Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

Tuesday, February 27, 2007

ஆங்கிலமும் அறியாமையும்

எங்க வீட்டுல முதல்முதலா முதல் வகுப்புலேந்து அங்கில வழி பாடதுல படிச்சது நாந்தான். என்னதான் ஆங்கில மீடியம்னாலும் பேசரதுலேந்து சிந்திக்கற வரைக்கும் தமிழ்லதான். பள்ளிகூடத்துல மட்டும் அப்ப அப்ப "yes child, no child" என்கிற ரீதியா அங்கிலம் பேசுவேன். தமிழ அப்படியயே அங்கிலத்துல மொழி பெயர்து பேசுவோம்." நீ வருகிறாயா??" என்பதை அப்படியே literal அ மொழி பெயர்த்து " You are coming?" என்று பின்னாடி ஒரு கேள்வி குறியோடு நிறுத்துவேன். "Are you coming??" என்று கேட்கணும்னு தெரியாது.

என்னோட ஆங்கில அறிவு வளரனும்னு என்னோட அப்பாக்கு ரொம்ப ஆசை. அதனால தினம் செய்திதாள்(ஆங்கிலம்) படிச்சேதீரணும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. பிடிச்சது எனக்கு சனி தசை. இதை கண்கானிக்க என் அண்ணன் வேர. கேக்கணுமா அவன் கொண்டாடத்த. பள்ளிகூடம் விட்டு வந்த உடனே சாப்பாடு, விளையாட்டு. சாயங்காலம் ஆறு மணிக்கு வீட்டுல இருக்கணூம். வீட்டுபாடம் முடிச்ச பிறகு செய்திதாளும் கையுமா வந்திருவான் எங்க அண்ணன். அப்புரம் ஒரே டார்ச்சர்தான். முதல்ல ஹெட்லைன்ஸ் சத்தமா வாய்விட்டு படிக்கணும். அப்புரம் ஸ்போர்ட்ஸ் என்று ஒரு கால் மணி நேரம் உயிர வாங்கிடுவான். கொஞ்ச நாள்ல அவனுக்கு போர் அடிச்சு போச்சு. இதுக்கு நடுவுல புரியுதோ இல்லையோ நான் பாட்டுக்கு சத்தம் போட்டு தப்பு தப்பா படிச்சுட்டு பொயிட்டே இருப்பேன். நடுவுல சிலது மட்டும் புரியும். அப்பொ ஒரு நாள் அப்பாவ இம்பெரெஸ் பண்ணனும்னு தோணி போச்சு. நம்மளோட அங்கில அறிவ எப்படியாவது அப்பாகிட்ட காமிச்சு நல்ல பேர் எடுதிடணும்னு ஒரு துடிப்போட இருந்தேன்.


அந்த நாளும் வந்தது. அன்னிக்கு செய்திதாள்ல ' Boat capsized thirty feared dead " ன்னு
ஹெட்லைன்ஸ். பூரா செண்டென்ஸ் புரிந்துவிட்டது. capsize புதிய வார்த்தை. டிக்ஷனரி பாத்தாச்சு. அண்ணன் கிட்டயும் கேட்டாச்சு. அப்பாவ அசத்த நான் ரெடி. அப்பாவும் வந்தாங்க. அப்பா துணியெல்லாம் மாத்தி ஈசி சேர்ல சாஞ்சாங்க. நான் அப்போதான் ஏதோ செய்திதாள புரட்டர மாதிரி பாவனை பண்ணிகிட்டு வந்துகிட்டே,..." அப்பா இன்னிக்கு ஹெட்லைன்ஸ் என்ன தெரியுமான்னு கேட்டேன்? அப்பாவும் சும்மா என்ன குஷி படுத்த, " என்ன நியூஸ் நீயே சொல்லேன்' அப்படீன்னாங்க. "Boat capsized thirty feared dead" அப்படீன்னு சத்தாமா படிச்சு காட்டினேன். அப்பாக்கு ஒரு நிமிஷம் ஆச்சர்யம். capsize ன்னா என்ன அர்த்தம்னு கேட்டாங்க. உடனே சடார்ன்னு "overturn"ன்னு சொன்னேன். அப்பாக்கு சந்தோஷம் தாங்கல. அத பாத்த எனக்கு தலயும் புரியல காலும் புரியல.....மெதுவா அப்பாகிட்ட போயி உக்காந்து ஒரு கூக்ளி போட்டேன் பாருங்க இப்பகூட மேல் லோகத்துல இருக்கர எங்க அப்பா விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அது என்னன்னா "thirty feared dead"ங்கரத அப்படியே literal அ டிரான்ஸ்லேட் பண்ணி " பாவம் இல்லப்பா அந்த முப்பது பேரும் பயத்துலயே செத்து போயி இருக்காங்க" அப்படீன்னு கேட்டேன் பாருங்க!!!!!!! கேக்கணுமா வீட்ல சிரிப்ப....இப்பகூட காதுல ஒலிக்குது.


இப்ப இத நினைச்சு பாக்கும்போது நம்ம அமிதாப் எதோ ஒரு படத்துல சொல்லுவாரே "English is a funny language" ன்னு அதுதான் நியாபகம் வருது.