Friday, March 02, 2007

Fascination for names!!!

நான் , ' அம்மா ஏம்மா எனக்கு ராதா ன்னு பேர் வச்சீங்க?'

அம்மா, " நம்ம தாத்தாக்கு பஜனைன்னா ரொம்ப பிடிக்கும், எப்போதும் ராதே ராதே ன்னு பாடுவாங்க அவர் நியாபகார்த்தமா வச்சதும்மா..."

இதே கேள்விய பல முரை எங்கம்மாவ கேட்டு போர் அடிச்சுருவேன். அம்மாவும் பொறுமையா பதில் சொல்லுவாங்க.

இங்க இத எதுக்கு சொல்லரேன்னா, என் பேரு எனக்கு சுத்தம்ம புடிக்காது. ராதா இரண்டே எழுத்து. ச.... செல்லமா யாராவது கூப்படணும்னா கூட ராது ன்னு கூப்படலாம். அதுவும் ரெண்டு எழுத்துதானே? என் கணக்கு இங்க சரியா வரல. வேர எப்படிதான் ஷார்ட்டா பண்ணமுடியும். எங்கம்மா மேல கோவமா வரும். அக்காக்கு மட்டும் பத்மாவதி ன்னு நீளமா பேர் வச்சீங்களே அப்படின்னு கேட்டா. எதுக்குதான் போட்டி போடர்துன்னு ஒரு விவஸ்தையே இல்லையா ன்னு அம்மா கோவத்தோட சொல்லிட்டாங்க. அம்மா அவள "பத்து பத்து" ன்னு கூப்புடும் போது எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வரும்.

so ஒரு நாள் யோசிச்சேன் எப்படியாவது என் பேர மாதிடணும்னு. என் வகுப்புல இருக்கர எல்லாரோட பேர்லயும் தனி கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். Enid Blyton படிச்சு படிச்சு Norah, Betsy, Peggy இந்த மாறி பேரு ஒகே வா தோணுச்சு. ஆனாலும் என்னொட டேஸ்டுக்கு கொஞ்சம் கம்மியா இருந்துச்சு ஏன்னா எல்லாமே ரொம்ப சின்னது.ஷாந்தி, லதா ன்ங்கர பெயர்ல எல்லாம் என்னொட கவனம் போல.எங்க வகுப்புல விதவிதமான ஷாந்தி,அதாவது a to z intital இருந்தாங்க.அதே லதா வும் வித விதமா இருந்துச்சு.(ப்ரேம லதா, மீன லதா,ஷாந்த லதா). அத தவிர "ஷாந்தி" ரொம்ப சின்னதா இருந்ததுனாலயும் "லதா" with suffix and prefix ரொம்ப காமனா இருந்ததுனாலயும் அந்த பேரு மேலலாம் கொஞ்சம் கூட ஈடுபாடு வரல.

என்னோட பெயர் hunting was getting serious. ஒரு பெயரும் சரியா மாட்டல. அப்பதான் ஒண்ணு நடந்தது. எங்க வகுப்புல புது வரவு. பெயர் என்ன தெரியுமா?? எலிஸபெத் மார்கரெட் அலெக்ஸிஸ். இவ்வளோ நீள பெயர இப்பொதான் முதல்முதலா கேக்கரேன். என் மனசுகுள்ள சித்தார் வாத்தியம். ஒரே பெண்ணுக்கு மூணு பெயர். உடனே யோசிக்காம முடிவு செஞ்சேன் எனக்கும் அதே பெயர்தான் வேணும்னு. அந்த பொண்ணு வந்து ஒரு வாரம் ஆன பிறகு நை ஸா அவ பக்கத்துல போயி உக்காந்து அவ பெயரோட ஸ்பெல்லிங் என்னன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அன்னிக்கு பூரா ரொம்ப சந்தோஷமா இருந்தேன் ஏன்னா இத்தன நாளா நான் பட்ட அவஸ்த்தைக்கு ஒரு முடிவு வந்திருச்சே!!


அடுத்த நாள் அம்மாகிட்ட போயி புத்தகம், நோட்டு புத்தகத்துல ஒட்ட வேர லேபில் வேணும்னு கேட்டேன். அம்மா கைவேலையா இருந்த்துனால போயி டெஸ்க்லேந்து எடுத்துக்கோன்னாங்க. சரின்னு நானும் எடுத்து எல்லா நோட்டு புஸ்தகத்துலயும் பொறுமையா லேபில் ஒட்டிடேன். அதுல என் புது பேரையும், அதாவது "எலிஸபெத் மார்கரெட் அலெக்ஸிஸ்" எழுதிட்டேன். அம்மாகிட்ட போயி ரொம்ப சாவதானமா " அம்மா என் பேரு இனிமே " எலிஸபெத் மார்கரெட் அலெக்ஸிஸ்", நீங்க என்ன "லீஸா" ன்னு கூப்படலாம். என் புக்லலாம் கூட பேரு மாத்தி எழுதிட்டேன்,நாளைக்கி டீச்சர்கிட்ட அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது சொல்லிடுவேன்" , அப்படின்னேன் பாருங்க.....என்கம்மாக்கு எவ்வளோ கோவம் வரும்னு அன்னிக்குதான் தெரிஞ்சது. முதுகுல வச்ச அடி ஜன்மத்த்லயும் மறக்காது.


என்னவோ ஆனா பாருங்க இன்னைக்கும் எனக்கு பெயர்கள் மேல ஒரு தனி அட்ராக்ஷன் உண்டு. என்ன வித விதமா பேரு வைக்கராங்க இப்பல்லாம்?? Baby names க்கு தனி சைடே இருக்கு.

ஹ்ம்ம் இப்ப இங்க என் பேர எப்படில்லாம் கொல்ல முடியுமோ கொன்னுகிட்டு இருக்காங்க. (ex) ரடா, ரேடா, ராடஹா இப்படி பல வேர்ஷன்........