Saturday, May 10, 2008

ஜனக் ஜனக் பாயல்-அனார்கலி- அம்மாக்காக!




ஜனக் ஜனக் பாயல் பாஜே..இந்த திரைபடம் 1955 வருடம் வி. ஷாந்தாராம் இயக்கத்தில் சந்தியா மற்றும் கோபிக்ருஷ்னா என்ற ப்ரபல கதக் கலைஞர் நடித்து வெளிவந்தது.இதில் உள்ள அத்தனை பாட்டுக்களும் மிக ப்ரபலம். சாஸ்த்ரிய நடனத்தை சுற்றி அமைக்கப்பட்ட கதை, அதனால் பாட்டுக்களும் அருமையாக இருக்கும். நம்ம ஊர் சலங்கை ஒலி மாறி.வசந்த் தேசாய் இசை.மொத்தம் ஒன்பது பாட்டுக்கள்.மன்னா டே மற்றும் அந்த கால லதா மங்கேஷ்கர் ஜோடி.(இப்ப இவங்க குரல கேக்க முடியல.வெரி சாரி லதாஜி).இந்த ஒன்பது பாட்டுக்களில் ஒன்றே ஒன்று லதாஜியும் ஹேமந்த்குமாரும் பாடியது.



அம்மாவும் அப்பாவும் கல்யாணம் ஆன புதிதில் பார்த்த திரைபடம் இது.அப்போது அப்பாக்கு ஷோலாபூரில் வேலை. ஹிந்தி சரியாக புரிய ஆரம்பிக்கவில்லை, ஆனால் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த இந்த படத்தை போய் பார்த்திருக்கிரார்கள். அம்மாக்கு திரைபடத்தின் கதையும் பாட்டுக்களும் ரொம்பவே பிடித்து போய்விட்டது. இதில் லதாஜியும் ஹேமந்த்குமாரும் பாடியிருக்கும்,"நேன் செ நேன் நாஹி மில்லாவொ"-(கண்ணோடு கண் பாக்காதீங்க) பாட்டு அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாட்டு.இந்த படத்தின் கதையும் இந்த பாட்டும் பாடி காட்டுவார்கள் அம்மா.அருமையான டூயட், லதாஜியின் குரல் இனிமையுடன் ஹேமந்த்குமாரின் குரல் ஒன்றி பாடுவதை கவனியுங்கள்.மெலோடியஸ்ஸ்ஸ்ஸ்..........



அடுத்து அம்மா அடிக்கடி முணுமுணுக்கும் பாட்டு அனார்க்கலி படத்திலிருந்து.ப்ரதீப் குமார் பினா ராய் நடித்தது."யெ ஸிந்தகி உசீக்கி ஹே".இதுவும் ஒரு அருமையான மெலடி.வேற யாரு லதாஜி தான்.கேட்டு பாருங்களேன்......





"Happy Mother's Day"