Friday, February 23, 2007

Pretend Play

சின்ன வயசுல பொதுவா பெண் குழந்தைங்க ரொம்ப விளயாடரது இந்த Pretend Play தான். அதாவது ஒரு பத்து வயசுகுள்ள அம்மா அப்பா விளையாட்டும் டீச்சர் விளயாட்டும் விளயாடாத பெண் குழந்தைங்க கொஞ்சம் அதிசயம்தான். நான் கொஞ்சம் sporty type. ஆனாலும் இந்த விளையாட்டு ரசிச்சு விளயாடி இருக்கேன்.

இதுல என்ன விசேஷம்னா, நானும் என் இரண்டு தோழிங்களும் எப்போதுமே விளையாட்டிலும் தொழிங்களாதான் இருப்போம். ஆனா மூன்று மாதிரி வாழ்க்கை முறை விளையாட்டு விளையாடுவோம். மூன்று தொழிங்க கிராமத்துல இருக்கர மாதிரி, டவுன்ல இருக்கர மாதிரி அப்புரம் நகரத்துல இருக்கர மாதிரி. அதுனால அதுக்கு தகுந்த மாதிரி எங்களோட பேர், சாப்பாடு போட்டுக்கர துணி ஏன் பேச்சு மொழி எல்லாம் மாறிடும். இந்த விளையாட்டை மணி கணக்குல சுற்று சூழ்னிலை மறந்து விளயாடி இருக்கேன். இதுல வேடிக்கை என்னன்னா,
யாரு என்ன பேரு வச்சுக்கரது அப்படின்னு யோசிச்சே பாதி நேரம் போயிடும். கிராம விளையாட்டுனா எப்பொதுமே என் பேரு வள்ளி!! டவுன்னா காயத்ரி, சிட்டின்னா பாபி இல்லாட்டி பிங்கி!!! ஏன் இந்த மாறி பேரு வச்சுக்கணும்ன்னு யோசிச்சேன்னு சுத்தமா புரியல. பேரு வச்சப்புரம்.....எங்க இருக்கர மாறி விளையாட்டுன்னு ஒரு பெரிய discussion நடக்கும். ஒரு வழியா எல்லாம் முடிவு பண்ணின பிறகு ட்ரெஸ் பண்ண ஆரம்பிப்போம் அது போகும் ஒரு அரை மணி நேரம். அக்காவோட தாவணி, அம்மாவோட குங்கும பொட்டு(அப்பல்லாம் அஷான்னு ஒண்ணு கிடைக்கும் அத முதல்ல னெத்தில வச்சுட்டு அப்பரம் அதுக்கு மேல குங்குமம் வைப்பாங்க அம்மா, குங்குமம் கலையாம இருக்கரதுக்கு!!) so அந்த ஆஷாதான் எங்களோட rouge or blush. அப்பல்லாம் eyeliner வந்திருந்த புதுசு காஸ்மெட்டிக்ஸ்ல்லாம் உபயோகபடித்தினா தப்புன்னு நினைக்கர சூழ்நிலை. அதனால eyetex அ ஒரு விளக்குமாத்து குச்சியால இமைக்குமேல ஒருத்தர்க்கு ஒருத்தர் போட்டுப்போம்.கண்ண தொரந்தோம்னா மேல ஒட்டிக்கும் அதனால சின்ன குழந்தைங்களுக்கு திருஷ்டி பொட்டு வச்சுட்டு பவ்டர் வைப்போமெ அதுமாத்ரிபவுடர ஒத்துவோம். கண்ணு இமையெல்லாம் வெள்ளயா இருக்கரத பாத்து எங்களுக்கே சிரிப்பு தாங்காது.இப்படி எங்கள ஒரு மாதிரியா தயார் பண்ணிகிட்டு விளையாட்டை ஆரம்பிப்போம். அடுத்து dialogues யார் என்ன பேசரதுன்னு. முதல்லயே ஒருத்ருக்கு ஒருத்தர் சொல்லிடுவோம். " நான் இப்படி கேப்பேன் நீ இப்படி சொல்லணும்னு"!! இதுலயும் main characters and supporting characters லாம் உண்டு அனா ரொம்ப subtle அ இருக்கும்,யாரும் மனசு நோகாதபடி. வள்ளியா இருக்கரப்போ பெரிய பொட்டு, சைட் கொண்டை கஞ்சி, கூழு பழையது சாப்பிடுவோம். குடத்தை எடுத்துகிட்டு
போய் தண்ணி கொண்டு வருவோம். காயத்ரியா இருக்கும் போது ஒத்தை பின்னல், சின்ன பொட்டு இட்லி, தோசை, சாதம் சாப்பிடுவோம். காலெஜுக்கு போவோம். பிங்கி அல்லது பாபியா இருக்கும் போது bread ம் soup ம் சாப்பிடுவோம்,நோ பொட்டு, ஆஷா வச்சு lipstick போடுக்குவோம் தியேட்டருக்கு போய் சினிமா பாப்போம்.
இப்ப இத நினைச்சு பாக்கரபோது N.S.k "ஓட விஞ்ஞானத்த வளக்க பொரேண்டி" பாட்டு நியாபகம் வருது. I had so much fun playing those pretend games in which i could lose myself completely. இதுல உளவியல் ரீதியா ஏதாவது இருக்கா தெரியல தெரிஞ்சவங்க சொல்லுங்க.

4 comments:

Shakthi said...

ரொம்ப நல்லா சொல்லிருகீங்க ராதா.எனக்கும் நிரய அனுபவம் இருக்கு.ஆனா நினைவில் இருப்பது கேரம்,கார்ட்ஸ் விளயாடியது தான்.இன்னும் நிறய எழுதுங்க.நடைபாதையில் உங்கள் பயனம் தொடர என் வாழ்த்துகள்.
ஷக்தி.

Radha Sriram said...

//ரொம்ப நல்லா சொல்லிருகீங்க ராதா.எனக்கும் நிரய அனுபவம் இருக்கு.ஆனா நினைவில் இருப்பது கேரம்,கார்ட்ஸ் விளயாடியது தான்.இன்னும் நிறய எழுதுங்க.நடைபாதையில் உங்கள் பயனம் தொடர என் வாழ்த்துகள்.
ஷக்தி.//

அமாம் ஷக்தி ஒவ்வொத்தருக்கு ஒவ்வொரு மாதிரி விளையாட்டுல ஈடுபாடு இருக்கும். நான் கார்ட்ஸ்லாம் கம்மியாதான் விளையாடி இருக்கேன்....நமக்கு எப்போதும் ஓட்டம்தான். உங்களோட ஊக்கதுக்கு நன்றி.இன்னும் எழுத முயற்ச்சி பண்ணரேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாங்க விளையாடுனததெல்லாம்
நியாபகப்படுத்திட்டீங்க.
உளவியல் படிக்கல.
பார்த்தத கேட்டத நாங்க்ளும்
விளையாட்டில் கொண்டு வருவோம்.
இப்போ என் பொண்ணு
விளையாடற வேடிக்கை பார்க்கிறேன்.

Radha Sriram said...

//நாங்க விளையாடுனததெல்லாம்
நியாபகப்படுத்திட்டீங்க.
உளவியல் படிக்கல.
பார்த்தத கேட்டத நாங்க்ளும்
விளையாட்டில் கொண்டு வருவோம்.
இப்போ என் பொண்ணு
விளையாடற வேடிக்கை பார்க்கிறேன்//

இனிமையான நாட்கள் அவை இல்லையா முத்துலஷ்மி...உங்க பொண்ணு விளையாடரத முடிஞ்சவரைக்கும் disturb பண்ணாம பாத்து ரசிச்சுகோங்க.....