Thursday, October 16, 2008

சினிமா - கேள்வி பதில்

என்னை இந்த கேள்வி பதில் தொடருக்கு அழைத்த வல்லிசிம்ஹனுக்கு நன்றி.ஏதோ தெரிந்த அளவுக்கு பதில் சொல்லியிருக்கிறேன்.


1). எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

சினிமாவில் அதிக ஆர்வம் இல்லாத குடும்பம், பார்த்தால் படிப்பு கெட்டு போய்விடும் என்று சொல்லபட்டு வளர்ந்ததால், சின்ன வயதில் சினிமா ஒரு அதிசயமாகவே இருந்தது.ரொம்பவே யோசித்ததில் கலங்கலாக நியாபகம் வருவது ஸ்வாமி ஐயப்பன் என்கிற திரைபடம்.பாட்டியும் கூட வந்திருந்தார்கள்.அவர்களுக்காக இடைவேளையில் சாப்பிடுவதற்கு பக்ஷணங்களோடு போனதும், ஐயப்பன் புலி மேல் வருவதும் மஹிஷியோடு சண்டை போடுவதும் நியாபகம் உள்ளது. எதுவும் உணர்ந்ததாக நியாபகம் இல்லை.

2). கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா

தசாவதாரம். இந்த முறை இந்தியா சென்ற போது பார்த்தது. அக்காகளோடு உட்கார்ந்து பார்த்தது மறக்க முடியாது. ஃளெட்செர் கதாபத்திரம் வரும் போதெல்லாம் அடக்க முடியாமல் சிரித்தது பக்கத்தில் உட்கார்ந்த்ருந்தவரை எரிச்சல் மூட்டியது.

3). கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சமீபத்தில் வீட்டில் உட்கார்ந்து பார்த்த தமிழ் படம் கல்லூரி. ரொம்ப பிடித்திருந்தது. கயல்விழி, ரமேஷ் கதாபாத்திரங்கள் மிக யதார்தமாக இருந்தது. கை வளைகளை தோழிகள் மாற்றிக்கொள்வது, சண்டைபோது திருப்பி கொடுப்பது போன்ற இடங்கள் டைரெக்டெர் நன்றாக யோசித்து இருக்கிறார் என்றூ தோன்றியது.என்ன உணர்ந்தேன் என்று தெரியவில்லை.கல்லூரி, பள்ளி தோழமை பல பேர்களுக்கு ரொம்ப நேர்மையானதாகவும் இனிமையானதாகவும் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.இதை எழுதுவதற்கு முன்னாடி கீழே இருந்த பத்தியை எழுதிவிட்டேன்.எழுதியதை எதற்கு அழிக்க வேண்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

மிக சமீபத்தில் பார்த்தது "My fair Lady", TCM ல் வந்தது.வீட்டில் பார்த்தேன். ரொம்ப ரசித்து பார்த்தேன். ப்ரொஃபெசெர் ஹிக்கின்ஸை பார்த்து கோபமும் கடைசியில் பரிதாபமுமாக உணர்ந்தேன். ஆட்ரி ஹெப்பேர்னின் அழகும்,நடிப்பும் நடிகர்கள் இரண்டு பேரும் மொழியை கையாண்ட விதமும் அருமை.


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

சின்ன வயதில் பார்த்த எல்லா சினிமாக்களுமே ஏதோ வகையில் என்னை தாக்கியது என்று சொல்லலாம். கப்பலோட்டிய தமிழன்,வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற தேச பக்தி சினிமாக்களை குறிப்பிட்டு சொல்லலாம்.(இந்த படங்களெல்லாம் பள்ளியிலேயே காமித்து விடுவார்கள்!)

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

அப்படி ஒன்றுமில்லை.

ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

எப்போதுமே இரட்டை வேடங்கள் ஒரே சீனில் வருவதை பார்த்து வியப்பு உண்டு.....இது சரியான பதிலா??:)

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

தேடி தேடி வாசிப்பது இல்லை. கண்ணில் பட்டால் வாசித்து விடுவேன்.

7.தமிழ்ச்சினிமா இசை?

இந்தியாவில் இருந்த வரைக்கும் எல்லா இடங்களிலும் ஒலிக்கும் சினிமா பாட்டுக்களை கேட்டு பரிச்சயமாகிவிடும். இங்கு அந்த வாய்ப்பு இல்லாததினால் கேட்பது குறைந்து போய்விட்டது. பிடிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

கண்டிப்பாக.இந்திய மொழிகளில் தமிழ் தவிர மலையாளம், ஹிந்தி பார்ப்பதுண்டு. சமீபத்துல் பார்த்த வாட்டெர் என்னை மிகவும் பாதித்தது.ஷ்வாஸ் என்கிற மராத்தி படமும் நெகிழ வைத்தது. உலக மொழியென்றால் ஆங்கிலம் மட்டுமே ப்ரதானமாக பார்த்து வருகிரேன்.இண்டெர்னாஷனல் சானெலில் வரும் ஃப்ரென்ச் மொழி படங்களை அதிசயமாக பார்ப்பதுண்டு. பதிவுகளில் படித்துவிட்டு ஒரு முறை ஸ்பானிஷ் மொழி திரைபடம்(பேர் மறந்துவிட்டது!)பார்க்க ஆரம்பித்தேன் அதீத பாலுணர்வு காட்சிகள் இருந்ததினால் கால் வாசியோடு நின்றது.மஜிட் மஜிடியின் படங்களுக்கும் நான் விசிறி.ஆங்கிலத்தில் நிறைய படங்கள் மனதை பாதித்து இருக்கிறது.மிக நீள பட்டியல்.சாம்பிலுக்கு......Mr. Holland's OPus, Goodbye Mr Chips, Amadeus...etc.


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?


இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதை பற்றி எழுதுவதற்கு எனக்கு ஒன்றுமில்லை.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


தமிழர்கள் கொஞ்சம் பேஸ்து அடித்து போய் விடுவார்கள்.:) தமிழ் சினிமா இல்லையேன்றால் மற்ற மொழிக்கு தாவிவிடுவேன்.தமிழர்களும் அதையே செய்வார்கள். மற்ற பொழுதுபோக்கு சமாசாரங்களீல் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.


நான் அழைக்கும் ஐந்து பேர்.


தேன் சிரில் http://cyrilalex.com/

பதிவுகள் சத்யா http://sathyapriyan.blogspot.com/

கெக்கெபிக்குணி http://kekkepikkuni.blogspot.com/

சர்வேசன் http://surveysan.blogspot.com/

குறைகுடம் ப்ரசன்னா http://kuraikudam.blogspot.com/