மெல்லிய இதயம் கொண்டவர்கள் இந்த புத்தகத்தை தவிர்கவும்!
நான் இங்கு அறிமுகம் செய்ய போகிற புத்தகத்தின் பெயர்,
"We need to talk about Kevin" by Lionel Shriver.
இது ஒரு உளவியல் சார்ந்து எழுதப்பட்ட புத்தகம். இப்பொழுதுதான் படித்து முடித்தேன். அது ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தும் ப்ரமிப்பிலிருந்தும் மீள முடியாமல் இந்த அறிமுகத்தை எழுதுகிரேன். சில புத்தகங்கள் நம்மை சிரிக்க வைக்கும்,சில அழ, சில சிந்திக்க வைக்கும் இதை போல பல விதமான மன உணர்வுகளை தூண்டும்.....இந்த புத்தகத்தை விவரிக்க, இது என்ன மாதிரி உணர்வுகளை ஒரு வாசகரிடம் எழுப்பும் என்று சொல்வது மிக கடினம். இதயத்தை ரணகளமாக்கி விடுகிறது.
ஒரு மனைவி, தன் கணவனுக்கு எழுதும் கடிதங்களாக தொகுக்க பட்டுள்ளது இந்த நாவல். கணவனுக்கு தன் இதயத்தில் இருக்கும் எண்ணற்ற எண்ணங்களையும் உணர்வுகளையும எழுத்துக்களால் வடிக்கிறாள்.
தாய்மை என்றாலே அன்பு, புனிதம்,தியாகம் என்கிற கோட்பாடிலிருந்து சிறிது மாறுபட்டு எழுதபட்டிருக்கும் நாவல். ஈவா கட்சோடூரியன், என்கிற தாய்க்கும் அவள் மகன் கெவினுக்கும் நடக்கும் மன போராட்டங்கள். தன் மகனின் மன்னிக்கமுடியாத செயலுக்கு தன்னுடைய பாசமற்றதன்மையும் ஒரு காரணமோ என்று குற்ற உணர்வில் தவிக்கும் ஒரு தாயின் துன்பம் மிக மிக துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது. எப்படி சில மனிதர்களால் மற்ற உயிர்களிடத்தில் அன்பு செலுத்தவோ அல்லது மற்றவர்கள் அவர்கள் மேல் அன்பு செலுத்த தகுதியானவர்களாகவோ இருக்க முடிவதில்லை என்பதை மிக நேர்த்தியாக எழுதியிருக்கிரார் ஆசிரியர்.
ஈவா, a successful career woman,உலகத்தையே சுற்றி வரும் அவளுடைய வேலையில் மிகுந்த திருப்தியும் பெருமையும் அவளுக்கு. அன்பான கணவன் அவனுடைய ஆசைக்காக தாயாக சம்மதிக்கிறாள். விருப்பமில்லாத தாயாகாவே முதலில் இருக்கிறாள். இங்கு ஒரு சின்ன பத்தி.....
" My approach to parenthood was conditional, and the conditions were strict. I did not want to mother an imbecile or a paraplegic; whenever i saw a fatigued women wheeling their......Indeed, an honest list of all that i did not want to nurture, from the garden - variety moron to the grotequely overweight, might run damningly to a second page. In retrospect, however,...... Dr. Rhinestein did not test for malice, for spiteful indifference or for congenital meanness."
ஈவா அழகான ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிறாள். பொதுவான எண்ணபடி, குழந்தை பெற்ற தாய் அப்படியே பூரித்து போய் பாசம் பொங்கவேண்டும் என்ற நியதிபடி, ஈவா தனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷத்தை இந்த நிகழ்ச்சி தர வேண்டும் என்று எதிர்பார்கிறாள். இங்கு ஒரு பத்தி.....
"BEsides, you would cajole, parenthood isnt something that happens in an instant. The fact of a baby- when so recently there was none- is so disconcerting that i probably just had'nt made the whole thing real to my self yet. I was dazed. That's it, i was dazed. I wasn't heartless or defective.Besides, sometimes when you're watching yourself too hard, scrutinizing your own feelings, they flee, they elude capture........And for God's sake get some rest. I know you'd say all these things, because i said them to myself. And they didnt make a dent- in my sense that the whole thing was going wrong from the start, that i was not following the program, that i had dismally failed us and our newborn baby. That i was, frankly, a freak."
குரூரமும், த்வேஷமும் , நீசத்தனமும் நிறைந்த ஒரு குழந்தையின் தாயாக ஈவா படும் உடல் நல போராட்டமும் அவள் கணவரின் அறியாமையும், கெவின் தன் அப்பாவின் முன் ஆடும் நாடகமும் அப்படியே கண் முன் கொண்டு நிறுத்துகிறார் ஆசிரியர்.
இது எல்லாமே, "அந்த வியாழகிழமை"க்கு முன்பு இல்லை அதை தொடர்ந்து என்கிற ரீதியிலேயே எழுதப்பட்டிருப்பதால்....," வியாழகிழமை" யில் என்ன நடந்திருக்கும் என்பதை முதல் அத்தியாயத்திலேயே குறிப்பிட்டு விடுகிறார். அந்த விஷயத்தை கோடிட்டு காட்டுகிறாரே ஒழிய முழு விவரமும் தருவதில்லை.
இந்த புத்தகத்தை பற்றி வேறு என்ன எழுதுவது என்று யோசிக்கின்ற வேளையில்.....இந்த அறிமுகத்தை சீக்கிரம் பதிப்பித்து ஒரு மிக நல்ல புத்தகத்தை படித்த அனுபவத்தை உங்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலே மேலோங்குகிறது.
It is a very deep and an intense novel. This is not for light readers. Hard reading. Beautifully written with chosen words.
இந்த நாவலை படிக்கும் போது கண்டிப்பாக aestheitic distance ஐ கடைபிடியுங்கள். It tends to get under your skin. Keep reminding yourself that what you are reading is fiction.
என்னை மிகவும் பாதித்தது இந்த நாவல். அபாரமான எழுத்து நடை (மொழி விரும்பிகளுக்கு!) இரண்டு நாள் தூங்க விடாது செய்யும் கதை கரு.
'Good Son ' என்கிற படத்தை பார்த்து இருந்தீர்களென்றால், இந்த நாவலுக்கு அது ஒரு நல்ல அறிமுகமாக சொல்லலாம். Macaulay culkin நடித்தது. (இந்த நாவலுக்கும் படத்துக்கும் சம்பந்தம் கிடையாது!)
Saturday, May 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
// இது ஒரு உளவியல் சார்ந்து எழுதப்பட்ட புத்தகம்.
//என்னை மிகவும் பாதித்தது இந்த நாவல். அபாரமான எழுத்து நடை (மொழி விரும்பிகளுக்கு!) இரண்டு நாள் தூங்க விடாது செய்யும் கதை கரு.
உண்மையாகவே ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வரிகளால் இன்றே நூலகம் சென்று எடுத்து வந்துவிட்டேன் :-) படித்துவிட்டு எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
சுட்டியதற்கு மிகவும் நன்றி.
ப்ரசன்னா, கண்டிப்பாக ஏமாற மாட்டீர்கள்....படித்தவுடன் உங்கள் விமர்சனத்தை எழுதுங்கள். ஆவலுடன் எதிர்பார்கிரேன்......
ராதா, பிரசன்னா! படித்த ஆங்கில, தமிழ் புத்தகங்களை அலச (விமர்சனம் இல்லை) ஒரு கூட்டு வலைப்பதிவு ஆரம்பிக்கலாமா? பலரும் சேருவார்கள் என்று நம்புகிறேன்.
கண்டிப்பாக உஷா....நிஜமாகவே நம்ப மாட்டீங்க இதே ரீதியிலே நான் யோசிச்சிட்டு இருந்தேன்.....great minds think alike ன்னு இததான் சொல்லுவாங்களோ?? :):)
இங்க நான் சிபாரிசு செஞ்சிருக்கர நாவல கண்டிப்பா படிங்க....ப்லீஸ்...
இந்த பதிவை அந்த புத்தகத்தின் தங்கள் விமர்சனமாக பார்க்க இயலவில்லை. அது ஏற்படுத்திய தாக்கத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதாகவே கருதுகிறேன். நானும் அவசியம் படிக்க முயலுகிறேன். தெரிவித்தமைக்கு நன்றி.
சத்யா,
இதை ஒரு அறிமுகமாகவே எழுதியிருக்கிரேன்.....விமர்சனமாக கண்டிப்பாக இல்லை....விமர்சனம் எழுதும் அளவு தெரியாது......
//நான் இங்கு அறிமுகம் செய்ய போகிற புத்தகத்தின் பெயர்//
முதல் வரியிலேயே குறிப்பிட்டு விட்டேனே சத்யா :):)
மத்தபடி ரொம்ப நல்ல புத்தகம்...கண்டிப்பாக படியுங்கள்.....படித்துவிட்டு உங்கள் எண்ணங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!!
ராதா நீங்கள் சொல்லி இருக்கும்விதமே மனதைத் தொடுகிறது.
என்னையும் பாதிக்கிறது.இந்த ஊரில் கிடைத்தால் படிக்கிறேன். இல்லாவிட்டால் சென்னையில் வாங்கிப் படிக்கிறேன்.
ரொம்ப நன்றி.
கண்டிப்பாக படியுங்கள் வல்லி....நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்.....பாசாங்கு இல்லாமல் எழுதபட்டிருக்கும் புத்தகம்.....மாறுபட்ட கதை கரு, அட்டகாசமான எழுத்து நடை
அப்படியே வாசகரை புரட்டி போடும்...!!
நிறைய புத்தக குழுவில் அலசபட்ட ஒரு புத்தகம்!!
intrestinga சொல்லிருகீங்க ராதா.நானும் படித்து பாத்துட்டு சொல்ரேன்.
வாங்க ஷக்தி.கண்டிப்பா படிங்க...படிச்சிட்டு உங்க அனுபவத்தை பகிர்ந்துகுங்க.....waitng....:):)
Interesting blog. Nice contents :)
You are invited by சர்வேசன் for the 'எட்டு' play!
Click here for details and respond!
நன்றி!
ராதா,
இன்று 8 விளையாட்டுப் பதிவு போட்டேன்.அதில் உங்களையும் அழைத்து இருக்கிறேன்.
உங்களுக்கு நேரமிருக்கும்போது நீங்களும் இதில் கலந்துகொண்டு எழுத வேண்டும்.
http://naachiyaar.blogspot.com/2007/06/190.html
இங்கே பார்த்தால் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கும்.:-))
Post a Comment