மெட்ராஸ்ஸ சுத்திப் பாக்க போரேன்: யெஸ் யெஸ் யெஸ்.......மூணு வருஷம் கழிச்சு இந்தியா போரேன் அதுவும் மெட்ராஸ்ல இறங்கப் போரேன்.ரொம்ப குஷியா இருக்கு. மெட்ராஸ் பழக்கமில்லாத ஊர். அப்பப்ப கல்யாணம் கார்த்திகைக்கு மட்டுமே போயிருக்கேன்.இந்த தடவை கொஞ்சம் நல்லா சுத்தி பாக்கலாம்னு ப்ளான். வெய்யிலுக்கு பயப்படற ஆளு நான் இல்ல......நல்லா மஜா பண்ணலாம்னு இருக்கேன். மெரீனா பீச் போகணும்,தசாவதாரம் பாக்கணும்,கிரி ட்ரேடர்ஸ்ல வாங்கணும்.
ஃப்ரென்ச் ஓபென் : இப்படி ஒரு எர்ரர் ஃப்ரீ டென்னிஸ் பாத்து பல காலம் ஆச்சுது. நடால் மடால் மடால்.....! என்ன ஆங்கிள் ஷாட்ஸ். கண் கொள்ளா காட்சி. ராஜர் மூணாவது செட்டு முட்டைல போனது மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் நடாலோட ஆட்டம் அப்படி இருந்தது. இரண்டு பேரும் ஹம்பிள் சாம்பியன்ஸ்.மேலும் காமெண்ட்டரி பாக்ஸுல அரான்xஆ ஸான்செஸையும் vip பாக்ஸ்ஸுல போர்க்கையும் ரொம்ப நாள் கழிச்சு பாத்தது நல்லா இருந்தது.
NBA Finals 5th கேம்: நேத்து உசுர கையிலதான் எல்லாரும் புடிச்சிருந்தோம். லேக்கர்ஸ் ஒரு வழியா ஜெயிச்சாங்க.போன கேம் ஹோம் கோர்ட்ல தோத்தது படு அசிங்கம். அதுவும் முதல் க்வார்ட்டர்ல 24 பாயிண்ட் லீட் இருந்துடுட்டு.
அம்பிக்கு வாழ்த்துக்கள் & ஒரு கேள்வி : எப்பலேந்து சோப்பு வியாபாரம் ஆரம்பிச்சீங்க?? இண்டெர்னாஷனல் லெவெல்ல வந்து கூட யார் கிட்டையும் ஏன் சொல்லல??
இனிமே ஊர்லேந்து வந்துதான் பதிவு.!! இந்த பதிவுக்கும் பதில் சொல்ல முடியுமா தெரியல. முயற்சி செய்யரேன்.
Tuesday, June 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
எத்தனை நாள் இருக்கீங்க சென்னையில்? எப்போ ரிடர்ன்?
மொத்தமா 5 வாரம் ஜுன் 24 லேந்து......ஜூலை 10 வரைக்கும் சென்னைல.கொஞ்ச நாள் பெங்களூர் ஆகஸ்ட் 2 சென்னைலேந்து ரிடர்ன்...:) உங்களுக்கு ஏதாவது ப்ளான் இருக்கா??
எஞ்சாய் மாடி!
bon voyage :)
Post a Comment