Saturday, May 10, 2008
ஜனக் ஜனக் பாயல்-அனார்கலி- அம்மாக்காக!
ஜனக் ஜனக் பாயல் பாஜே..இந்த திரைபடம் 1955 வருடம் வி. ஷாந்தாராம் இயக்கத்தில் சந்தியா மற்றும் கோபிக்ருஷ்னா என்ற ப்ரபல கதக் கலைஞர் நடித்து வெளிவந்தது.இதில் உள்ள அத்தனை பாட்டுக்களும் மிக ப்ரபலம். சாஸ்த்ரிய நடனத்தை சுற்றி அமைக்கப்பட்ட கதை, அதனால் பாட்டுக்களும் அருமையாக இருக்கும். நம்ம ஊர் சலங்கை ஒலி மாறி.வசந்த் தேசாய் இசை.மொத்தம் ஒன்பது பாட்டுக்கள்.மன்னா டே மற்றும் அந்த கால லதா மங்கேஷ்கர் ஜோடி.(இப்ப இவங்க குரல கேக்க முடியல.வெரி சாரி லதாஜி).இந்த ஒன்பது பாட்டுக்களில் ஒன்றே ஒன்று லதாஜியும் ஹேமந்த்குமாரும் பாடியது.
அம்மாவும் அப்பாவும் கல்யாணம் ஆன புதிதில் பார்த்த திரைபடம் இது.அப்போது அப்பாக்கு ஷோலாபூரில் வேலை. ஹிந்தி சரியாக புரிய ஆரம்பிக்கவில்லை, ஆனால் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த இந்த படத்தை போய் பார்த்திருக்கிரார்கள். அம்மாக்கு திரைபடத்தின் கதையும் பாட்டுக்களும் ரொம்பவே பிடித்து போய்விட்டது. இதில் லதாஜியும் ஹேமந்த்குமாரும் பாடியிருக்கும்,"நேன் செ நேன் நாஹி மில்லாவொ"-(கண்ணோடு கண் பாக்காதீங்க) பாட்டு அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாட்டு.இந்த படத்தின் கதையும் இந்த பாட்டும் பாடி காட்டுவார்கள் அம்மா.அருமையான டூயட், லதாஜியின் குரல் இனிமையுடன் ஹேமந்த்குமாரின் குரல் ஒன்றி பாடுவதை கவனியுங்கள்.மெலோடியஸ்ஸ்ஸ்ஸ்..........
அடுத்து அம்மா அடிக்கடி முணுமுணுக்கும் பாட்டு அனார்க்கலி படத்திலிருந்து.ப்ரதீப் குமார் பினா ராய் நடித்தது."யெ ஸிந்தகி உசீக்கி ஹே".இதுவும் ஒரு அருமையான மெலடி.வேற யாரு லதாஜி தான்.கேட்டு பாருங்களேன்......
"Happy Mother's Day"
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
அருமையான பாடல்களை நினைவூட்டியமைக்கு நன்றி ராதா
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
ஓஹோ அம்மா சைகால் ஃபானா;)
ஒரே ரொமான்ஸ் தான்.
உங்களுக்கும் அம்மாவுக்கும் எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
என்னமோ இந்தி! போகட்டும்.
அல்லாருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
நல்லதொரு பரிசுதான் உங்க அம்மாவுக்கு.
அன்னையர் தின வாழ்த்துகள்.
//ஓஹோ அம்மா சைகால் ஃபானா;)
//
நமக்கு தெரிஞ்ச ஒரே சைகல் 'பாபா சைகல்தான்'. நீங்க சொல்ற காலகட்டதுக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்கற மாதிரி தெரியலையே.
சாந்தாராமின் இந்த படம் பார்த்ததில்லை. பாடல்கள் 'சித்ரஹார்' போன்ற நிகழ்ச்சிகள் பார்த்திருக்கலாம்.
'தோ ஆங்கே பாரா ஹாத்'தில் வரும் 'ஏக் ராம், தோ ராம்... ' என்று வரிசையாக ஆஜர் பட்டியல் கொடுப்பது ஞாபகம் இருக்கிறது. கிடைத்தால் மீண்டும் பார்க்க வேண்டும் :-)
//அருமையான பாடல்களை நினைவூட்டியமைக்கு நன்றி ராதா
அன்னையர் தின வாழ்த்துக்கள்.//
நன்றி முத்துலக்ஷ்மி......உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்:)
//ஓஹோ அம்மா சைகால் ஃபானா;)//
வல்லி சேகால் இன்னும் முன்னாடி..பாலிவுட்ட ஒரு கலக்கு கலக்கியவர் அவர்...:)
//ஒரே ரொமான்ஸ் தான்.
உங்களுக்கும் அம்மாவுக்கும் எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.//
ஆமாம் நல்ல ரொமாண்டிக் பாட்டுக்கள்..எவ்வளவு இதமா இருக்கு கேப்பதற்கு இல்லையா? உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.:)
//என்னமோ இந்தி! போகட்டும்.//ஹிந்தி பாட்டுதான் கொத்ஸ்.......கேட்டு பாத்தீங்களா?? அருமையான மெலடி...கண்டிப்பா ரசிப்பீங்க.:)
வாழ்த்துக்களுக்கு நன்றி:)
//நல்லதொரு பரிசுதான் உங்க அம்மாவுக்கு.
அன்னையர் தின வாழ்த்துகள்//
நன்றி ஸ்ரீதர்.:)
ஆமாம்... சைகல் இன்னும் முன்னாடி காலகட்டம். நம்மூர் கண்டசாலாவோட அவரோட குரல ஒப்பிடலாமா?
இந்த படம் கண்டிப்பா பாருங்க...நல்ல நடனம் நல்ல பாட்டுக்கள்.
"தோ ஆங்கே பாரா ஹாத்" அட்டகாசமான படம்....அதிலயும் சந்த்யா உண்டு.கொட்டான்குச்சி வயலின் வச்சுகிட்டு ஒரு பாட்டு உண்டு.
"யே மாலிக் தேரே ப்ந்தே ஹம்" ப்ரபலமான பாட்டு.இதுவும் அம்மாக்கு மிகவும் பிடிச்ச படம்.....:)
//அதிலயும் சந்த்யா உண்டு.கொட்டான்குச்சி வயலின் வச்சுகிட்டு ஒரு பாட்டு உண்டு//
'பல்லாண்டு வாழ்க'-இல் லதாம்மா கொட்டாங்குச்சி வயலின் வச்சி பாடிட்டே வருவாங்க. 'போய்வா நதியலையே' சரியா? தெரியல :-)
//ஹிந்தி பாட்டுதான் கொத்ஸ்.......கேட்டு பாத்தீங்களா?? அருமையான மெலடி...கண்டிப்பா ரசிப்பீங்க.:) //
சாய்ஸில் விட்டுட்டேன். நன்றி. :))
அருமை ராதா.
ரசித்தேன் பலமுறை.
நம்ம வீட்டில் இருக்கும் ஆடியோ கலெக்ஷனில் தேடிக்கிட்டு இருக்கேன்.
எல்லாம் டேப் காலம்.
அருமையான மெலடி :)
உங்களுக்கும் அம்மாவுக்கும் எல்லோருக்கும் Belated அன்னையர் தின வாழ்த்துகள்.
@கொத்ஸ், இதுக்கு தான் இந்தி படிங்க! இந்தி படிங்கனு நம்மூர்ல சொன்னாங்க. கேட்டா தானே? :p
அம்பி, இதெல்லாம் இப்போ சொல்லி என்ன யூஸ்?
நாம படிச்சது எல்லாம் ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா!! ஹிந்திதானே.
//பல்லாண்டு வாழ்க'-இல் லதாம்மா கொட்டாங்குச்சி வயலின் வச்சி பாடிட்டே வருவாங்க. 'போய்வா நதியலையே' சரியா? தெரியல :-)//
அந்த பாட்டு தெரியும்....ஆனா படத்த பாக்கல ஸ்ரீதர்..எல்.ஆர். ஈஸ்வரி பாட்டுதானே?.....:)
//அருமை ராதா.
ரசித்தேன் பலமுறை.//
எவ்வளவு முறை கேட்டாலும் ரசிக்ககூடிய மெலடீஸ் இல்லையா துளசி??
//நம்ம வீட்டில் இருக்கும் ஆடியோ கலெக்ஷனில் தேடிக்கிட்டு இருக்கேன்.
எல்லாம் டேப் காலம்.//
இதெல்லாம் எங்கிட்டயும் டேப்லதான் துளசி இருக்கு....முகலே ஆசாம்,சி.ஐ.டி,.......இதெல்லாம் அப்பப்ப கேக்கரதுண்டு...:)
Happy Mother's day.
//அருமையான மெலடி :)
உங்களுக்கும் அம்மாவுக்கும் எல்லோருக்கும் Belated அன்னையர் தின வாழ்த்துகள்.//
நன்றி அம்பி.:)அம்மகிட்ட சொல்லிடரேன்..:)
//கொத்ஸ், இதுக்கு தான் இந்தி படிங்க! இந்தி படிங்கனு நம்மூர்ல சொன்னாங்க. கேட்டா தானே? :p//
அதானே....:):)
//நாம படிச்சது எல்லாம் ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா!! ஹிந்திதானே.//
நிஜமாலுமே ஹிந்தி படிச்சீங்களா கொத்ஸ்??
ரகுவோட தாத்தாவவெல்லாம் கூப்டகூடாது இப்படி.....:):)
//Happy Mother's day.
//
நன்றி சத்யா.:) அம்மாவ கூப்டு வாழ்த்திட்டீங்கதானே??
//
/நாம படிச்சது எல்லாம் ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா!! ஹிந்திதானே./
நிஜமாலுமே ஹிந்தி படிச்சீங்களா கொத்ஸ்??
//
Radha நீங்க "இன்று போய் நாளை வா" பாக்யராஜ் படம் பார்த்தது இல்லையா?
Belated அன்னையர் தின வாழ்த்துகள்!
ரெண்டு பாட்டுமே (//ஒரே ரொமான்ஸ் தான்//) முன்னே பின்ன கேட்டதில்ல. யெ ஜிந்தகி உசீ கி ஹெ ரொம்ப நல்லா இருந்தது...
நான் ரகுதாத்தா கிட்டயே போய் 25 கொடுக்க மாட்டேன் 50 தான் கொடுப்பேன் சொல்லி, 'கிந்தி' கத்தவளாக்கும்.
//Radha நீங்க "இன்று போய் நாளை வா" பாக்யராஜ் படம் பார்த்தது இல்லையா?//
நான் பார்த்தது இல்லையே சத்யா அதுல இந்த மாறி ஜோக் வருமா??
check this.
http://video.google.com/videoplay?docid=-5854897322024878969&q=inru+poi+nalai+vaa&ei=43goSInUB57GrQLim8WeCg&hl=en
//Belated அன்னையர் தின வாழ்த்துகள்!//
நன்றி கெ.பி. உங்களுக்கும் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்..!!
//ரெண்டு பாட்டுமே (//ஒரே ரொமான்ஸ் தான்//) முன்னே பின்ன கேட்டதில்ல. யெ ஜிந்தகி உசீ கி ஹெ ரொம்ப நல்லா இருந்தது...//
இந்த மாறி நிறைய பாட்டு கைவசம் இருக்கு..அப்பப்ப எடுத்து போட்டுவிட்டா போச்சு.....:)அந்த கால லதாஜி குரல் கேக்க கேக்க இனிமை....:):)இப்ப குரல் சரியில்லை அவரை இன்னும் பாட வச்சு கஷ்டபடுத்தக் கூடாது...:(
//நான் ரகுதாத்தா கிட்டயே போய் 25 கொடுக்க மாட்டேன் 50 தான் கொடுப்பேன் சொல்லி, 'கிந்தி' கத்தவளாக்கும்.//
இந்த ரகு தாத்தா மஹா ஃபேமஸ் போல இருக்கே??:)
நீங்க சொன்னாப்புல லதா இப்ப பாடுனா... ரொம்பவே கஷ்டமா இருக்கு. இசையரசி பி.சுசீலா எல்லாம் ஒதுங்கியிருக்காங்க. அது மாதிரி அவங்களும் செய்யலாம்.
ஜனக்ஜனக் படத்துல பாட்டெல்லாமே சூப்பர். வசந்த் தேசாய்தான் வாணி ஜெயராமை அறிமுகப் படுத்தியது. குட்டி என்ற படத்தில்.
அந்த கதக் நடனக் கலைஞர்...தமிழில் காத்தவராயன் படத்தின் தொடக்கத்தில் சிவ தாண்டவம் ஆடியிருக்கிறார்.
மாதிரி = போல = like [this]
மாறி = change[d]
மாரி = மழை, அம்மன்
யம்மா என்னிய யாரும் டீச்சர்னுடாதீங்க, ஸ்கேல் எடுத்துட்டு வருவேன்
//check this.
http://video.google.com/videoplay?docid=-5854897322024878969&q=inru+poi+nalai+vaa&ei=43goSInUB57GrQLim8WeCg//
சத்யா லிங்க்குக்கு நன்றி......பாத்துட்டு சொல்ரேன்.:)
//நீங்க சொன்னாப்புல லதா இப்ப பாடுனா... ரொம்பவே கஷ்டமா இருக்கு. இசையரசி பி.சுசீலா எல்லாம் ஒதுங்கியிருக்காங்க. அது மாதிரி அவங்களும் செய்யலாம்.//
ஆமாங்க ராகவன்.யாரவது அவங்ககிட்ட சொன்ன தேவல....வயதாக வயதாக வாய்ஸ் பாக்ஸ்ல இருக்கற தசைகள்லாம் தளர்ந்து போயிடும்தானே??
//வசந்த் தேசாய்தான் வாணி ஜெயராமை அறிமுகப் படுத்தியது. குட்டி என்ற படத்தில்.//
இதுவும் ஒரு அருமையான படம்.ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி டைரெக்ஷன்னு நினைக்கறேன்....."போலிரே பப்பி ஹரா" மறக்க முடியாத பாட்டு..:)
//அந்த கதக் நடனக் கலைஞர்...தமிழில் காத்தவராயன் படத்தின் தொடக்கத்தில் சிவ தாண்டவம் ஆடியிருக்கிறார்.//
இது புது தகவல்....நன்றி.:):)
//மாதிரி = போல = like [this]
மாறி = change[d]
மாரி = மழை, அம்மன்//
கெ.பி இம்போசிஷன் எழுதிவிடுகிறேன்.........:)கீழே வாக்யத்தில் அமைத்துள்ளேன் சரி பார்த்து மார்க் போடவும்..:):)
"ஹை நீ என்ன மாதிரியே இருக்க!"
" நீ ஆளே மாறி போயிட்டியே?"
" வா மாரியம்மன் கோயிலுக்கு போயிட்டு வரலாம்"
//யம்மா என்னிய யாரும் டீச்சர்னுடாதீங்க, ஸ்கேல் எடுத்துட்டு வருவேன்//
உங்களுக்கு எல்லாம் பெத்த டீச்சர் ஒருத்தர் இருக்காங்கல்ல அதனால தப்பிச்சீங்க..:):)
எநிவே தப்பை எடுத்து சொன்னதுக்கு ஒரு நன்றி.:):)
சும்மா இருக்க விடமாட்டீங்களா?
என்ன மாதிரியே = என்னை மாதிரியே
எநிவே = எனிவே
கோயிலுக்கு போயிட்டு = கோயிலுக்குப் போயிட்டு
ஒரு டீச்சருக்கு பல மாணவர்கள் இருந்து பாத்திருக்கேன்.....நான் ஒரே ஸ்டூடெண்ட்...எனக்கு இரண்டு டீச்சரா??.நான் அழுதுருவேன்......:(..
துளசி இனிமே நீங்க வெறும் டீச்சர் கிடையாது...கெ.பி உங்க பொறுப்ப எடுத்துக்க ரெடியா இருக்கறதுனால....நீங்க தலைமை ஆசிரியரா ஆயிடுங்க......இனிமே நீங்க டீச்சர் துளசி இல்ல..ப்ரின்ஸிபல் துளசி......:):)
எனிவே & என்னை.....கவனிச்சுக்கிடேன்.:):)
//சரி பார்த்து மார்க் போடவும்..:):)// ரொம்ப வெள்ளந்தியான ஆளாயிருக்கீங்க?
"ஹை நீ என்ன மாதிரியே இருக்க!" = 60% "என்னை" ; "இருக்கிறாய்" (அ) "இருக்கிறாயே"
" நீ ஆளே மாறி போயிட்டியே?" = 100%
" வா மாரியம்மன் கோயிலுக்கு போயிட்டு வரலாம்" = 80% "கோயிலுக்குப்"
சராசரி 80%. நான் கொஞ்சம் லீனியன்டா பேப்பர் திருத்தினேன்;-) ஷாயத் ஆப்கோ ஹிந்தி அச்சி ஆதி ஹெ..? மேரி ஹிந்தி கரெக்ட் கீஜியே!
//எனிவே & என்னை.....கவனிச்சுக்கிடேன்//
கவனிச்சுக்கிட்டேன்.
என்ன ராதாக்கா, தெளிய வெச்சு, தெளிய வெச்சு அடிக்கறோமா? :p
//ஷாயத் ஆப்கோ ஹிந்தி அச்சி ஆதி ஹெ..? //
கெக்கெ அக்கா இப்ப உங்களுக்கு!
ஷாயத் ஆப்கோ ஹிந்தி அச்சி ஆத்தி ஹை க்யா?
கேள்வி கேட்கும் போது கடைசில க்யானு முடிக்கனும். :))
எப்படி? நாங்களும் இங்க ஒரு சப்பாத்தி பிகர் கிட்ட கத்துக்கறோம் இல்ல? (ஹிந்திய சொன்னேன், தங்கமணி கிட்ட போட்டு குடுத்றாதீங்க அக்கா.) :))
ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா:))
சாரி ஏதொ ஞாபகத்தில் சைகலைக் கூப்பிட்டு விட்டேன்./:)
//சராசரி 80%. நான் கொஞ்சம் லீனியன்டா பேப்பர் திருத்தினேன்;-) ஷாயத் ஆப்கோ ஹிந்தி அச்சி ஆதி ஹெ..? மேரி ஹிந்தி கரெக்ட் கீஜியே!//
80% ஆஹா ரொம்ப நன்றி கெ.பி...இத விடல்லாம் எதிர்பார்க்கல.:)
//ஷாயத் ஆப்கோ ஹிந்தி அச்சி ஆதி ஹெ..? மேரி ஹிந்தி கரெக்ட் கீஜியே!// அபி மேரி ஹிந்தி பி பிகடு கயி...!!நான் ரொம்ப பாவம்....அம்பி என்ன மண்டையில ஒரு தட்டு தட்டிட்டு உங்களுக்கும் பதில் எழுதியிருக்கார் பாருங்க.:):)
//என்ன ராதாக்கா, தெளிய வெச்சு, தெளிய வெச்சு அடிக்கறோமா? :p//
கைபுள்ள ஸ்டையில்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ன்னு அழ வைக்கரீங்களே!! அது டைபிங் மிஸ்டேக்பா...!!
//கைபுள்ள ஸ்டையில்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ன்னு அழ வைக்கரீங்களே!! அது டைபிங் மிஸ்டேக்பா...!!
//
வைக்கறீங்களே. இதுவும் டைப்பிங் மிஸ்டேக்கா? :p
//வைக்கறீங்களே. இதுவும் டைப்பிங் மிஸ்டேக்கா? :p//
அம்பி நீங்க நக்கீரர் பரம்பரையோ?? (அவரே சொல் குற்றம் பார்க்க மாட்டாறே??)நான் பாவம்பா......எனக்கு கொஞ்சம் இஷான் ஆவஸ்தியோட பிராப்ளெம் இருக்கோ என்னவோ....??:)
//ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா:))//
வல்லி இப்பதான் சத்யப்ரியன் அனுப்பிய லின்க்ல அத பாத்தேன்.....செம "வாசாப்பு" போங்க.:):)
//சாரி ஏதொ ஞாபகத்தில் சைகலைக் கூப்பிட்டு விட்டேன்//
சாரி எல்லாம் எதுக்கு??:)
//(அவரே சொல் குற்றம் பார்க்க மாட்டாறே??)//
பாருடா! மறுபடியும்?
மாட்டாரே? :p
//நான் பாவம்பா//
சரி, விட்டுட்டேன். உங்கள் ஒரு ஐம்பது அடிக்க வெச்சுபுடலாம்னு பாத்தா விட மாட்டீங்களே? :))
இதே கொத்ஸா இருந்தா... சரி விடுங்க. :p
கெ.பி. அக்கா,
//" நீ ஆளே மாறி போயிட்டியே?" = 100%//
நீங்க திருத்திய பேப்பரை ரீ-வேல்யூஷேன் பண்ணனும் போல இருக்கே :-)
அம்பியும் ஸ்கேல் எடுத்துகிட்டு மிரட்டுறார் போல. :-))
நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா. இ.கொ.கிட்ட ஏற்கெனவே அடி வாங்கியிருக்கேன்.
//அவரே சொல் குற்றம் பார்க்க மாட்டாறே//
Over to அம்பி :-))
//பாருடா! மறுபடியும்?
மாட்டாரே? :p//
ambi ungkalukku pathil ippadithaan..:)(ippa enna pannuveenga??)
eethoo akka thappu panninaa?? kandum kaanaama pogavendaama...(ezuththuru upayam ; MIss COngeniality.:):))
//இதே கொத்ஸா இருந்தா... சரி விடுங்க. :p//
அவரு சரியான வாசாப்பு புடிச்சவராச்சே.......அவர் எங்க நான் எங்க சொல்லுங்க...:):)
//நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா. இ.கொ.கிட்ட ஏற்கெனவே அடி வாங்கியிருக்கேன்.//
ஸ்ரீதர் நீங்க எப்ப அடி வாங்கினீங்க??
//Over to அம்பி :-))//
அவர்தான் என்ன மொத்து மொத்துன்னு மொத்திகிட்டு இருக்காறே
நீங்க வேற சொல்லித் தரணுமா??
இஸி லியே அபுன் போல்தா கி லக்னோவீ ஹிந்தி இதர் நஹி சல்தா! இன் லோகோங் கோ தோ சிர்ஃப் பம்பயா ஹிந்தி சல்தா.
நீ கண்டுக்காதே மே. பேட்டையிலேயே வந்து ராங்கு வச்சுகுறியான்னு ஒரு கொரலு விடு பாப்போம்! (மறந்தும் கூட மறத்தமிழ் வேண்டாம்;-)
50வது பின்னூட்டம் நானே நானா, (இல்லை) யாரோ தானா?
//Blogger Sridhar Narayanan said... கெ.பி. அக்கா,//
ஹிஹி, இவ்வளவு தம்பிகளா எனக்கு? படை (& மற்ற நோய்கள்) அஞ்சும் போலிருக்கே!
//ஹிஹி, இவ்வளவு தம்பிகளா எனக்கு? படை (& மற்ற நோய்கள்) அஞ்சும் போலிருக்கே!//
ஒரு மரியாதைக்கு சொல்றதுதான். அதுக்காக இப்படி 'சைபால்' ரேஞ்சுக்கு போட்டு தாக்கியிருக்க வேணாம். :-))
//...(ezuththuru upayam ; MIss COngeniality.:):))
//
இப்ப என்னங்க சொல்லிட்டேன்? எதுக்கு பெரியவங்கள எல்லாம் கூப்டறிங்க? :p
//என்ன மொத்து மொத்துன்னு மொத்திகிட்டு இருக்காறே
//
ஏய்! யாருப்பா அது? ராதக்கா எழுதறத திருத்தம் செய்றது?
அவங்க இருக்காரேக்கு பதிலா இருக்காறேனு தான் போடுவாங்க. தில் இருந்தா இப்பா வந்து பாருங்க! :))
அக்கா! சொல்லிட்டேன், இனிமே வாலாட்ட மாட்டாங்க. கும்புடு போட்டுக்கறேன் எஜமான்! :p
Post a Comment