Thursday, June 28, 2007

super 8!!

சும்மா தலைப்புதான் அப்படி... சர்வேசன் "அளவுக்கு" எதிபார்த்தீங்கன்னா ரொம்ம்ம்ம்ப ஏமாந்துதான் போவீங்க. அவரோட எட்ட படிச்சிட்டு அப்படியே சிலையா நின்னுட்டதனால் கொஞ்சம் தாமதம். அதுக்குள்ள வல்லியும் அழைச்சிட்டு போயிட்டாங்க. பெரியவங்க அழைச்சு இல்லன்னு சொல்ல மனசில்ல.அடாடா இன்னும் தாமதிக்க கூடாதுன்னு நினைச்சிட்டு......யோசிக்க ஆரம்பிச்ச வேளையிலே.......கொஞ்சம் கூட எதிர்பாரத அழைப்பு அல்வாசிடி விஜய் கிட்ட இருந்து. ரொம்ப சுவாரஸ்யமான எழுத்து இவரோடது.கொஞ்ச நாள் காணாம போயிட்டு இப்பொ திரும்பியும் வந்திருக்கார். என்னை அழைத்த உங்க மூணு பேருக்கும் நன்றி........


சரி இப்பொ எட்டு......random facts.....



1) மஹா சாது. இப்படி அப்படியில்ல......உங்களால கற்பனை பண்ணகூட முடியாது. சின்ன வயசில ஸ்ட்ரா டம்ப்லெர்ல பால் குடிச்சிட்டிருந்த எங்கிட்ட வந்து எங்கண்ணன் "பால் குடிக்கிறியா" ன்னு கேக்க ஆமான்னு தலையாட்டினேன், நல்லாருக்கான்னு கேட்டான்.......அதுக்கும் ஆமான்னு தலையாட்ட...... அப்ப மூக்கில வச்சு குடிச்சு பாருன்னு இன்னும் நல்லாருக்கும்னு சொல்ல நான் சரிதான்னு மூக்குல வச்சு உறிய மூச்சு குழாயில பால் போயி நான் திண்டாடினத நினைச்சா......இது சாதுதனம் இல்ல மக்குத்தனம்ன்னு நீங்க நினைச்சீங்கன்ன....நான் என்ன சொல்ல.....:)



2) Bedwetting was my nemesis!! கிட்டதட்ட ஒரு பதினோரு வயசு வரைக்கும் இரவில் படுக்கையய நினைச்சிருக்கேன். இத பத்தின புரிதல் அப்பல்லாம் யாருக்கும் அவ்ளோ கிடையாது......அதனால பல முறை அவமான பட்டிருக்கேன். இதுல என்ன வேடிக்கைனா எப்படியும் ராத்திரி இந்த அசம்பாவிதம் நடக்கும்கரதுனால ஒரு செட் ட்ரெஸ் எடுத்து என் தலகாணி பக்கத்துல வச்சுகிட்ட்டு படுத்துகுவேன். காரியம் ஆனவுடனே எப்படிதான் முழிப்பு வருமோ சட்டுன்னு முழிப்பு வந்து அப்பரம் போய் எல்லலத்தையும் மாத்திட்டு வந்து படுத்து அடுத்த நிமிஷம் தூக்கம்தான்.



3) படிப்புல பெரிய சாதனைல்லாம் பண்ணினதில்ல. ஆனா பள்ளிலயும் (உயர் நிலை வந்தப்ரம்தான் இதுதான் உலகம்ன்னு புரிய ஆரம்பிச்சுது.......அதுவரைக்கும் ஒரு மண்ணும் தெரியாது...)சரி காலெஜ்லயும் சரி நல்ல பாபுலர். ஏன்னா எல்லாவிதமான போட்டிகள்லேயும் கலந்துப்பேன். இருக்கர எல்லா க்ளப்லயும் மெம்பெர். எனக்கு பள்ளில விசிரிலாம் இருந்திருக்காங்கன்னா பாத்துக்கங்க்ளேன். ஆனா அது ஒரு வேண்டாத ஈகோ பூஸ்ட்டா போனது வேர கதை.



4) விளையாட்டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஓரளவு எல்லா விளையாட்டையுமே ஃபாலோ பண்ணுவேன். பள்ளில படிக்கர காலத்துல ஒரு நல்ல அத்லீட்டா இருந்தேன். காலெஜ்ல ஃபீல்ட் ஹாக்கி கொஞ்ச நாள் விளையாடி இருக்கேன். ஒரு சமயம் ஸ்டிக்கால செமையா அடி வாங்கினதால் அம்மா தடை போட்டுடாங்க. சரி இருக்கவே இருக்கு Interact club, NCC.....ன்னு விட்டுடேன்.....



5) அப்பா......மந்திர சொல் இல்லையா?? அப்பா வாயில் கான்செர் வந்து இறந்து போனார்.ரேடியேஷன்போது அவர் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. டாடா மெமோரியல் ஹாஸ்பிடல், மும்பைலதான் அவரோட சிகிச்சை நடைபெற்றது. சாப்பாட்டு ப்ரியர்.....கடைசியில் சாபிட முடியாமலே இறந்து போனார். அவர் படும் கஷ்டம் பார்த்து நாங்களெல்லாம் அவரை சீக்கிரம் அழைத்துகொள்ள கடவுளை ப்ரார்த்தனை செய்த்தது மறக்க முடியாது. He used to be such a fun loving person. The disease changed his whole personality.



6) பெங்களூர்ல இருந்தப்ப டாக்டர் சந்த்ரசேக்கர் இன்ஸ்டிட்யுட் ஆஃப் ஸ்பீச் அண்ட் ஹியரிங் ல சைன் லாங்குவேஜ் படிச்சது ரொம்ப சுவாரஸ்யமான ஒண்ணு. அப்ப அங்க வர குழந்தைங்களோட சைன் லான்குவேஜ்ல பேச முயற்சி பண்ணுவேன்......நான் யோசிச்சு யோசிச்சு பண்ரத பாத்து அவங்களுக்கு ஒரே சிரிப்புதான்.....


7) Driving test....இத பத்தி சொல்லலனா சரி இல்ல. ஏன்னா என் வாழ்கையில failures are stepping stones for success ன்க்ர பழமொழிய நல்லா உபயோகிச்சது அப்பதான். எல்லருக்கும் தெரிஞ்ச மாதிரி அமெரிக்கால ட்ரைவிங் தெரியலனா ஒண்ணும் செய்ய முடியாது......so DMV க்கு போயி written test கொடுத்துட்டு அதுல 100% வாங்கிட்டோம்னு ஒரே பெருமை. அப்பரம் தான் ஆரம்பிச்சுது என் கிரகம்......ஒரு தடைவ written test க்கு மூணுதடவை behind the wheel test கொடுக்கலாம். நான் மூணு தடவையும் பெயில். அப்ப திரும்பியும் written test கொடுக்கணும். எனக்கு ட்ரைவிங் சொல்லி கொடுத்தவர் ரொம்ப பாவம் நான் டெஸ்ட் கொடுக்க போரச்சேல்லாம் என் கைய்ய புடிச்சிகிட்டு நல்லா ப்ரரர்த்தனை பண்ணி அனுப்புவார். மறுபடியும் டெஸ்ட் எழுதி மூணாவது தடவைததன் பாஸ் பண்ணினேன். நான் பாஸ் பண்ணினதுக்கு என்னவிட எங்க வீட்லயும் என்னோட instructer ம் தான் ரொம்ப சந்தோஷ பட்டாங்க.


8) வேர ஒண்ணும் இல்லையே எழுத......so one of the random fact அ இத வச்சுகோங்க.....நான் 5 foot 6 inches உயரம் 134 lb எடை.....


நான் அழைப்பது.....


ஸ்ருசல்

ஸ்ரிஷிவ்

முத்துலக்ஷ்மி

அருணா ஸ்ரினிவாசன்


வெங்கட்

ப்ரசன்னா

Bad News India

வினையூக்கி

எட்டின் விதிகள் இப்ப ஓரளவு எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிரேன்......இங்க நான் கூப்பிட்டு இருக்கரவங்க ஏற்கனவே எழுதிட்டாங்களா தெரியல......சரி எழுதாதவங்க எழுதுங்க......