறங்கி சிவன் சன்னிதிக்கு போயிட்டேன்.பிள்ளையார் சிவன தரிசனம் பண்ணிட்டு முருகன் சன்னிதிக்கு வந்து கண்ண மூடி நின்னு அஹா முருகனுக்கு என்ன ஸ்லோகம்னு யோசிக்கரதுக்குள்ள கண் முன்னாடி வந்து நிக்கராங்க குமரனும் ஜீராவும். இதென்னாடாது...சரியா சாமி கும்பிடகூட முடியாம இப்படி இம்சை பண்ராங்களேன்னு நினைச்சுகிட்டு ஒரு பெரிய நமஸ்காரமா பண்ணிட்டு வந்துட்டேன்.


கோவிலுகு போன கதைதான் இப்படின்னா..போன வாரம் கச்சேரிக்கு போயிருந்தேன்.தேன்னா தேனே வந்து பாய்ஞ்சுது காதுல.அப்படி ஒரு அம்சமான கச்சேரி.அங்க போயி உக்காந்து மெய்மறந்து இருக்கரச்சே திடுதிப்புன்னு வந்து நிக்கராங்க துளசி.இந்த இடத்துல துளசி இருந்திருந்தா கச்சேரிய படம் புடிச்சு ஒரு பதிவா போட்ருப்பாங்கன்னு நினைச்சுகிட்டேன்.பக்கத்துல சிமுலேஷன் இருந்திருந்தா இன்னும் கன ஜோரா ரசிச்சு ராகங்கள பத்தி பேசியிருக்கலாம்னு தோணுச்சு.அவரும் அத பத்தி விலாவாரியா ஒரு பதிவ போட்டு ஜமாய்ச்சிருப்பார்ன்னு நினைச்சுகிட்டேன்.இவங்கள பத்தின யோஜனைல RTP ல இரண்டு ராகத்தை மிஸ் பண்ணிட்டேன்.

சரி அது போகட்டும்னு வீட்டுக்கு வந்து you tube ல ஏதோ தேடரச்சே...MADLIB வீடியோ பாக்க கிடைச்சது.இது ஒரு விளையாட்டு.ஆங்கிலத்துல எழுதப்பட்ட ஒரு பத்திய எடுத்து அதுல இருக்கர noun,pronoun,verb,adverb,adjective எல்லாத்தையும் எடுத்துட்டு நமக்கு இஷ்டமானத போட்டு படிக்கரது. அப்ப ரொம்ப வேடிக்கையா அர்த்தம் வேறுபட்டு சம்பதமில்லாமல் அந்த பத்தியே திரிஞ்சு போயிடும்.ஒவ்வொருத்தரும் அவங்க கற்பனைய இதுல காட்டலாம்.இதன் மூலம் ஆங்கில இலக்கணத்தையும்,பல வார்த்தைகள உபயோகபடுதுவதையும் ஒரு விளையாட்டு முறையில் சொல்லித்தரலாம்..Genetic Blend ன்னு ஒருத்தர் மத்த you tube உபயோகப்படுத்தரவங்க கிட்ட இந்த மாறி நிறைய வார்த்தைகள வீடியோ ரெஸ்பான்ஸ் பண்ண சொல்லியிருந்திருக்கிரார்.அவங்கெல்லாம் குடுத்த வார்த்தைகள வச்சு அவர் ஒரு சூப்பெர் வீடியோ தயாரிச்சிருக்கிரார். கிட்டதட்ட 130 பேர் பங்கு பெற்றிருக்காங்க.வீடியோ லிங்க் கீழே

http://www.youtube.com/watch?v=rajiaHpIoKM

இத பாத்தொடனே எனக்கு என்ன தோணுச்சு அடாடா நம்ம பெனாத்தலார் கிட்டயோ கொத்ஸுகிட்டயோ இத சொல்லி தமிழ்ல இந்த மாதிரி ஏதாவது பண்ண சொல்லனும்னு.:)


அதனால நான் இங்க என்ன சொல்ரேன்னா இந்த மாதிரி எங்க போனாலும் எதை பண்ணினாலும் இரண்டு இரண்டு பதிவர்களா வந்து இம்சை பண்ராங்க......இதுக்கும் நான் வெறும் தமிழ்மணம் தேன்கூடுன்னு இரண்டே இரண்டு திரட்டிதான் படிக்கரேன்..

வ.வா சங்கப்போட்டிக்கு...

15 comments:

ILA (a) இளா said...

:)
?ர

Anonymous said...

வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்ல கற்பனை

துளசி கோபால் said...

ஆஹா......... ராதா.....

இப்பத்தாம் மாஸ்டர் அனந்தராமனின் 'பிபரே ராமரஸம்' கேட்டுட்டு, அந்தக் குழந்தைப்பையன் என்னமாப் பாடறான்னு பின்னூட்டிட்டு இங்கே வந்தா நம்ம மாலிபு பெருமாள்.

எனக்கும் அங்கே வர்றதா ஒரு பிரார்த்தனை இருக்கு.

நீங்க சொன்னது என்னவோ உண்மைதான். இந்தப் பதிவர்கள் இம்சை வரவரத்தாங்கலைப்பா. எங்கே போனாலும் இப்படி யாராவது மனசுலே வந்து போறாங்க.

நேத்துப் பார்த்த படத்தில்(த்ராபை)கூட நம்ம குமரன், சிவமுருகன், கல்கரிசிவா, கொத்ஸ்ன்னு பலர் கூடவே வந்தாங்கன்னா பாருங்க:-)

SathyaPriyan said...

Radha இதுக்கு பேரு தமிழ்மணமோஃபோபியா.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Radha Sriram said...

//:)// ?ர்
என்ன இளா எப்ப வந்தாலும் மைய்யமா இப்படி ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு போயிர்ரீங்க.??:)
க்வெஸ்டிய மார்க் அப்புறம் அந்த ர க்கு என்ன அர்த்தம்??

Radha Sriram said...

//வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்ல கற்பனை//

நன்றி சின்ன அம்மிணி..:)

Radha Sriram said...

//ஆஹா......... ராதா.....

இப்பத்தாம் மாஸ்டர் அனந்தராமனின் 'பிபரே ராமரஸம்' கேட்டுட்டு, அந்தக் குழந்தைப்பையன் என்னமாப் பாடறான்னு பின்னூட்டிட்டு இங்கே வந்தா நம்ம மாலிபு பெருமாள்.

எனக்கும் அங்கே வர்றதா ஒரு பிரார்த்தனை இருக்கு.//

துளசி ப்ரார்த்தனைய முடிக்க கண்டிப்பா வாங்க நம்ம ரெண்டு பேரும் ஊரையெ கலக்கி புடலாம்...அது சரி உங்க ஊர்ல பெருமாள் கோவில் இல்லையா அதெப்படி மாலிபு பெருமாள்கிட்ட வேண்டிகிட்டீங்க:)??ப்ரார்த்தனையெல்லாம் தள்ளி போட கூடாது தெய்வ குத்தம் ஆயிரும்னு சொல்லி பொட்டிய கட்டிட்டு வெகேஷனுக்கு கிளம்பர ஐடியா சூப்பெர்.:)

//நீங்க சொன்னது என்னவோ உண்மைதான். இந்தப் பதிவர்கள் இம்சை வரவரத்தாங்கலைப்பா. எங்கே போனாலும் இப்படி யாராவது மனசுலே வந்து போறாங்க.

நேத்துப் பார்த்த படத்தில்(த்ராபை)கூட நம்ம குமரன், சிவமுருகன், கல்கரிசிவா, கொத்ஸ்ன்னு பலர் கூடவே வந்தாங்கன்னா பாருங்க:-)//

அதாங்க மஹா இம்சை:):)

Giriraj said...

நம் தமிழ்நாட்டு கோவிலைப் போன்ற ஒரு உணர்வைத் தருவது மலிபு மந்திர். அங்கு இருக்கும் புரோகிதர்களும் பெரும்பாலும் தமிழர்களே. நான் அடிக்கடி செல்வது உண்டு.

Radha Sriram said...

//Radha இதுக்கு பேரு தமிழ்மணமோஃபோபியா.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

இது ஃபோபியாவா மேனியா வா ன்னு டிபேட் பண்ணிகிட்டு இருக்கேன்.:):)

நன்றி சத்யா.....எல்லா போட்டிலயும் பங்கு கொள்வதுன்னு ஒரு முடிவோட இருக்கேன்....:):)

Radha Sriram said...

//நம் தமிழ்நாட்டு கோவிலைப் போன்ற ஒரு உணர்வைத் தருவது மலிபு மந்திர். அங்கு இருக்கும் புரோகிதர்களும் பெரும்பாலும் தமிழர்களே. நான் அடிக்கடி செல்வது உண்டு//

ஆமாங்க கிரிராஜ்.நல்ல கோவில்.ஆனா அடிக்கடி போக முடியரதில்ல. ஆமாம் உங்க பதிவுல ஒண்ணும் காணலியே......சீக்கிரமா எழுத ஆரம்பியுங்க.:):)

வல்லிசிம்ஹன் said...

எனக்குக் கூட இந்தப் பதிவைப் பார்த்ததும் இன்னும் இரண்டு இரட்டையர் ஞாபகம் வந்தார்கள்.
அம்பி மதுரையம்பதி:)

ஜிரா விஎஸ்கே.
என்ன கனெக்ஷன்னு கேக்காதீங்க. தெரியல தெரியலே:)

Radha Sriram said...

//எனக்குக் கூட இந்தப் பதிவைப் பார்த்ததும் இன்னும் இரண்டு இரட்டையர் ஞாபகம் வந்தார்கள்.
அம்பி மதுரையம்பதி:)

ஜிரா விஎஸ்கே.
என்ன கனெக்ஷன்னு கேக்காதீங்க. தெரியல தெரியலே:)//

அட ஆமாம் வல்லி....இது மாதிரி நிறைய பெர்முடேஷன் காம்பினேஷன்லலாம், பதிவர்கள் கண் முன்னாடி தோன்றி தோன்றி மறையராங்க.எங்க போனாலும் தொல்ல தாங்க முடியல....:):)

ambi said...

எனக்கும் பல தடவை கீதா சாம்பசிவம் மேடமும், வல்லி சிம்ஹன் மேடமும் நினைவில் வந்து போகிறார்கள். :))



//எனக்குக் கூட இந்தப் பதிவைப் பார்த்ததும் இன்னும் இரண்டு இரட்டையர் ஞாபகம் வந்தார்கள்.
அம்பி மதுரையம்பதி//

@valli madam, அட அப்படியா? ஒரு வேளை நீஙக கேசரி கிண்டும் போது என் நினைவு வருமா இருக்கும். :D

துளசி கோபால் said...

அம்பி,
நான் கேசரி செய்யும்/தின்னும் போதெல்லாம் உங்க நினைவு வருது

ambi said...

//நான் கேசரி செய்யும்/தின்னும் போதெல்லாம் உங்க நினைவு வருது
//

@டீச்சர், அவ்வ்வ்வ்வ். :))