இன்றைக்குக்கு ஓப்ரா வின்ப்ரியின் (Oprah Winfrey) சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் இந்த ராஜ்பிப்லா (Princely State)என்கிற ராஜ்யத்தின் அரசகுமாரன். பெயர் மன்வேந்த்ர சிங். இவர் அப்பாதான் இப்பொது இருக்கும் அரசர் ரகுபீர் சிங். ரகுபீர் சிங்கிற்க்கு பிறகு ரரஜய்த்தை (!!)ஆளவேண்டியது இந்த மன்வேந்த்ர சிங். ஆனால் மன்வேந்த்ர சிங்கை அவர் அம்மா நிராகரித்து விட்டார், அப்பாவும் ஒத்துகொள்ளவில்லை..... இதனால் வருத்தம் அடைந்த மன்வேந்தர் தன் ராஜ்யத்தை துறந்துவிட்டார். அதற்கான காரணம் இந்த மன்வேந்தர் சிங் தான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்பதை தெரிவித்ததனால்.
இவரை பற்றியும் இவர் ராஜய்த்தை பற்றிய விவரங்கள் கீழே
http://www.uq.net.au/~zzhsoszy/ips/r/rajpipla.html
http://en.wikipedia.org/wiki/Rajpipla
ஓப்ராவின் கேள்விகளுக்கு தெளிவான ஆங்கிலத்தில் அழகாக பதில் சொன்னார். தான் எப்படி குழம்பி தவித்ததையும்......சரியான வழிகாட்டுதல் இல்லாமல் எப்படி திருமணம் செய்துகொண்ட தவறையும் கூறினார். இவரது திருமணம் ஒரு வருடத்தில் விவாகரத்தில் முடிந்திருக்கிறது.
மன்வேந்தர் சிங் பேட்டியில் கூறும் பொழுது ராஜய்த்தை விட்டுகொடுத்ததினால் தனக்கு ஒரு ப்ரச்சனயும் இல்லை என்றும் தன்னுடைய sexual preference பற்றி கூறியதால் ஒரு பெரிய மன பாரம் குறைந்தது என்று சொன்னார். ஓரினசேர்ககயாளருக்கான சேவையில் தான் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதாகவும் அவருடைய மக்கள் அவரை எப்போதும் போல் மிகுந்த மரியாதையுடன் நடத்துவதாக சொன்னார்.
எனக்கு என்ன புரியவில்லை என்றால் ஓபெரா ஓரின சேர்க்கை என்பது இன்னும் ஒத்துகொள்ள படாத தண்டிக்கபட கூடிய ஒரு விஷயமாகவே இந்தியாவில் இருப்பதாக கூறியபோது மன்வேந்தர்......"Homosexuality is not punishable in India but the act of homosexuality is" என்று கூறினார்....... என்ன அர்த்தம்?
மத்தபடி ராஜகுமாரன் மாதிரியே எதற்காக உடட உடுத்தி வந்திருந்தார் என்று தெரியவில்லை.....:):)(தலையில் டர்பன், நெற்றியில் பொட்டு!) பேட்டி, ஐஸ்வர்யா ராயொடு இருந்த'தை விட நன்றாகவே இருந்தது.....
Wednesday, October 24, 2007
Subscribe to:
Posts (Atom)