Tuesday, February 27, 2007

ஆங்கிலமும் அறியாமையும்

எங்க வீட்டுல முதல்முதலா முதல் வகுப்புலேந்து அங்கில வழி பாடதுல படிச்சது நாந்தான். என்னதான் ஆங்கில மீடியம்னாலும் பேசரதுலேந்து சிந்திக்கற வரைக்கும் தமிழ்லதான். பள்ளிகூடத்துல மட்டும் அப்ப அப்ப "yes child, no child" என்கிற ரீதியா அங்கிலம் பேசுவேன். தமிழ அப்படியயே அங்கிலத்துல மொழி பெயர்து பேசுவோம்." நீ வருகிறாயா??" என்பதை அப்படியே literal அ மொழி பெயர்த்து " You are coming?" என்று பின்னாடி ஒரு கேள்வி குறியோடு நிறுத்துவேன். "Are you coming??" என்று கேட்கணும்னு தெரியாது.

என்னோட ஆங்கில அறிவு வளரனும்னு என்னோட அப்பாக்கு ரொம்ப ஆசை. அதனால தினம் செய்திதாள்(ஆங்கிலம்) படிச்சேதீரணும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. பிடிச்சது எனக்கு சனி தசை. இதை கண்கானிக்க என் அண்ணன் வேர. கேக்கணுமா அவன் கொண்டாடத்த. பள்ளிகூடம் விட்டு வந்த உடனே சாப்பாடு, விளையாட்டு. சாயங்காலம் ஆறு மணிக்கு வீட்டுல இருக்கணூம். வீட்டுபாடம் முடிச்ச பிறகு செய்திதாளும் கையுமா வந்திருவான் எங்க அண்ணன். அப்புரம் ஒரே டார்ச்சர்தான். முதல்ல ஹெட்லைன்ஸ் சத்தமா வாய்விட்டு படிக்கணும். அப்புரம் ஸ்போர்ட்ஸ் என்று ஒரு கால் மணி நேரம் உயிர வாங்கிடுவான். கொஞ்ச நாள்ல அவனுக்கு போர் அடிச்சு போச்சு. இதுக்கு நடுவுல புரியுதோ இல்லையோ நான் பாட்டுக்கு சத்தம் போட்டு தப்பு தப்பா படிச்சுட்டு பொயிட்டே இருப்பேன். நடுவுல சிலது மட்டும் புரியும். அப்பொ ஒரு நாள் அப்பாவ இம்பெரெஸ் பண்ணனும்னு தோணி போச்சு. நம்மளோட அங்கில அறிவ எப்படியாவது அப்பாகிட்ட காமிச்சு நல்ல பேர் எடுதிடணும்னு ஒரு துடிப்போட இருந்தேன்.


அந்த நாளும் வந்தது. அன்னிக்கு செய்திதாள்ல ' Boat capsized thirty feared dead " ன்னு
ஹெட்லைன்ஸ். பூரா செண்டென்ஸ் புரிந்துவிட்டது. capsize புதிய வார்த்தை. டிக்ஷனரி பாத்தாச்சு. அண்ணன் கிட்டயும் கேட்டாச்சு. அப்பாவ அசத்த நான் ரெடி. அப்பாவும் வந்தாங்க. அப்பா துணியெல்லாம் மாத்தி ஈசி சேர்ல சாஞ்சாங்க. நான் அப்போதான் ஏதோ செய்திதாள புரட்டர மாதிரி பாவனை பண்ணிகிட்டு வந்துகிட்டே,..." அப்பா இன்னிக்கு ஹெட்லைன்ஸ் என்ன தெரியுமான்னு கேட்டேன்? அப்பாவும் சும்மா என்ன குஷி படுத்த, " என்ன நியூஸ் நீயே சொல்லேன்' அப்படீன்னாங்க. "Boat capsized thirty feared dead" அப்படீன்னு சத்தாமா படிச்சு காட்டினேன். அப்பாக்கு ஒரு நிமிஷம் ஆச்சர்யம். capsize ன்னா என்ன அர்த்தம்னு கேட்டாங்க. உடனே சடார்ன்னு "overturn"ன்னு சொன்னேன். அப்பாக்கு சந்தோஷம் தாங்கல. அத பாத்த எனக்கு தலயும் புரியல காலும் புரியல.....மெதுவா அப்பாகிட்ட போயி உக்காந்து ஒரு கூக்ளி போட்டேன் பாருங்க இப்பகூட மேல் லோகத்துல இருக்கர எங்க அப்பா விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அது என்னன்னா "thirty feared dead"ங்கரத அப்படியே literal அ டிரான்ஸ்லேட் பண்ணி " பாவம் இல்லப்பா அந்த முப்பது பேரும் பயத்துலயே செத்து போயி இருக்காங்க" அப்படீன்னு கேட்டேன் பாருங்க!!!!!!! கேக்கணுமா வீட்ல சிரிப்ப....இப்பகூட காதுல ஒலிக்குது.


இப்ப இத நினைச்சு பாக்கும்போது நம்ம அமிதாப் எதோ ஒரு படத்துல சொல்லுவாரே "English is a funny language" ன்னு அதுதான் நியாபகம் வருது.

18 comments:

SurveySan said...

அடிக்கடி எழுத ஆரம்பிச்சிட்டீங்க போலருக்கு?
கலக்குங்க! :)

மணிகண்டன் said...

நல்ல மொழிபெயர்ப்புங்க :)))

தொடரட்டும் உங்களின் மொழிபெயர்ப்பு பதிவுகள்..

சிறில் அலெக்ஸ் said...

இப்பதான் தமிழ்மண முகப்பில பாத்தேன்.

'பயத்துலேயே...' சூப்பர் ஜோக். Fact is stranger than fiction மாதிரி. Real life is funnier than reel life.

தொடர்ந்து கலக்குங்க. வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

புதுவரவுக்கு வாழ்த்து(க்)கள்

Radha Sriram said...

//அடிக்கடி எழுத ஆரம்பிச்சிட்டீங்க போலருக்கு?
கலக்குங்க! :)//

இப்போதானே வந்திருக்கேன் சர்வேசன் பாக்கலாம் என்னோட சுறுசுறுப்பு எப்படி போகுதுன்னு!!!

Radha Sriram said...

//நல்ல மொழிபெயர்ப்புங்க :)))//



வாங்க மணிகண்டன்......அதான்
பாருங்க அந்த வயசுல fear னா பயம்ன்னு மட்டும்தான் தெரியும்.....அதான் அப்படி ஒரு சூப்பர் டிரான்ஸ்லேஷன் :)

Radha Sriram said...

//இப்பதான் தமிழ்மண முகப்பில பாத்தேன்.//

ஆமாம் சிரில் முகப்புல வர செய்யரதுக்கு கொஞ்சம் ஹெல்ப் வேண்டியிருந்தது....அதான் லேட்
'
//பயத்துலேயே...' சூப்பர் ஜோக். Fact is stranger than fiction மாதிரி. Real life is funnier than reel//

exactly !!

பதிவுக்கு வந்ததுக்கு ரொம்ப thanks சிரில்

Radha Sriram said...

//புதுவரவுக்கு வாழ்த்து(க்)கள் //

உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி துளசி.

உங்க எழுத்துக்கள் கூட எனக்கு ஒருவகைல inspiration. Thanks for that.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//அது என்னன்னா "thirty feared dead"ங்கரத அப்படியே literal அ டிரான்ஸ்லேட் பண்ணி " பாவம் இல்லப்பா அந்த முப்பது பேரும் பயத்துலயே செத்து போயி இருக்காங்க" அப்படீன்னு கேட்டேன் பாருங்க!!!!!!! கேக்கணுமா வீட்ல சிரிப்ப....இப்பகூட காதுல ஒலிக்குது.//

:))

வாங்க. வாங்க!

-மதி

ramachandranusha(உஷா) said...

ராதா நீங்களா? (பின்னுட்ட ஊக்குவிக்காளினி). எல்லாரும் ஆரம்பத்தில் இப்படித்தான் தடுமாறினோம். பழைய சம்பவங்கள், படித்த புத்தகங்கள் என்று எழுத ஆரம்பிங்க. ஜோதியில் ஐக்கியமானதுக்கு வாழ்த்துக்கள்

Shakthi said...

நல்ல ஜோக்...கலக்குங்க..

Radha Sriram said...

//வாங்க. வாங்க!

-மதி //

உங்க வரவேற்பிற்க்கு ரொம்ப நன்றி மதி!!

Radha Sriram said...

//ராதா நீங்களா? (பின்னுட்ட ஊக்குவிக்காளினி). எல்லாரும் ஆரம்பத்தில் இப்படித்தான் தடுமாறினோம். பழைய சம்பவங்கள், படித்த புத்தகங்கள் என்று எழுத ஆரம்பிங்க. ஜோதியில் ஐக்கியமானதுக்கு வாழ்த்துக்கள்//

ஆமாம் உஷா நானேதான்!!(
பின்னுட்ட ஊக்குவிக்காளினி)thanks for the title!!! :) தடுமாற்றமா ?? ஒரே உதறலா இருக்குங்கரேன்...
எனிவே நீங்க செட்டில் ஆகிட்டீங்களா??

Radha Sriram said...

//நல்ல ஜோக்...கலக்குங்க..//

நன்றி ஷக்தி. உங்ககிட்டே இருந்து ஒரு ப்லோக் சீக்கரமா எதிர்பாக்கலாமா?

நாகு (Nagu) said...

நல்ல தமாஷ். ஒரு கிரேஸி மோகன் நாடகத்தில் இண்டர்வியூவில் கேட்பார்கள். இன்னக்கி நியூஸ்பேப்பரில் என்ன முக்கியமான செய்தி? சொல்வார்: ' நூறு பேர் பயத்தால் செத்தார்கள்' என்று. 100 feared dead!

நீங்கள் நிஜமாகவே சொல்லியிருக்கிறீர்கள்.

Radha Sriram said...

//நல்ல தமாஷ். ஒரு கிரேஸி மோகன் நாடகத்தில் இண்டர்வியூவில் கேட்பார்கள். இன்னக்கி நியூஸ்பேப்பரில் என்ன முக்கியமான செய்தி? சொல்வார்: ' நூறு பேர் பயத்தால் செத்தார்கள்' என்று. 100 feared dead!

நீங்கள் நிஜமாகவே சொல்லியிருக்கிறீர்கள்//

வாங்க நாகு எங்க வீட்ல இன்னும் பல தமாஷ் நடந்திருக்கு இதேபோல.
ஒண்ணு சொல்லரேன் கேளுங்க
வீட்டுக்கு வந்த மாமி எங்க அக்கா பொண்ண பாத்து " how old are you" ன்னு கேக்க அவ கோவத்தோட " நான் ஒண்ணும் ஒல்ட் இல்ல எங்கம்மாதான் ஒல்ட் ன்னு ஒரு போடு போட்ட பாருங்க " இன்னிக்கும் ரொம்ப ப்ரபலமான ஜோக்ன்னா இதான் எங்க வீட்ல!!!

சரவணன் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க, அப்பவே. ஜோக் வரதுக்கு முன்னாலேயே சிரிக்க ஆரம்பிச்சுட்டேன் :-)) நீங்க கண்டிப்பா நிறைய எழுதணும். எழுதறதே மத்தவங்களை ஊக்குவிக்கிறதுதானே, see the point :-)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

:-)