அமெரிக்கா வந்து கொஞ்ஜம் பிரம்மிப்புலேந்து மீண்டு பின்னர் ட்ரைவிங் லைஸென்ஸ் வாங்கி குழ்ந்தைகளை பள்ளில சேர்த்தபின்னர் கையில் மிச்சம் இருந்தது நேரம். நேரம்னா கொஞச நஞ்சம் இல்ல. ரொம்பவே. அப்போ கணிணிய செய்திகள் படிக்க , e-mail அனுப்ப மட்றும் chat செய்ய மட்டுமே உபயோகம் பண்ணிட்றுந்தேன். நடுவுல எப்படியோ தடுக்கி விழுந்து blogs பக்கம் வந்து சேந்தேன். முதல்ல ஆங்கில blogs மட்டுமே படிச்சிட்ருந்த நான் எப்படி தமிழழுக்கு வந்தேன்னு நியாபகம் இல்ல. ஆனா என்ன முழுமையா ஆக்ரமிச்சுது இந்த blog world. முதல்ல நிறுத்தினது மங்கையர் மலர் subscription!!
ஆரம்பத்துல நான் ரொம்ப ஆர்வமா படிக்க ஆரம்பிச்ச தமிழ் blog அல்வா சிட்டி விஜையோடது . நல்ல ஜனரஞ்ஜகமான எழுத்து அவரோடது. அவரோட blog அ விடாம படிச்சிருவேன்(அவர் இப்போ எழுதறது இல்லையா??), சிவா(இளையராஜாவோட பரம் ரசிகர், போட்டில்லாம் வச்சு கலக்குவார்!! இப்பொ கிட்டார் கத்துக்க போயிட்டார்!!), முத்துக்கு முத்து, கோ கணேஷ், உஷா இவங்க blogs கெல்லாம் நான் ரெகுலர் விசிட்ட்ர்.(நான் படிச்சவங்க பாதி பேர காணலை!! உஷா temperory break.) இவங்கள எல்லாம் படிச்சுட்டு தயங்கி தயங்கி முதல்ல ஆங்கிலத்திலும்,thanglishlayum...அப்புரம் தட்டு தடுமாறி தமிழ்லயும் பின்னூட்டம் போட ஆரம்பிச்சேன்.One fine day சும்மா ஏதாவது எழுதிவைப்போம்னு ஒரு ஆங்கில intro எழுதிவச்சேன்.ஆச்சர்யம் என்னடான்னா நம்ப தேன் சிரில்லும் surveys புகழ் சர்வேசனும் வந்து ஏன் நிருத்திட்டீங்க எழுதுங்க ஊக்கம் அளிக்கரோம்ன்னு பின்னூட்டிடு போயிட்டாங்க. சரி இத விட நல்ல சகுனம் கிடைக்காதுன்னு நினைச்சு நம்ப புராணத்த ஆரம்பிசிடலாம்னு முடிவு பண்ணி ரெண்டு நாளா டைப் அடிச்சிட்டு இருக்கேன்!!(no kidding!! Bengay in priority mail please).
இப்போ தமிழ்மணத்துல ஒரளவு எல்லா பதிவுமே மேஞ்சிருவேன்(skim read).அட்டகாசமான எழுத்துக்கள் !! அறிவான எழுத்துக்கள் !! creativity at its best with its unavoidable hiccups இங்க பாக்கமுடியுது. so என்னோட எழுத்துக்கள் இங்க ஒரு எலிமெந்டரி மாணவியோட எழுத்து மாதிரிதான் இருக்கும். But still i want to give it a try!!(நன்றி சர்வேசன், சிரில்!)
Thursday, February 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
எல்லாரும் இது போல் எழுத ஆரம்பித்தவர்கள் தான்(முக்கியமாக நான்). தொடர்ந்து தைரியமாக எழுதுங்கள்.
பதிவை வெளியீடுவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை எழுத்துப் பிழைகளை மட்டும் சரி பார்க்கவும்.
உ.தா. மட்றும் - மற்றும்
// நாகை சிவா said...
எல்லாரும் இது போல் எழுத ஆரம்பித்தவர்கள் தான்(முக்கியமாக நான்). தொடர்ந்து தைரியமாக எழுதுங்கள்.
பதிவை வெளியீடுவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை எழுத்துப் பிழைகளை மட்டும் சரி பார்க்கவும்.
உ.தா. மட்றும் - மற்றும் //
ரொம்ப நன்றி நாகை சிவா, அமாம் பதிவை மறுபடியும் மறுபடியும் படிச்சு பார்தேன் எதோ தப்புன்னு தெறிஞ்சது ஆனா என்னனு தெரியல.....இனிமே இன்னும் கவனமா இருக்கேன்.
பதிவுலக பயணத்திற்கு வாழ்த்துக்கள். நானும் உங்கள் பதிவை இன்று முதல் வாசிப்பேன் உறுதி மொழி கூறுகிறேன். :)
//பதிவுலக பயணத்திற்கு வாழ்த்துக்கள். நானும் உங்கள் பதிவை இன்று முதல் வாசிப்பேன் உறுதி மொழி கூறுகிறேன். :) //
உங்கள் உருதி மொழிக்கு ரொம்ப நன்றி fast bowler. கொஞ்சம் தடுமாற்றத்தோடுதான் ஆரம்பிச்சு இருக்கேன்.பாக்கலாம்......எனிவே மீண்டும் ரொம்ப நன்றி.
வாங்க மேடம், நானும் உங்களை மாதிரி புதுசு தான். தொடரட்டும் உங்கள் நடைபாதை பயணங்கள்
//வாங்க மேடம், நானும் உங்களை மாதிரி புதுசு தான். தொடரட்டும் உங்கள் நடைபாதை பயணங்கள்//
நன்றி மணிக்கண்டன்.....உங்க கிரிகெட் பதிவுகள ஆர்வத்தோட படிச்சிட்டு வரேன்....keep going..
உங்கள் பின்னூட்டங்களை அங்கங்கு வாசித்திருக்கிறேன். ஒரு நல்ல வாசகியாக இருந்து பதிவர் ஆகிறீர்கள். நல்லது. தொடர்ந்து எழுதுங்கள். அங்கங்கு சிறுசிறு எழுத்துப்பிழைகள் தென்படுகின்றன. அவை போகப்போகச் சரியாகிவிடும்:))
//நன்றி மணிக்கண்டன்.....உங்க கிரிகெட் பதிவுகள ஆர்வத்தோட படிச்சிட்டு வரேன்....keep going..//
உங்க விடைகள் இன்னும் வரலையே மேடம்??
ராதா ஸ்ரீராம்,
ஒவ்வொரு முறை புதியமுறை ஏதேனும் முயற்சித்தால் நான் எதிர்பார்க்கும் பின்னுட்டங்களில் உங்களதும் ஒன்று. உங்கள் பின்னூட்டம் வரவில்லையென்றால் எதோ குறைகிறது என்று தெரிந்துகொள்வேன்:-)
எழுத்துக்கு நல்வரவு. உங்கள் ரசனையைப் போன்றே படைப்பீர்கள் என்றால் பெருத்த வரவேற்பு நிச்சயம்.
//உங்கள் பின்னூட்டங்களை அங்கங்கு வாசித்திருக்கிறேன். ஒரு நல்ல வாசகியாக இருந்து பதிவர் ஆகிறீர்கள். நல்லது. தொடர்ந்து எழுதுங்கள். அங்கங்கு சிறுசிறு எழுத்துப்பிழைகள் தென்படுகின்றன. அவை போகப்போகச் சரியாகிவிடும்:)) //
செல்வநாயகி உங்கள மாதிரி பதிவர்கள்லாம் வந்து என்ன ஊக்குவிக்கரத பாக்கும் போது என்ன சொல்லரதுன்னே தெரியல.....iam speechless!! Thanks much மட்டுமே சொல்ல முடியுது..:)
எழுத்து பிழைகள் வராம கவனமா இருக்கேன் :)
//ராதா ஸ்ரீராம்,
ஒவ்வொரு முறை புதியமுறை ஏதேனும் முயற்சித்தால் நான் எதிர்பார்க்கும் பின்னுட்டங்களில் உங்களதும் ஒன்று. உங்கள் பின்னூட்டம் வரவில்லையென்றால் எதோ குறைகிறது என்று தெரிந்துகொள்வேன்:-)
எழுத்துக்கு நல்வரவு. உங்கள் ரசனையைப் போன்றே படைப்பீர்கள் என்றால் பெருத்த வரவேற்பு நிச்சயம்.//
சுரேஷ் உங்கள மாறி stalwartsலாம் வந்து எனக்கு வரவேற்பு குடுப்பது means a lot to me!! ரொம்ப நன்றி.
//உங்கள் ரசனையைப் போன்றே படைப்பீர்கள் என்றால் பெருத்த வரவேற்பு நிச்சயம்//
இங்க ஒரு பஞ்ச் வச்சிட்டீங்களே?? i will do my best!!
ராதாக்கா, இப்போ என்ன திடீருன்னு பழைய பதிவெல்லாம் மேல வருது? அப்புறம் நான் வந்தது சான் பிரான்ஸிஸ்கோ, உங்க ஊருக்கு இல்லை! அங்க சான்ஸ் கிடைச்சா கட்டாயம் முன்னமே சொல்லிடறேன். (அதான் சாக்குன்னு ஊரை விட்டு எல்லாம் போயிடக்கூடாது!)
Post a Comment