Saturday, April 07, 2007

இந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்!

ஏப்ரல் மாத டைம் பத்ரிகையில் க்லோபல் வார்மிங்கை(Global Warming) கட்டுபடுத்த நாம் ஒவ்வொருவரும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி ஒரு ஐம்பத்தி ஒரு விஷயங்கள் எழுதியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் நம்மால் கடைபிடிக்க முடியாவிட்டாலும் சிலதை நம்மால் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. நடைமுறை வாழ்கையில் கடைபிடிக்க முடியும் என்று எனக்கு தோன்றியவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.

1) லைட் பல்ப்ஸ்.

நாம் சாதரணமாக உபயோகிக்கும் பல்ப்பை (conventional incandescent bulbs) விடுத்து குழல் விளக்கை சுற்றி வைத்த மாறி இருக்கும் பல்பை உபயோகிப்பது -{compact fluorescent light bulb(CFL)} நல்லது. CFL சாதரண பல்பைவிட இரண்டிலிருந்து ஐந்து மடங்கு விலை அதிகமாக இருந்தாலும் இதன் நீடித்த உழைப்பு அதை சரிகட்டி விடுகிறது. ஒரு 7 வாட் CFL பல்ப் ஒரு 40 வாட் ரெகுலர் பல்புக்கு சமம். இது ஒரு சிறந்த
எனர்ஜி சேவராக செயல் படுகிரது. ஆனால் இந்த வகை பல்பில் 5 mg மெர்குரி இருப்பதால் இதை மற்ற எல்லாவகை கழிவு பொறுள்களுடன் எறிய முடியாது.

2) துணி துவைத்தல்:



மிகவும் இன்றியமையாத ஒரு தினப்படி செயல். அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை!! ஆனால் அதைதான் இங்கு ஒரு சிறந்த எனர்ஜி சேவராக குறிபிடுகிரது Time Magazine. கொஞ்சம் கொஞ்சமாக (வாஷிங் மஷின் உபயோகிப்பவர்களுக்கு!) துணிகளை போட்டு தோய்ப்பதைவிட, துணிகளை சேர்த்து வைத்து ஒரு பெரிய கும்பலாக தோயித்து எடுப்பது ஒரு சிறந்த ஷக்தி சேமிப்பு. அதிலும் கொதிக்கும் சுடு தண்ணியை உபயோக படுத்தாமல், மிதமான சூடுள்ள தண்ணியை உபயோக படுத்துதல் நல்லது. ரொம்ப முக்யமான இன்னொரு விஷயம், ட்ரைய்யெரை(dryer) உபயோக படுத்தாமல் கொடி கட்டி துணியை உலர்த்துவதால் நம் வாஷிங் மெஷினால் உற்பத்தியாகும் 90% co2 வை குறைக்கலாம்.

3) முடிந்த வரை பேருந்தை உபயோகியுங்கள்!:



இது எவ்வளவு தூரம் சாத்யம் என்று தெரியவில்லை. நாம் எல்லோருமே நம் சவுகரியத்துக்கு தகுந்தாற்போல் போக வர பழகி விட்டோம். பஸ்ஸுக்காக காத்திருந்து போவது எல்லாம் மலையேறி போய்விட்டது. இருந்தாலும் போக்குவரத்து மட்டுமே அமெரிக்காவில் 30% கார்பண்டை ஆக்சைட் உமிழ்தலுக்கு காரணமாக உள்ளது நிறைய கவலையை அளிக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை பொதுதுறை போக்குவரத்து, சில பெரிய நகரங்களை தவிர வேறு எங்குமே சரியாக இருப்பதாக தெரியவில்லை. பொதுதுறை போக்குவரத்தை(பேருந்து மற்றும் புகைவண்டி) உபயோகிப்பதால் ஒரு வருடத்துக்கு 1.4 மில்லியன் பெட்ரோலை சேமிக்கலாம். அவ்வாறு சேமிப்பதால் 1.5 மில்லியன் அளவு co2 உமிழ்தலை தவிற்கலாம். நம்மால் நிச்சயம் செய்யகூடிய ஒன்று என்றால் car pooling!

4) கணிணி மூலம் பணம் செலுத்தலாம்!

உங்கள் கணிணி மூலம் நீங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் மாதிரி பல வகையான கட்டணங்களை செலுத்தினீர்களானால், மரங்களை மட்டும் காக்கவில்லை, காகித காசோலைகளை எடுத்து செல்லும் விமானம் மற்றும் லாரிகளின் பெட்ரோல் செலவையும் கட்டுபடுத்துகிரீர்கள். அது உமிழும் co2 வை மட்டுபடுத்துகிரீர்கள்.

5) ஜன்னலை திறந்து வையுங்கள் !

குளிரூடுபெட்டியை மிதமாக உபயோகியுங்கள்.

6) ப்லாஸ்டிக் பைகளூக்கு ஒரு பெரிய தடா போடுங்கள்!

இந்த பைகள் அழிய தோராயமாக 1000 ஆண்டுகள் ஆகின்றன. துணி பையை உபயோகிப்பது சிறந்தது.

7) மூங்கில் வேலி !

உங்கள் வீடுகள் மற்றும் தோட்டத்ற்க்கு மூங்கில் வேலி அமையுங்கள். மூங்கில் ஒரு நாளைக்கு 1 அடி வளரகூடியது. ஒரு ரோஜா செடியை விட பல மடங்கு co2 வை தன்னுள் ஈர்த்துக்கொள்ளகூடிய ஷக்தி உடையது.

8) உள்ளூர் விவசாயியை ஆதரியுங்கள்!

பெரிய பெரிய கடைகளில் போய் காய் கனிகள் வாங்குவதை தவிறுங்கள். உள்ளூர் சந்தையில் வாங்குவதால், பல மயில் தூரத்திலிருந்து பெரிய பெரிய வாகனங்களில் சாமான்கள் கொண்டு வரபடுவதை தவிற்கிரீர்கள். இதன் மூலம் பெட்ரோலும் அதனால் உமிழபடும் co2 வும் குறைகிறது.

9)உபயோகிக்காதபோது கணிணியை அணைத்து வையுங்கள்!

ஸ்க்ரீன் சேவெரை உபயோகிப்பதால் எந்தவித சேமிப்பும் நமக்கு கிடைப்பதில்லை. உபயோகிகாத போது அணைத்து வைப்பது நல்லது.

10) விளக்கை அணையுங்கள்!

வேலை பார்க்கும் இடத்தில் மற்றும் வீட்டிலும் தேவையில்லாத விளக்குகளை கண்டிப்பாக அணைத்து வையுங்கள். பிள்ளைகளையும் அதற்கு பழக்குங்கள் :):)

இதில் குறைந்தது ஒன்றை மட்டுமாவது நாம் கடைபிடிக்க முடிந்தால், இந்த பூமிக்கு பெரிய சேவை செய்ததாக நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளலாம். சிறு துளி பெறு வெள்ளம்!!

கீழே கொடுத்திருக்கும் லின்கையும் போய் பார்க்கவும்!

http://www.earthday.org/

P.S மொழிபெயர்ப்பு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்.......பொறுத்துகொள்ளவும்!! நன்றி :):)





30 comments:

தென்றல் said...

Radha Sriram,

நானும் 'Time'ல் பார்த்தேன். 51ல் நம்மால் (இந்தியாவில்) முடியக்கூடியதை, மொழிபெயர்ப்பு செய்யலாம் என்று இருந்தேன்.

நல்ல முயற்சி! பாராட்டுக்கள்!

முழுவதும் படித்துவிட்டு வருகிறேன்.

யாழினி அத்தன் said...

அற்புதமான பதிவு.

சில நாட்களுக்கு முன் இங்கே சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களை ABC சானலில் பார்த்தேன். இது தான் நாளைய உலகம்.

வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

நீங்கள் சொன்னவைகளில் சில ஏற்கெனவே கடைப்பிடிக்கிறதுதான். ஆனா..........

இந்த பேருந்து, கணினி, மூங்கில் வேலிதான் முடியாத காரியம்(-:

சேதுக்கரசி said...

நல்ல பதிவு (இ)ராதா.

தென்றல் said...

நல்ல பதிவு-ங்க!

பின்னுட்டத்துல போட்டா ஒரு பெரிய கட்டுரை மாதிரி ஆயிகுமே-னு தனியா இங்கு http://thendral2007.blogspot.com/2007/04/blog-post_10.html போட்டுருக்கேன்.

தவறு எதுவும் இருந்தா சொல்லுங்க திருத்திகளாம்!

வடுவூர் குமார் said...

என்னால் முடிந்தது 3~ 4 இருக்கிறது,முயலுவோம்.

காட்டாறு said...

51-ம் சொல்றீங்கன்னு நினைத்தேன். ;-)

சில விஷயங்கள் நாம் அன்றாட செய்றது தான். நல்ல பதிவுக்கு நன்றி ராதா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\5 mg மெர்குரி இருப்பதால் இதை மற்ற எல்லாவகை கழிவு பொறுள்களுடன் எறிய முடியாது.//

உபயோகித்த பின் இதை எப்படி என்ன செய்யவேணும் என்று சொல்ல முடியுமா?

Radha Sriram said...

//"நல்ல முயற்சி! பாராட்டுக்கள்"//

நன்றி தென்றல், நீங்களும் நல்லா எழுதியிருகீங்க!! அங்கேயும் பின்னூடியாச்சு!

Radha Sriram said...

//அற்புதமான பதிவு.

சில நாட்களுக்கு முன் இங்கே சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களை ABC சானலில் பார்த்தேன். இது தான் நாளைய உலகம்.//

ரொம்ப நன்றி யாழினி அத்தன். நம்க்கென்னன்னு மெத்தனமா இல்லாம கொஞ்சம் முயற்சி செஞ்சோம்னா நாளைய உலகம் கண்டிப்பா நல்லா இருக்கும் இல்லீங்களா? உங்க வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி!:)

Radha Sriram said...

//இந்த பேருந்து, கணினி, மூங்கில் வேலிதான் முடியாத காரியம்(-: //

பேருந்து ரொம்ப கஷ்டம்தான் துளசி தெரிஞ்சிகிடேதான் எழுதினேன்! அனா இந்த கணிணிய நிறுத்தி வைக்கறத முயற்சி செஞ்சுகிட்டு இருக்கேன்:):)

மூங்கில் வேலியும் ரொம்ப far fetched தான்!!

//நீங்கள் சொன்னவைகளில் சில ஏற்கெனவே கடைப்பிடிக்கிறதுதான். ஆனா..........//

பாராட்டுகள்.....பூமாதேவி ஆசிர்வதிப்பாள்!!

Radha Sriram said...

//நல்ல பதிவு (இ)ராதா.//

வாங்க சேதுக்கரசி, ரொம்ப நன்றி!
கவிதை போட்டில பிசியா இருப்பீங்க!!

Radha Sriram said...

//என்னால் முடிந்தது 3~ 4 இருக்கிறது,முயலுவோம்//

வாங்க குமார், முடிஞ்சத கண்டிப்பா செயல்படுத்துங்க......பூமாதேவி ஆசிர்வதிப்பாள்!!

Radha Sriram said...

//51-ம் சொல்றீங்கன்னு நினைத்தேன். ;-)//

சிலதெல்லாம் நம்மளால கண்டிப்பா செயல் படுத்த முடியாதுன்னு தோணூச்சு....மேலும் மொழிபெயர்ப்பு பெரிய வேலைங்க, தாவு தீந்துருச்சு!

//சில விஷயங்கள் நாம் அன்றாட செய்றது தான். நல்ல பதிவுக்கு நன்றி ராதா! //

ரொம்ப நல்லதுங்க காட்டாறு! பூமாதேவி
வாழ்த்துவாள்!!

Radha Sriram said...

//உபயோகித்த பின் இதை எப்படி என்ன செய்யவேணும் என்று சொல்ல முடியுமா//

முத்துலக்ஷ்மி ரொம்ப நல்ல கேள்வி!!

அமெரிக்காவை பொருத்தவரை ஒவ்வொரு மானிலத்திலயும் hazardous waste disposal system உள்ளது.அவர்Kஅல் ஒரு குறிப்பிட்ட இடத்தையும் நாளையும் இதற்கென்று வைத்துள்ளார்கள். அவர்கள் websiteக்கு போய் நம் zip code (pin code) கொடுத்தோமென்றால் நமக்கு கிட்டத்தில் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்.இதே போல் T.V, MOnitor,printer,VCR, copying machine போன்றவற்றை electronic waste recycling இடத்திற்க்கு கொண்டு செல்லவேண்டும்.
இந்தியாவில் இது மாதிரி house hold hazardous material disposal system உள்ளதா தெரியவில்லை.....

http://www.ciwmb.ca.gov/WPIE/FluoresLamps/

மேலே கொடுத்துள்ள சுட்டியில் சிறிது தகவல் உள்ளது....

இதை தவிற வேறு எப்படி உங்களுக்கு உதவுவது என்று தெரியவில்லை...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதில் தெரியாத கேள்வியை மண்டைக்குள் புகுத்தி விட்டீர்கள்...தேடி அலையப் போகிறேன்.

நாகை சிவா said...

நல்ல பதிவுங்க.

கண்டிப்பாக முடிந்தவற்றை செய்வோம். முடியாதவற்றை செய்ய முயல்வோம்.

Shakthi said...

ரொம்ப யோசிக்க வைக்கிரது..எனால் முடிந்ததை பன்னுவேன்...பாக்கலாம்.

SurveySan said...

Good post Radha Sriram.

முடிந்தவரை கடைபிடிக்க முயல்கிறேன்.

கணினி அணச்சு வச்சாலே, நிறைய நன்மை கிடைக்கும்.

Syam said...

நல்ல பதிவு...இப்பொதைக்கு 1,3,4,5,9,10 கடைபிடிக்கறேன்...மீதியும் கொஞ்சம் கொஞ்சமா பண்ணனும்...

Radha Sriram said...

சிவா, நன்றி முயன்றால் முடியாதது இல்லை இல்லையா?

Radha Sriram said...

ஷக்தி,

நிச்சயமாக முயலுங்கள்.....நம்ம இருக்கர வீட்ட நாமதான் பாதுகாப்பா வச்சுக்கணும் இல்லையா?

Radha Sriram said...

வாங்க சர்வேசன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி!

//கணினி அணச்சு வச்சாலே, நிறைய நன்மை கிடைக்கும்.//

நீங்க சொல்லுவது ரொம்ப சரி!

எல்லோருமா சேர்ந்து முயற்சிப்போம்!!

Radha Sriram said...

//நல்ல பதிவு...இப்பொதைக்கு 1,3,4,5,9,10 கடைபிடிக்கறேன்...மீதியும் கொஞ்சம் கொஞ்சமா பண்ணனும்...//

நன்றி ஷ்யாம்!!

நல்ல முடிவு, நீங்க நிறையவே கடைபிடிப்பதா சொல்லிருகீங்க.....வாழ்த்துக்கள்!!

இராம்/Raam said...

நல்ல பதிவு இராதா...

//P.S மொழிபெயர்ப்பு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்.......பொறுத்துகொள்ளவும்!! நன்றி :):)
//

ஏங்க... நல்லாதாங்க இருந்துச்சு, உங்க முழிபெயர்ப்பு :)))

Syam said...

//நன்றி ஷ்யாம்!!//

ஏங்க இந்த மாதிரி நாலு நல்ல விஷயத்த சொன்னதுக்கு நாங்க தாங்க உங்களூக்கு நன்றி சொல்லனும்...:-)

Radha Sriram said...

ராம்,

//ஏங்க... நல்லாதாங்க இருந்துச்சு, உங்க முழிபெயர்ப்பு :)))//

நிஜமாவே முழிபிதுங்கிட்டேங்க!!

நல்லா இருந்தது சொன்னதுக்கு உங்களுக்கு ஒரு நன்றி!!

Radha Sriram said...

ஷ்யாம்...சரி சரி ஒகே !! நன்றி வாப்பஸ் !!:):)

ஷைலஜா said...

சிந்தித்து செயலாற்ற வேண்டிய விஷயங்கள்..அருமை ராதா!
ஷைலஜா

Radha Sriram said...

//சிந்தித்து செயலாற்ற வேண்டிய விஷயங்கள்..அருமை ராதா!//

நன்றி ஷைலஜா எல்லாரும் சேர்ந்து முயற்சிப்போம்!!!