காலையில் அலாரம் அடிக்கும் முன்பே விழிப்பு வந்தது யசோதாவிற்கு. கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருக்கலாம் என்று தோன்றியது. இரண்டு வாரமாக உடம்பில் ஏதோ அசதி. அதும் காலையில் எழுந்திருப்பது ப்ரம்ம ப்ரயத்தனமாக தோன்றியது அவளுக்கு. மறுத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். மெதுவாக எழுந்து நின்றவளுக்கு தலை சுத்துவது போல் இருந்தது. சமாளித்துக்கொண்டு பாத்ரூம் சென்றபோதுதான் நியாபகம் வந்தது இன்று மாயாவிற்கு சீக்கரம் பள்ளி செல்லவேண்டும் என்று. தன்னைதானே கோபித்துக்கொண்டு அவசரமாக வெளியில் வந்து மாயாவிற்கு ஒரு குரல் கொடுத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்று காபி மேக்கரில் பொடியை போட்டு விட்டு அவளுக்கான காலை உணவை எடுத்து வைத்தாள்.
மாயாவிற்கு பதினைந்து வயது. உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு. நல்ல சுறுசுறுப்பான பெண். முரளியும் யசோதாவும் அமெரிக்கா வந்து இரண்டு வருடம் கழித்து பிறந்தாள் மாயா. முரளிதான் தன் பெண்ணிற்க்கு தன்னுடைய பெயரின் முதல் எழுத்தையும்
யசோதாவின் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து மாயா என்று பெயர் வைத்தது.
" Rise and Shine, mom! குரல் கேட்டு திடுகிட்டு விழித்த போதுதான் தெரிந்தது யசோதவிற்கு தான் அப்படியே டைனிங் டேப்லில் தலையை சாய்த்து தூங்கியிருப்பது.
என்ன தூக்கமோ? என்று நினைத்துக்கொண்டு, ஆரஞ்சு ஜூசை எடுத்து கிலாசில்விட்டு பெண்ணிடம் நீட்டவும், அதை வாங்கி குடித்துகொண்டே, "Mom are you ok??" என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்காமல் mp3 player ஐ எடுத்து காதில் மாட்டிகொண்டாள் மாயா. பின்னர் எதையோ நினைத்துகொண்டவளா, ' Mom Michelle is going to give me a ride back home, so you dont bother, now hurry up mommy dearest!" என்று சொல்லிவிட்டு காரில் போய் உட்கார்ந்தாள். அவசரமாக காபியை ஒரே மடக்காக குடித்துவிட்டு, மாயாவை பள்ளியில் கொண்டுவிட்டு திரும்பும் போது வயிற்றில் ஏதோ பிசைவது போல் உணர்வு யசோதாவிற்கு. இன்று கண்டிப்பாக அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிடவேண்டும் என்று பள்ளியில் இருந்து திரும்பியபின் முதல் வேலையாக மருத்துவரை கூப்பிட்டாள் யசோதா.
இரண்டு வாரம் கழித்து ஒரு தேதி கொடுக்கவும் யசோதாவிற்கு ஆயாசமாக இருந்தது.
அவளுடைய நிலைமையை எடுத்து சொல்லி,' can you sqeeze me in somewhere today?" என்று கேட்டுவிட்டு, அவள் கான்செலேஷன் இருந்தால் கூப்பிடுவதாக சொன்னபின் போனை கீழே வைத்துவிட்டு முரளியை கூப்பிட்டு விவரம் சொன்னாள்.
முரளிக்கு வெளியூரில் வேலை. நான்கு நாட்கள் வெளியிலும், வெள்ளி வீட்டிலிருந்தும் வேலை. சனி ஞாயிறு எப்படியும் விடுமுறை. புதிய பிராஜெக்ட் ஆறு மாதம் இப்படிதான் வேலை என்று சொல்லியிருந்தான். "திருப்பியும் டாக்டர் ஆபிச கூப்பிட்டு bug them ", one a day women" சாப்பிடர்யா தினமும்?? நான் கார் ஓட்டிட்டு இருக்கேன் இப்ப, கூபட்ரேன் ok? take care' என்று சொல்லி போனை வைப்பதற்கும் டாக்டர் ஆபிசிலிருந்து மதியம் 1.30 க்கு அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதாக போன் வருவதற்கும் சரியாக இருந்தது.
யசோதா பிரிட்ஜ் திறந்து பாத்தாள் வகை வகையாக மிச்சம் மீதி இருப்பதை பார்த்துவிட்டு மதியத்துக்கு வெறும் தயிர் சாதம் போதும் என்று நினைத்துக்கொண்டாள்.
தான் வாலண்டியர் செய்யும் கம்யுனிடி செண்டெர்கு போன் செய்து இன்று வர முடியாது என்று சொன்னாள். மனது எந்த வேலையிலும் ஈடுபட மறுத்தது அவளுக்கு. ஏன் இப்படி மந்தமாக இருக்கிரது என்று நினைத்துகொண்டிருக்கும் போதே திடீரென்று இது ஒரு வேளை மெனோபாசாக இருக்குமோ என்று தோன்றியது அவளுக்கு. hot flush ஒண்ணும் வந்த மாதிரி தெரியலயே என்று தோன்றியது. நாப்பது வயதில் மெனோபாஸ் வந்துவிடுமா தெரியலயே. மனதுபாட்டு கட்டுபாடில்லாமல் சுற்றி சுற்றி வந்தது. தான் எப்போதும் ரெகுலர் என்று தன்னைதானே சமாதானம் செய்துகொண்டாள்.ஏதோ நினைவு வந்து அவளை பயமுறுத்தியது. உடனே டாக்டரிடம் சென்று எல்லவற்றையும் கிளியர் செய்ய வேண்டும் என்று மனது பரபரக்கவும், மட மட என்று குளித்து ரெடியாகி ஏனோதானோ என்று சாப்பிட்டு விட்டு, தன்னுடைய அப்பாயிண்ட்மெண்ட்க்கு அரை மணி நேரம் முன்னாடி போய் உட்கார்ந்தாள்.
அங்கிருந்த எல்லா பத்ரிகைகளையும் புரட்டினாளே ஒழிய மனது இனம் புறியாத பயத்தில் நிலை கொள்ளாமல் தவித்தது. அவள் பேரை நர்ஸ் கூப்பிடவும் மட மட என்று எழுந்து போனாள். வழக்கம் போல் ரெகுலர் கேள்விகள் பதில்கள், டாக்டரிடம் சிம்டம்களளை சொல்லி முடித்தவுடன் எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் டாக்டர் சில டெஸ்டுகளை எழுதி குடுத்துவிட்டு, Mrs. Murali did you have your cycle yet?? அவள் திடுக்கிட்டு no என்றவுடன்...." I think, you should better take a pregnancy test,can you wait for half an hour?" வாயிலிருந்து வார்த்தை வரவில்லை யெஸ் என்பது போல் மண்டையை ஆட்டினாள். அடுத்த அரை மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை அவளூக்கு. எல்லாம் டெஸ்ட்டும் முடிந்து, Congrats Mrs Murali you are 4 weeks pregnant"என்று சொல்லவும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள். டாக்ட்டரிடம் என்ன சொன்னாள் எப்படி வெளியில் வந்தாள் ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.
இது எப்படி?? முருகா, முருகா.என்று வாய் முணு முணுத்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. எது என்ன அசிங்கம்? அய்யோ இந்த அவமானத்தை எப்படி தாங்குவேன். பதினைந்து வயது மகள் இருக்கையில்!! எப்படி, இதை பற்றி யோசிக்காமல் இருந்தேன்??
முருகா இது தப்பா இருக்கணுமே....மனது புலம்பியது. கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் கண்ணீர் அப்படியே வழிய வழிய காரை ஓட்டிகொண்டு வீடு வந்து சேர்ந்தாள். முரளியிடம் சொல்லவேண்டும். என்ன சொல்லுவான்? அவன் என்ன சொல்ல? அவனும் சேர்ந்து அவமான படட்டும், மனது குரூரமாக எண்ணி தப்பிக்க பார்த்தது. மாயவிடம் என்ன சொல்லுவது?? நினைக்கும் போதே கூசியது அவளுக்கு. சீ சீ என்ன நினைப்பாள் அவள்? are these guys still doing this?? என்று நினைப்பாளோ? அவளுக்கு தெரியாமல் டெர்மினேட் பண்ணிவிடலாமா? முரளியிடம் பேசவேண்டும். எல்லாம் அவனால்தான்.
மாயா, thanks guys! என்று சொல்வது கேக்கவும் பாத்ரூம் சென்று முகம் கழுவினாள். பள்ளீயிலுருந்து வந்துவிட்ட மகளுக்கு எதாவது குடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு மாடியிலுருந்து கீழே இரங்கும் போது, mom you look terrible, what happened? என்று கேட்டவுடன்.....அப்படியே உடைந்து போய் மாடி படியில் உட்கார்ந்து விசும்ப ஆரம்பித்தாள் யசோதா. அம்மா....did you get any phone call from India?? are thatha and patti ok?? அவள் கேள்வி செல்லும் திசை புரிந்து அதெல்லாம் ஓண்ணும் இல்லை என்று சொல்ல, யசோதவை எழுப்பி மெதுவாக கூட்டி சென்றாள் மாயா. Would you like to talk to me about what is bothering you?? டைனிங் டேப்பில் லில் உட்கார்ந்து கொண்டு நிஜமான கரிசனத்தோடு கேக்கும் தன் பெண்ணை கூர்ந்து நோக்கிவிட்டு கண்கள் மீண்டும் குளமாக தலையை குனிந்து கொண்டாள் யசோதா."Mom, trust me i can handle stuff talk to me" என்று கூறிய மகளை வியப்புடன் பாத்தாள். தனக்கும் இவளுக்கும்தான் எவ்வளவு வித்யாசம். எத்தனை தன்னபிக்கையோடு பெரிய பெண் போல் பேசுகிறாள். இவளிடம் சொல்வதா? எப்படி?? முரளியிடம் முதலில் சொல்ல வேண்டாமா? இந்தியாவிற்கு அம்மாவிடம் கூப்பிட்டு பேசலாமா?
Mom come lets go for a drive.....மாயா. சரி அவளோடு கொஞ்சம் வெளியில் போனாலாவது மனது தெளிவாக சிந்திக்கும் என்று தோன்றியது யசோதவிற்கு. யசோதவின் மனதை மாற்றுவதற்காக மாயா வழியில் எதேதோ பள்ளி விஷயமாக பேசிகொண்டே வந்தாள். சிலை போல் உட்கார்ந்து காரை ஓட்டும் அம்மாவை பார்க்கையில் கொஞ்சம் கவலையாக இருந்தது அவளுக்கு. காரை பார்க் செய்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள் இரண்டு பேரும். வள வள என்று பேசிகொண்டு வந்த மகள் மௌனமாக நடக்கவும் பாவமாக இருந்தது யசோதவிற்கு. தன்னுடைய கவலையில் அவளையும் சேர்த்துவிட்டோமே என்று. பார்க் பென்ச்ல் போய் உட்கார்ந்தார்கள். அம்மா, என்று சொல்லி கையை பிடித்து அழுத்தி,' என்னிடம் சொல், என்பது போல் பார்த்த மகளை அணைத்துகொண்டாள் யசோதா.
Maya i have something important to tell you", என்று சொல்லிவிட்டு தான் மறுபடியும் அம்மா ஆகப்போவதை எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சொல்லி முடித்தாள். சொல்லி முடித்த மறு கணம் சொல்லி இருக்க வேண்டாமோ என்று தோன்றியது யசோதவிற்கு. மாயா இதை எப்படி எடுத்துகொள்வாளோ என்ற கவலையோடு பார்த்தாள்.
முதலில் குழப்பமான முகபாவம் காட்டி, பின்னர் யே என்று கத்திகொண்டு ஓடி வந்து இருக்க கட்டி அழுத்தமாக முத்தம் கொடுத்த மகளை,தானும் அணைத்துக்கொண்டாள். இவளுக்கு தான் சொன்ன செய்தியின் முழு அர்த்தம் விளங்கியதா என்று ஆச்சர்யமாக இருந்தது யசோதவிற்கு. அவளை தள்ளி நிறுத்தி, ' did you get what i said ?" என்று கேட்டாள் யசோதா. " of course, mom !" என்று கூறி விட்டு, 'Iam so happy for you guys, when did you find out? " இன்று தான் என்று கூறி தான் இன்னும் முரளியிடமே சொல்லவில்லை என்றாள் யசோதா. Crazy'! என்று யசோதாவை பார்த்து கூறி விட்டு.....யசோதாவிடம், எப்படி முரளியிடம் இந்த மகிழ்சியான விஷயத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று பெரிய ப்ளான் போட்டு விலாவாரியாக சொல்ல ஆரம்பித்தாள் மாயா. தான் அன்று தன் தோழி வீட்டிற்கு சென்று விடுவதாகவும், யசோதா எப்படி தன்னை தயார் செய்துகொண்டு அப்பாவை எப்படி ஆச்சரியபடுத்த வேண்டும் என்று பேசிகொண்டே போகும் மகளை, அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் பார்த்துகொண்டு இருந்தாள் யசோதா. பின்னர் என்ன தோன்றியதோ, மாயா அம்மா பக்கம் திரும்பி,"Were you upset because of this?" என்று கேட்டாள். ஆமாம் என்பது போல் யசோதா தலையசைக்கவும், ஏன் என்பது போல் பார்த்து,உடல் ரீதியாக டாக்டர் ஏதாவது சொன்னாரா என்று கேட்டாள் மாயா. இல்லை என்று சொல்லிவிட்டு தான் எப்படியெல்லாம் குழம்பி தவித்தோம் இந்த பெண் என்னடாவென்றால் ரொம்ப சாதரணமாக எடுத்துகொண்டுவிட்டாளே என்று தோன்றியது யசோதவிற்கு.
மாயா, "How do you really feel about this?" யசோதா கேட்கவும், Why mom? i feel really happy about it.....தன்னால் எந்த விதமான சங்கடத்துக்கும் தன் மகள் உள்ளாககூடாது என்று தீர்மானமாக எண்ணியவாறு,"Are you embarased about the whole situation?",மறுபடியும் மறுபடியும் கேள்விகள் கேட்ட யசோதாவை, சிறிய அதிர்ச்சியுடன் பார்த்தாள் மாயா. பின்னர் யசோதாவின் கேள்விகளுக்கு பின்னால் இருந்த அர்த்ததை ஊகித்தவாறு சிறிது உணர்ச்சி வசபட்டவளாக, "அம்மா, நீ கேட்கும் கேள்விகள் எனக்கு கோபத்தை உண்டு பண்னுகிறது, இது நீயும் அப்பாவும் சேர்ந்து தீர்மானம் செய்ய வேண்டியது, உன் படுக்கை அறையை எட்டி பார்ப்பது என் வேலையில்லை, என்று சொல்லிவிட்டு அம்மாவிடம் தேவைக்கு அதிகமாக பேசிவிட்டோமொ என்று தோன்ற, "mom forgive my language" என்று கூறிவிட்டு அம்மாவின் அருகில் உட்கார்ந்துகொண்டாள்.
அம்மாவின் கைககளை மெதுவாக பிடித்து," உனக்கு இது எதிர்பாராமல் வந்த செய்தி என்று புரிகிறது, அனால் ஏதோ உலகமகா தப்பு செய்துவிட்டது போல் நீ புலம்புவது எனக்கு கொஞசம் கூட புரியவில்லை. உனக்கு இன்னும் வயது இருக்கிரது....இந்த குழந்தயை பெற்று வளர்க்க முடியுமா என்று தீர்மானம் செய்வது நீயும் அப்பாவும் மட்டுமே. நான் என்ன சொல்வேன் மற்ற உன் தோழிகள்,உறவினர் என்ன சொல்வார்கள் என்று குழம்புவது வேண்டாத வேலை. இதில் அவமான படவோ குற்ற உணர்வில் தவிப்பதோ அவசியமே இல்லை," பேசிகொண்டே போன மகளின் தோளில் தலையை சாய்த்து ஒரு புதிய நட்பு கிடைத்த மகிழ்ச்சியில் கண்களை இருக்க மூடி தன் தாய்மையை அனுபவிக்க தயாரானாள்.
P.S இதில் கொஞ்சம் உண்மை கலந்து இருக்கிரேன். முதல் கதை முயற்சி. நடை, உடை பாவனை எதுவும் இல்லாததற்கு மன்னிக்கவும்.!!! சர்வேசன் கதை போட்டிக்கு எழுத ஆரம்பிச்சு இப்பதான் முடிச்சேன்....:):)
Thursday, April 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
கடைசியில, முரளி ஏதாவது சொல்லி கதையின் போக்கு மாறும் என எதிர்பார்த்தேன். சுபமா முடிச்சிட்டீங்க!
முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
பின்ரீங்க போங்க.
எழுத ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ளயே கதை எழுதுவதில் சூப்பர் தேர்ச்சி.
அருமையான கதை. போரடிக்காத எழுத்தமைப்பு.
Good One! போட்டி தான் அந்தரத்துல தொங்குது, கதைகள் கிடைக்காம :)
(போட்டி விதிகள் புல்லா மீட் பண்ல :) )
தென்றல் வாங்க,
twist in the tale கொடுப்பேன்னு நினைச்சீங்களா?? அதுக்கெல்லம் கொஞ்சமாவது தேர்ச்சி வேணும் இல்லையா?
உங்க வாழ்துக்களுக்கு நன்றி!!
நன்றி சர்வேசன்!! உங்களுக்கு பிடிச்சதா?
சந்தோஷம்!
ஆமாம் உங்க போட்டிக்குன்னுதான் ஆரம்பிச்சேன்.100 வார்த்தை கதைன்னு எழுதியிருகீங்க ஆனா என்னொட கதையோ அது மாட்டுக்கு ஹனுமார் வால் மாதிரி போயிகிட்டே இருக்கு சரின்னு விட்டுடேன்,அதனாலதான் போட்டி விதிகள கடைபிடிக்கல!!
எதிர்பார்த்த முடிவு தான்.
நீங்க யசோதாவின் மன அழுத்ததை ரொம்ப நல்லா விவரித்து இருக்கீங்க.
மாயாவிடம் இருந்து நான் என்ன எதிர்பார்த்தேனோ, அதே தான் நீங்களூம் முடித்து இருக்கீங்க.
இந்த காலத்து பிள்ளைங்க ரொம்பவே ஸ்மார்ட்... சில சமயம் ஒவர் ஸ்மார்ட்...
//
இது நீயும் அப்பாவும் சேர்ந்து தீர்மானம் செய்ய வேண்டியது, உன் படுக்கை அறையை எட்டி பார்ப்பது என் வேலையில்லை
//
அருமையான வார்த்தைகள். இக்கால குழந்தைகள் மிகவும் தெளிவாக உள்ளார்கள்.
//
இந்த குழந்தயை பெற்று வளர்க்க முடியுமா என்று தீர்மானம் செய்வது நீயும் அப்பாவும் மட்டுமே. நான் என்ன சொல்வேன் மற்ற உன் தோழிகள்,உறவினர் என்ன சொல்வார்கள் என்று குழம்புவது வேண்டாத வேலை
//
இந்தியர்கள் பல நேரங்களில் இந்த தவறை செய்கிறார்கள். நாம் உறவினர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், நண்பர்கள் போன்றவர்களுக்காக இழப்பது அதிகம்.
பிறந்து இரண்டு ஆண்டுகளே ஆன தனது குழந்தை Harward இல் படிக்க வேண்டும் என்பதற்காக தனது ஆசைகளை எல்லாம் துரந்து ஒவ்வொரு காசையும் பார்த்து பார்த்து செலவு செய்யும் பல பெற்றொர்களை இங்கு கண்டிருக்கிறேன். என்னை பொருத்த வரை இச்செயல்கள் மடத்தனமானவை.
ரொம்ப சமீபத்தில் இதே பாணியில் ஒரு கதை படித்த ஞாபகம். எங்கே என்று ஞாபகமில்லையே. ஞாபகம் வந்தால் சுட்டி தருகிறேன்.
நல்லா வந்திருக்கு.
//எதிர்பார்த்த முடிவு தான்.//
ஆமாங்க சிவா...."lived happily ever after" டைப் முடிவுதான் புடிக்குது :):)
//நீங்க யசோதாவின் மன அழுத்ததை ரொம்ப நல்லா விவரித்து இருக்கீங்க.//
நன்றி சிவா....இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவினது.....
//இந்த காலத்து பிள்ளைங்க ரொம்பவே ஸ்மார்ட்... சில சமயம் ஒவர் ஸ்மார்ட்//
ரொம்ப சரி!! :):)
ராதா,
சிவசங்கரி,வாசந்தி ரேஞ்சுக்கு எழுதி இருக்கீங்க.
க்ரேட்.
முதல் முயற்சின்னா நம்ப முடியலை.
ரொம்ப அழகா வந்து இருக்கு.
இந்த மாதிரி குழந்தைகள் இருக்கத்தான் செய்யராங்க.
பெற்றோர் வளர்ப்பும் அது போலத்தான்.
சத்யா நன்றி உங்க விரிவான பின்னூட்டத்துக்கு.....
இந்தியாவில் பொதுவா...இந்த மாதிரி விஷ்யத்துல கொஞ்சம் புரிதல் கம்மியாக இருக்கு.....
40 வயதில் ஒரு பெண் தாய்மை அடைந்தால் அவளை சுற்றி உள்ளவர் செய்யும் கேலியும் கிண்டலும் சொல்லி மாளாது. தாம்பத்யம் என்பது ஒரு கணவன் மனைவியின் அந்தரங்கம்....அதை பற்றி பேசுவது எவ்வளவு அனாகரீகம் என்று தெரியாமல் இருக்கிரார்கள்.
//ரொம்ப சமீபத்தில் இதே பாணியில் ஒரு கதை படித்த ஞாபகம். எங்கே என்று ஞாபகமில்லையே. ஞாபகம் வந்தால் சுட்டி தருகிறேன்.
நல்லா வந்திருக்கு.//
நன்றி கொத்ஸ்....சுட்டி கிடைத்தால் கண்டிப்பா தாங்க :):)
நடைமுறைக்கு ஏற்ற கவிதை. என் தோழிக்கு 20 வயது இருக்கும் போது அவள் தங்கை பிறந்தாள். அப்போது நடை பெற்ற போராட்டத்தில் நானும் இருந்ததால் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. எங்கள் வகுப்பில் பயிலும் மாணவன் நேருக்கு நேர் கேலி செய்தபோது அவள் கூறிய வார்த்தைகள் உங்கள் கதையிலும் உள்ளன.
ரொம்ப நல்லாயிருக்கு ராதா!
//ராதா,
சிவசங்கரி,வாசந்தி ரேஞ்சுக்கு எழுதி இருக்கீங்க.
க்ரேட்.//
ஹைய்யோ வல்லி......உங்க தாராளமான பாராட்டுக்கு ரொம்ப நன்றி.....அவங்க ரேஞ்சே வேர....
மனதை பாதித்த ஒரு சம்பவத்த தழுவி எழுதினது....
ஆமாம் வல்லி குழந்தைகள்லாம் இப்ப நல்ல புரிதலோட இருக்காங்க....நீங்க சொல்லுவது ரொம்ப சரி!!
//நடைமுறைக்கு ஏற்ற கவிதை. என் தோழிக்கு 20 வயது இருக்கும் போது அவள் தங்கை பிறந்தாள். அப்போது நடை பெற்ற போராட்டத்தில் நானும் இருந்ததால் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. எங்கள் வகுப்பில் பயிலும் மாணவன் நேருக்கு நேர் கேலி செய்தபோது அவள் கூறிய வார்த்தைகள் உங்கள் கதையிலும் உள்ளன.
ரொம்ப நல்லாயிருக்கு ராதா!//
ரொம்ப நன்றி காட்டாறு.....இதுவும் என் தோழி ஒருத்திக்கு நடந்ததை தழுவின கதைதான். இதனால் அவள் பெரும் மன அழுத்ததிற்கு ஆளானாள்.உங்களுக்கு புரிந்திருக்கும்:)
First time into ur blog. Had a very nice time with the short story. :) wish u all the best
புதிய நட்பு..தலைப்பே அசத்தலா இருக்கு.40 வயசெல்லாம் ஒரு mattere இல்ல US ல.அதான் பொன்னு ரொம்ப கூலா எடுத்துட்ருகா.ரொம்ப intrestinga இருந்தது..இன்னும் எழுதுங்க.
Post a Comment