ஆமாங்க நேற்று முன் தினம் ஆரம்பித்த இந்த காட்டு தீ தென் கலிஃபோர்னியா மாநிலத்தில பல ஆயிரம் ஏக்கர்களை கண்டபடி கபளீகரம் செய்துகொண்டு இருக்கிறது. தென் கலிஃபோர்னிய மாநிலத்தில் இந்த காட்டுத் தீ அபாயம் உண்டு ஆனால் அதை இவ்வளவு சமீபத்துல பார்த்தது இந்த முறைதான்.
நேற்று காலை டிவி யை ஆன் செய்துவிட்டு வெளியில் செய்தி தாள் எடுக்க போன போதே காற்றில் ஒருவித வாசனை கொஞ்சம் தூரத்தில் புகை மூட்டம் தெரிந்தது. உடனே உள்ளே வந்து டிவியில் செய்தி பார்க்க உட்கார்ந்தேன்.லாஸ் ஏஞ்சலிஸ் கவுண்டியிலும் ஆரஞ்சு கவுண்டியிலும் காட்டு தீ பரவி வருவதை காட்டி கொண்டிருந்தார்கள்.சிறிது நேரத்திற்குள் நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து பதினைந்து மயில் தூரத்தில் கட்டுக்கங்காத தீ பரவி வருவது புரிந்தது. அதை கட்டுப்படுத்த தீ அணைப்பு படை படாத பாடு பட்டு கொண்டிருந்தார்கள்.தீ சிறு சிறு குன்றுகள் மேல் இருக்கும் மில்லியன் டாலர் வீடுகளை பதம் பார்க்க பார்க்க இங்கு எங்களுக்கு ஒரே பதட்டம். வெளியில் சென்று ஏதாவது சேதி கிடைக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தோம். காற்று வேறு விர் விரென்று அடித்துக் கொண்டு இருந்தது. இதற்கு ஸாண்டா ஆனா விண்ட்ஸ் என்று பெயர்.இது மேலும் தீயை வேகமாக பரவ வைத்துக் கொண்டிருந்தது. அதற்குள் பக்கத்து வீடுகளில் இருக்கும் அத்தனை மக்களும் கூட்டம் கூட்டமாக சேர. எல்லோரும் வெளியில் நின்று கொண்டு ஒருத்தரை ஒருத்தர் சமாதானம் படுத்திக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று பேச ஆரம்பித்த வேளையில், எங்கள் கம்யூனிடி வாலண்டரி இவாகுவேஷன்(voluntary evacuation) ஏரியவிற்குள் வந்துவிட்டதாக ட்ரக்கை ஒட்டிவந்த பெண்மணி அறிவித்து போனாள். உங்களுக்கு வேண்டிய இன்றியமையாத சாமான்களை பெட்டிகளுக்குள் போட்டு ரெடியாக இருக்குமாறு சொல்லிவிட்டு இஷ்டப்பட்டவர்கள் இப்பவே கிளம்பி பக்கத்தில் இருக்கும் இவாகுவேஷன் ஷெல்டெருக்கு போகுமாறு சொல்லிவிட்டு போனாள். உடனே நாங்கள் திபு திபுவென்று உள்ளே ஓடி சென்று தோணியவற்றை எல்லாம் எடுத்து பெட்டுக்குள் அடைக்க தொடங்கினோம்.இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தமான மஹா பெரிய பெட்டிகளை எடுத்து முக்கியமான சாமன்களை போட்டு கராஜில் கொண்டு வைத்துவிட்டோம்.ஆனால் ஆசை ஆசையாக வாங்கின வீட்டை விட்டு செல்ல மனம் வருமா? என்ன செய்வது என்று புரியாமல் திரும்பவும் வாசலுக்கு உள்ளுக்குமாய் நடை பழகினோம். அதற்குள் நாங்கள் இருக்கும் ஊரில் எரிந்து கொண்டிருந்த தீயும் அடுத்து உள்ள ஊரின் தீயும் ஒன்றாக சேர்ந்து இன்னும் கொழுந்துவிட்டு எரிவதை டிவியில் பார்த்து திகில் அடைந்து பெட்டிகள் எல்லாவற்றையும் காரில் ஏற்றிவிட்டு மாண்டடரி இவாகுவேஷன் (Mandatory evacuation)சொன்னால் மட்டுமே கிளம்புவது என்று அக்கம் பக்கத்தில இருக்கற எல்லொரும் சேர்ந்து முடிவெடுத்தோம்.ஆனால் எல்லோரும் அவர் அவர் பொருள்களோடு ரெடியாக இருந்தோம். புகை மண்டலமா கிளம்பி மேலே எழும்புவதும், தீ அணைப்பு மற்றும் காவல் துறையின் சைரன் போட்ட வண்டிகளும் போவதும் வருவதும் ஒன்றுமே புரியவில்லை. அதற்குள் இரண்டு வீடு தள்ளி ஒருவர் கூரை மீது ஏரி தண்ணீர் பீய்ச்சி அடிக்க ஆரம்பிக்கவும் நாங்கள் போய் அனாவசியமாக தண்ணீர் செலவழிக்க வேண்டாம்....இம்மாதிரி செய்வதால் தீ அணைப்பு படைக்கு போதுமளவு தண்ணீர் அழுத்தம் கிடைக்காது என்று சொல்லி ஒரு மாதிரி சமாளித்து அவரை இறக்கினோம்.(இதை பற்றி டிவியில் அறிக்கை விட்டிருந்தார்கள்). நிறைய வீடுகளில் சாயந்திரத்தில் ஆட்டோமாடிக் ஸ்ப்ரிங்ளெர் தண்ணீர் பாய்ச்ச அதை ஓடி போய் சொல்லி அணைத்து எங்களால் ஆன உதவியை செய்தோம். புகையினால் சூரியனே சிகப்பாக மாறி இருந்தான்.வெப்பமோ 90 டிகிரிக்கு மேல் போய்விட்டது.காத்திருக்க தொடங்கினோம்.நடு நடுவே நண்பர்கள், உறவினர், இந்தியா ஃபோன்.எல்லோருக்கும் நிலைமையை சொல்லி கவலைபட வேண்டாமென்று சொல்லிகொண்டே கவலைபட்டுக்கொண்டிருந்தோம். இருட்ட ஆரம்பித்தவுடன் சரி ஓருத்தர் மாற்றி ஒருத்தர் சுழற்ச்சி முறையில் பார்த்துக்கொள்ளலாமென்று முடிவெடுத்து இரவு முழுக்க பார்த்துக்கொண்டோம்.தீ கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் ஊரை விட்டு தள்ளி போய்விட்டது......இன்னும் சில இடங்களில் முழு கட்டு பாடில் இல்லை. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பல நூறு வீடுகளையும் நிமிஷமாய் இந்த அக்னி விழுங்கியதை பார்த்தவுடன் இயற்கையின் சீற்றத்தை நன்கு உணர முடிந்தது. தன்னுயிரை துச்சமாக மதித்து தீயுடன் போராடிய தீ அணைப்பு படையினருக்கு ஒரு பெரிய சல்யூட்! 1961 ல் வந்த லாஸ் ஏஞ்சலிஸ் பெல்- ஏர் பகுதி தீ க்கு பின்னர் மிக்க சேதத்தை ஏற்படுத்தி உள்ளது இதுதானாம்.இன்னும் வெளியில் காற்று புகையோடுதான் உள்ளது. வீட்டு கூரை வெளியே எல்லாம் ஒரே சாம்பல். வீட்டை இழந்து பொருளை இழந்து நிற்பவர்களை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது...oh we were this close!
அடுத்தது காட்டு தீயை போல டீனேஜர்களின் மத்தியில் பரவி வருவது இந்த புத்தகம்தான்.இது ஹாரி பாட்டெரை போல ஒரு தொடர் நாவல் வகையை சார்ந்தது. இந்த தொடரின் முதல் புத்தகத்தை(Twilight by Stephanie Meyers) ஒட்டி எடுக்க பட்டுள்ள திரைபடம் நவெம்பெர் 21 ர்லீஸ்......இங்கு ஒரே அல்லோலகல்லோல படுகிறது. இந்த புத்தகத்தை பற்றி எனக்கு தோன்றியவற்றை பின்னர் எழுதுகிறேன்...இப்பொழுது தூக்கம்..:)
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
இந்த பதிவை தமிழ்மணத்துல இணைக்க முடியவில்லை ஏதோ ஃfஈட் பிராப்ளெம்.சரி செய்ய தெரியவில்ல்...:(
அப்பாடா! தப்பிச்சீங்களே!
ராதா, அந்த இன்னோரு ஃபயர் மாதிரி இதுவும் தள்ளின்னு நினைத்துக் கொண்டுவிட்டேன். நல்ல வேளை
தலைக்கு வந்தது தலப்பாகையோடன்னு சொல்ல வேண்டியதுதான்.
இருந்தாலும் இந்த பயம் போக கொஞ்ச நாளாகும்.
வீடு இழந்தவர்களைப் பற்றி யாஹூவில் படித்தேன். அது உங்க வீட்டுப் பக்கமெ வந்து விட்டதே.:(
ரொம்ப பதட்டமா இருந்திருக்கும் இல்லையா!! நல்ல வேளை ஒண்ணும் ஆகாமப் போச்சே!
//தலைக்கு வந்தது தலப்பாகையோடன்னு சொல்ல வேண்டியதுதான்.
இருந்தாலும் இந்த பயம் போக கொஞ்ச நாளாகும்//
repeateeeei
our salute to the fire fighters too.
//அப்பாடா! தப்பிச்சீங்களே!//
ஆமாம் சுரேஷ் நாங்க எப்படியும் தப்பிச்சிருப்போம்...ஆனால் வீடும் அதற்குள் சேகரித்த நினைவுகளையும்தான் இழந்து விடுவோமோ என்று பயமாய் இருந்தது..all is well that ends well....:)
வல்லி.. தலைவலியும் ஜுரமும் தனக்கு வந்தால் தான் தெரியும். அது மாதிரி இது ஒரு அனுபவம்...மேலும் எப்படி இந்த உலகில் நமக்கு எதுவுமே சாஸ்வதம் இல்லை என்ற தத்துவ சிந்தனையும் மனதில் ஓடியது..:)
//ரொம்ப பதட்டமா இருந்திருக்கும் இல்லையா!! நல்ல வேளை ஒண்ணும் ஆகாமப் போச்சே!//
கொத்ஸ் ரொம்பவே பதட்டமா இருந்தது.இந்த மாதிரி க்ரைஸிஸ்ன் போது அக்கம் பக்கம் பழகி ஒருவித பாண்டிங் ஏற்படுத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாவும் இருந்தது.
//repeateeeei
our salute to the fire fighters too.//
எப்போதுமே இதெல்லாம் நமக்கு நடக்காது என்கிற மனோநிலையிலேயே இருந்துவிட்டு திடீரென்று இப்படி ஆகும் போது...it makes you feel grounded..:):)
ஆமாங்க சதங்கா, தீ அணைப்பு படையினருக்கு எவ்வ்வளவு நன்றி சொன்னாலும் தகும்..they did an excellent job!
ivlo nadandhurukkaa. adengappaa :(
glad it didnt cause any damages.
photo edukkaliya? :)
நெருப்புப் பற்றி ரேடியோவில் கேட்டுவிட்டு உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன், அப்புறம், வேற எங்கியாவது இருக்குமோன்னு கேட்டுக்கவில்லை.
//தலைவலியும் ஜுரமும் தனக்கு வந்தால் தான் தெரியும். அது மாதிரி இது ஒரு அனுபவம்// அச்சோ, ஆமாங்க. பரவாயில்லை, உங்களுக்கு ஒண்ணும் இல்லைன்னாலும், வீடிழந்தவங்க பாவம்..
உங்களுக்கும், உங்க s/dல இருக்கறவங்களுக்கும் எத்தனை டென்ஷன்:-((((((
//ivlo nadandhurukkaa. adengappaa :(
glad it didnt cause any damages.
photo edukkaliya? :)//
ஆமாங்க சர்வே எல்லாம் நிமிஷமா நடந்து முடிஞ்சுடுச்சு...ஃபோட்டோவா?? நல்ல கேள்வி..:) நாங்கதான் எல்லாத்தையும் சாமர்த்யமா மூட்ட கட்டிடோமே...:)
//உங்களுக்கும், உங்க s/dல இருக்கறவங்களுக்கும் எத்தனை டென்ஷன்:-((((((//
ஆமாங்க கெ பி ஒரு ஐந்து ஆறு மணி நேரம் நல்ல டென்ஷந்தான்....முன்னேற்பாடாகத்தான் இவாகுவேட் செய்ய சொல்ராங்க ஆனா நம்ம கற்பனைக்குத்தான் அளவே இல்லையே?..:) வீடு இழந்தவங்க நிலை ரொம்ப மோசம்...என்னதான் இன்ஷுர் செய்திருந்தாலும் இழந்ததை மீட்க முடியாதே.:-(
அடக்கடவுளே....
ரொம்பப் பதற்றமா இருந்துருக்குமே......
ஆபத்துன்னு வந்துட்டா வீட்டுலே எதை எடுத்துக் காப்பாத்தணும் என்பது இன்னும் நம்ம இந்தியர்களுக்கு ஒரு குழப்பம்தான் போல.
நானும் அப்பப்ப யோசிப்பேன். டெலிபோன் புக்லே கடைசி அட்டையில் அவசரகாலத்துல்லெ சாமான் லிஸ்ட் இருந்தாலும்..... நமக்கு?
முதலில் பாஸ்போர்ட், சாமி சிலை, நம்ம லேப்டாப், நகைநட்டு, துணிமணி..... ஐயோ நினைச்சாவே மண்டை கிறுகிறுங்குது......
ட்ரில் செஞ்சு பார்க்கணும்.
அப்பாடியோவ்... நினச்சாலே பதட்டமா இருக்கே.
இயற்கை அழிவுகளினால் ஏற்படும் சேதங்கள் வீட்டு இன்ஷுரன்ஸ்ல அடக்கம்தானே?
evacuation plan எல்லாம் சரி. ஆனால் அந்த mental traumaவை தாண்டி வருவது மிகவும் சிரமம்ததன். அதை நினைத்தால்தான் பதறுகிறது.
துளசி நீங்க சொல்லி இருக்கறது ரொம்ப சரி .நானும் என்னத்த எடுத்து வச்சுக்கரதுன்னு தெரியாமா குழம்பித்தான் போனேன்.பாஸ்போர்ட், இன்ஷுரன்ஸ் டாகுமெண்ட்ஸ், பசங்க்ளோட செர்டிஃபிகேட்ஸ்,சின்ன வயசு ஃபோட்டோஸ், சாமி படங்கள்....இப்படி நீண்டுகிட்டே போகுது...ட்ரில் ரொம்ப அவசியம்..:)
//இயற்கை அழிவுகளினால் ஏற்படும் சேதங்கள் வீட்டு இன்ஷுரன்ஸ்ல அடக்கம்தானே?
//
ஸ்ரீதர் காட்டுத் தீ யும், வெள்ளமும் அடக்கம். நில நடுக்கத்துக்கு தனியாக எடுக்கணும்.(எனக்கு தெரிஞ்ச வரை)எங்க இன்ஷுரன்ஸ் கம்பெனி ஃபோன் பண்ணி எங்க நிலைமயை பத்தி கேட்டாங்க!!
//evacuation plan எல்லாம் சரி. ஆனால் அந்த mental traumaவை தாண்டி வருவது மிகவும் சிரமம்ததன். அதை நினைத்தால்தான் பதறுகிறது.//
ரொம்ப கஷ்டம் தான்.பல வருடங்களாக சேர்த்து வைத்ததை இழப்பது என்பது மிகுந்த மன வேதனையை தரும்.இதை உத்தேசித்து, இவாகுவேஷன் செண்டெர்களில் கவுஸிலர்களையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.இந்த எமெர்ஜென்சியை கையாண்ட விதம் அமேசிங்!! வேறு என்ன சொல்ல??!
மிக வருந்தக்கூடிய நிகழ்வு... :(
சகஜ நிலை சீக்கிரம் திரும்பட்டும்.
ராதா பாதுகாப்பாக தப்பித்தீர்களே. அதுபோதும்.
அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு என்பதுபோன்ற அவஸ்தை அல்லவா இது. குழந்தைகள் இது எபப்டி எதிர்கொண்டனர்?
//அதற்குள் நாங்கள் இருக்கும் ஊரில் எரிந்து கொண்டிருந்த தீயும் அடுத்து உள்ள ஊரின் தீயும் ஒன்றாக சேர்ந்து இன்னும் கொழுந்துவிட்டு எரிவதை//
காட்டுத்தீயை அணைக்க தீ கடக்கும் பாதை வழியே இந்தப் பக்கத்திலிருந்து நெருப்பு வைத்தால் இரண்டும் ஒன்று சேர்ந்து ஜெகஜோதியாய் எரிந்து அணைந்துவிடும் என்பது சரிதானா ராதா?
//மிக வருந்தக்கூடிய நிகழ்வு... :(
சகஜ நிலை சீக்கிரம் திரும்பட்டும்.//
சென்ஷி சகஜ நிலை திரும்பியாச்சு..:) நன்றி..:)
//காட்டுத்தீயை அணைக்க தீ கடக்கும் பாதை வழியே இந்தப் பக்கத்திலிருந்து நெருப்பு வைத்தால் இரண்டும் ஒன்று சேர்ந்து ஜெகஜோதியாய் எரிந்து அணைந்துவிடும் என்பது சரிதானா ராதா//
அப்படி கேள்வி படவில்லை மது.நல்ல காற்று இருந்ததனாலா தீப் பொறி பறந்து போய் சின்ன சின்ன நெருப்புகளாக எரிய ஆரம்பித்து அப்படியே ஒன்றாக சேர்ந்துவிட்டது. ப்ளேன் மற்றும் ஹெலிகாப்டெரில் வந்து ஃப்யர் ரிடார்டெண்ட் போட்டார்கள். அதனால் கொஞ்சம் கட்டு பட்டது.
மற்றபடி வீட்டில் எல்லோருமே கொஞ்சம் பீதியுடந்தான் இருந்தோம்.
I pray to the almighty for a speedy recovery of the fire problems!
Unrelated to this post, regarding this post and your comments....
I have told Ramachandran Usha myself first.
பதிவுபோதை ஐயாவின் கதையை நான் காப்பியடித்தேனா?
அட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்
அதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று.... கிழே பாருங்கள்....
//
Hi Nice Story!
I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.
Appreciate your inputs on them!
Regards
Ramesh
4:39 AM//
அவரும் அதை படித்ததற்கு அறிகுறியாக, பப்ளிஸ் செய்துவிட்டு, இதை கேட்டார்.
//ரமேஷ், லிங்க் கொடுங்க. உங்க கதைகளைப் படித்துவிட்டு சொல்கிறேன்.//
நானும், எனது பதிவுபோதை ப்லோக் URL கொடுத்தேன். என் ப்லோக் ப்ரோபையில் மூலம் இமெயில் தெரிந்து மெயில் செய்திருக்கலாம். அதை அவர் பப்ளிஸ் செய்யவில்லை. காரணமும் சொல்லவில்லை. என்னிடம் அந்த கமன்ட்சின் காப்பியும் இல்லை. இண்டேர்ணலைஸ் டாபிக் வந்த் போது இதை வைத்து தான் என் உரையாடல் திவ்யாவுடன் அமைந்தது.
அந்த உரையாடலுக்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். அதை எடுக்குமாறு திவ்யா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வருடா வருடம் உங்களுக்கு காட்டுத்தீ..!! எங்களுக்கு ஹரிகேன்..!! நம்ம தமிழ்நாடு மாதிரி வராது சாமி.!!!!
======
குட்டி குட்டி பாராவா அடிச்சீங்கன்னா.. பார்க்கவும் அழகாகவும், படிக்க ஈஸியாவும் இருக்கும்கறது என்னோட அபிராயம். :-)
How are u? When Federar won the French Open, I thought of you and Russia Ramanathan.
:-))
How are u? When Federar won the French Open, I thought of you and Russia Ramanathan.
:-))
Post a Comment